Advertisment

மோடிக்கும் பயமில்லை! ஈ.டி.க்கும் பயமில்லை! -புதுக்கோட்டையில் முழங்கிய உதயநிதி!

s

மிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை யடுத்து தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ஆர்வலர் கள், இந்தத் தீர்ப்பைப் பெற உரிய வழக்கறிஞர் களை ஏற்பாடு செய்து சட்டப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஜூன் 5-ஆம் தேதி பாராட்டு விழா எடுக்க புதுக் கோட்டையைத் தேர்வுசெய்திருந்தனர். ஒடிஸா ரயில் விபத்தால் அந்த விழா தடைப்பட்டு, அந்த விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்ள முடியாத நிலையில் ஜூன் 18-ஆம் தேதி விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அழைத்து நன்றி தெரிவிப்பு விழாவாக நடத்தியிருக்கிறார்கள்.

Advertisment

uday

புதுக்கோட்டை புறவழிச்சாலையில் 68 ஏக்கர் பரப்பளவில் மேடுபள்ளமாகக் கிடந்த இடத்தை சுத்தம்செய்து மண்ண டித்து சமன்செய்து அந்த இடத்தில் பந்தல் அமைத்திருந் தனர். புதுக் கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை எனப் பல மாவட்டங்களிலிருந்தும் மக்களைக் கொண்டுவந்து குவித்திருந்தனர். செங்கரும்பு, குலைதள்ளிய வாழைமர

மிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை யடுத்து தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ஆர்வலர் கள், இந்தத் தீர்ப்பைப் பெற உரிய வழக்கறிஞர் களை ஏற்பாடு செய்து சட்டப் போராட்டம் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஜூன் 5-ஆம் தேதி பாராட்டு விழா எடுக்க புதுக் கோட்டையைத் தேர்வுசெய்திருந்தனர். ஒடிஸா ரயில் விபத்தால் அந்த விழா தடைப்பட்டு, அந்த விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்ள முடியாத நிலையில் ஜூன் 18-ஆம் தேதி விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அழைத்து நன்றி தெரிவிப்பு விழாவாக நடத்தியிருக்கிறார்கள்.

Advertisment

uday

புதுக்கோட்டை புறவழிச்சாலையில் 68 ஏக்கர் பரப்பளவில் மேடுபள்ளமாகக் கிடந்த இடத்தை சுத்தம்செய்து மண்ண டித்து சமன்செய்து அந்த இடத்தில் பந்தல் அமைத்திருந் தனர். புதுக் கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை எனப் பல மாவட்டங்களிலிருந்தும் மக்களைக் கொண்டுவந்து குவித்திருந்தனர். செங்கரும்பு, குலைதள்ளிய வாழைமரங்கள் கட்டி, செண்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது. விழாவில் அமைச்சர் கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரியகருப்பன், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எம். அப்துல்லா எம்.பி., வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன், முத்துராஜா எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாலை 6.45-க்கு மேல் விழா மேடைக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திரண்டிருந்த பெண்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Advertisment

ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பி லான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பேரவை இளைஞரணி திருச்சி ராஜேஷ் வரவேற்றார். ஜல்லிக் கட்டு பேரவை பி.ராஜசேகரன் பரிசு வழங்கிப் பேசும்போது, "17 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகண்ட முதலமைச்சருக்கு இந்த பாராட்டு விழா. அவருக்கு கோடானு கோடி நன்றிகள். 2006 ஜனவரியில் தடை போட்டபோது முன்னாள் முதலமைச்சர் கலைஞர், மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் மூலம் தடையை உடைத்து ஜல்லிக்கட்டு நடத்தவைத்தார். அதே போல 2008-ல் தடையை உடைக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைத்து ஜல்லிக் கட்டு நடத்தினார். மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்தால் பெற்ற வெற்றியை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மீண்டும் தடைகேட்டு போயின. அந்த தடையையும் உடைத்த முதலமைச்சருக்கு நன்றிகள்'' என்றார்.

uday

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "மதுரையில் நடைபெறுவதாக இருந்த இந்தக் கூட்டம், அதிக வாடிவாசல்கள் உள்ள, ஜல்லிக் கட்டு போட்டிகள் அதிகம் நடைபெறும் புதுக்கோட்டையில் நடைபெறவேண்டும் என அமைச்சர்கள் ரகுபதியும், மெய்யநாதனும் சொன்னார்கள். வெறும் நன்றி அறிவிப்பு விழாவாக அல்லாமல் வெற்றி விழாவாக இது நடைபெறுகிறது. இதில் பங்கேற்கச் சொல்லி அன்புக் கட்டளையிட்டார் முதல்வர் ஸ்டாலின். அவர் பங்கேற்காவிட்டாலும் அவரது மனம் முழுவதும் இந்த விழாவில்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டை பாசிஸ்டுகள் ஆளத்துடிக் கின்றனர். அதற்காக நேரடியாக எதையும் செய்ய முடியாமல் புறவாசல் வழியாக நுழையப் பார்க் கின்றனர். நாம் எப்போதும் நம் பாரம்பரியப்படி, வாடிவாசல் வழியாக வரும் காளையை அடக்குவதைப் போல, நேரடியாகச் சந்திப்போம்.

2016-ல் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அப் போது, முதலில் 5 பேருடன் தொடங்கிய ஜல்லிக் கட்டு போராட்டம், பிறகு உலகம் முழுவதும் நடைபெற்றது. போராட்டத்தைத் தடுக்க முயற்சித்தார்கள். போராடியவர்களைத் தாக்கி, ஆட்டோக்களைக் கொளுத்தி பழியைப் போராட்டக்காரர்கள் மேல் சுமத்தினார்கள்.

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் 25 சதவிகிதம் நிறைவுபெற்றுள்ளன. அனைத்துத் தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவித் திருக்கிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் மினி ஸ்டேடியத்துடன் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் களையும் அமைக்கவேண்டும் என அமைச்சர்கள் கோரியிருக்கிறார்கள். முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று அவற்றையும் அமைத்துத் தருவோம்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட் டில் பா.ஜ.க. நுழைய முயற்சிக்கிறது. பா.ஜ.க.வின் கிளைக்கழகமாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். தி.மு.க. இருக்கும்வரை அந்த முயற்சி ஒருபோதும் நடக்காது.

பா.ஜ.க.வின் தொண்டர் படையாக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். மத்திய பா.ஜ.க. ஆட்சியமைந்த பிறகு, அமலாக்கத்துறையினர் 121 வழக்குகளைத் தொடுத்தார்கள். அவற்றில் 115 எதிர்க்கட்சியினர் மீது தொடுக்கப்பட்டவை.

பெரியார், அண்ணா, கலைஞரின் வழிவந்த நாங்கள் மோடிக்கும் பயப்படமாட்டோம் ஈ.டி.க் கும் பயப்படமாட்டோம். ரெய்டு எங்களுக்குப் புதிதல்ல. 21 கோப்புகளில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறார் ஆளுநர். அதில் பெரும் பாலானவை, முன்னாள் அமைச்சர்கள் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்குகள் மீதான நடவடிக்கைகள். அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் பின்னிப் பிணைந்துள்ளார்கள்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அடிமை களை விரட்டியடித்தோம். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அந்த அடிமைகளின் எஜமானர்களையும் விரட்டியடிப்போம்'' என்றார்.

nkn240623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe