கைகோர்த்த எம்.எல்.ஏக்கள்! விடிவு காலம் வருமா?

dd

பாதி நிலப்பகுதி யும், பாதி மலைப்பகுதியும் சூழ்ந்தது அந்தியூர் சட்டமன்றத் தொகுதி. இத்தொகுதியின் முக்கிய பிரச்சனையான சாலை வசதியை ஏற்படுத்தித் தருவதில், தொகுதி எம்.எல்.ஏ.வான ஏ.ஜி.வெங்கடா சலத்தின் செயல்பாடுகள் அத் தொகுதி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இத்தொகுதியிலுள்ள அந்தியூரை கடந்ததுமே பர்கூர் மலை தொடங்குகிறது. கர்நாடக எல்லையிலுள்ள இந்த மலைத் தொடரிலுள்ள நூற்றுக்கணக்கான மலைக் கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். இம்மக்களுக்கு சரியான சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெரிதும் இல்லை. இவற்றைச் செய்துகொடுப்பதற்காக தொகுதிக்குள் வலம்வந்து பல்வேறு முயற்சிகளில் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தின் கடைக்கோடி எல்லையாக இருப்பது குட்டையூர் என்ற கிராமம். கர்நாடகாவில் ஓடுகின்ற பாலாற்றைக் கடந்துதான் இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். அந்தியூரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் பயணம் செய்து, பின்னர் பாலாற்றைக் கட

பாதி நிலப்பகுதி யும், பாதி மலைப்பகுதியும் சூழ்ந்தது அந்தியூர் சட்டமன்றத் தொகுதி. இத்தொகுதியின் முக்கிய பிரச்சனையான சாலை வசதியை ஏற்படுத்தித் தருவதில், தொகுதி எம்.எல்.ஏ.வான ஏ.ஜி.வெங்கடா சலத்தின் செயல்பாடுகள் அத் தொகுதி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இத்தொகுதியிலுள்ள அந்தியூரை கடந்ததுமே பர்கூர் மலை தொடங்குகிறது. கர்நாடக எல்லையிலுள்ள இந்த மலைத் தொடரிலுள்ள நூற்றுக்கணக்கான மலைக் கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். இம்மக்களுக்கு சரியான சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெரிதும் இல்லை. இவற்றைச் செய்துகொடுப்பதற்காக தொகுதிக்குள் வலம்வந்து பல்வேறு முயற்சிகளில் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தின் கடைக்கோடி எல்லையாக இருப்பது குட்டையூர் என்ற கிராமம். கர்நாடகாவில் ஓடுகின்ற பாலாற்றைக் கடந்துதான் இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். அந்தியூரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் பயணம் செய்து, பின்னர் பாலாற்றைக் கடந்து இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, கட்டமைப்பு வசதியைத் திட்டமிடுவதற்காக நேரில் சென்று பார்வையிட்டார் எம்.எல்.ஏ. பர்கூர் மலையிலிருந்து துருசனாம்பாளையம் என்ற கிராமத்தின் வழித்தடத்தில் வேலாண்டி பாளையம்மலை கிராமத்திற்கு சென்றால், அதே வனச்சாலையில் சுமார் 6 கிலோமீட்டரில் இந்த குட்டையூர் கிராமத்துக்கு தமிழக வனப்பகுதி வழியாகவே செல்லமுடியும். சாலை வசதியில்லாததால் கர்நாடகாவைச் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. எனவே அங்கு சாலை வசதியை ஏற்படுத்து வதற்காக கடந்த மாதத்தில் அதிகாரிகளையும் உடன் அழைத்துக்கொண்டு சென்று பார்வையிட்டு, சாலையமைப்பது குறித்து ஆய்வு நடத்தினார்.

இது ஒருபுறமிருக்க, கர்நாடக பகுதிக்கு செல் வதற்கு பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டியிருக் கிறது. அப்பணியில் கர்நாடக அரசும் இணைந்து செயல்பட வேண்டியிருப்பதால், கர்நாடகாவின் அனூர் தொகுதி எம்.எல்.ஏ.வான மஞ்சுநாத்தை அழைத்துக்கொண்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரு மாநில அதிகாரிகளோடு பாலாற்றை கடந்து குட்டையூர் கிராமத்திற்கு சென்று மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தனர். அப்போது, தங்களின் மருத்துவம், மளிகைப்பொருட்கள் தேவைக்கென கர்நாடகப் பகுதிக்குள் செல்ல வேண்டியிருப்பதைக் கூறி, பாலாற்றில் பாலம் அமைத்துத்தர மக்கள் கோரிக்கை வைத்தனர். அதேபோல் கர்நாடக வனப்பகுதியிலும் வனச்சாலை அமைத்துத்தரக் கேட்டனர். இதனை, உடன் வந்த கர்நாடக எம்.எல்.ஏ., "எங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த பாலத்தை அமைக்க தமிழக அரசோடு இணைந்து முயற்சியெடுப்போம்'' என்று நம்பிக்கையளித்தார்.

ee

இதுகுறித்து கர்நாடகா எம்.எல்.ஏ. மஞ்சுநாத் நம்மிடம் கூறுகையில், "குட்டையூர் மக்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள் அவர்களை எப்படியாவது இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே கொண்டுவரு வதற்கான நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம்'' என்றார்.

எம்.எல்.ஏ. வெங்கடா சலம் கூறுகையில், "பாலாற்றில் தண்ணீர் வந்துவிட்டால் அங்குள்ள மக்கள் எங்குமே செல்ல முடியாது. குட்டையூர் கிராமமே தனித்தீவாக துண்டிக்கப்பட்டு விடும். இம்மக்கள் தங்களின் வீட்டுத் தேவைக்கான பொருட்கள்? கட்டிடம் கட்டுவதற்கான சிமெண்ட், செங்கற்கள் உள்ளிட்டவைகளை எடுத்துவருவதற்கு கர்நாடக வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக தமிழக வனத்துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசினேன். கர்நாடக மாநில வனத்துறையின் அனுமதி பெறுவது குறித்தும் ஹனூர் தொகுதி எம்.எல்.ஏ. மஞ்சுநாத்திடம் பேசியபோது, தங்கள் மாநில அதிகாரிகளை அழைத்துக்கொண்டு வருவதாக உறுதியளித்தார். அதன்படி, கர்நாடக எல்லையிலுள்ள ஜல்லிபாளையத்திற்கு வந்தார். நானும் நமது தமிழக வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை அழைத்துக் கொண்டு சென்றேன். இரு மாநில அதிகாரி களையும் வைத்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டோம். நிரந்தரத் தீர்வாக சாலை வசதி செய்துதர முடிவெடுத்துள் ளோம்.

விரைவில் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சேர்ந்து சர்வே செய்து அதற்குண்டான திட்ட அறிக்கை தயாரித்து, அதற்குத் தேவையான நிதி ஆதாரம் உள்ளிட்டவைகள் குறித்து பேசி, பொதுமக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கொடுப்பதற்கு முடிவெடுத்துள் ளோம். இதன்மூலம், குட்டையூர், அதனை ஒட்டியுள்ள ஊகியம், நெல்லூர், நால்ரோடு பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் விடிவு காலம் பிறக்கும். வனத் துறையிடம் சாலை வசதிக்கு நிரந்தரத்தீர்வாக உரிய அனுமதி பெறப்படும். அப்போதுதான் அடுத்த தலைமுறைகளுக்கும் பயன்படும்.

எவ்வளவு விரைவாக அளவீடு செய்து சாலை வசதி செய்துதர முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்படுத்துவோம். இதற்காக, தமிழகப் பகுதியில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் பார்க்கிறோம், கர்நாடக மாநிலத்தில் உள்ள சாலை வசதிக்கான பிரச்சினைகளை ஹனூர் எம்.எல்.ஏ. பார்த்துக்கொள்வார்'' என்றார் நம்பிக்கையோடு.

மலைப்பகுதி மக்களின் நலன் காப்பதற்காக கர்நாடக அரசோடு இணைந்து தமிழ்நாடு அரசு செயல்படுவது, இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சரியான முன்னுதாரணமாக இருக்கும்.

nkn151123
இதையும் படியுங்கள்
Subscribe