மோடி ஆபரேஷன்!  தமிழக பா.ஜ.க.  கணக்கு! 

modi

modi

மே மாதம் நடைபெறவிருக்கும் எம்.பி. தேர்தலுக்கான பிரச்சாரத்தை, வருகிற ஜனவரி 27-ஆம் தேதி மதுரையிலிருந்து தொடங்குகிறார் பிரதமர் மோடி. அன்றுதான், மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி. மத்திய அதிகாரிகளின் டீம் ஒன்று மதுரை வந்திறங்கி, மோடியின் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்துவருகின்றது. கலெக்டர் நடராஜனும் மாநில அதிகாரிகளுடன் தினசரி மீட்டிங் நடத்தி சுறுசுறுப்பாக இருக்கிறார்.

மோடியின் மதுரை விஜயத்தின் பின்னணியில் இருக்கும் சென்டிமென்ட

modi

மே மாதம் நடைபெறவிருக்கும் எம்.பி. தேர்தலுக்கான பிரச்சாரத்தை, வருகிற ஜனவரி 27-ஆம் தேதி மதுரையிலிருந்து தொடங்குகிறார் பிரதமர் மோடி. அன்றுதான், மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி. மத்திய அதிகாரிகளின் டீம் ஒன்று மதுரை வந்திறங்கி, மோடியின் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்துவருகின்றது. கலெக்டர் நடராஜனும் மாநில அதிகாரிகளுடன் தினசரி மீட்டிங் நடத்தி சுறுசுறுப்பாக இருக்கிறார்.

மோடியின் மதுரை விஜயத்தின் பின்னணியில் இருக்கும் சென்டிமென்ட்டையும், அதை வைத்து பா.ஜ.க. போடும் கணக்கையும் நம்மிடம் சொல்லத் தொடங்கினார் மாநில பா.ஜ.க.வின் நிர்வாகி ஒருவர்.

1980ல் மதுரை மேற்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் எம்.ஜி.ஆர். உலகத் தமிழ் மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினார். இங்கே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவில்தான் தி.மு.க.வின் இளைஞரணி தொடங்கப்பட்டு, மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் வேகம் அடைந்தது. ஜெயலலிதாவின் முதல் அரசியல் பொதுக்கூட்டமும் ஜான்சி ராணி பூங்காவில்தான் நடந்தது. எம்.பி.தேர்தலில் தமிழகத்தின் முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், மதுரையில் யார் லீடிங் என்றுதான் இந்திராகாந்தியே கேட்பார். இந்த வெற்றி சென்டிமென்ட்தான், எங்கள் மோடி மதுரையத் தேர்ந்தெடுக்கக் காரணம்''’என்கிறார்.

அவர் சொன்ன காரணம் ஒருபுறம் என்றால், மறுபுறம் வேறொரு கணக்கையும் போடுகிறது பா.ஜ.க. மதுரை எம்.பி. தொகுதியைப் பொறுத்தவரை, முக்குலத்தோர், யாதவர், பிள்ளைமார், முஸ்லிம்கள் ஓட்டுக்கு இணையாக சௌராஷ்ட்ரா சமூக ஓட்டுக்களும் இருக்கின்றன. பா.ஜ.க.வுக்கு ஜாதகமான இந்த சௌராஷ்ட்ரா ஓட்டுக்களால்தான் 1998ல் சுப்ரமணிய சுவாமி ஜெயித்தார். அந்தக் கணக்கோடுதான் இப்போதைய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனை மதுரையில் களம் இறக்க ஆலோசித்து வருகிறது பி.ஜே.பி.யின் அகில இந்திய மேலிடம். மேலிடத்தின் எண்ண ஓட்டத்தைத் தெரிந்து கொண்ட நிர்மலாவும் தனது துறை அதிகாரிகள் மூலம் மதுரை, கோவை, நாகர்கோவில் ஆகிய மூன்று தொகுதிகளில் தனது வெற்றி வாய்ப்பு குறித்து சர்வே எடுத்திருக்கிறார்.

ஆனால் மாநில மகளிரணிச் செயலாளர் மகாலட்சுமி, மாநில நிர்வாகிகள் எச்.ராஜா, சுரேந்திரன் ஆகியோர், சு.சாமிக்கு ஆதரவாக வரிந்து கட்டுகிறார்கள். அழகிரியை பி.ஜே.பி.க்கு கொண்டுவந்து மதுரையில் நிற்க வைக்க வேண்டும் என ஒரு குரூப் மல்லுக்கட்டுகிறது.

பா.ஜ.க.வின் தமிழக கிளையான அ.தி.மு.க.விலோ தனது மகன் சத்ரியனுக்கு சீட் வாங்க ராஜன் செல்லப்பாவும் சினிமா கந்து வட்டிப் பார்ட்டியான மதுரை அன்புவுக்கு சீட் வாங்க செல்லூர் ராஜுவும் முட்டி மோதுகிறார்கள். அ.ம.மு.க.வில் டேவிட் அண்ணாதுரை, கிரானைட் பி.ஆர்.பி., தி.மு.க.வில் செ.ராமச்சந்திரன் ஆகியோர் வரிந்துகட்டுகிறார்கள்.மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி தேர்தல் ஆபரேஷனை ஆரம்பிக்கிறார் மோடி.

-அண்ணல்

election campaign modi Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe