பெயருக்குத்தான் இயற்கை விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைப்பது, ஆனால்,  பொதுமக்களை டிராபிக்கில் நிறுத்தி, விவசாயிகளை ஏமாற்றி தன்னுடைய அரசியல் கணக்கிற்காக கோவை வந்துள்ள பிரதமர் மோடியின் சாயம் வெளுத்துள்ளது.

Advertisment

கோவை கொடிசியாவில் 3 நாட்கள், இயற்கை விவசாயிகளின் "தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025' நடைபெறவிருக் கின்றது. 200க்கும் அதிகமான ஸ்டால்கள் பங்கேற்க லாம். பிரதமர் நரேந்திர மோடி விழாவினை துவக்கி வைக்கவிருக்கின்றார் என அவசரம் அவசரமாக விவசாயிகளை தேடினர், மாநாடு நடத்திய தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக்குழு.  

Advertisment

தனி விமானத்தில் கோவைக்கு வரும் பிரதமர் மோடி, மதியம் 1.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைவார் என பிரதமர் வருகையை முன்னிட்டு பாது காப்பு பணிகள், வழித்தடங் கள், பொதுமக்கள் நட மாட்டம் உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்தனர்.  விமான நிலை யத்திலிருந்து கொடிசியா வளாகம் வரை பிரதமரின் கான்வாய் செல் லும் வழித் தடத்தில் பாது காப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி யுடன் கூடிய போலீசார் இருபுறமும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு நிலையைச் சோதித்தனர். பிரதமர் கோவை வருகையையொட்டி மாநாடு நடக்கும் பீளமேடு பகுதியில் சுற்றியுள்ள இடங்களில் உள்ள 38 டாஸ்மாக் மற்றும் தனியார் பார்களை மூட உத்தரவிட்டு குடிமகன்களின் சாபத்தை பெற்றுக்கொண்டது மாவட்ட நிர்வாகம். 

இதனிடையே செவ்வாய்க்கிழமையன்று, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை யை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. திட்டம் புறக்கணிக்கப்பட்டது என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவியது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில்,  இதன் ஒரு பகுதியாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, "கோவையைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள ஆக்ரா, போபால் ஆகிய நகரங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதியளித்துள் ளது. இதன்மூலம் மோடி அரசு தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி யை கண்டிக் கிறோம். என கோவை கலெக் டர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே வேளையில்,  "மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்க ரூ.500 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு, இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தார்மீக உரிமை இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்கக் கூடாது. நதி நீர் இணைப்பில் ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்துகொண்டி ருக்கிறது. 10 ஆண்டுகளாக தென்னக நதிகளை இணைக்க ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு 2 மடங்கு விலை கொடுப்போம் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் நெல்லுக்கு டன் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் உயர்த்துவதற்கு பதிலாக, வெறும் ரூ.3 ஆயிரம் மட்டுமே உயர்த்தியுள்ளார். இயற்கை விவசாயத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்லை. போலி விவசாயிகள் நடத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்'' எனக்கூறி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள் கூட்டமைப்பினர்.

Advertisment

modi-kovai1


இது இப்படியிருக்க, த.பெ.தி.க., தி.க., வி.சி.க., ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து  "ஒரிசா, பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தமிழர்களைப் பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசி அவமானப்படுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழர்கள் மீது வடமாநில மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் மோடி பேசிவருகிறார். தமிழ்நாட்டிற்கு ஒதுக்கவேண்டிய கல்வி நிதி உள்ளிட்ட நிதிகளை முழுமையாக ஒதுக்கவில்லை. தமிழ்மொழி வளர்ச்சிக்கு மிகக்குறைந்த நிதியை மட்டுமே மோடி ஒதுக்கியுள்ளார். மக்கள் தொகை குறைவாக இருப்ப தாக பொய்யான காரணத்தை கூறி, கோவை  மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை அழிக்கும் வகையில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் ஆராய்ச்சிக்கு ரூ.500 கோடி ஒதுக்கிவிட்டு, தற்போது இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ள வருகிறார். அதனால் மோடி வருகையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம்'' என உருவ பொம்மையை எரித்து, "மோடியே திரும்பிப் போ' என்றனர்.

பிரதமரை வரவேற்பதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழிசை சௌந்தர்ராஜனோ, "9 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் 18 ஆயிரம் கோடியை பிரதமர் இன்று விடுவிக்கிறார். விவசாயிகளுக்கு உதவிபுரியும் திட்டங்களையும் அறிவிக்கவுள்ளார். விளைநெல்லைக் கூட பாதுகாக்காமல், விவசாயிகளை பாதுகாக்காமல் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். டெல்லியில் இருந்தால் கூட பரவாயில்லை தமிழ்நாட்டில் கோவைக்கு வருகிறார், நேரில் வந்து வரவேற்றிருக்க வேண்டும். அதுதான் தமிழர் பண்பாடு. முதல்வர், பிரதமரை வரவேற்காததை கண்டிக்கிறோம்'' என்றார். 

விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக தாமதமாக விமான நிலையம் வந்தடைந்த மோடி யை, தமிழக ஆளுநர் கவர்னர் ரவி,   தமிழக அரசின் சார்பில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஜி.கே.வாசன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளும் வரவேற்றனர். இதில் மாஜி தலைவரும் கலந்துகொள்ள, அவரிடம் மோடி அளாவளாவ பா.ஜ.க. உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் அதனை ரசிக்கவில்லை. 

கொடிசியா அரங்கம் வந்த பிரதமர், மாநாட்டின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக இயற்கை வேளாண் பொருட்கள் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டவர், இயற்கை வேளாண் பொருட்கள் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து இயற்கை விவசாயிகளிடம் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மேடைக்கு வந்ததும், "பாரத் மாதா கீ ஜே' கோசம் எழுப்பி கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றனர் விவசாயிகள் வேடமிட்ட பா.ஜ.க.வினர். 

உற்சாகமடைந்த பிரதமர் மோடியோ, "இங்கே மேடையில் விவசாயிகள் துண்டை சுழற்றிக்கொண்டிருக் கிறார்கள். பீகார் காற்று இங்கும் வீசுகிறதோ எனத் தோன்றியது. கோவை கலாச்சாரம், புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிய மண். மருதமலை முருகனை முழுமையாக தலை வணங்குகிறேன் தென் பாரதத்தின் தொழில்துறையின் சக்தி பீடம் கோவை. கோவையை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவராக நம் அனைவருக்கும் வழிகாட்டிட பெருமை பெற்றுள்ளது. ஜவுளித்துறை மூலம் இந்திய பொருளாதாரத்தில் கோவை  முக்கிய பங்காற்றுகிறது. இந்த புனிதமான மண்ணிலே மருதமலையில் குடிகொண்டிருக்கும் முருகன் கலாச்சாரம், கனிவு, கவின், படைப்புத்திறன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக்கொண்ட பூமி. இந்த நகரமானது தென்பாரதத்தின் தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம்'' என அரசியல் பேசலானார். 

இதனிடையே மோடி  உரையாற்றிக்கொண்டி ருக்கும்போது இரண்டு சிறுமிகள் தங்கள் கையில் வைத்திருந்த பதாகைகளைக் காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இதனை எதிர்பார்த்தது போல், "சிறுமிகள் கையில் வைத்திருந்த பதாகைகளில் இருந்த வாசகங்களை உன்னிப்பாக கவனிக்கிறேன்' என  மேடையில் கூறினார் பிரதமர். எங்க ளுக்கு ஓட்டுரிமை வருவதற்குள் தமிழ்நாட் டில் தாமரை மலரும் என்றும், விரைவில் இந்தியா வளர்ந்த, முன்னேறிய நாடாக நிச்சயமாக மாறும். பட்டம் பெறும்போது இரண்டாம் நிலை பொருளாதாரத்தில் இருக்கும் நாங்கள், ஓய்வு பெறும்போது முதல்நிலை பொருளாதாரத்தில் இருப்போம் என சிறுமிகள் ஏந்தியிருந்த பதாகையில் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

modi-kovai2

"முழுக்க முழுக்க இது விவசாயிகள் பெயரில் மேற்கு மண்டலத்தை என்.டி.ஏ. முழுவதுமாக ஸ்வீப் செய்வதற்காகத்தான் மோடியின் வருகையே! மேற்கு மண்டலத் தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.விற்கு இணையாக இருக்கின்றது பா.ஜ.க. இரு வருமாக இணைந்து மேற்கு மண்டலத்தி லுள்ள 60க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றவே இந்த விவசாயிகள் நாடகம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோ சனையின் பேரில், பாலகுருசாமி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர் களால் இந்த மாநாட்டில் மோடி கலந்து கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது. அது போக மோடி குறிப்பிட்டுப் பேசிய அந்த ஸ்ரிங்கா, மித்ரா ஆகிய இரண்டு சிறுமிகளின் தந்தையின் பின்புலமும் ஆர்.எஸ்.எஸ்.ஸே. 

இது விவசாயிகள் மாநாடு அல்ல... அரசியல் மாநாடு. அதனைவிடக் கொடூரம், இதுதான் தருணமென, "200 ஸ்டால்கள் இருந்தாலும் மோடி பார்வையிட உள்ளது 17 ஸ்டால்களை மட்டுமே! அதில் நீங்கள் இடம்பெற வேண்டுமெனால் ஸ்டால் ஒன்றிற்கு தலா ரூ.10 லட்சம் தர வேண்டும் எனக் கூறி வசூலித்துள்ளது ஒரு குரூப். இந்த மாநாடு போர்ஜரியாக நடத்தப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதுமே'' என்கின்றார் மாநாட்டில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர்.