Skip to main content

தி.மு.க.வுக்கு பொறி வைத்த மோடி-எடப்பாடி! பலியான மார்ட்டின் உதவியாளர்!

த்ரில்லர் பட ரேஞ்சுக்கு மாறியிருக்கிறது லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை விவகாரம். வருமானவரித்துறை அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளான மார்ட்டினின் ப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றிய பழனிச் சாமியின் மரணம் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது.

ffஇந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடு களிலும் சொத்துக்கள் வாங்கிப் போட்டிருக்கும் இந்த மார்ட்டின் யார்? அவரின் பின்புலம் என்ன? 1990-களில் கோவை டவுன்ஹாலில் விஜயா பதிப் பகம் கடைக்கு எதிரே உள்ள ரோட்டில் ஒரு சின்னப் பெட்டிக்கடையில் லாட்டரி விற்க ஆரம் பித்தவர்தான் மார்ட்டின். மார்ட்டினுக்கு லாட் டரித் தொழிலில் பார்ட்னராக கோவை முருகேசன் இருந்தார். லாட்டரித் தொழிலில் பல லட்சங்கள் சேர்ந்தபோது கோவை முருகேசனை கழற்றி விட்டுவிட்டு தனியாய் அதே பகுதியில் வாடகைக்கு இடம் பிடித்து லாட்டரித் தொழில் நடத்த ஆரம்பித்தார். லாட்டரி வாங்கிய வர்களுக்கு அமையாத அதிர்ஷ் டம், லாட்டரி விற்பனை செய்த மார்ட்டினுக்கு அடிக்க கோடி களில் புரள ஆரம்பித்தார். இந்தியாவெங்கும் லாட்டரி விற்பனை சூடுபிடித்தது.

பின்னர்தான் வெறும் மார்ட்டின், "லாட்டரி' மார்ட்டி னாக மாறினார். தி.மு.க. அவருக்கு ஆதரவாக இருந்தது. ஜெயலலிதா 2001-ல் பதவியேற்றபோது மார்ட்டினிடம் சில பேரங்களைப் பேசினார். அதற்கு மார்ட்டின் உடன்படாததால் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை செய்வதையே தடைசெய்தார் ஜெயலலிதா. அதற்குப் பின்னர் லாட்டரி பைத்தியங்கள் கேரளாவுக்கு படையெடுத்தன. அதற்கும் ஜெ. அரசு கெடுபிடி காட்டியது.

அ.தி.மு.க. பக்கம் போவதைத் தவிர வேறு வழியில்லை எனத் தெரிந்து அ.தி.மு.க. பக்கம் சாய்ந்தார். மினிஸ்டராய் இருந்த செ.ம. வேலுச்சாமிக்கு கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் விருது வழங்கும் விழா நடந்தது. அப்போது முன்வரிசையில் அமர வைக்கப் பட்டார் மார்ட்டின். அது பெரும் சர்ச்சைக் குள்ளாகியது.

fகடந்த 2006-ல் தி.மு.க. பதவி ஏற்றபோது தி.மு.க. பக்கம் சாய்ந்த மார்ட்டின், கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபோது பெரும் செலவுகளை ஏற்றுக்கொண்டார். தி.மு.க.வுடனான அந்த நெருக்கம் இப்போதுவரை விலகவேயில்லை என்பதுதான் எடப்பாடிக்கு பொறுக்கவில்லை என்கிறது உளவுத்துறை வட்டாரம்.

தவிரவும், அ.தி.மு.க. ரெண்டாய்ப் பிளந்தபோது எதற்கும் இருக்கட்டுமே என டி.டி.வி. தினகரனை, குடும்பம் சகிதமாய் போய்ப் பார்த்தார் மார்ட்டின் என்பதையும் ரெய்டுக்கான அடிஷனல் காரணமாய்ச் சொல்கிறார்கள் உளவுத்துறையினர். சமீபத்திய ரெய்டைவிடவும், பழனிச்சாமியின் மரணம் மார்ட்டின் குடும்பத்தினருக்கு அதிகளவு சிக்கலை உண்டாக்கியுள்ளது.

இந்தியா முழுக்க லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், வீடுகள், ரிஸார்ட்டுகள் என பல இடங்களில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. கோவையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடந்தது. அதில் மார்ட்டினுக்குச் சொந்தமான கவுண்டம்பாளையம் அருகேயுள்ள ஹோமியோபதி கல்லூரியில் உள்ள பல பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

குறிப்பாக அந்தக் கல்லூரிக்கு கேஷியராக பணிபுரிந்து வந்த பழனிச்சாமியிடம் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை செய்யப்பட்டது. அந்த விசாரணைக்குப் பின்னர்... காரமடை வெள்ளியங் காடு மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரேயுள்ள ஒரு குட்டையில் கடந்த 3-ஆம் தேதி பிணமாக மிதந்தார் பழனிச்சாமி. “

""எனது அப்பா பழனிச்சாமியை வருமான வரித்துறையினர்தான் அடித்துக் கொன்றுவிட்டார்கள்''…என பழனிச்சாமியின் மகன் ரோகின் குமார் எஸ்.பி. ஆபீசில் புகார் கொடுக்க நெருப்பு பற்றிக்கொண்டது பழனிச்சாமியின் மரணத்தில். பழனிச்சாமியின் மனைவி சாந்தாமணியோ, ""எங்கள் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் என் கணவரிடம் மார்ட்டினின் பணம் குறித்து பல கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது அவர் கள் கடுமையான முறையில் நடந்துகொண்டார்கள். என் கணவரின் கழுத்தை நெரித்து கேட்டார்கள். அவரின் கையையும்கூட காயப்படுத்தினார்கள். கேஷியர் என்கிற முறையில் அவர் தனக்குத் தெரிந்ததை அவர்களிடம் சொல்லிவிட்டார்.

nஆனால் எப்போது கூப்பிட்டாலும் விசா ரணைக்கு வரணும்னு கெட்டவார்த்தையில நைட் டெல்லாம் மிரட்டினாங்க. அப்புறம் துடியலூரில் உள்ள வி.ஜி.எம். ஹாஸ்பிடலுக்கு அதிகாலை 4 மணிக்கு அவரை கூட்டிட்டுப் போனாங்க. அதற் குப் பின்னர்தான் அவரை விடுவிச்சாங்க. திரும்பி அவர் வீட்டுக்கு வந்தப்ப உடம்பெல்லாம் தடிச்சு இருந்துச்சு. ஆஸ்பிடல்ல வச்சும் பயங்கரமா அடிச் சாங்கன்னு சொன்னாரு. ஆபீஸ்வரைக்கும் போயிட்டு வர்றேன்னு காலையில கிளம்பினவரு தான்... அதுக்கப்புறம் பொணமாத்தான் அவரை போலீஸார் காண்பிச்சாங்க. என் கணவரோட மர ணத்துல இருக்கற மர்மத்தை கண்டுபிடிக்காம அவ ரோட உடலை நாங்க வாங்கமாட்டோம். டி.எஸ்.பி. மணி, "இந்த கேஸை வாபஸ் வாங்கு, இல்லைன்னா வீட்டுக்கு சீல் வச்சுருவோம்'னு மெரட்டறாரு.

இதுக்கெல்லாம் நாங்க பயப்படமாட்டோம். வழக்கை வாபஸ் வாங்குன்னு மொதல்ல மெரட்டினவர்... "நான் மார்ட்டின் தரப்புல இருந்து எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித் தர்றேன்'னு சொல்றாரு. அதனாலதான் எஸ்.பி.கிட்ட டி.எஸ்.பி.ய மாத்தணும்னு புகார் கொடுத்தேன். அவரும் மாத்தறேன்னு சொல்லியிருக்கறாரு.

வருமானவரி அதிகாரிகள் சிலர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸிடம் என் கணவர் எல்லாம் சொல்லிவிட்டார். எப்ப வேணாலும் அவனால உங்களுக்கு பிரச்சனை வரும்னு சொல்லியிருக்காங்க. அதனாலதான் லீமாரோஸ் அவங்ககிட்ட அடியாளா இருக்கற ராஜா, டேவிட்டை வச்சு என் கணவரைக் கொன்னுட்டாங்க. டிரைவர் ஜான்போஸ்கோ, மார்ட்டின், அவரது மனைவி லீமாரோஸ், நிறுவனத்தினர், வருமான வரித்துறையினர் மீதும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டுமென புகார் அளித்திருக்கிறேன்'' என்கிறார்.

வருமான வரித்துறையோ, ""2-ஆம் தேதி விசாரணையின்போதே பழனிச்சாமி கையில் கட்டுடன்தான் வந்தார். 3-ஆம் தேதி அவரை விசாரிக்கவேயில்லை''’என நழுவுகிறது. மார்ட்டினின் மனைவியான லீமாரோஸோ பதற்றமாக சாந்தாமணி சொல்வதை மறுக்கிறார் “""எங்ககிட்ட வேலை செஞ்ச அவரைப் போயி நாங்க எப்படி கொலை பண்ணுவோம். அவர் இப்படி இறந்து போனாருங்கற செய்தி கேட்டதும் கல்கத்தா ஆஸ்பிடல்ல உடல்நலம் சரியில்லாம படுத்திருக்கற என் கணவர் ரொம்பவே வேதனைப்பட்டாரு. சாந்தாமணியும், அவரது மகனும் ஏன் இப்படி அபாண்டமா பொய் சொல் றாங்கன்னு தெரியலை'' என்கிறார்.’’

இந்த பிரச்சனை குறித்து நம்மிடம் பேசிய காரமடை போலீசார், ""சார்... இந்த வருமான வரித்துறை ரெய்டு நடந்ததுக்குக் காரணமே இப்போ வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் துரைமுருகனுக்கு நெருங்கியவர்கள் வீட்டில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் மார்ட்டினின் பணம்னும், மார்ட்டின்தான் தி.மு.க.வுக்கு பணம் கொடுத்ததாக எடப்பாடி ஆட்கள் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, மோடி அரசைக் கவிழ்க்க ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் முக்கிய கட்சிகளுக்கு மார்ட்டினின் நிறுவனங்களிலிருந்து பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் செய்தி சொல்லியிருக் கிறார்கள். அதுபோக இப்போ தமிழ்நாட்டின் மிக முக்கியமான 4 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கும் தி.மு.க.வுக்கு மார்ட்டின் பொருளாதாரரீதியில் சப்போர்ட்டாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்குப் பின்னரே இந்த ரெய்டு நடந் திருக்கிறது. விசாரணை போய்க்கொண்டிருக் கிறது. பழனிச்சாமி இறந்துகிடந்த ஏரியாவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை அலசிக் கொண்டிருக்கிறோம். உண்மை விரைவில் கண்டறியப்படும்''’என்கிறார்கள் உறுதியாய்.

"கடந்த 2011-ல் ஜெ. ஆட்சிக்கு வந்தபோது மார்ட்டின் அலுவலகங்களில் இதே போல அப்போது வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அப்போது மார்ட்டினிடம் அக்கவுண்டண்டாக இருந்த குமாரும் விசா ரணைக்கு ஆளானார். அந்த விசாரணைக்குப் பின்னால் குமார் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது பூதாகரமாக இந்தப் பிரச்சினை எழுந்திருப்பதால், குமாரின் மரணம் குறித்தும் சந்தேகம் எழும்புகிறது. அதனால் இப்போது அந்த வழக்கையும் இதோடு சேர்த்து காவல்துறை விசாரிக்க வேண்டும்' என குரல் எழுப்புகிறார் சமூக ஆர்வலர் செந்தில்குமார்.

தி.மு.க.வுக்கு மோடியும் எடப்பாடியும் வைத்த பொறிதான் லாட்டரி மார்ட்டின். ஆனால் அதில் அநியாயமாக பலியாகியிருக் கிறார் உதவியாளர் பழனிச்சாமி.

-அருள்குமார்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

Loading...