பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்திற்கு அறிவித்த திட்டங்கள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல திட்டங்கள் ஆமை வேகத்தில் நடந்துவருகின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் அப்போது மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதற்கான பணிகள் பல இடங்களில் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.
இதுகுறித்து ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத், விழுப்புரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க துறை மேலாளர் சிவாஜியை சந்தித்து புகாரளித்துள்ளார். இதுகுறித்து எம்.பி. விஷ்ணு பிரசாத்திடம் கேட்டபோது, ""சென்னை- திருச்சி
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்திற்கு அறிவித்த திட்டங்கள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல திட்டங்கள் ஆமை வேகத்தில் நடந்துவருகின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் அப்போது மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதற்கான பணிகள் பல இடங்களில் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.
இதுகுறித்து ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத், விழுப்புரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க துறை மேலாளர் சிவாஜியை சந்தித்து புகாரளித்துள்ளார். இதுகுறித்து எம்.பி. விஷ்ணு பிரசாத்திடம் கேட்டபோது, ""சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கியமான இடங்களில் மேம்பாலங்கள் இல்லாதது குறித்து பல முறை நாகாய் திட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்கப் பட்டது. அதையடுத்து ஒன்பது இடங்களில் மேம் பாலங்கள் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, ஆறு இடங்களில் இப்பணிகள் மிகவும் தொய்வாக நடைபெற்று வருகின்றன. எனது ஆரணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்காக சுமார் 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல மாதங்களாக அதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.
தொழுதூர் அருகே மேம்பாலம் கட்டப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. அதுவும் அறிவிப்போடு நிற்கிறது. திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையே தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் 2012-ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளாகி யும் பணிகள் முடிக்கப்படவில்லை. இதுகுறித்து திருவண்ணாமலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, பணிகளை முடுக்கிவிட முடிவெடுக்கப்பட்டது.
திண்டிவனம் -திருவண்ணாமலையை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2009-ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு 9 பாலங்கள் கட்டப்படும் நிலையில், பத்தாண்டுகள் கழித்து 2019-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தையே கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதே போன்று திண்டிவனம் -ஆந்திர மாநிலம் நகரிக்கு இடையே 170 கி.மீ. தூரம் ரயில் பாதை அமைக்கும் திட்டம், ரூ.3,000 கோடி செலவில் நிறைவேற்றப் போவதாக 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, ஆந்திராவின் நகரி பகுதியில், ரயில் பாதைக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில்... அ.தி.மு.க. அரசு எவ்வித முனைப்பும் காட்டாததால், இறுதியில் இத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இது அமைந்திருந்தால், தென் மாவட்டத்திலிருந்து வருபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கூட்டேரிப்பட்டு மேம்பால பணிகள் உட்பட தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிப்பதற்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தவுள்ளோம்'' என்றார் விரிவாக.
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் குமார் நம்மிடம், ""மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நிதி ஒதுக்குவதில்லை. தேசிய நெடுஞ்சாலை 45, விக்கிரவாண்டி தஞ்சாவூர் இடையே 169 கிலோமீட்டர் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான திட்டப் பணிகள் துவக்கப்பட்டு பத்தாண்டை கடந்து விட்டது. இன்னும் பணிகள் முடிந்த பாடில்லை. திண்டிவனம் -கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கம் செய்ய அப்போது சுமார் 220 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது சுமார் ரூ.600 கோடி அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். காலதாமதம் ஆவதால் 400 கோடி ரூபாய் மக்கள் பணம் விரயமாகிறது. மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான் மையோடு நடத்துகிறது, அந்தப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்றார்.
-எஸ்.பி.எஸ்.