அமெரிக்காவில் வெளியான ஒரு செக்ஸ் குற்றவாளி தொடர்பான ஃபைல் உலகத்தையே உலுக்கிக்கொண்டி ருக்கிறது. அதில் மோடியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது என சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாட்ட, இந்தியாவில் பலரின் விழிகள் உயர்ந்துள்ளன.
""5 முறைக்கும் மேல் எம்.பி.யாக இருந்த ஒருவர், சில இந்திய அரசியல் வாதிகளுடன் சர்வதேச மோசடியில் ஈடுபடுவதற்காக அவர்களை அமெரிக்காவில் சட்டவிரோத செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருக்கிறார். அவர்களது புகைப்படங்கள் விரைவில் மதிப்புமிக்க அமெரிக்க செய்தித்தாள்களில் வந்து, இந்திய அரசியல்வாதிகள் மற்றும் இந்தியாவின் மதிப்புக்கு சேதம் விளைவிக்கப் போகிறது'' என நவம்பர் 27-ஆம் தேதி ஒரு ட்வீட்டை சுப்பிர மணியன் சுவாமி பதிவு செய்திருந்தார்.
""எப்ஸ்டீன் ஸ்கேண்டல், சில குறிப்பிட்ட இந்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சில தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கியது. மோடி அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமா?'' என்றொரு பதிவை நவம்பர் 29ஆம் தேதி, வெளியிட்டார்.
இறுதியாக, ""மோடியின் முன்னாள் கேபினட் அமைச்சர் ஹர்தீப் புரியினுடைய அசிங்கமான செக்ஸ் ரகசியங்களை வைத்து அமெரிக்கா, இந்தியாவை ப்ளாக்மெயில் செய்தால் மோடிக்குத்தான் சிரமம். மோடி தன்னை பிரம்மச்சாரி எனச் சொல்லிக்கொள் கிறார். ஆனால் உண்மையில் அவர் விரும்பியோ, விரும்பாமலோ பெண் களுடன் காதலை விரும்புகிற பிரம்மச்சாரி. அமெரிக்க விசாரணை அமைப்புகள், மிரட்டுவதற்கு புகைப்படங்களைக் வைத்திருக் கின்றன. இது இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஊறு விளைவிக்கும்'' -என நவம்பர் 30ஆம் தேதி ட்வீட் செய்ய, தேசிய அளவில் பரபரப்பு உண்டானது.
பின்னால், தனது 30-ஆம் தேதி ட்வீட்டை சுப்பிரமணிய சுவாமி நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சரி, முதலில் எப்ஸ்டீன் பைல்கள் என்றால் என்னவெனப் பார்ப்போம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/susamy1-2025-12-06-02-30-02.jpg)
ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் ஒரு அமெரிக்க நிதியாளர் மற்றும் பாலியல் குற்றவாளி. நியூயார்க்கின் புரூக்ளினில், யூதப் பெற்றோரான சீமோர்- பவுலின் ஆகியோருக்குப் பிறந்தவர்.
எப்ஸ்டீன் தனது சொந்த நிறுவனமான இன்டர்காண்டினென்டல் அசெட்ஸ் குரூப்பையும், பின்னர் ஜே.எப்ஸ்டீன் & கோ நிறுவனத்தையும் நிறுவினார். மிகவும் பணக்கார வாடிக்கையாளர் களுக்கான சொத்துக்களை நிர்வகித்தார். மிக விரைவில் பெரும் சொத்துக்களைக் குவித்தார்.
பெண்களைக் கடத்துதல், அவர்களை மசாஜ் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபடுத்துதல், போன்ற வற்றில் ஈடுபடுத்தினார். அந்தப் பெண்களை, பணக்காரர்கள், அரசியல்வாதிகளுடன் நெருங்கச் செய்து, அதை வைத்து அவர்களுடனான நெருக்கத்தை வளர்த்துக் கொள்வார். அந்தப் பெண் களுடன் வி.ஐ.பி.க்கள் நெருக்கமாக இருக்கும் தருணங்களை பதிவு செய்து கொள்வார்.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணான வர்ஜீனியா கியூ ஃப்ரே, 2001-ஆம் ஆண்டு பிரிட் டிஷ் இளவரசர் ஆண்ட் ரூவுடன் உடலுறவு கொள்ள எப்ஸ்டீனும் மேக்ஸ்வெல்லும் தன்னை கட்டாயப்படுத்தியதாக பகிரங்கமாகக் கூறினார். அவருக்குச் சொந்தமான தனியார் கரீபியன் தீவான லிட்டில் செயிண்ட் ஜேம்ஸில் தான் (மேஜராகாத) இளவயதுப் பெண்கள் உள்பட பல பெண்களை வைத்து பாலியல் விருந்துகளை அளித்திருக்கிறார்.
பெண்களைக் கடத்தி விபச்சாரத்துக்கு விற்பனை செய்தல், தன்னிடமுள்ள நெட்வொர்க் மூலம் வணிகம், அரசியல் மட்டங்களில் இந்த சிறு வயதுப் பெண்களை விருந்தளித்து அரசியல், பண ஆதாயங்களை நீண்ட காலமாக அடைந்துவந்தார். இதுகுறித்து முன்பே புகார்கள் எழுந்து 2008-ல் 13 மாத சிறைவாசம் அனுபவித்திருக்கிறார் எப்ஸ்டீன். சிறையிலிருந்து வெளிவந்தபின் மீண்டும் உஷாராக தனது வேலைகளைத் தொடர்ந்துவந்த எப்ஸ்டீன் 2019-ல் சட்டத்தின் பிடியில் சிக்கினார். ஆனால் மிக விரைவிலேயே சிறைக்குள் தூக்கில் தொங்கினார். அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டின் விஸ்தீரணத்தைப் பார்க்கும்போது, தற்கொலை செய்துகொண்டாரா… அல்லது அவர் மரணம் தற்கொலையாகக் காட்டப்பட்டதா என்ற சந்தேகமெழுகிறது.
இன்றைக்கு அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்ப்கூட, முந்தைய காலகட்டத்தில் எப்ஸ்டீனின் நட்பு வட்டத்தில் இருந்தவர்தான். சமீபத்தில் ட்ரம்புக்கும் எக்ஸ் தள அதிபர் எலான் மஸ்குக்குமான நட்பில் உரசல் வந்தபோது, எப்ஸ்டீனின் விமானத்தில் பறந்தவர்களில் ட்ரம்பும் ஒருவர் என்பதால், எப்ஸ்டீன் பைல்கள் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படுமா என்று சந்தேகம் எழுப்பினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/susamy2-2025-12-06-02-30-19.jpg)
இந்த நிலையில்தான் சமீபத்தில் எப்ஸ்டீன் பைல்களின் குறிப்பிட்ட பகுதி வெளியிடப்பட்டது. எனினும் சென்சிடிவ்வான சில முக்கிய பகுதிகள் வெளியிப்படவில்லை என்கிறார்கள்.
இதில் மோடியும் இந்தியாவும் எங்கே வருகிறார்கள் என்கிறீர்களா?
2025-ஆம் ஆண்டில் அமெரிக்க நீதித்துறை மற்றும் ஹவுஸ் மேற்பார்வைக் குழுவால் வெளியிடப்பட்ட 33,000 பக்க ஆவணங்கள், மின்னஞ்சல்கள், காலண்டர்கள் மற்றும் கைப் பற்றப்பட்ட தரவுகளை உள்ளடக்கிய எப்ஸ்டீன் கோப்புகள், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது வலையமைப்பை இந்தியாவை தனது அரசியல் செல்வாக்கிற்குப் பயன்படுத்த முயற்சித்ததை வெளிப்படுத்துகின்றன என்கிறார்கள்.
2019-ல் எப்ஸ்டீனின் கைதுக்கு இரு மாதங்கள் முன்பாக, இப்போதைய அதிபர் ட்ரம்பின் முன்னாள் வியூக வகுப்பாளர் ஸ்டீவ் பனானிடம் மோடியுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு கேட்டார். (அப்போது மோடி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்தார்) ஆனால் அந்தச் சந்திப்பு நிகழவில்லை. எந்த நோக்கத்துக்காக எப்ஸ்டீன் மோடியைச் சந்திக்க விரும்பினார் என்பது இன்னும் ரகசியமாகவே இருக்கிறது.
பா.ஜ.க.வின் பெட்ரோலிய, இயற்கை வாயுத் துறை அமைச்சராக இருந்தவரும், முன்னாள் ஐ.நா. தூதருமான ஹர்தீப்சிங் புரியை சந்தித்ததாக, எப்ஸ்டீன் காலண் டரில் 5 சந்திப்புகள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த சந்திப்புகள் ஜூன் 2014 முதல் ஜனவரி 2017 காலகட்டத்தில் நடந்துள்ளன. எப்ஸ்டீனின் கூட்டாளியான டெர்ஜே ரோட்-லார்சனுடன், புரி தொடர்புடையவர் என யூகிக்கிறார்கள்.
இந்தச் சந்திப்புகளில் ஒன்றில்தான், ஹர்தீப் சிங் இந்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுடன் சென்றதாக சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்திருக்கிறார். அதன் புகைப்படங்களை வைத்துத்தான் அமெரிக்கா, இந்தியாவை மிரட்டும் என்கிறார். இந்த மர்மங்களை விடுவிக் கத்தான் ஆளில்லை.
ரிலையன்ஸ் குழும முதலாளியான அனில் அம்பானி எப்சனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி யுள்ளார். அந்த மின் னஞ்சலுக்கு எப்ஸ்டீன், இந்தியா- இஸ்ரேல் போன்ற முக்கிய விஷயங்கள் மின்னஞ்சலுக்கானது அல்ல எனப் பதிலளித்துள்ளார். அதாவது, மின்னஞ்சலில் தொடர்புகொள்ள வேண்டாமென அறிவுறுத்தியிருக்கிறார். இந்தியா- இஸ்ரேல் தொடர்பான ஆயுத ஒப்பந்தங்கள் தொடர்பாக ஏதோ நடந்துள்ளதை இந்த மின்னஞ்சல் விவரிக்கிறது என்கிறார்கள்.
இவர்களைத் தவிர சுகாஸ் சுப்பிரமணியன், தீபக் சோப்ரா என்ற இரு இந்தியர்களுடன் எப்ஸ்டீன் தொடர்பில் இருந்துள்ளது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியா போன்ற பெரிய நாடுகள் தொடர்புடைய ஆவணங்களை அமெரிக்கா அதன் முக்கியத்துவம் காரணமாக வெளியில் விடாது. ஆனால், அந்த ஆதாரங்களைப் பயன்படுத்தி கொள்கைசார்ந்த விஷயங்களில் தங்களுக்கு சாதகமாக இந்தியாவை வளைத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தலாம். அதனால்தான் சுப்பிரமணியன் சுவாமி இந்த விவகாரம் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஊறுவிளைவிக்கும் என ட்வீட் பதிவுசெய்திருக்கிறார்.
வெளியிடப்பட்டதுபோக, பாதுகாக்கப்பட்ட எஃப்ஸ்டீன் பைல்களில் என்னவிருக்கிறது என கண்டுபிடிக்கப்பட வேண்டியது இந்திய நலன்களுக்கு அவசியம். சர்வதேச அளவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய ஒரு கேடி, இந்திய பிரதமரை ஏன் சந்திக்க விரும்பினான்?
பா.ஜ.க. அரசின் முன்னாள் அமைச்சர் இத்தகைய ஒரு குற்றவாளியை ஐந்து முறை சந்தித்து உரையாடியது எதற்காக? என்பதை விசாரிக்க மோடி அரசு உத்தரவிடவேண்டும்.
மக்களின் சந்தேகத்துக்காக மனைவியையே தள்ளிவைத்தவர் ராமர். தங்களது அரசை ராமராஜ்ய அரசு எனச் சொல்லிக்கொள்ளும் அரசின் பிரதமர் மக்களின் சந்தேகத்துக்கான பதில்களை, நாடாளுமன்றத்தில் அவசியம் தெளிவுபடுத்த வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/susamy-2025-12-06-02-29-49.jpg)