மோடி இலங்கை பயணம்! தீர்வு காணப்படாத தமிழர்களின் அதிகாரப் பகிர்வு!

ss

ரசு முறைப்பயணமாக இலங்கைக்குச் சென்றுவிட்டு இந்தியா திரும்பியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு அவர் செல்வது இது நான்காவது முறை. ஒவ்வொரு முறையும் அவர் இலங்கைக்குச் செல்லும் போதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு தீர்வு கிடைக்குமா? என்கிற ஏக்கம் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடகிழக்கில் எதிரொலிப்பது உண்டு. இந்த முறையும் அந்த குரல் எழுந்தது.

இலங்கைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் 6 பேர் இணைந்து சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதனையடுத்து, இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்ற அவருக்கு, ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே தலைமையில் மீண்டும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே யான நட்புறவை வலிமைப்படுத்தும் முகமாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

modi

குறிப்பாக, தெற்காசிய பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி, சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கை, மின் இறக்குமதி, டிஜிட்டல் பரிமாற்றம், திரிகோணமலையில் வலுசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு, கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது.

இந்த ஒப்பந்தங்களில் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் இரு நாடுகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்களால் மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டிருக்கிறது.

அதாவது, இலங்கை ராணுவத்துக்கு பல வகைகளில் இந்தியா பயிற்சியளித்து வந்தாலும், தற்போது இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக விரிவான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் ராணுவ அதிகாரிகளைப் பகிர்ந்து

ரசு முறைப்பயணமாக இலங்கைக்குச் சென்றுவிட்டு இந்தியா திரும்பியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு அவர் செல்வது இது நான்காவது முறை. ஒவ்வொரு முறையும் அவர் இலங்கைக்குச் செல்லும் போதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு தீர்வு கிடைக்குமா? என்கிற ஏக்கம் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடகிழக்கில் எதிரொலிப்பது உண்டு. இந்த முறையும் அந்த குரல் எழுந்தது.

இலங்கைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் 6 பேர் இணைந்து சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதனையடுத்து, இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்ற அவருக்கு, ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே தலைமையில் மீண்டும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே யான நட்புறவை வலிமைப்படுத்தும் முகமாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

modi

குறிப்பாக, தெற்காசிய பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி, சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கை, மின் இறக்குமதி, டிஜிட்டல் பரிமாற்றம், திரிகோணமலையில் வலுசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு, கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது.

இந்த ஒப்பந்தங்களில் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் இரு நாடுகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்களால் மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டிருக்கிறது.

அதாவது, இலங்கை ராணுவத்துக்கு பல வகைகளில் இந்தியா பயிற்சியளித்து வந்தாலும், தற்போது இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக விரிவான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் ராணுவ அதிகாரிகளைப் பகிர்ந்து கொள்வது, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, இரு ராணுவத்துக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில் தடையில்லாமல் இருத்தல், ராணுவத் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளில் ஒத்துழைப்பு, இரு நாட்டு ராணுவமும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது, ரோந்து மேற்கொள்வது ஆகியவை அடங்கி யுள்ளன. மேலும், இலங்கையின் 750 ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தியாவுடன் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கும் இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக கொழும்பு வில் போராட்டங்களும் நடந்துள் ளன. இந்த போராட்டத்தை. முன்னெடுத்துள்ள சோசலிச கட்சியினர், "இந்திய காலனியாக்கத் திற்கு நாட்டை பலி கொடுக்கும் உடன்படிக்கைகள் வேண்டாம். மக்கள் வாழ்க்கைக்கு ஆபத்தான பாதுகாப்பு உடன்படிக்கையை ரத்து செய்யுங்கள்'' என்று குரல் எழுப்பினர். இதனால் கொழும்புவில் பதட்டம் நிலவியது.

பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரனவக்க, "பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தம், எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லா மல், இந்தியாவுடன் தன்னிச்சையாக செய்துகொண்டிருக்கிறது இலங்கை அரசாங்கம். நாடாளுமன்றத்திற்கோ மக்களுக்கோ இலங்கை அரசு தெளிவுபடுத்தவில்லை'' என்று குற்றம்சாட்டுகிறார்.

ss

மேலும், திருகோணமலை - சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிர்மாணப் பணிகள், இந்திய பிரதமர் மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க ஆகிய இருவரும் இணைந்து தொடங்கி வைத்துள்ளனர். இந்த திட்ட மும் இலங்கை பேரினவாத சக்திகளால் எதிர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த போராட்டத்தையும் எதிர்ப்புகளையும் அறிந்து அதிர்ச்சியடைந்த அனுர குமார திசநாயகே, பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சம்பத் துய்யகொந்தவிற்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். இதனையடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள துய்ய கொந்த, "இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்திடுவதற்கு முன்பு, உரிய வகையில் அமைச்சரவை யின் அனுமதிபெறப்பட்டது. இந்த புரிந்துணர்வு நடவடிக்கை கள், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களால், இலங்கை மற்றும் இந்தியாவின் தேசிய கொள்கைக்கும், சட்ட கட்டமைப்பிற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது'' என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, மோடியின் இந்த பயணம், இலங்கை தமிழர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. காரணம், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது சட்டத் திருத்தம் வாயிலாக இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காண்பதற்கு மோடி முயற்சிப்பார் என்பதுதான். குறிப்பாக, இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையில், 1987-ல் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தின் ஊடாக, தமிழர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் முயற்சியை பல வருடங்களாக இந்தியா மேற்கொண்டிருந்தது. அந்த முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை.

அந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசு மறுத்தே வருகிறது. அந்த வகையில், இலங்கைக்கு வந்த பிரதமர் மோடி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகேவிடம் அழுத்தமாக வலியுறுத்துவார் என இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இலங்கைத் தமிழர்களின் இந்த எதிர்பார்ப்பு கானல் நீராகியிருக்கிறது என்கிற விமர்சனங்கள் வடகிழக்கில் எதிரொலிக்கின்றன.

இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை அரசியலமைப்பு சட்டப் பிரிவு களை முழுமையாக செயல் படுத்த அளித்த உறுதி மொழியை இலங்கை அரசு செயல்படுத்தும். இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்பு களை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றும். அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி, மாகாண தேர்தல்களை நடத்துவதற்கு முன்வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. எனது இந்தப் பயணத்தின்போது, மேற் கொள்ளப்பட்ட திட்டங்கள், முயற்சிகள், இலங்கை வாழ் தமிழ் சமூகத்துக்கு, சமூக, பொருளாதார, கலாச்சார முன்னேற்றங்களை ஏற்படுத்தித் தரும். இலங்கை தமிழர்களுக்கு சமத்துவம், கண்ணியத்துடன், ஒருங்கிணைந்த இலங்கையில் அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்'' என்று வழக்கமாகச் சொல் வதைக் கடந்து, தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு குறித்து ஆழமான கருத்தினை சொல்லவில்லை. இது இலங்கை தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

இலங்கையின் இந்த பயணத்தில், தனது நாட்டின் உயர்ந்த விருதான "மித்ர விபூஷணா' விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி அனுர திசநாயகே!

மித்ர விபூஷணா விருதைப் பெற்றதும், "இந்த விருதைப் பெறுவதில் பெருமிதம் அடைகிறேன். இது எனக்கு கிடைத்த கவுரவம் அல்ல; 140 கோடி இந்தியர்களுக்கானது. இரு நாட்டுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை மதிக்கும் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.'' என்று குறிப்பிட்டார் மோடி.

இதற்கிடையே, இலங்கைக்கு மோடி செல்வதையறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் இந்தியப் பிரதமர், இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர் களையும், அவர்களது படகுகளையும் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும்'' என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இந்தியா திரும்புவதற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த மோடியிடம் பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் தமிழக மீனவர் பிரச்சனை குறித்தும் கேட்கப்பட்டபோது, "மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை இலங்கை ஜனாதிபதியிடம் வலியறுத்தியிருக்கிறேன்'' என்று பதிலளித்தார். தமிழகத்தில் ஸ்டாலின் வைத்த கோரிக்கைக்கு இலங்கையில் பதில் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி.

_________________

இறுதிச் சுற்று!

யார் அந்த தியாகி?

திங்கட்கிழமை கூடிய சட்டமன்றக் கூட்டத்தில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை என அ.தி.மு.க.வினர் கண்டித்து வெளிநடப்பு செய்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் வெளியில் சென்ற செங்கோட்டையன், சில நிமிடங்களில் மீண்டும் அவைக்குத் திரும்பினார். தனது தொகுதி சார்ந்த கவனயீர்ப்பு குறித்து பேசுவதற்காக உள்ளே வந்தார். முன்னதாக, "யார் அந்த தியாகி?' என்ற பதாகையை அ.தி.மு.க.வினர் ஏந்தியிருந்தனர். அதனை செங் கோட்டையனிடம் கொடுத்தபோது, வாங்க மறுத்துவிட்டார். கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச செங்கோட்டையன் முயற்சித்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் அணிந்துள்ள ப்ளாக் பேட்ஜை கழட்டினால் தான் பேச அனுமதிப்பேன் என்று சபாநாயகர் கூறியதால் அந்த பேட்ஜை கழற்றி கீழே வைத்துவிட்டு பேசினார் செங்கோட்டையன். சபையில் அமளியில் ஈடுப்பட்ட எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை 1 நாள் சஸ்பெண்ட் செய்தார் அப்பாவு. அ.தி.மு.க.வினர் ஏந்திய பதாகையில் இருந்த, யார் அந்த தியாகி என்பதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.விற்கு பொறுப்பேற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர், தான் சிக்கியிருக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்க யார் காலில் விழுந்ததை கண்டு நொந்து போன அக்கட்சி தொண்டர்கள் தான் தியாகிகள்" என்றார்.

-இளையர்

nkn090425
இதையும் படியுங்கள்
Subscribe