மாநிலங்கள் மீது மோடியின் யுத்தம்! -ஒன்றிய அரசின் கைப்பாவையாகும் ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ்!

dd

மாநிலங்களில் பணிபுரியும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட பணிகள்) மாநில அரசின் அனுமதியில்லாமலே ஒன்றிய அரசு பணிகளுக்கு அழைத்துக் கொள்ளும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றத் திட்டமிட் டுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இதுகுறித்து கடந்த முறை ராங்-காலில் பதி விட்டிருந்தோம்.

சட்ட மசோதா தொடர்பாக 3 கடிதங்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடைசியாக அனுப்பிய கடிதத்தில், ஜனவரி 25-க்குள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மாநில அரசுகளுக்கு கெடு விதித்தது ஒன்றிய அரசு. இந்த விவகாரம் மாநில அரசுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மோடியின் திட்டத்தை எதிர்த்து முதல் குரல் எழுப்பியிருக் கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இதனையடுத்து பீகார், கேரளா, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், பஞ்சாப், மேகாலயா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஜனவரி 23 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்.

modi

இந்த சட்ட திருத்த மசோதா பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவசகாயம். தமிழ்நாட் டைச் சேர்ந்த இவர் அரியானா கேடர் அதிகாரி யாகப் பணியாற்றியவர். ’"இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம்தான் அரசிய லமைப்பு சட்டத்தின்படி இருக்கிறது. ஆனால், இந்த ஃபெடரல் செட்-அப் வேண்டாம்; யூனியன் டெரிட்டரியாக இந்தியாவை மாற்ற கங்கணம் கட்டுகிறார் மோடி. அதேபோல, செக்யூலரிஸ நாடாக இருக்க கூடாது; கம்யூனல் இந்தியா வாக இருக்கவேண்ட

மாநிலங்களில் பணிபுரியும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட பணிகள்) மாநில அரசின் அனுமதியில்லாமலே ஒன்றிய அரசு பணிகளுக்கு அழைத்துக் கொள்ளும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றத் திட்டமிட் டுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இதுகுறித்து கடந்த முறை ராங்-காலில் பதி விட்டிருந்தோம்.

சட்ட மசோதா தொடர்பாக 3 கடிதங்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடைசியாக அனுப்பிய கடிதத்தில், ஜனவரி 25-க்குள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மாநில அரசுகளுக்கு கெடு விதித்தது ஒன்றிய அரசு. இந்த விவகாரம் மாநில அரசுகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மோடியின் திட்டத்தை எதிர்த்து முதல் குரல் எழுப்பியிருக் கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இதனையடுத்து பீகார், கேரளா, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், பஞ்சாப், மேகாலயா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஜனவரி 23 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்.

modi

இந்த சட்ட திருத்த மசோதா பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவசகாயம். தமிழ்நாட் டைச் சேர்ந்த இவர் அரியானா கேடர் அதிகாரி யாகப் பணியாற்றியவர். ’"இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம்தான் அரசிய லமைப்பு சட்டத்தின்படி இருக்கிறது. ஆனால், இந்த ஃபெடரல் செட்-அப் வேண்டாம்; யூனியன் டெரிட்டரியாக இந்தியாவை மாற்ற கங்கணம் கட்டுகிறார் மோடி. அதேபோல, செக்யூலரிஸ நாடாக இருக்க கூடாது; கம்யூனல் இந்தியா வாக இருக்கவேண்டும் என நினைக்கின்றனர்.

ஆர்டிக்கிள் 1-ல் இந்தியா என்பது யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்றுதான் வரை யறை செய்யப்பட்டிருக்கிறது. ஆக, ஸ்டேட்ஸ் இல்லாமல் சென்ட்ரல் கிடையாது. இந்த அரசியலமைப்பை மாற்ற துணிச்சல் இல்லாதவர்கள் இப்படி திருத்த சட்ட மசோதாக் களை கொண்டு வந்து மாநில உரிமை களையும் அதிகாரங்களையும் பறிக்கத் துடிக்கிறார்கள். அதாவது, பின்னா லிருந்து முதுகில் குத்துகிறார்கள்.

ff

ஐ.ஏ.எஸ். என்பது பப்ளிக் சர்வீஸ். இந்த சர்வீஸுக்கு மரியாதை இருப்பதற்கு காரணம் இது ஆல் இந்திய சர்வீஸ் என்பது தான். ஆர்டிக்கிள் 312 பிரிவிலேயே ஐ.ஏ.எஸ். சர்வீசை இணைத்துள்ள னர். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும்போது அம்பேத்கர், வல்லபபாய் படேல் தலைமையில் ஆலோசனை நடந்தது. மாநில முதல்வர்கள் எல்லாம், ஆல் இண்டியா சர்வீஸுன்னு ஒன்றும் தேவையில்லை. மாநிலங்களை ஆட்சி செய்ய எங்களிடமே சர்வீஸ் இருக்கட்டும் என வாதிட்டார்கள். ஆனால், இவர்களோ இந்தியாவை ஒற்றுமைப்படுத்தி ஒரே நாடா கொண்டு வந்திருக்கோம். அதனால் ஒன்றியத்தையும் மாநிலங்களையும் இணைக்க ஒரு உறவு வேண்டாமா? அதுதான் நிர்வாக முறையிலான இந்திய ஆட்சிப் பணி என வாதிட்டார்கள்.

அப்படி உருவான நிர்வாக முறையில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 40 சதவீத அதிகாரிகள் ஒன்றிய அரசு பணிக்கு பயன்படுத்திக் கொள்வது என்றும், அந்த அதிகாரிகளை மாநில அரசின் அனுமதியோடுதான் அழைத்துக்கொள்ள முடியும் என்றும் அரசியலமைப்பில் சேர்க்கப் பட்டது.

ff

அதனால், மாநில அரசின் அதிகாரத்தை ஒடுக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறார்கள். இது ஆபத்தானது. ஒன்றிய அரசுக்கு அதிகாரிகள் தேவையெனில், எந்தெந்த மாநிலங் களில் ஒன்றிய அரசுக்குரிய கோட்டா முறைப்படி அதிகாரிகளை அனுப்பாமல் இருக்கிறதோ அந்த மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்து தேவையான அதிகாரிகளைப் பெறவேண்டுமே தவிர, இப்படி சட்டத் திருத்தத்தின் மூலம் சர்வாதிகாரம் பண்ணிட முடியாது.

இந்த சட்டத் திருத்தம் பாஸானால் மாநிலங்களில் பணிபுரியும் திறமையான அதிகாரிகளை ஒன்றிய அரசு அழைத்துக்கொள்ள முடியும். மேலும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநில அரசுகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள். இதனால் மாநிலத்தில் நிர்வாகமும் தேசிய ஒற்றுமையும் சீர்குலையும். இந்த ஆபத்தை முளையிலேயே அரசுகள் கிள்ளி எறியவேண்டும்'' என்கிறார் மிக அழுத்தமாக.

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான முன்னாள் டி.ஜி.பி. திலகவதியிடம் நாம் பேசியபோது,’"மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள முடியாது. நான் பணியிலிருந்தபோது, ஐ.நா.வில் பணிபுரிய வாய்ப்பு வந்தது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். ஐ.நா.வுக்கு செல்ல சம்மதித்தேன். விரும்பி கடிதமும் கொடுத்தேன். ஓகே. ஆனது. ஆனால், என்னை அழைத்த ஜெயலலிதா, "என்னிடம் வேலை பார்க்க உங்களுக்கு என்ன பிரச்சனை?'ன்னு கேட்டாங்க. "ஒரு பிரச்சினையும் இல்லைங்க. ஐ.நா.வில் பணிபுரிவதன் மூலம் மற்றொரு பரிணாமம் கிடைக்கும்' என்று சொன்னேன். ஆனால், "உங்களை அங்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை' என சொல்லி இங்கேயே இருக்க வைத்தார்.

அதனால், நாம் விரும்பினாலும் ஒன்றிய அரசு விரும்பி னாலும் மாநில அரசின் அனுமதியில்லாமல் செல்ல முடியாது. மாநில பணிகளுக்காக அதிகாரிகள் பிரிக் கப்படும்போது அவர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிடு கிறார்கள். மாநில அரசுகளை தங்களின் பிடியில் வைத்துக்கொள்ள எப்போதுமே ஒன்றிய அரசு விரும்பும். அதற்காக பல வழிகளை ஆராயும். அப்படி ஒரு விசயமாகத்தான் இந்த சட்ட மசோதா இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேசம் என கட்டமைக்கும் ஒன்றிய அரசின் திட்டங்களில் இது ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ff

ஒரு தேசத்துக்கு எப்படி இறையாண்மை இருக்கிறதோ அதேமாதிரி மாநில அரசுக்கும் இறையாண்மை இருக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தால் மாநிலங்களின் இறையாண்மை கேள்விக்குறியாகும். அதனால், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக இருப்பது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தான். அந்த உறவுகளில் சிக்கல் ஏற்படுவது ஆரோக்கியமானது அல்ல. நம்முடைய கூட்டாட்சி தத்துவ முறை யையும் பன்முகத்தன் மையையும் கௌரவப் படுத்தணுமே தவிர, அனைத்து அதிகாரங்களையும் மேலாண்மையையும் நானே எடுத்துக் கொள்வேன் என டெல்லி நினைத்தால் நாடு, நாடாக இருக்காது. இந்த சட்ட திருத்தம் நிறைவேறினால், நிர்வாக ரீதியிலான பல ஆபத்துகளை மாநில அரசுகள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். குறிப்பாக, மக்கள் நல திட்டங்கள் எதையும் மாநில அரசு தன்னிச்சையாக நிறைவேற்ற முடியாது. தேர்தல் காலங்களில் மாநில அரசுக்கு சாதகமாகவும் இயங்க முடியாது'' ‘’ என்கிறார் இயல்பாக.

கடந்த ஆண்டு புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டார் மோடி. அந்த கூட்டத்தை முதல்வர் மம்தாவும், தலைமைச் செயலாளர் பந்தோபத்யாவும் புறக்கணித்தனர். இதனை ஜீரணிக்க முடியாத ஒன்றிய மோடி அரசு, ஐ.ஏ.எஸ். அதிகாரியான பந்தோபத்யாவை தன்னுடைய அரசுக்கு உடனடியாக மாற்றியது. இதனை ஏற்காத மம்தா, மாநில அரசுப் பணியிலிருந்து விடுவிக்க மறுத்து, அவரை வீ.ஆர்.எஸ். கொடுக்க வைத்து தனது தலைமை ஆலோசகராக பந்தோபத்யாவை நியமித்துக்கொண்டார் மம்தா. அவரது கெத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தது ஒன்றிய அரசு. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றும் மோடி அரசால் சாதிக்க முடியவில்லை.

ff

இத்தகைய சம்பவத்திற்கு பிறகுதான், ஒன்றிய அரசில் நிறைய விவாதங்கள், ஆலோசனைகள் டெல்லியில் நடந்துள்ளன. பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில அரசுகளை தங்களின் வழிக்கு கொண்டு வரவேண்டுமானால் நிர்வாக அதிகாரத்தினை தங்கள் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர். அதனை நிறைவேற்றும் முகமாகத்தான் இந்த சட்டத் திருத்தம். "இதற்குமுன் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் எத்தனையே சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அவைகளெல்லாம் விட இந்த சட்ட மசோதா மிக மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்' என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

இந்த சூழலில், தமிழக அரசியல் தலைவர்கள் டாக்டர் அன்புமணி, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்துவருகிறார்கள். இந்திய அளவிலான அரசியல் தலைவர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என பலரும், மாநிலங்கள் மீது மோடி அரசு தொடுத்துள்ள அதிகார யுத்தத்தை எதிர்த்துக் குரல் எழுப்புகிறார்கள்.

படங்கள் : ஸ்டாலின், அசோக்

nkn260122
இதையும் படியுங்கள்
Subscribe