Advertisment

வன்னியர்களை புறக்கணிக்கும் மு.க.ஸ்டாலின்! - கள்ளக்குறிச்சி கடுப்பு!

kk

ழைய செல்வாக்கை பா.ம.க, தே.மு.தி.க, வி.சி.க போன்ற கட்சிகள் பங்கு பிரித்துக் கொண்ட பிறகும் வடமாவட்டங்கள் இப்போதும் தி.மு.க.வுக்கு கைகொடுக்கின்றன. அதை கெடுக்க நினைக்கும் நிர்வாகிகளுக்கு தலைமையே துணை நிற்கிறது என்கிற உடன்பிறப்புகள் தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட பிரிப்பை சுட்டிக்காட்டுகிறார்கள்.

Advertisment

kk

பழைய விழுப்புரம் மாவட்டம் தெற்கு வடக்கு மத்தி என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தெற்கு மா.செ.வாக எக்ஸ் எம்.எல்.ஏ. அங்கயற்கண்ணியும் (பிள்ளைமார்) மத்தி மா.செ.வாக பொன்முடியும் (உடையார்), வடக்கு மா.செ.வாக செஞ்சி மஸ்தான் (முஸ்லீம்) மா.செ.க்களாக நியமிக்கப்பட்டனர். இதன்பிறகு நடந்த கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஏழு தொகுதிகளில் திமுக வென்றது. அ

ழைய செல்வாக்கை பா.ம.க, தே.மு.தி.க, வி.சி.க போன்ற கட்சிகள் பங்கு பிரித்துக் கொண்ட பிறகும் வடமாவட்டங்கள் இப்போதும் தி.மு.க.வுக்கு கைகொடுக்கின்றன. அதை கெடுக்க நினைக்கும் நிர்வாகிகளுக்கு தலைமையே துணை நிற்கிறது என்கிற உடன்பிறப்புகள் தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட பிரிப்பை சுட்டிக்காட்டுகிறார்கள்.

Advertisment

kk

பழைய விழுப்புரம் மாவட்டம் தெற்கு வடக்கு மத்தி என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தெற்கு மா.செ.வாக எக்ஸ் எம்.எல்.ஏ. அங்கயற்கண்ணியும் (பிள்ளைமார்) மத்தி மா.செ.வாக பொன்முடியும் (உடையார்), வடக்கு மா.செ.வாக செஞ்சி மஸ்தான் (முஸ்லீம்) மா.செ.க்களாக நியமிக்கப்பட்டனர். இதன்பிறகு நடந்த கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஏழு தொகுதிகளில் திமுக வென்றது. அதிலும் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டியை பறிகொடுத்தது. இதன்பிறகேனும், கட்சியில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில்தான், கள்ளக்குறிச்சி மாவட்ட பிரிப்பு நடைபெற்று தெற்கு மாவட்ட அமைப் பாளராக ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. கார்த்திகேயனும் வடக்கு மாவட்ட அமைப்பாளராக சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் சங்கராபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ள மாவட்டத்தில், உதயசூரியனை நடுவில் உள்ள கள்ளக்குறிச்சியை விட்டுவிட்டு சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை இரண்டு தொகுதிகளுக்கு அமைப்பாளராக ஸ்டாலின் நியமித் துள்ளார்.

கார்த்திகேயனுக்கு ரிஷிவந்தியம் கள்ளக் குறிச்சி தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே மா.செ.வாக கார்த்திகேயனுக்கே 4 தொகுதிகளையும் கொடுக்க தலைமை நினைத்த நிலையில், பொன்முடியால் உதயசூரியனுக்கு பதவி வழங்கப்பட்டு, இப்படிக் குழப்பமான பிரிவினை நடந்துள்ளது என்கிறார்கள் நிலவரம் அறிந்த கட்சிக்காரர்கள்.

ஏற்கெனவே மா.செ.வாக இருந்த அங்கயற்கண்ணி பற்றி தலைமைக்கு புகார்கள் குவிந்ததால் முதன்மை செயலாளர் கே.என்.நேரு கள்ளக்குறிச்சிக்கு விசிட் செய்து விசாரணை நடத்தி கட்சி தலைமைக்கு அறிக்கையளித்தார். அதனால், அங்கையற் கண்ணியை மாநில மகளிரணி துணைச் செயலாளராக அறிவித்துவிட்டு, இந்த பாகப்பிரிவினை நடந்துள்ளது. கலைஞர் இருந்தபோது தமிழகத்தில் 4 பெண்களை மா.செ.க்களாக நியமித்திருந்தார். தற்போது தி.மு.க.வில் தூத்துக்குடி கீதாஜீவன் மட்டும்தான் பெண் மா.செ.

தெற்கு மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன் உடையார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அமைச்சராக இருந்த பொன்முடி உடன் நெருக்கமாகி, திருவண்ணாமலை எக்ஸ் மந்திரி எ.வ.வேலு ஆதரவோடு திமுகவில் சீட்டுவாங்கி ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். தொண்டர்களிடம் நெருங்கிப் பழகுவது இவருக்கும் உதயசூரியனுக்கும் பலம் என்பதை லோக்கல் கட்சியினர் ஒப்புக் கொள்கிறார்கள். ""தலைமை அளித்த பொறுப்பை ஏற்று இரண்டு தொகுதிகளிலும் கட்சியை வெற்றி பெற வைப்பேன்'' என்றார் நம்மிடம் வசந்தம் கார்த்திகேயன்.

kk

பழைய விழுப்புரம் மாவட்டம் தற்போது 4 மாவட்டங்களாகியும் ஒன்றில்கூட வன்னியருக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்படாத கொந்தளிப்பு தி.மு.கவில் இருக்கிறது. பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எக்ஸ் எம்.எல்.ஏ. மணிகண்ணன் திருநாவலூர் ஒசெ வசந்தவேலு போன்ற தகுதிவாய்ந்த வன்னிய சமுதாயத்தினர் திமுகவில் உள்ளனர். 7 தொகுதிகள் கொண்ட விழுப்புரம் தற்போது இரண்டு மா.செ.க்களைக் கொண்டுள்ளது.

மூன்றாகப் பிரித்தால், வன்னியர் சமுதாயத்தவருக்கு வாய்ப்பு வழங்க முடியும். தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மைலம் எம்.எல்.ஏ. மாசிலாமணி, காலம் சென்ற முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மகன் ஏஜி சம்பத், ஆகியோர் இந்த மாவட்டத்தில் இருந்தும் திமுக தலைமை புறக்கணித்து வருகிறது என்கிற தொண்டர்களின் கோபம் மு.க.ஸ்டாலினை நோக்கியே திரும்புகிறது. தி.மு.க தலைமை இதை கவனிக்குமா?

-எஸ்.பி.சேகர்

nkn290820
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe