"அனைத்து அரசியல் கட்சியினரும் வாக்கு வேட்டையில் தீவிரம் காட்டிவரும் நிலையில், தனது சுயநலத்தை முன்னிறுத்தி வசூல் வேட்டையில் பிஸியா யிருக்கிறார் தஞ்சாவூர் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல்''’என்று மூத்த உ.பி.க்கள் முனகுவது அறிவாலயத்தில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு, மத்தி என 3 மாவட்டங் களாகப் பிரிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் தி.மு.க.வின் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் பழனிவேல். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் தட்டித் தூக்கிவிடவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் தி.மு.க. தலைமையானது, கட்சியில் நிலவும் அதிருப்திகளை சரிசெய்யும் வகையில் அமைப்பு ரீதியிலான சில மாற்றங் களை அவ்வப்போது செய்து வருகிறது. அந்த வகையில், தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப் பாளரான துரை.சந்திரசேகரைத் தவிர மற்ற 2 மாவட்ட பொறுப் பாளர்களையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாக மாற்றியது. அதன்படி, தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரைக்கு பதிலாக நியமிக்கப்பட்டவர்தான் டி.பழனி வேல்.
கடந்த 1996 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணி யன் வெற்றிபெற்ற பிறகு, பட்டுக் கோட்டையை தக்கவைக்கும் எந்த முயற்சியும் தி.மு.க.வுக்கு பலனளிக்க வில்லை. அதிருப்திகள், கோஷ்டிப் பூசல்கள் காரணமாக அடுத்துவந்த 2001 தேர்தலில் த.மா.கா.விடம் வெற்றியை பறிகொடுத்தார் பாலசுப்பிரமணியன். இதனால், அடுத்தடுத்து வந்த 2006, 2011, 2016 தேர்தல்களில் பட்டுக்கோட்ட
"அனைத்து அரசியல் கட்சியினரும் வாக்கு வேட்டையில் தீவிரம் காட்டிவரும் நிலையில், தனது சுயநலத்தை முன்னிறுத்தி வசூல் வேட்டையில் பிஸியா யிருக்கிறார் தஞ்சாவூர் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல்''’என்று மூத்த உ.பி.க்கள் முனகுவது அறிவாலயத்தில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு, மத்தி என 3 மாவட்டங் களாகப் பிரிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் தி.மு.க.வின் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் பழனிவேல். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் தட்டித் தூக்கிவிடவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் தி.மு.க. தலைமையானது, கட்சியில் நிலவும் அதிருப்திகளை சரிசெய்யும் வகையில் அமைப்பு ரீதியிலான சில மாற்றங் களை அவ்வப்போது செய்து வருகிறது. அந்த வகையில், தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப் பாளரான துரை.சந்திரசேகரைத் தவிர மற்ற 2 மாவட்ட பொறுப் பாளர்களையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாக மாற்றியது. அதன்படி, தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரைக்கு பதிலாக நியமிக்கப்பட்டவர்தான் டி.பழனி வேல்.
கடந்த 1996 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணி யன் வெற்றிபெற்ற பிறகு, பட்டுக் கோட்டையை தக்கவைக்கும் எந்த முயற்சியும் தி.மு.க.வுக்கு பலனளிக்க வில்லை. அதிருப்திகள், கோஷ்டிப் பூசல்கள் காரணமாக அடுத்துவந்த 2001 தேர்தலில் த.மா.கா.விடம் வெற்றியை பறிகொடுத்தார் பாலசுப்பிரமணியன். இதனால், அடுத்தடுத்து வந்த 2006, 2011, 2016 தேர்தல்களில் பட்டுக்கோட்டை தொகுதியை கூட்டணிக்கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியது தி.மு.க. தலைமை. அந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2016 தேர்தலில் பட்டுக்கோட்டையைக் கைப்பற்றியது அ.தி.மு.க. இதனையடுத்து, கடந்த 2021 தேர்தலில் நேரடியாகக் களமிறங்கியது தி.மு.க. அங்கு போட்டியிட்ட அண்ணாதுரை வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு, அவரது கட்சிப்பணிகள் வளர்ச்சியை நோக்கிச்சென்றாலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர்மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அண்ணாதுரையை தூக்கிவிட்டு, பட்டுக்கோட்டை ஒன்றியத் துணைத்தலைவரான பழனிவேலை அமர்த்தியது தி.மு.க. ‘இனி, நிர்வாகிகள் மத்தியில் அதிருப்திகள் மறைந்து கட்சிப்பணிகள் வேகமெடுக்கும்’ என தி.மு.க. தலைமை கணக்குப் போட்டிருந்த நிலையில்தான், "இதுக்கு அண்ணாதுரையே பரவாயில்லீங்க' எனுமளவுக்கு ஏகத்திற்கும் அதிருப்திகளை சம்பாதித்துவருகிறார் பழனிவேல்.
இதுகுறித்து, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மூத்த உ.பி.க்கள் சிலரிடம் பேசும்போது, “"ஏற்கெனவே இருந்த தெற்கு மா.செ.வான அண்ணாதுரை, தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே கட்சிப் பதவிகளைக் கொடுக்கிறார். தனக்கென தனி ஆதரவாளர்களை உருவாக்கு கிறார். இதனால், கோஷ்டிப் பூசல்கள் அதிகரித்துள்ளதாகப் பலரும் அதிருப்தியில் இருந்தனர். அதன் காரணமாக அவரை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு ஆலடிக்குமுளை பழனிவேலுவை நியமித்தது தலைமை. ஆனால், பொறுப்பிற்கு வந்ததுமுதல், சிறப்பாக இயங்கும் ஒன்றியங்களைக்கூட பிரித்து அதிலும் பணம் பார்க்க துவங்கி விட்டார் பழனிவேல்.
உதாரணத்திற்கு, இரண்டாகயிருந்த மதுக்கூர் ஒன்றியத்தை மூன்றாகப் பிரித்து, அதில், எந்தத் தகுதியுமில்லாத மெய்யநாதன் என்பவரை நியமித்திருக்கிறார். பட்டுக்கோட்டை நகரத்தில் எஸ்.ஆர்.என்.செந்தில்குமாரின் செயல்பாடுகள் திருப்தியாக இருந்த நிலையில் அவரை எடுத்துவிட்டு, அதை இரண்டாகப் பிரித்து தி.மு.க.வின் கொள்கைகள்கூட ஒழுங்காகத் தெரியாத, அனுபவமில்லாத அபி என்பவரையும், தே.மு.தி.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த கோழிக்கடை செந்தில் என்பவரையும் நகரச் செயலாளர்களாக நியமிப்பதாகக்கூறி அவர்களிடமிருந்து தலா 10 லட்டுகளை அமுக்கிக்கொண்டார். கட்சித்தலைமை தலையிட்டதன் காரணமாக அந்த நியமனங்களை ரத்துசெய்துவிட்டாலும், நகரச்செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமாரிடமிருந்தே 50 லட்டுகளை நைசாக அமுக்கிக்கொண்டதாகவும் தகவல்.
அதேபோல, இரண்டாகயிருந்த பேராவூரணி ஒன்றி யத்தை மூன்றாகப் பிரித்து, பன்னீர்செல்வம் என்பவரையும், சேது பாவாசத்திரம் ஒன்றியத்தை நான்காகப் பிரித்து ஞானப்பிரகாசம் மற்றும் குழ.செ.அருள் நம்பி ஆகியோரையும் புதிய ஒ.செ.க்களாக நியமித்திருக்கிறார். இவர்கள் மூவரிடமுமே தலா 10 லட்டுகளை வாங்கிக்கொண்டுதான் பதவியை கொடுத் திருக்கிறார் பழனிவேல். இப்படி, பணத்துத்துக் குத்தான் பதவி என்றால் காலங்காலமாக கட்சிக்காக உழைத்து ஓடாய் தேய்ந் திருக்கும் எங்களைப் போன்ற மூத்தவர்களின் கதிதான் என்ன? இப்படி, கட்சிப்பதவி போட்ட வகையில் மட்டுமே இந்த 6 மாத காலத்தில் சுமார் 3 ஸ்வீட் பாக்ஸ் மற்றும் கமிசன் என்ற வகை யில் மேலும் சில ஸ்வீட் பாக்ஸ்களையும் சுருட்டிவிட்டார் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல்.
பொதுவாக, காண்ட்ராக்ட் மூலம் கிடைக்கும் கமிஷன் மற்றும் இதர உதிரி வருவாய்களை களப்பணியாற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் பிரித்துத்தருவது தான் முறை. ஆனால், அனைத்து வருமானத்தையும் இவரே பதுக்கிக்கொள்வதால் கட்சிப் பணியாற்றக்கூட காசின்றி தவிக்கும் நிர்வாகிகள் இங்கு ஏராளம். இப்படியிருந்தால் இங்கு கட்சி எப்படி வளரும்? கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருந்தால் இந்த நடைமுறை யெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால் குறுக்கு வழியில் வந்த பழனிச்சாமி, அதேபோல குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே தனது ஒரே குறிக்கோளாக வைத்திருக்கிறார்.
தவிர, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரான சேகருடன், ‘இது நம்மாளு’ எனத் தோளோடு தோளாக ஒட்டி உரசிக்கொண்டு கொட்டமடிக்கும் இவர், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வினரிடமும் சில கோடிகளை வாங்கிக்கொண்டு சொந்தக்கட்சியையே தோற்கடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
சரி, பணத்தை வாங்கிக்கொண்டு தான் பதவியை தாரைவார்க்கிறார் என்றே வைத்துக்கொண்டாலும், எந்த ஒன்றியங்களில், எந்த சாதியினரை திருப்திப்படுத்த வேண்டுமோ அப்படி பதவி போடாமல் புதிய ஒ.செ.க்களை ஏறுக்குமாறாக நியமித்திருப்பதால், அனைத்து ஒன்றியங்களிலுமே அந்தந்த சாதி சமூகத்தை சேர்ந்த பெரியவர்கள் மத்தியில் தி.மு.க.விற்கு பெரிய அளவில் அதிருப்தி அலை உருவாகியிருப்பதை மறுக்க முடியாது.
பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகுதி களில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தஞ்சை எம்.பி. முரசொலி, அமைச்சர் கோவி.செழியன் உட்பட கட்சிக்காரர்கள் யாரையுமே மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடப்பதால் இங்குள்ள உடன்பிறப்புகள் அனைவருமே வேதனையில் இருக்கிறோம். சமீபத்தில் நடந்த ஒன்றியக் கூட்டத்திற்கு பட்டுக்கோட்டையிலிருந்தும்கூட மாவட்ட அமைச்சரான கோவி.செழியன் கலந்துகொள்ளாமல், பழனிவேல் மீதான தனது அதிருப்தியை காட்டினார். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மூலமாகத்தான் பழனிச்சாமி இந்த பதவிக்கு வந்ததாகக் கூறப்படும் நிலையில், இவரது நடவடிக்கைகளால் டி.ஆர்.பி.ராஜாவுக்குமே கெட்ட பெயர் தான்.
எனவே தான், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றிருக்கும் பட்டுக்கோட்டை தொகுதியை மீண்டும் நாம் தக்கவைக்க வேண்டுமானால் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேலுக்கு பதிலாக கட்சியின் மீதும், தொண்டர்கள் மீதும் அக்கறை கொண்ட மூத்த உறுப்பினர் யாரையாவது நியமிக்க வேண்டும். புதிதாக அவர் போட்டிருக்கும் நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கடிதமாக எழுதி, மண்டல பொறுப்பாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேரு முதல் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரையுமே நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து விட்டு வந்திருக்கிறோம். நல்லதே நடக்கும் என நம்புகிறோம்''’என்றனர் அவர்கள்.
பழனிவேல் மீதான தொடர் குற்றச்சாட்டுகள் தஞ்சை தெற்கு மாவட்டம் முழுக்க சுழன்றடிக்கும் நிலையில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேலுவை தொடர்புகொண்டு அவருடைய விளக்கத்தை கேட்டோம். "கட்சியை கீழ்மட்ட அளவில் பலப்படுத்தும் நோக்கத்தில் தான் ஒன்றியங்களையும், நகரங்களையும் பிரித்து, சிலரின் பெயரையும் தலைமைக் கழகத்திற்கு பரிந்துரைத்தேன். மற்றபடி, நான் பணம் வாங்கிக்கொண்டு பதவி போடுவதாகக் கூறுவதெல்லாம் அபத்தம்'' என கூறினார்.
டெல்டாவில் மையம்கொண்டிருக்கும் இந்த அதிருப்திப் புயலை எப்படி சமாளிக்கப் போகிறது தி.மு.க?
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us