கிராமம் முதல் நகரம் வரை இன்றளவும் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அல்லது எரியூட்ட, சுடுகாட்டுப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. குறிப் பிட்ட சமூகத்தினரை மற்றவர்கள் எதிர்ப்பதும், சுடுகாடு தர மறுப்ப தும், இன்னும் பல கிராமங்களில் சுடுகாட்டுக்கான பாதையை மறிப் பதுமாக, மனிதர்கள் இறந்தபின் பும் ஜாதி, மத, வர்க்கபேத பிரச்சனைகள் தீர்வதாயில்லை.

இந்த விஞ்ஞான உலகம், ஒவ்வொரு பிரச்சனைக்கான தீர்வையும் தந்தபடியே இருக் கிறது. அதேபோல இந்த சுடுகாட் டுப் பிரச்சனைக்கும் தீர்வாக நடமாடும் எரியூட்டும் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத் தில் முதன்முறையாக நடமாடும் எரியூட்டும் வாகனத்தை அறிமுகப் படுத்தும் விழா, 14-ம் தேதி ஈரோட்டில் நடந்தது. இந்நிகழ் வில் ஆத்மா அறக்கட்டளை நிர் வாகிகள் வி.ராஜமாணிக்கம், சகாதேவன், இளங்குமரன், அக்னி ஸ்டீல் தங்கவேல், செங்குந்தர் பள்ளி சிவானந்தம் ஆகியோர் பங்கேற்று, நடமாடும் எரியூட்டும் வாகனத்தை துவக்கி வைத்தனர்.

vv

இதுகுறித்து ஆத்மா அறக் கட்டளை நிர்வாகிகள் கூறும் போது, "ஈரோடு போன்ற நகரங் களில் மின் மயானம் உள்ளது. அதேபோல் கிராமப்புறங்களிலும் இவ்வசதியைக் கிடைக்கச் செய் யும் நோக்கில் நடமாடும் எரியூட் டும் வாகனத்தை அறிமுகப்படுத்தி யுள்ளோம். கிராமப்புறங்களில் விறகு அல்லது சாண வரட்டியால் எரியூட்டுவதற்கு 15 ஆயிரம் ரூபாய்வரை செலவாகும்.

குடும்ப உறுப்பினர்கள், உற வினர்கள் பலரும் வெளியூர்களில் வசித்துவரும் சூழலில், காலத்துக் கேற்ப பழக்கவழக்கங்களை மாற்றி வருகிறார்கள். அதில் முக்கியமாக, இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பது மாறி, இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்ற நிலை வந்துவிட்டது. அதற்கு ஏது வாகத்தான் தற்போது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள வாகனத் தின் மூலம், இறந்த வர் உடலை எரி யூட்டி, ஒரு மணி நேரத்தில் அவரின் குடும்பத்தினரிடம் அஸ்தி வழங்கப்படும். நடமாடும் எரியூட்டும் வாகனம், ஈரோடு ஆத்மா அறக்கட்டளை ஆம்பு லன்சு மூலமாகக் குறிப்பிட்ட ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். முழுக்க முழுக்க காஸ் சிலிண் டரைப் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும். இந்த வாகனம், குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் சம்பந்தப்பட்ட வர்களின் விவசாய நிலத்தில் நிறுத் தப்பட்டு, எரியூட்டப்படும். இதற் கான சேவைக் கட்டணமாக ரூ.7,500 நிர்ணயித்துள்ளோம். இதற்கு பதிவு செய்யும் நபர்கள், உடல் அடக்கத்திற்கு தேவையான உறுதிமொழிப் படிவம், அடை யாள அட்டை, தேவையான ஆவ ணங்களை வழங்க வேண்டும்'' என்றனர். சுடுகாட்டுப் பிரச்ச னைக்கு காலத்துக்கேற்ற தீர்வாக, இவ்வாகனத்தை வடிவமைத் திருப்பது பாராட்டுக்குரியது.

Advertisment