Advertisment

மணல் கொள்ளை வளாகத்தில் மாதிரி பள்ளி! அதிர்ச்சியில் கல்வியாளர்கள்!

sand

மிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பயிலும் மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்குத் தனியாக நீட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கவேண்டும் என்கிற அரசின் உத்தரவுப்படி, மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது பள்ளிக்கல்வித் துறை. வேலூர் மாவட்டம், பிள்ளையார்குப்பத்தில் ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியில் மாதிரிப் பள்ளியை தொடங்கியுள்ளது வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை. இதுதான் பெற்றோர் களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

sand

2011-ல் ஜெ. ஆட்சிக்கு வந்த இரண்டாவது மாதம், வேலூர் மாநகரில் ரவுடியிஸம், கட்டப்பஞ்சாயத்து, செம்மரக்கடத்தல் செய்கிறார் என அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் ஜி.ஜி.ரவி. பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக்கொள்ளப்பட்டார். தனது ரவுடி இமேஜை மறைக்க பிள்ளையார்குப்பம் பாலாற்றங்கரையில் 2010-ல் ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியைத் தொடங்கி, கல்வித்தந்தை எனப் பட்டம் சூட்டிக்கொண்டார

மிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பயிலும் மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்குத் தனியாக நீட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கவேண்டும் என்கிற அரசின் உத்தரவுப்படி, மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது பள்ளிக்கல்வித் துறை. வேலூர் மாவட்டம், பிள்ளையார்குப்பத்தில் ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியில் மாதிரிப் பள்ளியை தொடங்கியுள்ளது வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை. இதுதான் பெற்றோர் களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

sand

2011-ல் ஜெ. ஆட்சிக்கு வந்த இரண்டாவது மாதம், வேலூர் மாநகரில் ரவுடியிஸம், கட்டப்பஞ்சாயத்து, செம்மரக்கடத்தல் செய்கிறார் என அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் ஜி.ஜி.ரவி. பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக்கொள்ளப்பட்டார். தனது ரவுடி இமேஜை மறைக்க பிள்ளையார்குப்பம் பாலாற்றங்கரையில் 2010-ல் ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியைத் தொடங்கி, கல்வித்தந்தை எனப் பட்டம் சூட்டிக்கொண்டார். வேலூர் தொகுதி எம்.பியாக இருந்த அ.தி.மு.க. செங்குட்டுவன் ஆதரவில் பாலாற்றிலிருந்து சட்டவிரோதமாக மணலைக் கடத்தினார். கல்லூரி வளாகத்தை மணல் யார்டாக வைத்திருந்தார். 2016-ல் பாலாற்றிலிருந்து மணல் கடத்திச்சென்ற லாரியைத் துரத்திச் சென்றார் இன்ஸ்பெக்டர் பாண்டி. மணல் லாரி ஜி.ஜி.ஆர். கல்லூரிக்குள் சென்றது. இன்ஸ்பெக்டரும் பின்னாடியே சென்று லாரியை மடக்கினார். டிரைவர் எஸ்கேப். விவரம் அறிந்துவந்த ரவி, என் காலேஜுக்குள் போலீஸ் எப்படி வரலாம் எனக்கேட்டு இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்து கட்டிப்போட்டார். தகவலறிந்து போலீஸ் பட்டாளம் உள்ளே சென்று இன்ஸ்பெக்டரை மீட்டது. ரவி கைது செய்யப்பட்டார். ரவுடிகளுக்குள் மோதலில் பழிக்குப்பழியாக 2017 பிப்ரவரியில் ரவியை கொலை செய்தது மற்றொரு ரவுடி கும்பல். அதன்பின் ரவியின் வழியில் அவரது மகன்கள் தொழிலை நடத்திவருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. மணல் யார்டாக செயல்படும் அந்த கல்லூரி வளாகத்தின் வகுப்பறைகளைத்தான் வாடகைக்கு எடுத்து மாதிரி பள்ளியை நடத்துகிறது கல்வித்துறை.

Advertisment

sand

இதுகுறித்து கல்வியாளர்கள் நம்மிடம், "கல்லூரி வளாகத்தில் சட்டவிரோதச்செயல்கள் நடப்பதாக கடந்த காலத்திலேயே புகார்கள் எழுந்தன. மணல் விற்பனை செய்யும் பகுதியாக அந்தக் கல்லூரி இருந்தது. சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதாகவும் புகாருள்ளது. அங்கே பள்ளியை நடத்துவது சரியாக இருக்காதென்பதே எங்கள் எண்ணம். பள்ளியிலிருந்து பார்த்தாலே பாலாற்றில் நூற்றுக்கணக்கான லாரிகள் மணல் அள்ளிக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும், மாதிரி பள்ளி தொடக்கவிழாவுக்காக அக்டோபர் 15ஆம் தேதி ஆய்வுக்குச் சென்ற கலெக்டர் இதனையெல்லாம் பார்த்தார். தொடக்கவிழாவுக்கு செய்தியாளர்கள் வந்தால் சட்டவிரோத மணல் விவகாரம் தெரிந்துவிடும் என்பதால் செய்தியாளர்களை அழைக்கவில்லை'' என்றார்கள்.

அரசு அமைத்த குவாரியில் மணல் அள்ளுவதைப் பார்ப்பதால் என்னவாகிவிடும்? எதனால் அதனைப் பார்க்கவிடாமல் கலெக்டர் தடுக்கிறார் என விசாரித்தபோது, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் நம்மிடம், "வேலூர் மாவட்டம் அரும்பருதி கிராமத்தில் சர்வே எண் 242ல் 4.95 ஹெக்டர் பரப்பளவில், 17314 யூனிட் மணல் எடுக்க ஓராண்டுக்கு கனிம வளத்துறை அனுமதி அளித்துள்ளது. இப்படி இரண்டு இடங்களில் மணல் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் மணல் அள்ளப்படுகிறது. மணல் விற்பனையை புதுக்கோட்டை எஸ்.ஆர். குரூப் செய்கிறது. கரிகாலன் மேற்பார்வையில் எல்லாம் நடக்கிறது. ஆற்றில் 1 மீட்டர் ஆழத்துக்குமேல் மணல் அள்ளக்கூடாது, இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என விதிகள் உள்ளது. அதனை மொத்தமாக மீறுகிறார்கள்.

அரும்பருதி ஊராட்சியைத் தாண்டி பெருமுகை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலாற்றுப் பகுதியிலும் விதிகளை மீறி மணல் அள்ளுகிறார்கள். தினமும் 24 பொக்லைன் இயந்திரங்கள் மணலை அள்ளுகின்றன. தினசரி 3 ஆயிரம் வண்டிகளில் மணல் போகிறது. 10 மீட்டர் ஆழம்வரை மணல் அள்ளுகிறார்கள். மணல் எங்கிருந்து எதுவரை அள்ள வேண்டும் என அதிகாரிகள் பவுண்டரி அமைத்திருக்க வேண்டும். அப்படி அமைத் தால் எல்லைதாண்டி மணல் அள்ளுவது தெரிந்துவிடும் என்பதாலேயே பவுண்டரி அமைக்கவில்லை. 100 ஏக்கர் பரப்பளவில் விதிகளை மீறி மணல் அள்ளுகிறார்கள். மாதிரிப் பள்ளி தொடக்க விழாவுக்கு பத்திரிகை யாளர்கள் வந்தால் இவையனைத்தும் தெரிந்துவிடும் என்பதாலேயே அழைக்கவில்லை. மணல் குவாரி முறைகேடுகள் குறித்து கலெக்டருக்கு புகார் அனுப்பியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்றார்கள்.

இதுகுறித்து மாவட்டஆட்சித்தலைவர் குமார வேல் பாண்டியனை தொடர்புகொண்ட போது, "அவர் ஆய்வுக் கூட்டத்தில் உள்ளார்' என்றார்கள். ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "நிகழ்ச்சிக்கு பெற்றோர்கள் அதிகளவு வந்ததால் பத்திரிகையாளர்களை அழைக்க முடியவில்லை. விழா குறித்த செய்திக்குறிப்பு வெளியிடாமல் போய்விட்டது, அதுவே சர்ச்சைக்குக் காரணமாகிவிட்டது. பத்திரிகையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் நேரில் சென்று படம் எடுத்துக்கலாம். பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுகிறார்கள் என கலெக்டரிடம் யாரும் புகார் சொல்லவில்லை. புகார் வந்தால் விசாரணை நடத்துவார்'' என்றார்.

nkn291022
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe