திவாசி மக்களுடன் வாழ்ந்து பழங்குடி மக்களுக்காக 30 வருடங்களாகப் போராடிய ஸ்டேன்சாமி, யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பிணை கேட்டு வழங்காததால் மருத்துவமனையில் மரணித்தார். மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களை தீவிரவாதிகள்- தேசத்துரோகிகள் என முத்திரை குத்தி, கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யும் பா.ஜ.க அரசின் பாசிசப் போக்கினால் ஸ்டேன் சாமியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது என்கிற மனித உரிமைப் போராளிகளும், அரசியல் இயக்கத்தினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்கள்.

hitler

இதுகுறித்து நக்கீரனிடம் விரிவாகப் பேசினார் மனித உரிமைகளுக்காகத் தொடர் சட்டப் போராட்டம் நடத்திவரும் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், “"மோடி அமித்ஷாவின் மைய அரசு, மருத்துவத்திற்காக ஸ்டேன்சாமி கேட்ட இடைக்கால பிணையையும் 20 நாட்கள் திட்டமிட்டு தள்ளிவைத்து வழங்காத காரணத்தினால், இன்று அவர் நிறுவன படுகொலையாக இறந்திருக்கிறார். தடாவையும், பொடாவையும் வாபஸ் பெற்றபின்னும் அதில் இருக்கும் கொடுங்கோன்மைகளை உள்ளடக்கிய யு.ஏ.பி.ஏ. சட்டம் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் கூட்டாட்சிக்கு எதிராக அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்போர்களின் குரல்வளையை நெரிக்கிறது.

யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால் சார்ஜ் ஷீட் ஃபைல் செய்யும் 180 நாட்கள்வரை அவர் பிணை கேட்க உரிமை கிடையாது. பேச்சு, எழுத்து, கருத்துரிமை என்பது அடிப்படை யானது. அர்ணாப்கோஸ்வாமிக்கு மூன்று நிமிடங்களில் கிடைத்த பிணை ஏன் ஸ்டேன் சாமிக்குக் கிடைக்கவில்லை. ஸ்டேன் சாமி, ஒரு பயங்கரவாதியா, அர்பன் நக்ஸலா, மாவோயிஸ்ட் இயக்கத்தின் முகப்பாக செயல்பட்டவரா என்ற கேள்விதான் அவர் மீது இன்று யு.ஏ.பி.ஏ. பிரிவில் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

Advertisment

தலித் சேனையின் 200-வது நூற்றாண்டு விழாவுக்காகக் கூடிய கூட்டத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அந்த கலவரத்திற்குக் காரணம், எல்கார் பரிஷத் எனும் அமைப்பின் இருவர்தான். அவர்களை கைது செய்ய வேண்டும் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த இருவரும் இதுவரை கைது செய்யப்பட வில்லை. மாறாக அந்த வழக்கில், முதலில் ஐந்து பேர் கைது செய்யப்படுகிறார்கள். பிறகு மோடியை கொல்வதற்காக திட்டம் தீட்டினார்கள் என சுதா பரத்வாஜ், வரவர ராவ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 15-வது நபர் ஸ்டேன்சாமி. ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தொல்குடி மக்களுக்காக சேவையாற்றிவந்தவர்.

aa

அரசியல் சாசனத்தின் 246-வது பிரிவில் 5-ஆம் அட்டவணை, மலைவாழ் மக்களுக்குரிய தனிப்பட்ட சிறப்புரிமைகளை பெற்றது. அதில் பழங்குடியினர், ஆதிவாசிகளுக்கு மட்டும்தான் அடிப்படை உரிமை உண்டு. ஆனால், 1996-ஆம் ஆண்டு, வனத்தில் வாழ்கிறவர்களுக்கு குழு அமைத்து அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் எனச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

Advertisment

2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது வனத்தில் வாழுபவர்களுக்கே வனத்தில் விளைவதை எடுத்து விற்பதற்கு உரிமை என்றது. ஆனால், மைய அரசு அதனை கார்ப்பரேட்டுக்கு விற்றுவந்தது. ஆனால், 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மலைப்பகுதியில் உள்ள கனிம வளங்களை அரசு, தனியாருக்கு விற்கக்கூடாது எனத் தீர்ப்பு வந்தது. அதனை செயல்படுத்த அமைதியான முறையில் இத்தனை ஆண்டுகாலமாக ஸ்டேன்சாமி போராடிவந்தார். அப்படி அந்த மலை கனிமங் களை குத்தகைக்கு எடுத்து அபகரிக்கும் அதானி, அம்பானியின் முகமூடிதான் மோடி அமித்ஷா அரசாங்கம்.

