மார்க்கெட்டில் கலப்படக் கருப்பட்டி! மஃபியாக்களை தடுக்காத மாவட்ட நிர்வாகம்!

blacksugar

"கலப்பட பனங்கருப்பட்டி, கலப்பட பனங்கற்கண்டிற்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள உரிமத்தை உடனடியாக ரத்துசெய்து, கலப்படக்காரர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து உடன்குடி பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டையும், பொதுமக்களின் நலனையும், பனை விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் நலனையும் காப்பாற்றவேண்டுமென," சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் உடன்குடி யைச் சேர்ந்த ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

blacksugar

செவ்வாய்க்கிழமையன்று நீதியரசர்கள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு நடைபெற்ற நிலையில், "கலப் படம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?' என உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது நலவழக்கு தொடர்ந்திருந்த உடன்குடி பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு உற்பத்தியாளர் நல அமைப்பின் தலைவர் சந்திரசேகரனோ, ""ஆரோக்யத்திற்கு நல்லது, சுகர் நோயாளிகளுக்கு நல்லது என பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டை வாங்கிப் பயன்படுத்து கிறார்கள் மக்கள். அது உடலு

"கலப்பட பனங்கருப்பட்டி, கலப்பட பனங்கற்கண்டிற்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள உரிமத்தை உடனடியாக ரத்துசெய்து, கலப்படக்காரர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து உடன்குடி பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டையும், பொதுமக்களின் நலனையும், பனை விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் நலனையும் காப்பாற்றவேண்டுமென," சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் உடன்குடி யைச் சேர்ந்த ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

blacksugar

செவ்வாய்க்கிழமையன்று நீதியரசர்கள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு நடைபெற்ற நிலையில், "கலப் படம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?' என உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது நலவழக்கு தொடர்ந்திருந்த உடன்குடி பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு உற்பத்தியாளர் நல அமைப்பின் தலைவர் சந்திரசேகரனோ, ""ஆரோக்யத்திற்கு நல்லது, சுகர் நோயாளிகளுக்கு நல்லது என பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டை வாங்கிப் பயன்படுத்து கிறார்கள் மக்கள். அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வெள்ளை சீனி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

உடன்குடி பேரூராட்சிக்கு மட்டும் தினசரி சுமார் 120 டன்னுக்கும் அதிகமான வெள்ளை சீனி மற்றும் கழிவு வெல்லப்பாணி விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. குறிப்பாக, "டாரஸ்' எனப்படும் மிகப்பெரிய லாரியில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றது. பிறகு இங்கிருந்து 10 சதவிகிதம் கூடுதல் எடையுடன் பனங்கருப்பட்டியாகவும், பனங்கற்கண்டாகவும் விற்பனைக்குச் செல்கின்றது.

சுமார் ரூ.30-க்கு ஒரு கிலோ கழிவு சீனி அல்லது கழிவு சர்க்கரையை வாங்கி ரசாயன பொருட்கள் கலந்து போலியான கலப்பட பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டை தயாரித்து அதனை உடன்குடி பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு என சந்தையில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்'' என்கிறார்.

பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பில் கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆகியன இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத் திலுள்ள உடன்குடி, வேம்பாறு ஆகிய இடங்கள் பெயர் பெற்றவையாக விளங்கி வருகின்றன.

blacksugar

கலப்படம் செய்யும் மாஃபியாக்களோ, கழிவு சீனி, கழிவு கரும்பு சர்க்கரைப் பாகு போன்றவற்றைக் கொண்டு அதனோடு சுவருக்கு வர்ணங்கள் பூசக்கூடிய ரசாயனம் கலந்துள்ள செம் பவுடர் என்கின்ற வண்ணப்பூச்சு பவுடரையும் கலந்து அசல் பனங்கருப்பட்டி, கற்கண்டை போன்ற உருவத்தில் உருவாக்கி விற்பனை செய்துவருவது வேதனையளிக்கிறது.

"உலகத்தரம் வாய்ந்த உடன்குடி பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு என்றால் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியான சாயர்புரம், ஆத்தூர், ஏரல், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை ஆகிய பகுதிகளில் கிடைப்பதாகும். அதிலும், உடன்குடி பகுதிகளில் கிடைக்கும் பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு மிகச்சிறப்பு வாய்ந்தது. கலப்பட மாஃபியாக்கள் பெருகிய பிறகு இந்த பெயரைக் கொண்டு சீனியை விற்கிறார்கள். உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் விதிகளை மதிக்காமல் கோடிக்கணக்கில் புரளும் லஞ்சப் பணத்திற்கு ஆசைப்பட்டு, "கலெக்டரே கூறினார்' என மேற்கோள் காட்டி வெள்ளை சீனியிலும் பனங்கருப் பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரித்துக்கொள்ளலாம் என லைசென்ஸ் வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம்'' என்கிறார் தகவலறியும் சட்டத்தினைக் கொண்டு ஆதாரங் களைத் திரட்டிய சிவலூர் முருகேசன்.

வருடக்கணக்கில் மாதந் தோறும் விவசாயிகள் குறைதீர்ப் புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்முன் பனை விவசாயி கள் கலப்படம் குறித்துப் பேசிய நிலையில் கடந்த 23-09-2019 அன்று மட்டும் உடன்குடி பகுதியில் சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஐந்து கருப்பட்டி தொழிற்கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டம் 55 ன் கீழ் நோட்டீஸ் அனுப்பி 40 டன் கலப்படக் கருப்பட்டிகளைக் கைப்பற்றி அங்கிருந்த சீனிக்கூழை அப்புறப்படுத்தினர். எனினும், அதன் பிறகுதான் கலப்பட தொழிற்கூடங்கள் பெருகின என்கிறது புள்ளிவிவரம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் வழக்கறிஞர் ராஜீவ் ரூபஸ், ""உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் The Food Safety and Standards (Food Products Standards and Food Additives) Regulations 2011-ல் பிரிவு 2.8.2 ன் படி பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற் கண்டை தயாரிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எந்த இடத்திலும் பதநீர் கரும்புச் சாறு இரண் டையும் கலந்து பனங்கருப்பட்டியையோ, பனங்கற்கண்டையோ, வெல்லத்தையோ தயாரிக்கமுடியும் என்று கொடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தூத்துக்குடி உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அதிகாரியும் ஏதோ உள்நோக்கத் தோடு பதநீரையும், கரும்புச்சாறிலிருந்து கிடைக்கக்கூடிய வெல்லம், சீனியையும், சீனி பாணியையும் (கூழ்) கலந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கமுடியும் என்று சொல்லி அதற்கு உரிமம் வழங்கிவருகிறார்கள். இது சட்டவிரோதமான செயலாகும்.

கலப்பட மாஃபியாக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே, மாவட்ட நிர்வாகம் இவ்வாறு சட்டவிரோதமான நடவடிக்கையை எடுத்துள்ளது" என்கிறார்'' அவர்.

பனையை, விவசாயியைக் காப்பாற்றுமா இந்த அரசு..?

-நாகேந்திரன்

படங்கள்: விவேக்

nkn130121
இதையும் படியுங்கள்
Subscribe