Advertisment

சிறுமியைச் சீரழித்த SEX எம்.எல்.ஏ! அரசியல் செல்வாக்கால் அரங்கேறும் கொடூரம்!

mla

காமுகன் காசி விவகாரத்தில் அரசியல் செல்வாக்கு பின்னணியில் இருந்து செயல் படுவதை நக்கீரன் அம்பலப்படுத்தியது. அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னொரு கொடூரம்.

Advertisment

mla

பா.ஜ.க.வில் நகர பொருளாளராக இருந்து அ.தி.மு.க.வுக்குத் தாவியவர் நாஞ்சில் முருகேசன். ரியல் எஸ்டேட் பிசினஸ் மூலம் பணபலத்தைப் பெருக்கிக் கொண்டார். இந்தப் பணபலமே ஜெ. மூலம் 2011ல் எம்.எல்.ஏ. சீட்டும், ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் மா.செ.வாகவும் ஆக்கியது.

Advertisment

இப்படி, திடீர் உச்சத்தை அடைந்திருந்த நி

காமுகன் காசி விவகாரத்தில் அரசியல் செல்வாக்கு பின்னணியில் இருந்து செயல் படுவதை நக்கீரன் அம்பலப்படுத்தியது. அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னொரு கொடூரம்.

Advertisment

mla

பா.ஜ.க.வில் நகர பொருளாளராக இருந்து அ.தி.மு.க.வுக்குத் தாவியவர் நாஞ்சில் முருகேசன். ரியல் எஸ்டேட் பிசினஸ் மூலம் பணபலத்தைப் பெருக்கிக் கொண்டார். இந்தப் பணபலமே ஜெ. மூலம் 2011ல் எம்.எல்.ஏ. சீட்டும், ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் மா.செ.வாகவும் ஆக்கியது.

Advertisment

இப்படி, திடீர் உச்சத்தை அடைந்திருந்த நிலையில்தான், 2013ல் ஒழுகினசேரியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மனுகொடுக்க வந்த இளம்பெண்ணிடம் அத்துமீறி சர்ச்சையில் சிக்கினார். அருகிலேயே அனைத்து மகளிர் காவல் நிலையம் இருந்தும், விஷயம் மூடிமறைக்கப் பட்டது. இதற்கு மறுநாளே சென்னையிலிருந்து தாய் மூலம் வரவைக்கப்பட்ட சிறுமியை, எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வைத்து முருகேசன் சீரழிக்க முயன்றபோது, பொதுமக்களால் தடுத்து நிறுத்தப் பட்டது. அப்போதே, இதுபற்றி நக்கீரனில் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்த நிலையில்தான், 2016 தேர்தல் தோல்வி, ஜெ. மரணம் என்று ஒதுங்கியிருந்த முருகேசனுக்கு, 2017ல் கோட்டார் அருகேயுள்ள வாகையடித் தெருவைச் சேர்ந்த ஆனந்தி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே ஸ்பெஷலான ஆனந்தி, முருகேசனுடன் ஏகத்துக்கும் நெருக்கமாக இருந்துள்ளார். இதில்தான், ஆனந்தியின் 13 வயது மகள் மீது முருகேசனின் பார்வை பட்டது. தனது விருப்பத்தை ஆனந்தியிடம் வெளிப்படுத்த, அவரும் மகளை வலுக்கட்டாயமாக முருகேசனிடம் அனுப்பி வைத்திருக்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தச் சிறுமியை, தான் விரும்பிய போதெல்லாம் முருகேசன் சீரழித்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து, அவருடன் தப்பியோடினார் அந்தச் சிறுமி. இது பற்றி, முருகேசனிடம் ஆனந்தி முறையிட்டபோது, "நாமதான் ஆளுங்கட்சி. நீ தயங்காம புகார்கொடு' என்று போலீசிடம் அனுப்பி வைத்திருக்கிறார்.

போலீசாரும் உடனடியாக சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பினர். சிறுமிக்கு 16 வயதே ஆவதால், அவரைக் கூட்டிச்சென்ற இளைஞர் ரிமாண்ட் செய்யப்பட்டார். காப்பகத்தில் வைத்து விசாரித்த குழந்தைகள் நல அலுவலரிடம், தான் முருகேசன் மற்றும் பலரால் கடந்த மூன்றாண்டு களாக சீரழிக்கப்பட்டதை கண்ணீருடன் சொல்லியிருக்கிறார். இதை முருகேசன் எதிர்பார்த்திருக்க வில்லை.

சிறுமியின் அம்மா ஆனந்தி, உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் அசோக்குமார், பால், கார்த்திக் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், ஐந்து தனிப்படைகள் அமைத்தும், குட்டி மாவட்டமான குமரியில் முருகேசனைப் பிடிக்க முடியவில்லை எனத் திணறியது காவல்துறை.

அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்ட நாஞ்சில் முருகேசனை புதன் கிழமையன்று போலீஸ் கைது செய்தது.

-மணிகண்டன்

nkn010820
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe