மிழக மண்ணில் ஓர் அநாகரிகமான அராஜகமான அரசியலைத் தரையிறக்க முயல்கிறது பா.ஜ.க. - ஆர். எஸ்.எஸ். கூட்டம். எதிர்க் கருத்தாளர்களை நோக்கி மூன்று தரங்கெட்ட ஆயுதங்களை அது ஏவுகின்றது.

1. தொலைபேசியின் மூலம், ஆபாசச் சொற்களை அள்ளி வீசுவது.

2. ஆதாரமற்ற பொய்களைக் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பொதுவெளியில் பேசுவது

3. மற்ற கட்சித் தலைவர்களின் சிலைகளைச் சிதைப்பது அல்லது அவமதிப்பது

Advertisment

ss

இவை மூன்றும் திராவிட இயக்கத்திற்கு எதிராக அவர்கள் இப்போது கைகளில் ஏந்தியிருக்கும் 'புனித' ஆயுதங்கள்! அவர்களின் ஒரே குறி, வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் அணியமாகவே உள்ளனர் என்பது புரிகிறது. ஆனால் அவர்களால் தி.மு.க.வை வீழ்த்தவும் முடியாது. தேர்தலில் நோட்டாவைத் தாண்டி வாக்குகளை வாங்கவும் முடியாது. (அதனால்தான் சமூக வலைத்தளங்களில் அவர்களைச் "செல்லமாக' நோட்டாஜி என்று அழைக்கின்றனர்).

அவர்களின் அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்துள்ளது என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்த்தாலே போதுமானது.

Advertisment

அண்மையில் மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை(EIA) ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து வரும் 11 ஆம் தேதிக்குள் மக்கள் தம் தருத்துகளை வெளியிடலாம் என்றும் கூறியுள்ளது. அதன்படி, பத்மபிரியா என்று ஒரு பெண் தன் கருத்தை வலையொளியில் வெளியிட்டிருந்தார். உடனே, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சமூக வலைத்தளத்தில், அந்தப் பெண்ணின் தொலைபேசி எண், முகவரியைத் தனக்கு அனுப்பும்படி பொதுவெளியில் பதிவிடுகின்றார்.

ss

எவ்வளவு அநாகரிகமான அரசியல்!

அந்த நபரின் பதிவுகள் அனைத்துமே வன்முறையைத் தூண்டும் வகையில்தான் இருக்கும். அவர் ஒரு பெண்ணின் தொலைபேசி எண், முகவரியைக் கேட்கிறார் என்றால் எதற்காக? அதற்கு என்ன பொருள்? உடனே காவல்துறை அதனை விசாரித்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு அந்தப் பெண் இன்னொரு காணொளியை வெளியிடுகிறார். தனக்கு ஆபாச மான மற்றும் மிரட்டல் தொலை பேசிகள் வருகின்றன என்று கூறுகின்றார். தொலைபேசி எண்ணை எதற்குக் கேட்டுள்ளனர் என்பது இப்போது புரிகிறது. முகவரியை ஏன் கேட்டனர் என்பது பிறகு தெரியவரலாம். அதற்குள் காவல்துறை விழித்துக் கொள்ள வேண்டும்.

Advertisment

ss

இதுதான் இவர்களின் அரசியல். இதற்கென்றே ஒரு கூலிப்படையை வைத்திருக்கிறார்கள். யார் தங்களுக்கு எதிராக அல்லது திராவிட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினாலும். எழுதினா லும் உடனே அவர்களின்மீது இந்தக் கூலிப்படை பாய்ந்து குதறும். ஆபாசச் சொற்களுக் கென்று ஓர் அகராதியே வைத்திருக்கின்றனர் போலும்! அதற்குப் பின் நாகரிகமானவர்கள் நமக்கேன் இந்த வம்பு என்று விலகிப் போய்விடுவார்கள் இல்லையா... அதுதான் அவர் களின் எதிர்பார்ப்பு!

இரண்டாவது ஆயுதம், பொய்களைப் பரப்புரை செய்வது! யாரோ ஒரு சாதா ரணமானவர் அப்படிப் பேசுகிறார் என்றில்லை. பா.ஜ.க. கட்சியின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளர் நாரா யணன், ஒரு தொலைக்காட்சியில் சிற்பி ராஜன் என்னும் பகுத்தறிவாளர் குறித்து, எந்தவிதமான சான்றும் இல்லாமல், அவர் ஏற்கனவே சிலைதிருட்டு வழக்கில் கைதானவர் என்று பேசுகின்றார். இப்போது சிற்பி ராஜன் அவர் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

இன்னொரு கூலிப்படை ஊடகத்தில், "மான்கறி - உதயநிதி - திருப்போரூர் துப்பாக்கிச் சூடு' என்னும் தலைப்பின் கீழ், சட்டத்துக்குப் புறம்பாக வேட் டையாடப்படும் மான்கறியை "அந்த ஸ்டாலினோட உதயநிதி ஸ்டாலின் இருக்காருல்ல, அவுங்க பையனெல்லாம் விரும்பி சாப்பிடுவாராம்' என்று பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல, ஒரு பொய்யை வெட்கம், மானம் இல்லாமல் பேசினார்கள். இப்போது வாங்கிய கூலிக்கு வாய் நிறையப் பேசும் அந்த ஊடகத்தின் மீது, திமுக இளைஞ ரணிச் செயலாளர் உதயநிதி, சென்னை, சைதாப்பேட்டை, 18 ஆவது நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இன்னொரு தொலைக் காட்சியில், ஒரு நபர், இந்தத் தேதியில் பெரியார் காமம் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக எழுதி யுள்ளார் என்று கூறுகின்றார். அவர் குறிப்பிட்ட அந்த நாளில் வந்த விடுதலை ஏட்டினைத் திரா விடர் கழகத் தோழர் ஒருவர் அப் படியே எடுத்து வெளியிட்டு, எங்கே அந்தச் செய்தி இருக்கிறது என்று கேட்டால், வாயைப் பொத்திக்கொண்டு தலைமறைவாகி விடுகின்றனர். அவர்களின் மூன்றாவது ஆயுதம், சிலைகளைச் சேதப்படுத்துவது. அதற்கும் மூன்று வழிகளை வைத்துள்ளனர். ஒன்று, சிலைகளை உடைப்பது, இரண்டு, செருப்பு மாலை போடுவது. மூன்று, அவர்கள் கட்சிக் கொடியின் வண்ணமான காவியைப் பூசுவது! உலகிலேயே, செருப்பு மாலையையும். தங்கள் கட்சிக் கொடி வண்ணத்தையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்ப்பவர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும்.

ssஒருவருக்கு காவியைப் பூசி விட்டாலே அவருக்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என்று அவர்களுக்கே நன்கு புரிந் திருக்கிறது. அவர்களின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அது புரிந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் கூட்டணியில் உள்ள, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, புதுவை எம்ஜிஆர் சிலைக்குக் காவித் துண்டு போர்த்தப்பட்டபோது. "இது எங்கள் தலைவரைக் களங்கப்படுத்தும் கொடுஞ்செயல்' என்றும், "மனித நாகரிகத்திற்கே மாறானது' என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஒரு கூட்டணிக் கட்சி இவர்களின் கொடியை எப்படி மதிக்கிறது பாருங்கள்!

இவை போன்ற செயல்களை அரசோ, காவல்துறையோ கண்டித்திருந்தால், உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்களுக்கு ஓர் அச்சம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி ஆட்சி நடத்தும் அ.தி.மு.க.விற்கு அந்தத் துணிச்சல் ஒருநாளும் வராது என்பதை அறிந்து வைத் திருப்பதால்தான், அவர்கள் இப்படி ஆட்டம் போடுகின்றனர்.

இன்னொரு கூத்து என்னவென்றால், அவர்கள் ஒரு கட்சி வைத்துக்கொண்டு, விரைவில் ரஜினிகாந்த் அரசியலுக்கும், ஆட்சிக்கும் வந்துவிடுவார் என்று பேசிக்கொண்டிருப்பதுதான்! அவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், பிறகு அவர்கள் ஏன், "மிஸ்டு கால்' மூலம் மூலம் 50 லட்சம் உறுப்பினர் களை(!!!)ச் சேர்க்க வேண்டும்? 50 லட்சம் உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, ஏன் நோட்டாவிற்குக் கீழ் வாக்குகளை வாங்க வேண்டும்?

வடநாட்டில் ராமரை நம்பி அரசியல் செய்பவர்கள், தமிழ்நாட்டிலோ, ரஜினியை நம்பி அரசியல் செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி விட்டனர்.

பொழுது விடிந்தால் யார் மீதாவது காவல்நிலையத்தில் புகார் கொடுப்பது, யாரையாவது வேலையை விட்டுத் தூக்குவது என்பதையே தங்கள் "பிழைப்பாக' வைத்துக் கொண்டுள்ளனர். அதே நேரம் யாரேனும் தங்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், "பார்த்தீர்களா, பார்த்தீர்களா எங்களைப் பார்த்துப் பயந்து விட்டார்கள், கதறுகிறார்கள்' என்று கேவலமாக மார்தட்டிக் கொள்கின்றனர்.

அவர்களை பார்த்துச் சிலர் விலகிச் செல்கின்றனர் என்பது உண்மைதான். .அதற்குக் காரணம் அச்சமில்லை, அருவெறுப்பு!