கவுன்சில் கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்து பார்த் திருப்போம், சேர்மன் புறக்கணித்திருப்பது பரபரப்பாகியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 29 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி பதவிகள் முடிவுற்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் 2026 இறுதிவரை உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மன்றக்கூட்டம் மார்ச் 13-ஆம் தேதி நடைபெற்றது. ஒன்றியக்குழு சேர்மன் சுரேஷ்குமார் கூட்டத்தைப் புறக்கணிக்க, வைஸ்சேர்மன் சாந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலு இருவரும் பதில் கூறியுள்ளனர். இது ஆளும்கட்சியினரிடம் பரபரப்பையும், மக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆம்பூர் ஆளுங்கட்சி பிரமுகர் களிடம் கேட்டபோது, "மாதனூர் ஒன்றியத்தில் 23 கவுன்சிலர்கள் உள்ளார்கள். இதில்
கவுன்சில் கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்து பார்த் திருப்போம், சேர்மன் புறக்கணித்திருப்பது பரபரப்பாகியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 29 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி பதவிகள் முடிவுற்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் 2026 இறுதிவரை உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மன்றக்கூட்டம் மார்ச் 13-ஆம் தேதி நடைபெற்றது. ஒன்றியக்குழு சேர்மன் சுரேஷ்குமார் கூட்டத்தைப் புறக்கணிக்க, வைஸ்சேர்மன் சாந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலு இருவரும் பதில் கூறியுள்ளனர். இது ஆளும்கட்சியினரிடம் பரபரப்பையும், மக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆம்பூர் ஆளுங்கட்சி பிரமுகர் களிடம் கேட்டபோது, "மாதனூர் ஒன்றியத்தில் 23 கவுன்சிலர்கள் உள்ளார்கள். இதில் 16 கவுன்சிலர்கள் ஆம்பூர் தொகுதிக்குள்ளும், 7 கவுன்சிலர்கள் குடியாத்தம் தொகுதிக்குள்ளும் வருகிறார்கள். சேர்மன் பதவிக்கு மாதனூர் தி.மு.க. ஒ.செ. சுரேஷ்குமார் முயற்சித்தார். அதேபோல் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், தனது மச்சான் மனைவி சாந்திக்கு சேர்மன் பதவியைப் பெற முயற்சித்தார். ஒருங்கிணைந்த வேலூர் மா.செ.வாகவும், எம்.பி.யாகவும் இருந்த மறைந்த சண்முகத்தின் மகன் ஒ.செ.வாக இருப்பதால் சுரேஷ்குமாருக்கு சேர்மன் பதவியும், சாந்திக்கு வைஸ்சேர்மன் பதவியும் தரப்பட்டது.
மாதனூர் ஒன்றிய நிர்வா கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என எம்.எல்.ஏ. வில்வநாதன் முயற்சித் தார். சட்டமன்றத் தேர்தல் நேரத் தில் சுரேஷ்குமார், எம்.எல்.ஏ. சீட் கேட்பதால் சிட்டிங் எம்.எல்.ஏ. வில்வநாதன், சுரேஷ்குமாரை டம்மியாக்க நினைக்கிறார். இதனால் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரிபோல் மாறிவிட... எம்.எல்.ஏ. ஆதரவு கவுன்சிலர்களுக்கும் - சேர்மனுக்குமிடையே மோதல் இருந்துவந்தது.
இந்நிலையில் சில மாதங் களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் மாதனூர் ஒன்றியத்தை ஆய்வுசெய்தபோது, 80% பணிகள் முடிக்கப் படாமல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியானார். இதுகுறித்து பி.டி, ஏ.டி., பி.டி.ஓ.விடம் கேள்விகேட்டபோது, "இந்த வேலைகளை சேர்மன் சுரேஷ்குமார், தனது பினாமி பெயரில் எடுத்துச்செய்கிறார். ஒப்பந்தம் எடுத்தவர்களை எச்சரித்தால், கேள்வி எழுப்பினால், அவர்களிடம் கேள்வி கேட்காதீங்க' என சேர்மன் தடை போடுகிறார் எனச் சொல்லினர்.
அதனைத் தொடர்ந்து அதுகுறித்த ஃபைலை தயார்செய்து திருப்பத்தூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவிடம் தந்தார் கலெக்டர். அதனைப் பார்த்து அதிர்ச்சியானவர், தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாத னிடம் கேட்டார். "மாதனூர் ஒன்றியத்திலுள்ள கவுன்சிலர்களுக்கு இதுவரை 4 லட்சம் வரைதான் வேலை தந்துள்ளார். அவர்கள் நாங்கள் கடன்காரர்களாக இருக்கிறோம் என என்னிடமும் வந்து முறையிட்டார்கள், சேர்மன் யாரையும் மதிப்பதில்லை' என்றார். கவுன்சிலர்களும் அமைச்சரிடம் முறையிட்டனர். சேர்மன் சுரேஷ்குமாரை அழைத்துத் திட்டிய அமைச்சர், நீ சேர்மன் பதவியை ராஜினாமா செய் என்றதும் அதிர்ச்சியாகிவிட்டார். உடனே அமைச்சர் துரைமுருகனின் கால்களில் விழுந்து தன்னைக் காப்பாற்றச்சொல்லி முறையிட்டார்.
இது வேலுவை இன்னும் கோபப்பட வைத்துவிட்டது. பிரச்சனை முதலமைச்சர் வரை சென்றது. பின்பு அமைச்சர் கோபம் குறைந்து, "10 கோடி ரூபாய்க்கான வேலையைச் செய்கிறாய், அதற்கான கமிஷனை கவுன்சிலர்களுக்கு பிரித்துத் தா, உடனே வேலையை முடி. இனிமேல் எம்.எல். ஏ.க்கள் வில்வநாதன், அமுலு சொல்வதை கேட் டுத்தான் நடக்கவேண்டும்' என எச்சரித்தார். அதேநேரத்தில் அவரிடமிருந்த மாதனூர் கிழக்கு ஒ.செ. பதவி பறிக்கப்பட்டு குடியாத்தம் தொகுதிக்குள் வரும் 5 கிராமங்களைக் கொண்ட மாதனூர் வடகிழக்கு ஒ.செ. பதவியை உருவாக்கித் தந்து டம்மியாக்கப்பட்டார். இந்த பஞ்சாயத்து முடிந்து இரண்டு மாதங்களாகிறது இன்னும் கவுன்சிலர்களுக்குத் தரவேண்டிய பங்கை சேர்மன் தரவில்லை''’என்றார்கள் விளக்கமாக.
உள்ளாட்சி அதிகாரிகளிடம் பேசியபோது, “"மார்ச் 14-ஆம் தேதி கவுன்சில் கூட்டம் என எம்.எல்.ஏ. வில்வநாதன் சொன்னார். சேர்மன் ஒப்புக் கொள்ள, கூட்டம் குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திடீரென எம்.எல்.ஏ. வில்வநாதன், 14-ஆம் தேதி சட்டமன்றம் இருக்கிறது, அதனால் 13-ஆம் தேதியே கூட்டம் நடத்துங்கள் என்றார். இதை சேர்மனிடம் சொன்னபோது, முடியாது, நீங்களே கூட்டத்தை நடத்திக்குங்க என சேர்மன் சொல்ல, வைஸ்சேர்மன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது''’என்றார்கள்.
கவுன்சிலர்கள் சிலர் நம்மிடம், “"வைஸ்சேர்மன் சாந்தி தலைமையில் கூட்டம் நடந்தாலும், கவுன்சிலர்கள் தங்கள் பகுதியிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டி முறையிட்டபோது, அதற்கு எம்.எல்.ஏ.க்கள் பதில்தந்துள்ளனர். வைஸ்சேர்மன் அமைதியாக இருந்தார்''’ என்கிறார்கள்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் சட்டப்படி தலைவர்தான் கூட்டத்தை நடத்தவேண்டும். அசாதாரண சமயத்தில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தால், இந்த கூட்டம் மட்டும் வைஸ்சேர்மன் தலைமையில் நடத்திக்கொள்ளவும் என பி.டி.ஓ.வுக்கு சேர்மன் கடிதம் தரவேண்டும். கடிதம் தந்தால் மட்டுமே அந்த கூட்டம் செல்லும். அதேபோல் எம்.எல்.ஏ.க்கள், கூட்டத்தில் பார்வையாளர்களாக கலந்துகொள்ளலாமே தவிர, அவர்கள் கூட்டத்தை நடத்த அதிகாரமில்லை. விதிமுறைகளை மீறியே கூட்டம் நடந்துள்ளது.