உடைந்தது மோடி பிம்பம்! எதிர்க்கட்சிகளின் அதிரடி!

புதுப்பிக்கப்பட்டது
modi-raghu-parilament

 

சிந்தூர் ஆபரேசன் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசு திணறிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் ஆவேச குரல்களால் போர்க்களம்போல் இருக்கிறது நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர்! 

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. அந்த யுத்தத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி களின் தலைமையகம், முகாம்கள் ஆகியவை குறிவைத்து அழிக்கப்பட் டன.  இந்த போருக்கு "ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிட்டிருந்தார் மோடி. ஒரு கட்டத்தில், போரை நிறுத்திக் கொண்டது இந்தியா. 

இந்த நிலையில், கடந்த வாரம் கூடிய நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடரில் ஆபரேசன் சிந்தூர், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இவற்றை அவையில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனையடுத்து, "ஆபரேசன் சிந்தூர்' குறித்து விவாதிக்க 16 மணி நேரம் ஒதுக்கியது மோடி அரசு.   

நாடாளுமன்றத்தில் ஆபரேசன் சிந்தூர் குறித்த விவாதத்தை தொடங்கிவைத்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 1971-ல் நடந்த போருடன் ஆபரேசன் சிந்தூரின் போர் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பேசினார். "பாகிஸ்தான் மீது தொடுக்கப்பட்ட போர் இந்தியாவின் கௌரவம்' என்றார். 

இதனையடுத்து, பஹல்காம் தாக்குதல்களுக்கு பதிலடி தந்த ஆபரேசன் சிந்தூர் குறித்த விளக்கத்தை விவரித்த உள் துறை அமைச்சர் அமித்ஷா, "பஹல்காம் தாக்குதல்களுக்கு காரணமான 3 பயங்கரவாதி கள் ஆபரேசன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட னர். கொல்லப்பட்டவர்களில் சுலேமான், லஷ்கர்-இ-தொய்பா வின் தளபதியாக இருந்தவர். இவர், பஹ

 

சிந்தூர் ஆபரேசன் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசு திணறிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் ஆவேச குரல்களால் போர்க்களம்போல் இருக்கிறது நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர்! 

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. அந்த யுத்தத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி களின் தலைமையகம், முகாம்கள் ஆகியவை குறிவைத்து அழிக்கப்பட் டன.  இந்த போருக்கு "ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிட்டிருந்தார் மோடி. ஒரு கட்டத்தில், போரை நிறுத்திக் கொண்டது இந்தியா. 

இந்த நிலையில், கடந்த வாரம் கூடிய நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடரில் ஆபரேசன் சிந்தூர், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இவற்றை அவையில் விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனையடுத்து, "ஆபரேசன் சிந்தூர்' குறித்து விவாதிக்க 16 மணி நேரம் ஒதுக்கியது மோடி அரசு.   

நாடாளுமன்றத்தில் ஆபரேசன் சிந்தூர் குறித்த விவாதத்தை தொடங்கிவைத்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 1971-ல் நடந்த போருடன் ஆபரேசன் சிந்தூரின் போர் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பேசினார். "பாகிஸ்தான் மீது தொடுக்கப்பட்ட போர் இந்தியாவின் கௌரவம்' என்றார். 

இதனையடுத்து, பஹல்காம் தாக்குதல்களுக்கு பதிலடி தந்த ஆபரேசன் சிந்தூர் குறித்த விளக்கத்தை விவரித்த உள் துறை அமைச்சர் அமித்ஷா, "பஹல்காம் தாக்குதல்களுக்கு காரணமான 3 பயங்கரவாதி கள் ஆபரேசன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட னர். கொல்லப்பட்டவர்களில் சுலேமான், லஷ்கர்-இ-தொய்பா வின் தளபதியாக இருந்தவர். இவர், பஹல்காம் மற்றும் காகங்கீர் தாக்குதல்களில் ஈடுபட்டவர். மற்ற இரண்டு பேர் களான ஆப்கனும், ஜிப்ரானும் லஷ்கர்-இ-தொய்பாவின் முதல்நிலை பயங்கரவாதிகள். 

பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட தில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை'' என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து நடந்த விவாதத்தின்போது மோடி அரசை நோக்கி சராமாரியாக, அடுக்கடுக்கான கேள்விகளால் தாக்குதல் நடத்தினர் எதிக்கட்சி எம்.பி.க்கள். 

modi-raghu-parilament1

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசும் போது, "இந்திய ராணுவத்துக்கு ஆதர வாக முதல் பேரணி நடத்தியது தி.மு.க. தான். சீனா மற்றும் கார்கில் போர்களின் போது ராணுவத்துக்கு அதிக நிதி கொடுத்தவர் மறைந்த எங்கள் தலைவர் கலைஞர். எங்களை தேசத்துரோகி என நீங்கள் முத்திரை குத்த முடியாது. 

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த அவையில் பேசும் போது, இந்தியாவை பாகிஸ்தான் தாக் கப்போகிறது என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் எச்சரித்த தாகச் சொன்னார். இந்தியா மீது தாக்கு தல் நடக்கப்போவதை அமெரிக்கா அழைத்துச் சொல்வது உங்க ளுக்கு வெட்கமாக இல்லையா? நமது உளவுத்துறையும் ரா அமைப்பும் தூங்கிக் கொண்டிருந்ததா? உளவுத்துறையின் தோல்வியால்தான் பஹல்காம் தாக்குதல் நிகழ்ந் தது. இது, உங்கள் நிர்வாகத்தின் தோல்வியையும் இயலாமை யையும்தான் காட்டுகிறது'' என்றார் ஆவேசமாக. 

தி.மு.க. எம்.பி. கனிமொழி கருணாநிதி பேசும்போது, "எங்க ளுக்கு தேசபக்தி இல்லை என்பது போல அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். தேச பக்தியில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. இறையான்மையை கடைபிடிப்பவர்கள். ஆபரேசன் சிந்தூர் குறித்து எங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்ல முடியாமல், 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு என்ன நடக்கிறது என்பதைப் பேசுங்கள். மக்களின் பாதுகாப்புக்கு அரசுதான் பொறுப்பு. அவர் களைக் காப்பாற்றுவதிலிருந்து அரசு தவறிவிட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு புலனாய்வு அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தன? சுற்றுலாவுக்கு வந்தவர்கள் கொல்லப்பட்டிருக் கிறார்கள். அவர்களின் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு? 

இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று 26 முறை கூறிவிட்டார் டிரம்ப். அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்தை இந்தியா நேரடியாக மறுக்காதது ஏன்? இதுதான் உங் கள் வெளியுறவுக் கொள்கையா? பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்கு கூட 2 நாடுகள் ஆதரவு தெரிவித்துவிட்டன. ஆனால் இந்தியா வுக்கு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவின் அண்டைநாடு கூட ஆதரவு தெரிவிக்கவில்லை; இந்தியாவுக்கு ஒரு நாடுகூட நண்பர் இல்லையா? 

உங்களுடைய சித்தாந்தங்கள் இந்த தேசத்தில் வீசப்படும் விஷ விதைகள். இவைகள் அழித்தொழிக்கப்பட வேண்டும். விஸ்வ குரு என தன்னை அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கர வாத செயல்கள் நடக்கிறபோது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. எந்த பாடத்தையும் அவர் கற்றுக் கொள்ளவில்லை. உலகின் சிறந்த தலைவன் நான்தான் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை. துணிச்சலான ஒரு அரசன் என்பவன், போர்களை நடத்துபவரோ, வெல்பவரோ அல்ல; போர்கள் இல்லாமல் அமைதியை நிலைநிறுத்துபவர். அப்படிப்பட்ட அரசனாக இருந்தவன் எங்களின் கங்கைகொண்ட சோழன். அந்த கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்தீர்கள். பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்''’என்று மிகக்கடுமையாகத் தாக்கினார்.   

காங்கிரஸ் எம்.பி.யும் ராகுல்காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தியின் பேச்சிலும் அனல் தெறித்தது. அவர் பேசும் போது, "பஹல்காம் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுத்தோம் என இந்த அரசு பெருமை பேசுகிறது. ஆனால், தாக்குதல் முதலில் ஏன் நடந்தது என ஒருமுறை கூட  விளக்கவில்லை. பல விசயங்களைச் சொல்லி பாதுகாப்பு அமைச்சர் இங்கு 1 மணி நேரம் பேசினார். ஆனா, ஒரு விசயத்தைப் பேசவில்லை. 26 பேர் பஹல்காமில் கொல்லப்பட்டனர். அந்த சம்பவம் ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? 

இந்த அரசை நம்பித்தானே மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? பிரதமரின் பொறுப்பு இல்லையா? உள்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் பொறுப்பில்லையா?  பாராட்டுகளை எடுத்துக்கொள்வது மட்டும் தலைமைத்துவம் இல்லை. பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமது நாட்டில் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. அது, அமெரிக்காவால் அறிவிக்கப்படுகிறது. 

கடந்த கால வரலாற்றை பேசும் நீங்கள், கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்கள். கடந்த காலங்களில் இப்படி தாக்குதல் நடந்தபோது உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்தார். நீங்கள் செய்தீர்களா? பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு காஷ்மீரில் ஆய்வு செய்த அமித்ஷா, தீவிரவாதத்தை வென்றுவிட்டோம்னு சொன்னார். ஆனால், அதன் பிறகுதான் தாக்குதல் நடந்தது.        இதற்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்திருக்க  வேண்டும். செய்தாரா?'' என்று பொளந்து கட்டினார் பிரியங்கா காந்தி. 

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, "பிரதமரின் பிம்பத்தைக் காப்பாற்றத்தான் ஆபரேசன் சிந்தூர் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரை 1971 போருடன் ஒப்பிட்டு பேசினார் ராஜ்நாத்சிங். ஆனால் இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. 1971-ல் இந்தியாவிடம் அரசியல் உறுதி இருந்தது. அப்போதைய பிரதமர் (இந்திரா) ராணுவப் படைகள் செயல்பட முழு சுதந்திரம் வழங்கினார்.  நமது ராணுவத்துக்கு முழு சுதந்திரம் தரப்பட்டதால், பாகிஸ்தான் வீரர்கள் 1 லட்சம் பேர் சரணடைந்தனர். 

இந்திராகாந்திக்கு இருந்த தைரியத்தில் பாதியாவது மோடிக்கு இருக்கிறதா? இருந்தால், இந்திய விமானங்களை நாம் இழக்க வில்லை என்றும், போர் நிறுத்தத்தை அமெரிக்க ட்ரம்ப் செய்யவில்லை என்றும் மோடி சொல்லட்டும். ட்ரம்ப் ஒரு பொய்யர் எனச் சொல்லும் தைரியம் மோடிக்கு இருக்கிறதா?''’என்றார் மிக காட்டமாக! 

எதிர்க்கட்சிகளின் இத்தகைய கடுமையான தாக்குதல்களால் நாடாளுமன்றமே போர்க்களம் போல இருந்தது. எதிர்க்கட்சிகளின் தாக்குதலை எதிர்கொண்ட பிரதமர் மோடி பேசும்போது, "இந்தியா தனது பாதுகாப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளை உலகின் எந்த நாடும் எதிர்க்கவில்லை. தேசத்தின் ஹீரோக்களுக்கு, எதிர்க்கட்சி களின் ஆதரவு கிடைக்கவில்லை. பஹல்காமில் மக்கள் கொல்லப்பட்ட போதும் தங்களின் சுயநல அரசியலால் என்னையே தாக்கினார்கள். 

எங்கே, எப்போது, எப்படி தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என ராணுவத்துக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளராக காங்கிரஸ் மாறிவிட்டது. அணு ஆயுத மிரட்டல் எல்லாம் இந்தியாவிடம் செல்லாது. தனது மூளையை பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தால், தீவிரவாதி களுடன் நின்றிருக்கமாட்டார்கள். ஆனால், அப்படி நின்றதால், பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். எங்களை தாக்காதீர்கள் என பாகிஸ்தானின் ராணுவ இயக்குநர் நம்மிடம் கெஞ்சினார். ஆபரேசன் சிந்தூர் மூலம், நமது இலக்கு என்னவென்பதை பாகிஸ்தானுக்குத் தெரியப்படுத்திவிட்டோம்''’என்று கர்ஜித்தார் மோடி. 

"பிரதமரின் பேச்சு வழக்கம்போல் இருந்ததே தவிர, எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டுகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக இருக்கவில்லை. பதில்கள் அவரிடம் இல்லாததால் நழுவிச் சென்றுவிட்டார். இதுவரை கட்டமைக்கப்பட்டிருந்த மோடியின் பிம்பம் நாடாளுமன்றத்தில் உடைந்துவிட்டது' என்கிறார்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.

 

nkn020825
இதையும் படியுங்கள்
Subscribe