"ஹலோ தலைவரே. கலவரத் தீயில் மணிப்பூர் பற்றி எரியுது.''”
"ஆமாம்பா, இட ஒதுக்கீடு தொடர்பாக அங்குள்ள மைதேயி சமுகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையில் எழுந்த மோதல், மதக் கலவரமாகவும் மாறி வரு வதை உலக நாடுகளே கூட கவலையோடு கவனிக்கிதே?''”
"உண்மைதாங்க தலைவரே, மணிப்பூர் கலவரத்தின் போது, குறிவைத்து கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் தேவாலயங்கள் எரிக்கப்படுவதும் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களையும் பதட்டப் படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு, இங்கிருந்தே இது தொடர் பாகக் கதறல்கள் ரிலே ஆனதால், அவர் அங்கிருந்த படியே உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் சமா தான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற் கிடையே தமிழகத்திலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பதட்டப் பரபரப்பு பரவியுள்ளது. மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து சென்னையிலும் பெரிய அளவிலான போராட்டத் தைக் கிறிஸ்தவ அமைப்புகள் கையில் எடுத்தன. தமிழக தேவாலயங்களில் இது தொடர்பான பிரச்சாரங்களும் பிரார்த்தனைகளும் கூட நடந்து வருகின்றன. அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்தும் பரவலாக கவலை எழுந்திருக்கிறது.''”
"ஒன்றிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்தணும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் களமிறங்கப் போகிறாராமே?''”
"அப்படிதாங்க தலைவரே பா.ஜ.க.வின் தேசிய மட்டத்தில் பேச்சு அடிபடுது. இப்படியொரு திட்டத்தை ரொம்ப நாளாகவே மோடி கையில் வைத்திருக்கிறாராம். பா.ஜ.க.வின் தேசியத் தலைமையும் மோடியின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு இருக்கிறதாம். இதை மனதில் வைத்துக்கொண்டுதான், அண்மையில் தமிழகம் வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமர் ஆகலாம்னு சூசகமாகத் தெரிவித்தாராம். இது புரியாமல் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் ஆகாமல் போய்விட்டது என்றும், அதனால் அவர், தமிழகத்தில் இருந்து புதிய நபர் ஒருவரை பிரதமராக்க விரும்புகிறார் என்றும் சிலர் கற்பனை பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மோடி தமிழகத்தைக் குறி வைத்திருப்பதால்தான், திருக்குறளின் சிறப்பு, தமிழின் தொன்மை என்றெல்லாம் அடிக்கடி டயலாக் அடிக்கிறாராம்.''”
"அவர் தமிழகத்தில் களம் காண விரும்புவதன் காரணம்?''”
"வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தென் மாநிலங்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு எம்.பி.க்களைப் பெற வேண்டும் என ஆசைப்படுகிறாராம் மோடி. அதிலும் தமிழகத்திலிருந்து பத்து எம்.பி.க்களாவது தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது அவருடைய டார்கெட்டாம். ஆனால், தற்போதைய தமிழக பா.ஜ.க.வின் செல்வாக்கை வைத்துக்கொண்டு ஒரு எம்.பி.யைக் கூட பெற முடியாது என்று உளவுத்துறை மோடிக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம். அதனால், தமிழகத்தில் வெற்றி பெறவும், தென் மாநிலங்களின் கவனத்தை கணிசமாக ஈர்க்கவும் இந்த முறை தமிழகத்தில் மோடி போட்டியிட வேண்டும் என அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்களாம். அதோடு இது, சட்டமன்றத் தேர்தலின் போதும் பா.ஜ.க.வுக்கு கைகொடுக்கும் என்றும் அவர்கள் தரப்பால் கணிக்கப் படுகிறது. அதே நேரம், ராஜ்நாத் சிங் போன்ற அக்கட்சியின் சீனியர்களோ, தமிழகத்தில் போட்டியிட்டால் மோடி யால் வெற்றிபெற முடியுமா? என்று கேள்வி எழுப்புவதோடு, சிக்கலை அவர் தேடிக்கொள்ளாமல், தனது சிட்டிங் தொகுதியான வாரணாசியிலேயே அவர் மீண்டும் போட்டியிடட்டும் என்கிறார்களாம்.''”
"அண்ணாமலை திடீரென லண்டன் போயிருக்கிறாரே?''”
"ஒரு படிப்பிற்காக அண்ணாமலை லண்டன் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் அவர், ஸ்டெர்லைட் நிறுவன அதிபர் அனில் அகர்வாலின் அழைப்பின் பேரில்தான் லண்டன் சென்றிருப்பதாக பா.ஜ.க.வினரே சொல்கிறார்கள். மீண்டும் ஸ்டெர்லைட்டைத் திறக்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்துவருகின்றனவாம். அதற்கு ஒத்துழைப்பு தருவதற்காகத்தான், இந்து முன்னணித் தலைவர் அர்ஜுன் சம்பத் மூலம் பேசி, அண்ணாமலையை லண்டனுக்கு அழைத்திருக்கிறார்களாம். அங்கு பெரிய அளவில், பா.ஜ.க.வுக்கு ஸ்டெர்லைட் தரப்பு கட்சி நிதியையும் கொடுத்து அசத்தி இருக்கிறதாம். இது தவிர அண்ணாமலையைத் தனியாகவும், ஹெச்.ராஜா, சசிகலா புஷ்பா, அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளைத் தனித்தனியாகவும் மகிழ்ச்சிப்படுத்த பெரும் ’கவனிப்பு’ நடத்தவும் ஸ்டெர் லைட் உத்தரவாதம் அளித்திருப்பதோடு, அண்ணாமலை மேற்கொள்ள இருக்கும் பிரச்சார யாத்திரைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும் ஸ்டெர்லைட் சொல்லி இருக்கிறதாம். அதேபோல் சில அரசியல் கட்சிகளை யும், சில தன்னார்வ அமைப்புகளையும் வசப்படுத்தி இருக்கும் ஸ்டெர்லைட், அடுத்ததாக கனிமொழி எம்.பி.யையும் தங்களுக்கு ஆதரவாக மாற்றுவதற்குத் திட்டமிடுகிறதாம்.''”
"நடிகர் விஜய்யை பா.ஜ.க. ரிமோட் மூலம் ஆட்டிவைக்க முயல்கிறதே?''”
"தமிழகத்தில் தி.மு.க.வை பலவீனப்படுத்தினால்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆட்சி பீடத்தில் அமர்த்த முடியும் என்று கணக்கு போடுகிறது பா.ஜ.க. அதனால், அது ஓட்டுக்களைப் பிரிக்க நடிகர் விஜய்யை தற்போது அரசியலில் களமிறக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இது குறித்து நம் நக்கீரனிலும் ஒரு விரிவான கட்டுரை வெளியாகி இருக்கிறது. நடிகர் ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவரும் முயற்சியில் தோற்றுப்போன பா.ஜ.க., இப்போது முழுமையாக நம்புவது விஜய்யை தானாம்.அண்மையில் பா.ஜ.க. எடுத்த சர்வேயின் படி விஜய்க்கு 3 சதவீத ஓட்டுக்கள் இருப்பதாகத் தெரிய வந்ததால், அவரைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவேண்டும் என பா.ஜ.க. விரும்புகிறது. இதற்காக புதுவை அரசியல் பிரபலங்கள் மூலமும் அங்குள்ள விஜய் ரசிகர் மன்றப் புள்ளிகள் மூலமும் அவரை கேட்ச் பண்ணும் முயற்சியில் அது தீவிரம் காட்டுகிறது.''”
"மருத்துவமனையில் நடிகை குஷ்பு அட்மிட் ஆகியிருக்கிறாரே?''”
"பா.ஜ.க.வில் இணைந்த பிறகு, அக்கட்சி கொடுத்த அசைன்மெண்ட்டின்படி, தி.மு.க.வை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பலமாக அட்டாக் பண்ணி வருகிறார் குஷ்பு. அவருக்கு, கொஞ்சம் கீழே இறங்கிப் போய் பதிலடி கொடுத்த தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியைக் கட்சியை விட்டே நீக்கியதோடு, அவரை அதிரடியாகவும் கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசு. அதன் பிறகும் ஓயாத குஷ்பு, தி.மு.க.வைக் கீழ்த்தரமாகத் தாக்கி டுவிட் செய்ததோடு, ஆவேசப் பேட்டியும் கொடுத்தார். இதனால் பொறுமை இழந்த அறிவாலயத் தரப்பு, குஷ்பு மீது வழக்கு தொடுத்து, அவரைக் கைது பண்ணலாமா? என்று ஆலோசிக்கும் நிலைக்குப் போயிருக்கிறது. இதையறிந்த குஷ்பு, தனது முதுகுத் தண்டுவடத்தில் பிரச்சினை என்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் போய் அடட்மிட் ஆகி விட்டார். எனினும், குஷ்புக்கு ஒரு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்தாக வேண்டும் என்கிற தீர்மானத்தில் இருக்கிறதாம் அறிவாலயம்.''”
"பாட்னா சென்ற முதல்வர் ஸ்டாலின், பிளைட்டுக்கு நேரமானதால் அங்கே பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிட்டு வந்ததாகக் கூறியது சர்ச்சையாகுதே?''”
"நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக கட்சிகளின் கூட்டத்தை பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த 23 ஆம் தேதி நடத்தினார். இதில் கலந்து கொண்டபின் சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், பிளைட் பிடிக்க நேரமான தால் பாட்னாவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என்று சென்னை ஏர்போர்ட்டில் தெரிவித்தார். அதுதான் இப்ப சர்ச்சையாகுது. காரணம், முதல்வர் உட்பட 10 பேர் தனி விமானத்தில்தான் பாட்னா சென்று திரும்பி இருக்கிறார்கள். அது முதல்வருக்காகவே வாடகைக்கு எடுக்கப் பட்ட பிளைட். அது அவர் விரும்பிய நேரத் தில்தான் புறப்பட்டது. அதனால், பிளைட் டுக்கு நேரம் ஆனதால் அங்கே பிரஸ் மீட்டில் அவர் பங்கேற்கவில்லை என்பது, தவறான தகவல். பாட்னா கூட்டத்தில் ஏற் பட்ட சலசலப்பால்தான், அங்கே அவர் பத்திரிகையாளர் சந்திப்பை வேண்டு மென்றே தவிர்த்தார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். தவிரவும், பாட்னா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், ஆட்சி மாற்றத்தை உண்டு பண்ணுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.''”
"எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் சேர்ந்தாற் போல் உடல் நலக்குறைவு என்கிறார்களே?''”
"எடப்பாடி மூட்டு வலியாலும் முதுகு வலியாலும் அவதிப்பட்டு வருகிறார். கோவை மருத்துவர்களிடம் அவர் சிகிச்சை எடுத்தபோதும், முழு நிவாரணம் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில் அமெரிக்கா சென்றால், உயர் சிகிச்சை கள் மூலம் குணம் பெறலாம் என்று அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை சொல்லி இருக்கிறார் களாம். இதனால் அமெரிக்க சிகிச்சை குறித்து எடப்பாடி ஆலோசித்துக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் ஓ.பி.எஸ்.சும் உடல்வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அடிக்கடி கேரளாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள் கிறார். அந்த வகையில் இப்போதும் அவர் கேரளா சென்றிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து அ.தி. மு,.க.வில் இருக்கும் ஜெ.’விசுவாசிகள்,’இவர்கள் மட்டும் சிகிச்சைக்கு கேரளா, அமெரிக்கா என்று யோசிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் ஜெ’ உயிருக்குப் போராடியபோது, அவரை சிங்கப்பூருக்குக்குக் கூட அனுப்ப முயற்சி எடுக்க வில்லையே’என்று ஆதங்கமாய்ப் புலம்புகிறார்களாம்.''”
"ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் பேச்சு அடிபடுதே?''”
"ஜூலை 1ஆம் தேதி தங்கள் தரப்பு மா.செ.க்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை ஓ.பி.எஸ். கூட்டியிருக்கிறார். ’ ஓ.பி.எஸ்.சைக் கட்சியிலிருந்து நீக்கி விட்டோம். அ.தி.மு.க.வின் பெயரை அவர் பயன்படுத்துவது சட்டவிரோதம்’ என ஏற்கெனவே அவரை எடப்பாடி தரப்பு எச்சரித்தும், அவர் அது குறித்து இதுவரை செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து ஓ.பி.எஸ். ஆலோசிக்க இருக்கிறாராம். எடப்பாடிக்கு எதிராக மாற்று அரசியலை எப்படிக் கையில் எடுப்பது என்று இதில் அவர் விவாதிக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்., தனிக்கட்சி தொடங்கும் முடிவை அறிவிக்கலாம். அல்லது தினகரனின் அ.ம.மு.க.வில் இணை யும் முடிவை எடுக்க லாம் என் றெல்லாம் அவர தரப்பு ஆட்களே இப்போது யூகங்களை அவிழ்த்துவிடுகிறார்கள்.''”
"அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கங்கணம் கட்டியிருக்கும் அமலாக்கத் துறை, அடுத்தடுத்த அதிரடிகளுக்கும் தயாராகுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, காவேரி மருத்துவமனையில் அட்மிட்டான அமைச்சர் செந்தில்பாலாஜியை, தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடியாமல் அமலாக்கத் துறை திணறிவருகிறது. அவரது நீதிமன்றக் காவல் 28ஆம் தேதி முடிவடைவதால், அன்றைய தினம் அவரை காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது, அவர் மருத்துவ மனையில் இருந்த காலத்தில், நீதிமன்றக் காவலுக்கான நாட்களைக் கழிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, அதன் அடிப்படையில் மீண்டும் அவரை தங்கள் கஸ்டடிக்கு கேட்கத் திட்டமிட்டிருக்கிறது அமலாக்கத்துறை. இதற்கிடையே, இதே வழக்கில் சேர்க்கப் பட்டுள்ள 20-க்கும் மேற்பட்டவர்களையும் அமலாக்கத்துறை அழைத்து விசாரிக்கப் போகிறதாம். அடுத்த அதிரடியாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, புதிதாக மேலும் 3 வழக்குகளைப் பதிவு செய்வதற்கான ஆலோசனைகளும் நடக்கிறதாம்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பிரச்சனை உள்ள நிலங்களுக்கு பட்டாக்கள் வழங்கக் கூடாது என தி.மு.க. அரசு அனைத்து வருவாய் கோட்டாட்சியர்களுக்கும் 2021-லேயே உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இதற்கு மாறாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டாட்சியர், பிரச்சனைக் குரிய நிலங்களுக்கெல்லாம் ’கவனிப்பை’ பெற்றுக்கொண்டு, பட்டாக்கள் வழங்கி வருவதாக புகார் எழுந்தது. இதையொட்டி அவர் மீது டிரான்ஸ்ஃபர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும், அங்கிருந்து போவதற்கு முன், தன்னை கவனித்தவர்களை ஏமாற்றாமல் முன் தேதியிட்டு பட்டா வழங்கும் பணியில், ஜரூராக இருக்கிறாராம் அந்த ’கமிஷன் அதிகாரி.''’