ன்றிய பா.ஜ.க. அரசின் தவறான கல்விக் கொள்கையால் மத்திய பாடத் திட்டமான சி.பி.எஸ்.சி.யில் நாடு முழுவதும் 10 மற் றும் 12-ஆம் வகுப்பு களில் படித்த கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. மோடி ஆட்சியை கேள்வி எழுப்பக் கூடாது என எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை எனக் கூட்டணிக் கட்சியினரே கொதிக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியிலுள்ள த.மா.கா., தற்போது பா.ஜ.க. ஆட்சியின் கல்வி நிர்வாகச் சீர்கேட்டுக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்பியுள்ளது.

modi

Advertisment

இதுபற்றி நம்மிடம் பேசிய த.மா.கா. மாநில இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜ், "தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் தமிழக பள்ளிக் கல்வித்துறையால் ஜூன் 20-ஆம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டன. 10-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள், 11-ஆம் வகுப்பிலும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து வருகின்றனர். கல்லூரிகளில் சேர்க்கைக்கான அனுமதியும், பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான அனுமதி யும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், 2021-22-ஆம் கல்வியாண்டுக் கான மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. 10, 12-ஆம் வகுப்பு, இரண்டாம் பருவப் பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகி வருவதால் மாணவர்கள் வேதனையுடன் காத்திருக்கின்றனர். மாநில வழித் தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளிகளிலும், கல்லூரி களிலும், பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிலும் சேர்க்கைக்கான அனுமதி நடைபெற்றுவரும் வேளையில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்காகவும், கல்லூரி சேர்வதற்கான அனுமதிக் காகவும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.

Advertisment

yy

சி.பி.எஸ்.இ. மாணவர் களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. முதலில் இம்மாதம் 6-ஆம் தேதி முடிவு வெளியாகும் என்றார்கள். அடுத்து 8-ஆம் தேதி என்றார்கள். பிறகு இன்று வரும், நாளை வரும் எனக் கூறிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இதுபற்றி சி.பி.எஸ்.இ. விரைவாக முடிவெடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும், வரும் காலங்களில் மாநிலக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும்போது, சி.பி.எஸ்.இ. திட்டத்தில் பயிலும் மாணவர் களின் தேர்வு முடிவுகளும் வந்தால்தான், சி.பி.எஸ்.இ. மாணவர்களும், மாநில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களும், சிரம மின்றி பள்ளி கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை சரி சமமாகப் பெறுவார்கள் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். கல்வித்துறையில் மோடி அரசின் இத்தகைய மெத்தனப்போக்கு, மாணவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் மிகுந்த ஏமாற்றத் தையும், வருத்தத்தையும் கொடுத் திருக்கிறது. இப்படியான தவறு களால் மாணவர்களின் எதிர் காலத்தை இருளாக்கக் கூடாது'' என்றார்.