இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்த-ல் ஜனநாயகம் பலகீனமாக இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது தேர்தல் முடிவுகள். பத்தாண்டு காலம் மனம் போன போக்கில் அசுரத்தனமாக ஆட்சி செய்த மோடிக்கு இந்தமுறை மக்கள் கடிவாளம் போட்டிருக்கிறார்கள்.
அதாவது, தனிப்பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை (272) பா.ஜ.க.வுக்கு அள்ளித் தராமல், கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருந்த மோடி எனும் தேரை 240 சீட்டுகள் எனும் கட்டையைப் போட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லையெனினும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (292 இடங்கள்) தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. அந்த வகையில், 16 சீட்டுகள் பெற்றுள்ள தெலுங்கு தேச கட்சியின் சந்திரபாபு நாயுடுவும், 12 சீட்டுகள் பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளத்தின் நிதீஷ்குமாரும் மோடிக்கு காட்ஃபாதர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் கூட்டணி ஆட்சி மலர்கிறது. இந்த ஆட்சியின் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் நரேந்திர மோடி. இதற்கான உத்தரவாத கடிதத்தை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மோடியிடம் சமர்பித்திருக்கிறார்கள்.
இதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் மோடியின் இல்லத்தில் கடந்த 5-ந் தேதி கூடியது. இதில் பா.ஜ.க.வின் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா, சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார், குமாரசாமி, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அப்#செட் மூடிலேயே இருந்துள்ளார் மோடி. வழக்கமான உற்சாகம் அவரிடத்தில் இல்லை.
கூட்டம் குறித்து பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்த போது,’’""எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காவிட்டாலும் நமது கூட்டணிக்கு பெரும்பான்மைக் கிடைத்துள்ளது. இதுவும் உங்கள் நிர்வாகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதைத்தான் காட்டுகிறது'' என நிதிஷ்குமார் சொல்லியிருக்கிறார். அதை ஆமோதித்த சந்திரபாபு நாயுடு, ""தேர்தல் முடிவுகளில் கிடைத்த கசப்பானவைகளை மறந்துவிட்டு, புதிய ஆட்சியை அமைப்பது குறித்து கவனம் செலுத்தலாம். எங்களின் ஆதரவு உங்களுக்குத்தான். அதற்கான தெலுங்கு தேச
இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்த-ல் ஜனநாயகம் பலகீனமாக இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது தேர்தல் முடிவுகள். பத்தாண்டு காலம் மனம் போன போக்கில் அசுரத்தனமாக ஆட்சி செய்த மோடிக்கு இந்தமுறை மக்கள் கடிவாளம் போட்டிருக்கிறார்கள்.
அதாவது, தனிப்பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை (272) பா.ஜ.க.வுக்கு அள்ளித் தராமல், கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருந்த மோடி எனும் தேரை 240 சீட்டுகள் எனும் கட்டையைப் போட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லையெனினும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (292 இடங்கள்) தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. அந்த வகையில், 16 சீட்டுகள் பெற்றுள்ள தெலுங்கு தேச கட்சியின் சந்திரபாபு நாயுடுவும், 12 சீட்டுகள் பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளத்தின் நிதீஷ்குமாரும் மோடிக்கு காட்ஃபாதர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் கூட்டணி ஆட்சி மலர்கிறது. இந்த ஆட்சியின் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் நரேந்திர மோடி. இதற்கான உத்தரவாத கடிதத்தை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மோடியிடம் சமர்பித்திருக்கிறார்கள்.
இதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் மோடியின் இல்லத்தில் கடந்த 5-ந் தேதி கூடியது. இதில் பா.ஜ.க.வின் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா, சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார், குமாரசாமி, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அப்#செட் மூடிலேயே இருந்துள்ளார் மோடி. வழக்கமான உற்சாகம் அவரிடத்தில் இல்லை.
கூட்டம் குறித்து பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்த போது,’’""எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காவிட்டாலும் நமது கூட்டணிக்கு பெரும்பான்மைக் கிடைத்துள்ளது. இதுவும் உங்கள் நிர்வாகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதைத்தான் காட்டுகிறது'' என நிதிஷ்குமார் சொல்லியிருக்கிறார். அதை ஆமோதித்த சந்திரபாபு நாயுடு, ""தேர்தல் முடிவுகளில் கிடைத்த கசப்பானவைகளை மறந்துவிட்டு, புதிய ஆட்சியை அமைப்பது குறித்து கவனம் செலுத்தலாம். எங்களின் ஆதரவு உங்களுக்குத்தான். அதற்கான தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். கட்சியின் தலைவர் என்ற முறையில் என்னுடைய உத்தரவாதக் கடிதமும் தயாராக இருக்கிறது'' எனச் சொல்ல, நிதிஷ்குமார் உள்ளிட்ட மற்ற தலைவர்களும் அதையே தெரிவித்ததுடன் அந்த கடிதங்களை மோடியிடம் கொடுத்துள்ளனர்.
அதனை நட்டாவிடம் கொடுத்துவிட்டு பேசிய மோடி, "மத்தியில் 10 ஆண்டு காலம், மாநிலத்தில் 13 ஆண்டு காலம் என 23 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஒருமுறை கூட பெரும்பான்மையை நான் இழந்ததில்லை. முதல்முறையாக பெரும்பான்மை இழந்திருக்கிறேன். எனது ஆட்சித் தலைமை மக்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம் என்பதாகவே நான் உணர்கிறேன். அதனால், பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதுதான் ஆரோக்கியமாக இருக்கும்' என அவர் சொல்ல, அமித்சா உள்ளிட்ட அனைவருமே ஒருவித அதிர்ச்சியுடன் மோடியை கவனித்திருக்கிறார்கள்.
அப்போது பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள், "உங்கள் தலைமையிலான ஆட்சிக்குத்தான் எங்களின் ஆதரவு. இதைக் கடந்து எங்களால் சிந்திக்க முடியாது. மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.எதிர்மறையாக யோசிக்காதீர்கள் என்று அழுத்தமாக வலியுறுத்தியுள்ளனர்.
அந்த சூழ-ல் மோடியைப் பார்த்துப் பேசிய ராஜ்நாத்சிங்கும், அமித்ஷாவும், இத்தகைய மனநிலையிலிருந்து நீங்கள் விடுபடவேண்டும். மக்களின் தீர்ப்பு உங்கள் தலைமைக்கு எதிராக இருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால், தலைநகர் டெல்-யில் 7 இடங்களையும் மக்கள் நமக்கு கொடுத்திருக்கமாட்டார்கள். உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட சரிவுதான் இதற்கு காரணம். அதனை ஆராய்ந்து சரி செய்யலாம். மீண்டும் மீண்டும் இதையே நீங்கள் பேசுவது அடுத்தக்கட்ட நகர்வுகளுக்குத் தடை ஏற்படும்' எனச் சொன்னதையடுத்து, மோடி சமாதானமானார்.
இதனைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் மோடி. புதிய ஆட்சி எதை நோக்கி இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது’’என்று கூட்டத்தில் நடந்தவைகளைச் சுட்டிக்காட்டினார்கள்.
இதைத்தவிர, மத்தியில் ஆட்சி 5 ஆண்டுகாலம் நிலையாக நீடிக்க வெளியி-ருந்து ஆதரவு தருவதாக சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டதைப்போல கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதனை ஏற்கமறுத்த பா.ஜ.க. தலைவர்கள், கூட்டணி அமைச்சரவைதான் என்பதை அழுத்தமாக தெரிவித்துவிட்டனர். ஆட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்கவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கூட்டணி மந்திரிசபையில் பவர்ஃபுல்லான, மக்களுடன் தொடர்புடைய 5 கேபினெட் பதவிகளும், 5 இணையமைச்சர் பதவிகளும் வேண்டும் தனது விருப்பத்தை சந்திரபாபு நாயுடு தெரிவித்திருக்கிறார். இதேபோன்று 3 கேபினெட் பதவிகளும் 2 இணையமைச்சர் பதவிகளும் நிதீஷ்குமார் தரப்பில் சொல்லப்பட்டதுடன், ஆந்திரா மற்றும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என நாயுடுவும், நிதீஷும் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டம் முடிந்து கூட்டணி கட்சித் தலைவர்கள் கிளம்பியதும் பா.ஜ.க. தலைவர்களுடன் மோடி மீண்டும் ஆலோசித்திருக்கிறார். குறிப்பாக, மோடியை பிரதமராக ஏற்பதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு எந்தத் தயக்கமும் எதிர்பார்ப்பும் இல்லை என தம்மிடம் சொல்லப்பட்ட தகவல்களை ஆலோசனையில் ஜே.பி.நட்டா பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இதனையடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு இலாகா ஒதுக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சூழலிலும், பிரதமர் கட்டுப்பாட்டில் இருந்தே தீரவேண்டிய துறைகள் எதையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்திடக்கூடாது; நெருக்கடிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் சமரசம் ஆகத் தேவையில்லை என்று ஆலோசிக்கப்பட்டதுடன், கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது என்கிற முதல்கட்ட பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டதாகவும், அதுகுறித்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடம் பேசிவிட்டு இறுதி முடிவு எடுக்கலாம் என்றும் அந்த ஆலோசனையில் தீர்மானிக்கப்பட்டதாக டெல்லி தகவல்கள் கூறுகிறது.
இந்தச் சூழலில், பா.ஜ.க.வில் வெற்றுபெற்ற 240 எம்.பி.க்களின் கூட்டம் 7-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற பா.ஜ.க. தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்படுவார். இதனையடுத்து, தலைவராக தேர்வு செய்யப்பட்டு பா.ஜ.க. எம்.பி.க்கள் கையொப்பமிட்ட கடிதம், ஏற்கனவே கொடுக்கப்பட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களின் கடிதம் ஆகியவைகளுடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க 7-ந் தேதியே உரிமை கோருகிறார் மோடி. அதனை ஏற்று அனுமதியளிக்கப்படும்.
9-ந் தேதி முறைப்படி பிரதமராக மோடியும் அவரது கூட்டணி அமைச்சரவையும் பதவியேற்பது என திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஓரிரு நாளில் நாடாளுமன்றம் கூடியதும் தனது ஆட்சிக்கான பெரும்பா ன்மையை நிரூபிப்பார் மோடி.
லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பளிக்கப்பட்டதில்லை. அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன. நிதியமைச்சரிடம் கூட கலந்தாலோசிக்காமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மக்களை தெருவுக்கு கொண்டு வந்தார். சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகள் மீது சரமாரியாக ஏவப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டன.இப்படி எதேச்சதிகாரமான பல நடவடிக்கைகளை கடந்த 10 ஆண்டுகளில் எடுத்த நிலையில், இனி அப்படிப்பட்ட சர்வாதிகாரம் நடக்காது. எதிர்க்கட்சி வரிசை வலிமையாக இருக்கிறது. அவர்களின் குரல்கள் ஒருமித்து லோக்சபாவில் எதிரொலித்தால் மோடியின் நாற்காலிஆட்டம் காணும்.
இதை உணராமல், மோடி தனது பிம்பத்தை மீண்டும் கட்டமைக்க மக்கள் விரோத நடவடிக்கைகளை வழக்கம் போல கையாண்டால், தனது மாநில மக்கள் தங்களுக்கு அளித்த வெற்றியை பாதுகாக்கும்பொருட்டு மோடியின் அதிகார வேகத்தை கட்டுப்படுத்த சந்திரபாபுவும், நிதிஷ்குமாரும் முயற்சிப்பார்கள். அதனால், 10 ஆண்டு கால மோடி ஆட்சியின் அவலங்கள் இனி கட்டுப்படுத்தப்படும். ஏனெனில், மோடி அமரப்போகும் பிரதமர் நாற்காலியின் 4 கால்களில் இரண்டு கால்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு சொந்தமானவை'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இப்படிப்பட்ட சூழ-ல், அமையவிருக்கும் கூட்டணி ஆட்சி குறித்து தமிழக பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, ""மோடியின் புதிய கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட தாக்குப் பிடிக்காது; கூட்டணிக் கட்சிகளின் தலையீடுகளை விரும்பாதவர் மோடி. அதனால், 6 மாதத்தில் ஆட்சி கவிழும்; அல்லது மோடியே பதவி விலகிவிடுவார் என்றெல்லாம் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களும், அவர்களுக்கு ஆதரவான தேர்தல் வியூக வகுப்பாளர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கனவுகள் நனவாகாது.
சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ்குமார் (12) இருவரிடமும் 28 சீட்டுகள்தான் இருக்கிறது. ஆனால், இரண்டு கூட்டணியிலும் இல்லாத 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் ஆதரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. தேவைப்பட்டால் அதனை வெளிப்படையாக சொல்வோம். நாயுடுவும் நிதிஷும் குடைச்சல் கொடுத்தால் அதனை சமாளிக்கும் வித்தை மோடிக்கு தெரியும். மம்தாவையும் உத்தவ்தாக்கரேவையும் எங்களால் இழுக்க முடியும். அதனால் மோடியின் பிம்பம் எப்போதும் உடையாது. தேசத்திற்கு எது சரி என நினைக்கிறாரோ அதே ஆட்சியை மீண்டும் மோடி கொடுப்பார். அதனால் எதிர்க்கட்சிகள் காணும் கனவுகள் புஸ்வாணமாகும்''’’ என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் போல, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் 5-ந் தேதி கூடியது. சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், சரத்பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி, கல்பனா சோரன், டி.ஆர்.பாலு, சுப்ரியா சுலே உள்பட 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மம்தா பானர்ஜியும், உத்தவ் தாக்கரேவும் கலந்துகொள்ளவில்லை.
தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியுமா? என்கிற ஆலோசனை நடந்தது. சந்திரபாபு நாயுடுவும், நிதிஷும் இந்தியா கூட்டணிக்கு ஒத்துழைக்காததால் அந்த முயற்சியை கைவிட்டனர்.
கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலரும், மோடியை கட்டுப்படுத்த இந்தியா கூட்டணிக்கு இந்தளவுக்கு மக்கள் வெற்றியை கொடுத்தது குறித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசினர். பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தார்மீகமாக பொறுப்பேற்று மோடி பிரதமர் பதவியேற்காமல் தவிர்க்க வேண்டும். ஆனால், அவர் அப்படி செய்யமாட்டார். மோடியின் இயல்புக்கு கூட்டணி ஆட்சி 6 மாத காலம்கூட தாக்குப் பிடிக்காது. நிச்சயம் கவிழ்ந்துவிடும் என்கிற கருத்துக்களும் இந்தியா கூட்டணியில் எதிரொலிக்கவே செய்தன.