மலை வாழ்மக்கள் 3,000 பேர் மாவோ யிஸ்ட்டுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டபோது, நீதிமன்றத்தில் போராடி மீட்க காரணமானவர் ஸ்டேன்சாமி. 2018-ஆம் ஆண்டு இந்த வழக்குப் பதியும்போது அவர் குற்றஞ்சாட்டப்பட்டவராக காண்பிக்கப்பட வில்லை. மாறாக அவர் மீது 124ஏ எனும் வழக்கு போடப்பட்டது. அதற்கு பிணை கேட்டபோது தான் இந்த எல்கரா பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக காண்பித்தார்கள். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு இதே என்.ஐ.ஏ. மூன்று முறை விசாரித்திருக்கிறது. அவர் வீட்டையும் சோதனை செய்துள்ளது. அவர் கேட்கும்போதுகூட “நீங்கள் குற்றம்சாட்டப் பட்டவர் அல்ல; சந்தேகிக்கப்படுவார்தான்” எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், 8.10.2020 அன்று சட்டத்திற்கு புறமாக கைது செய்யப்பட்டார்.

dd

தலோஜா சிறையில் 9 மாத காலம் அடைக்கப்படுகிறார். அவர் பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டவர். ஒருவர் கைது செய்யப்பட்டால், முதலில் 15 நாட்கள் போலீஸ் விசாரணையில் வைக்கப்படுவார். யு.ஏ.பி.ஏ. பொறுத்தவரை 30 நாட் கள் ரிமாண்ட் செய்யவேண்டும். ஆனால், அவர் ரிமாண்ட் செய்யப் படவில்லை. இதனால்தான் நிறு வனக் கொலை எனச் சொல்ல வேண்டியுள்ளது. அவர் மீது ஆதா ரம் இருந்திருந்தால் போலீஸ் காவ லில் எடுத்து என்.ஐ.ஏ. விசாரணை செய்திருக்க வேண்டும். கொடுங் குற்றம், சாட்சிகளை கலைத்தல், நீதிமன் றத்தில் ஆஜராகாமல் இருப்பது போன்ற வைகளில்தான் ஒருவரை சிறைப்படுத்த வேண்டும். பிணை கேட்டு மனு போடு வதற்கு முன்பு அவர், “என்ன நடக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

ஆர்.எஸ்.எஸ்., கார்ப்பரேட் முக மூடியாய் பா.ஜ.க இன்று இந்தியாவை காவி, கார்ப்பரேட் ஃபாசிஸ்டாக மாற்றிக்கொண்டிருக்கிறது. அது அடிப் படை உரிமைகளை ஒவ்வொன்றாய் நீர்த்துப்போகச் செய்து கொண்டிருக் கிறது. அதை எதிர்க்கும் குரலாகத்தான் ஸ்டேன்சாமி இருந்திருக்கிறார். பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்ட அவர் பிணையின் மீது, மனிதாபி மானமே இல்லாத விசாரணை நீதிமன் றம், “அவர் மீது அடிப்படை முகாந்திரம் இருக்கும் காரணத்தினால் பிணை மறுக்கப்படுகிறது” என்றது. அதன்பிறகு தான் உயர்நீதிமன்றம் சென்று தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்.

2014 மோடி பொறுப்பேற்ற பிறகு அக்லக், கல்புருக்கி, கவுரி லங்கேஷ், ஹரிதாஸ் தலித் பெண், காஷ்மீர் சிறுமி என ஃபாசிசத்தனமான கொலை தொடர்கிறது. அடுத்தபடியாக யு.ஏ.பி.ஏ. கொண்டு, என்.ஐ.ஏ. கொண்டு திட்டமிட்டு விசாரணை இல்லா மல் அந்த வழக்கை இழுத்தடித்தது. அதனால்தான், இந்தியாவின் தலைசிறந்த அறிவுஜீவிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ‘இது ஒரு நிறுவனக் கொலை’ என்கிறார்கள். இது ஃபாசிஸம், அரசாங்கத்தில் மட்டுமின்றி, நீதித்துறையிலும் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. எல்லோரையும் சொல்லவில்லை. அர்ணாப் கோசாமி, சங்கராச்சாரி ஆகியோருக்கு ஒரு நீதி, மக்களுக்காகப் போராடியவர்களுக்கு ஒரு நீதியா?

hh

ஆனந்த் டெல்டும்ப்டே, டாக்டரேட் பெற்றவர்; அம்பேத் கர் பேத்தியை திருமணம் செய்தவர், இடதுசாரியாளர். அவரும் இதேபோல் வீட்டில் சோதனையெல்லாம் நடத்தி கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்யும்போது, “இப் போது பேசாவிட்டால் நாம் எப்போதும் பேச முடியாது” என்றார். ஜெர்மனியிலிருந்த ஹிட்லரின் ஃபாசிசம் யூதர்களை மட்டும்தான் அழித்தது. ஆனால், இங்குக் காவி ஃபாசிசம் வீட்டிற்குள் சென்று உணவு, உடையை சோதிக்கிறது. இது ஜெர்மானிய ஃபாசிசத்தத்தைவிட கொடியது. நமக்குள் ஏற் பட்டிருக்கும் வேறுபாடுகளை கலைந்துவிட்டு மோடி- அமித்ஷாவின் ஃபாசிசத்திற்கு எதிராக ஒன்றுபடாவிட்டால், யு.ஏ.பி.ஏ. உள்ளிட்ட சட்டங்களை காவல்துறைக்கு சாதகமாக திருத்தி விடுவார்கள். அதனால்தான் உள்துறை அமைச்சகத்தில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார்கள்.

hh

பன்முகத்தன்மை கொண்டுள்ள இந்தியாவை மாற்றி ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் அட்டை என மாற்றும் நிலை இருக்கிறது. அதனால், இன்று ஸ்டேன்சாமி மரணத்திற்கு எதிராக இந்தத் தேசத்தின் மக்களெல்லாம் ஒன்றுபட்டாகவேண்டும். யு.ஏ.பி.ஏ. சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்டேன்சாமியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். எவரை பயங்கரவாதி என மத்திய அரசும் என்.ஐ.ஏவும் சொல்கிறதோ அவரை புகழஞ்சலிக்கு உள்ளாக்கி வாழ்த்தி இருக்கிறார். அதேசமயம் 2019-ஆம் ஆண்டு இதில் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது காங்கிர ஸும், தி.மு.க.வும் அதை ஆதரித்தது. ஆனால், அது இன் றைக்கு மாற்றப்பட வேண்டிய சூழ்நிலைக்கு வந்திருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் நக்கீரன், இதேபோன்று பொடா வழக்கை எதிர்கொண்டு வெற்றிபெற்றது. ஒரு மாநிலத்தில் நடந்த கொடுமை இன்று இந்தியா முழுக்க வந்திருக்கிறது. அதனால், இந்தச் சட்டத்திற்கு எதிராக சகல சக்திகளும் ஒன்றுபட வேண்டும்.

இந்த வழக்கில் இதுவரை, வரவரராவிற்கு பிணை கிடைத்துள்ளது. கௌதம் நவ்லகாவுக்கு வீட்டுச் சிறை கிடைத்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் விடுதலை வேண்டும். என்.ஐ.ஏ. முடக்கப்பட வேண்டும். யு.ஏ.பி.ஏவின் கொடும் பிரிவு கள் நீக்கப்பட வேண்டும்''’என்றார் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அழுத்தமாக.