"காசு, பணம், துட்டு, மணி...' என தமிழக தேர்தலில் முக்கிய ஆயுதமாக மாறியிருக்கிறது பணம். இதை தி.மு.க. உணர்ந்தே இருக்கிறது. தேர்தல் செலவுகளுக்காக கடைசி நேரத்தில் பணம் அனுப்பினால் அந்தப் பணம் ஒன்றிய அரசின் கைப்பாவையாக இயங்கும் தேர்தல் கமிஷனால் கைப்பற்றப்படும் என்பதால் தமிழகம் முழுக்க இப்பொழுதே தேர்தலுக்குத் தேவையான பணத்தை அனுப்பி சேமித்து வைத்து விட்டது. யார் யாரிடம் எவ்வளவு பணம் என்கிற கணக்கு மட்டும் தலைமையிடம் இருக்கிறது. திருநெல்வேலி யில் ஒரு அரிசி வியாபாரியிடம் இப்படி சேர்க்கப்பட்ட பணம் வெளிவந்து சமூக வலைத்தளங் களில் விவாதமாகியது. இது தவிர ஒவ்வொரு ஒன்றிய அள விலும் ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களை உருவாக்கக் கூடிய சாதித் தலைவர்கள் மடக்கப்பட்டிருக்கிறார்கள். 

Advertisment

இந்த தேர்தலில் பெரிய விவாதமாகியிருப்பது தே.மு. தி.க.வின் அரசியல் பேரம். இரண்டு கூட்டணி களிடமும் ராஜ்யசபா சீட்டோடு தே.மு.தி.க. பேச்சு நடத்துவது பண பேரம்தான். பிரேமலதாவின் தம்பி சுதீஷ் ஒரு மார்வாடிக்கு பைனான்ஸ் கொடுத்தார். அந்தப் பணம் கருப்புப்பணம் என்பதால் அந்த மார்வாடி லவட்டிக்கொண்டு சென்றுவிட்டார். அதனால் ஒரு பெரிய கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறார் எல்.கே.சுதீஷ். அந்தப் பணத்தை ஈடுகட்ட அவர் தேர்தலைத்தான் நம்பியிருக்கிறார். இவரை ஏமாற்றிய மார்வாடி, அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதேபோல் அமித்ஷாவுக்கு நெருக்கமான பாஷ்யம் பில்டர்ஸ் அபினேஷ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடிகளை ஓ.பி.எஸ்.ஸிடமிருந்து அடித்துவிட்டார். அதை ஓ.பி.எஸ்.ஸால் திரும்பப்பெற முடியவில்லை. அதை யும் தேர்தல் மூலம் திரும்பப்பெற நினைக்கிறார் ஓ.பி.எஸ். அதனால்தான் கூட்டணி விவகாரத்தில் இன்றுவரை இழுபறி நிலைமையை நீடிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு நெருக்கமான அபினேஷ்தான் எடப்பாடியும், பா.ஜ.க.வும் கூட்டணி சேர காரண மானவர்கள். நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து வந்ததும் அபினேஷ்தான். தி.மு.க.வுக்கும் அவருக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் அவரை தி.மு.க.வுக்கு எதிராக கட்சி களை அணிதிரட்ட வைத்தது. அபினேஷின் பணம் மட்டும் 2??? கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு திட்டங் களில் தமிழக அரசின் கிளியரன்ஸ் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. எடப்பாடியும், அபினேஷும் பார்ட்னர்கள்தான். அதை முன்வைத்துதான் அதி.மு.க. பா.ஜ.க. கூட்டணியே உருவானது. அபினேஷின் இந்த விஸ்வரூபம் ஓ.பி.எஸ். விசயத்தில் எதிர்மறையாக இருக்கிறது. அதனால் ஓ.பி.எஸ். கூட்டணி விவகாரத்தில் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின் றன. ஓ.பி.எஸ்.ஸை கட்சியில் சேர்த்து அவைத்தலைவர் பதவிதர எடப்பாடி தயாராக இருந்தார். அபினேஷின் பணம் தொடர்பான பேரத்தால் ஓ.பி.எஸ். அதி.மு.க.வில் இணைக்கப்படவில்லை. இப்பொழுது காலம் கடந்துவிட்டது. பிரதமர் கலந்துகொண்ட விழாவில் ஓ.பி.எஸ். வருவார் என எடப்பாடி எதிர் பார்த்தார். இந்த பேரம் முடியாததால் ஓ.பி. எஸ். வரவில்லை. இப்பொழுது கூட்டணிக்கு வந்தால் நான்கு தொகுதிகள். அதில் டி.டி.வி.யின் குக்கர் சின்னத்தில்தான் ஓ.பி.எஸ். போட்டிபோட வேண்டும் என எடப்பாடி கண்டிஷன் விதித்திருக் கிறார். இதில் முடிவெடுக்க ஓ.பி.எஸ். தயங்கு வதற்கு காரணம் அபினேஷின் பணம்தான். 

Advertisment

அ.தி.மு.க. சீமானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. சீமான் தனியாக நிற்பதற் காக மத்திய மற்றும் மாநில தலைமை களிடம் வெய்ட்டாக வாங்கியிருக் கிறார். அதி.மு.க.வின் அழைப்பை அவர் நிராகரிக்கிறார். தே.மு.தி.க. வுடன் நடத்தும் பேச்சுவார்த்தை யில் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியும் இடம் பெறு கிறது. அதை விற்றுக் கொடுத்தது தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர் தான். கூட்டணி முடிந்தால்தான் கல்லூரி விவகாரமும் முடியும் என்பதுதான் நிலை. சிக்கலான இந்த பேரத்தை வேறு யார் மேற்கொண் டாலும் சிக்கலில் முடியும் என்பதால்  சபரீசனே நேரடியாக தே.மு .தி.க.விடம் பேசிவருகிறார். 

காங்கிரஸ் கட்சியை விஜய் கூட்டணிக்குக் கொண்டுவர முதலில் ஆசை காட்டிய பிரவீன் சக்ர வர்த்திக்கு மூன்று கோடி ரூபாய் த.வெ.க. தரப்பிலிருந்து லாட்டரி அதிபர் கொடுத்தார். பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் 

Advertisment

தாகூர் போன்றவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு ‘தி.மு.க. கூட்டணியை உடையுங்கள்’ என பா.ஜ.க. தரப்பிலிருந்தும் பணம் தரப்பட, அவர்கள் உற்சாகமாக உடைப்பு வேலைகளில் இறங்கினர். அதனால் தி.மு.க. நேரடியாக முகுல் வாஸ்னிக் என்கிற மேலிடப் பிரமுகரை அனுப்பும் படி கோரிக்கை வைத்தது. அத்துடன்  கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரை டெல்லிக்கு அனுப்பிப் பேசியது. 

இதனிடையே தமிழகத்தில் தேர்தலை சந்திக்க எங்களுக்குப் பணமில்லை என அதி.மு.க. தரப்பு டெல்லியிடம் கோரிக்கை வைக்க, அவர்கள் டெல்லி தொழிலதி பர்களிடம் "அடுத்து அமைவது அ.தி.மு.க. ஆட்சி, நமக்கு வேண்டியதை செய்துகொள்ளலாம்' என ஸ்டெர் லைட், கிழக்குக் கடற்கரையில் எரிவாயு எடுத்தல் திட்டம், தொலைத் தொடர்பு என ஆசை காட்டி ஒரு பெரும் நிதியை அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியின் தமிழக வேட்பாளர்களுக்கு தருவதற்கு ஏற்பாடு செய்துள்ள னர். 

இப்படி இந்தத் தேர்தலில் டெல்லி தொடங்கி தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை பணம் ஆறாகப் பாய ஆரம்பித்துள்ளது. “எடப்பாடி தனது கட்சியிலுள்ள வெயிட்டான ஆட்களை தேர் தலில் நிற்கச்சொல்ல, அவர்கள் த.வெ.க. கூட்டணி வேண்டும் என எடப்பாடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வருபவர்களிடம் "நீங்கள் ஒரு வெயிட்டான அமௌண்ட் கொடுங்கள்' என த.வெ.க. கோரிக்கை வைப்பதனால்தான் கூட்டணி எதுவும் அவர்களுக்கு அமையவில்லை” என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.