Advertisment

இராமநாதபுரத்தில் மோடி போட்டி! பலே திட்டத்தில் பா.ஜ.க.

ss

அ.தி.மு.க.வின் பதவி யுத்த பரபரப்புகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களத்தில், ‘"ராமேஸ்வரத்தில் போட்டியிடப்போகிறாரா மோடி?'’ என்ற கேள்வி விவாதமாகி வருகிறது.

Advertisment

தனித்துப் போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெல்வோம்’ எனக் கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சிரிப்பு போலீஸ் ரேஞ்சுக்கு பார்த்த பலரும்கூட, வரவிருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள ராமேஸ்வரம் தொகுதியில் மோடி போட்டியிடப் போவதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தியை அத்தனை உதாசீனப் படுத்தவில்லை. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது குஜராத்தி லுள்ள வதேரா, உத்திரபிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டது போல, இந்த முறை வாரணாசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு தொகுதிகளிலும் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்ப தாகவே கூறுகிறது தமிழக பா.ஜ.க. வட்டாரம்.

dd

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி அதிகமுள்ள ராமநாதபுரம்

அ.தி.மு.க.வின் பதவி யுத்த பரபரப்புகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களத்தில், ‘"ராமேஸ்வரத்தில் போட்டியிடப்போகிறாரா மோடி?'’ என்ற கேள்வி விவாதமாகி வருகிறது.

Advertisment

தனித்துப் போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெல்வோம்’ எனக் கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சிரிப்பு போலீஸ் ரேஞ்சுக்கு பார்த்த பலரும்கூட, வரவிருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள ராமேஸ்வரம் தொகுதியில் மோடி போட்டியிடப் போவதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தியை அத்தனை உதாசீனப் படுத்தவில்லை. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது குஜராத்தி லுள்ள வதேரா, உத்திரபிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டது போல, இந்த முறை வாரணாசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு தொகுதிகளிலும் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்ப தாகவே கூறுகிறது தமிழக பா.ஜ.க. வட்டாரம்.

dd

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி அதிகமுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் மொத்தமாக அள்ளி தி.மு.க. படு ஸ்ட்ராங்காக இருக்கும் நிலையில், மோடி இங்கு போட்டியிடுவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து மாவட்ட அரசியலை உற்று நோக்கி வரும் சிலரிடம் பேசினோம் நாம்.

பலரும் குறிப்பிடுவதைப்போல ராமேஸ்வரம் என்ற மக்களவைத் தொகுதியே கிடையாது. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள் வரும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி, திருவாடானை, இராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதி களில் ஒன்றான இராமநாதபுரம் தொகுதிக் குட்பட்ட ஒரு பகுதிதான் ராமேஸ்வரம். இருந்தாலும், ‘ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிடுகிறார்’ என பரப்பப்படும் தகவலானது, இந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரத்தை உள்ளடக் கிய இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மோடி போட்டி யிடுவதற்கான சாத்தியக்கூறை அதிகமாக்குவதாகவே உள்ளது.

பா.ஜ.க.வின் தற்போதைய இலக்கே கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டிலும் பலமாக காலூன்ற வேண்டும் என்பதுதான். இராமநாதபுரம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும். ஆனாலும் இந்தியா முழுக்கவுள்ள பக்தர்களை கவர்ந்திழுக்கும் ஆன்மீக பூமியாகவும் விளங்கிவருகிறது.

ss

அரசியல்ரீதியாகப் பார்த்தால், தற்போது தி.மு.க. கூட்டணியில் நின்று வெற்றிபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த நவாஸ் கனி எம்.பி. யாக உள்ளார். சட்டமன்றத் தொகுதி களில் அறந்தாங்கி, திருவாடானை ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க.வின் கூட்டணிக்கட்சியான காங்கிரஸும், மற்றவற்றில் தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளன. இப்படி முழுக்க தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கோட்டையாக இருக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மோடி போட்டியிட முடிவுசெய்ததன் அடிப்படைக் காரணம் எது?

தற்போது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இடைவெளி, லோக்கல் தி.மு.க.வினரின் அதிருப்தி ஆகியவை வளர்ந்துவருவதை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நோட் போட்டு பி.ஜே.பி.க்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் காசியில் நடந்த ‘தமிழ் சங்கமம்’நிகழ்ச்சியும்கூட மோடி தமிழகத்தைக் குறிவைத்திருப்பதன் முன்னெடுப்புதான்.

அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாமல் போட்டியிடும் பட்சத்தில், ஓ.பி.எஸ். அணியினர் ஆதரவு, டி.டி.வி. தினகரன், சசிகலா, முத்தரையர் சமூகத்தினர், இவற்றோடு பா.ம.க.வும்கூட பி.ஜே.பி.க்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது. இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் மீதான அதிருப்தியிலுள்ள முன் னாள் மா.செ.வான திவாகரன், பெருநாளி போஸ், பரமக்குடி தொகுதிக்காக ஏராளமாக செலவுசெய்து இறுதியில் ஏமாந்த முன்னாள் மாவட்ட பதிவாளர் டாக்டர்.பாலு இவர்களோடு, இஸ்லாமிய வாக்கு வங்கியை வளைத்துப்போட எம்.கே.ஜமால் உள்ளிட்ட தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளுக்கு இப்போதே வலைவீசத் துவங்கிவிட்டது பி.ஜே.பி. மோடியே இங்கு போட்டியிடும் பட்சத்தில், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் பம்பரமாக சுழலும் வேகத்தில், அக்கம்பக்க தொகுதிகளும் வந்துவிழும் என்பது பி.ஜே.பி.யின் கணக்கு'' என்றனர் அவர்கள்.

"ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறாரா மோடி?'’என்ற கேள்வியோடு மாவட்ட பா.ஜ.க. தலைவரான இ.எம்.டி.கதிரவனிடம் பேசினோம் நாம். “

"2019ஆம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பி.ஜே.பி. தனித்து நின்றபோதே 1,73,000 வாக்குகள் பெற்றிருந்தோம். தற்போது சர்வேயின்படி, சுமார் 3,60,000 வாக்குகள் பெற வாய்ப்பிருப்பதாக தெரியவந்திருக்கிறது. பிரதமரே இங்கு போட்டியிடும் பட்சத்தில் இது அதிகமாகலாம்.

மேலிட உத்தரவு காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,371 பூத்துகளில் 1,100 பூத்துகளுக்கு ஏஜன்டுகளை நியமித்துவிட்டோம். இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகளிலுள்ள பூத்துகளிலும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை பூத் ஏஜண்டுகளாக நியமித்து பெரும்பாலான பணிகளை முடித்துவிட்டோம். வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்பது பிரதமரின் நீண்டநாள் கனவு. அதைச் செயல்படுத்தும் காலம் கனிந்துவிட்டது என்றே கருதுகிறேன்''’என்றார்.

ஆனாலும், “"இது திராவிட பூமி. மோடி வித்தைக்கு மயங்கமாட்டார்கள் தமிழர்கள்'’என தில்லாக இருக்கிறது தி.மு.க. தலைமை.

nkn070123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe