சிவகங்கை மாவட்டத்தி லுள்ள அழகிய கிராமம் சாமியார்பட்டி. இந்த கிராமத்தில் கஞ்சா விற்பனை தறிகெட்டு நடக்க, அதைத் தட்டிக்கேட்ட தி.மு.க. பிரமுகர் பிரவீன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது அக்கிராமத்தினர் மத்தியில் பெரும் சோகத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த கிராமத்திற்குச் சென்றோம். “"மதுரை, தேனி, உசிலம்பட்டியை அடுத்து எங்க சிவகங்கை சிட்டிக்குள் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்தது. அது ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் வரத்தொடங்கியது. எங்கள் சாமியார்பட்டி கிராமத்தில் இந்த கஞ்சா விற்பனை ஆட்கள் போலீஸில் மாட்டாமல் தப்பிக்க விக்கி மற்றும் சில இளவட்டப் பயல்களோடு சகவாசம் வைத்து வெளியூர்ப் பையன்களை கூட்டிவந்து கும்மாளம் போட்டிருக்கின்றனர்.
ஊர் திருவிழாவில் எப்போதுமில்லாமல் சந்தேகத்துக்குரிய நபர்கள் திரிய ஆரம்பித்ததால் தி.மு.க.வைச் சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார், அவர்களை ஒவ்வொரு முறையும் தட்டிக்கேட்டார். அதுதாங்க இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்''’என்றனர்.
“ஒருநாள் பிரவீன், விக

“ஒருநாள் பிரவீன், விக்கியை நேரில் சந்தித்து ‘"ஏம்பா விக்கி நம்ம சமுதாயத்தை சேர்ந்தவனா இருக்கிற. நம்ம கிராமத்தில் இப்பதான் இளைஞர்கள் படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்காங்க. அவங்கள கெடுக்கிற மாதிரி கஞ்சாவ விக்கிறியே? உனக்கே தப்பா படலையா?'’என்று அட்வைஸோடு கொஞ்சம் மிரட்டிவைக்க, பெரிய மாற்றம் இல்லை. அடுத்தடுத்த மாதங்களில் ஊர்த் திருவிழாவில் விக்கி மற்றும் அவனைச் சேர்ந்தவர்களைத் தேடிவந்த வெளியூர் ஆட்கள் சாமியார்பட்டி கிராமத்தில் கஞ்சா அடித்துவிட்டு ஊர்ப் பெண்களிடம் சில்மிசத்தில் ஈடுபட்டனர்.
கிராமத்தினர் ஒன்றுகூடி அவர்களை அடித்து, பிரவீன் தலைமையில் போலிஸில் புகார் கொடுத்து ஒப்படைத்தோம். அவர்களோ காவல்துறையை சரிக்கட்டி தங்கள் பக்கம் ஆட்களைச் சேர்த்துகொண்டு கஞ்சா விற்பனையை படுஜோராக நடத்தினர். பிரவீன்குமார், ஊர்ப் பெருசுகளை திரட்டி இதற்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று போதை விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். ஊரிலுள்ள அனைவரிடமும் கையெழுத்து வாங்கி போலீஸில் 15 முறைகளுக்கு மேல் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்துமளவுக்கு ஊர் மக்கள் செல்ல இருந்தனர்.
விக்கியின் தம்பி, தனுஸ் ராஜாவிடம் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, அதே கிராமத் தைச் சேர்ந்த ஒரு பெண் ‘"ஏண்டா நீங்கதான் கஞ்சா அடிக்கிறதோட, கிராமத்தில் நல்லா படிக்கிற பசங்களையும் கஞ்சா கொடுத்து கெடுக்கி றீங்க'’என்று சொன்னதால் அந்தப் பெண்ணை தாக்கிய தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரவீன் தூண்டுதலில்தான் அப்பெண் வழக்குப் பதிவு செய்துள்ளார் என எண்ணிய தனுஷ்ராஜா வின் சகோதரர் விக்கி கோபத் தில் பிரவீனைத் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். உடனே பிரவீனும் அந்த மிரட்டல் ஆடியோவை போலீஸில் கொடுத்து அவனது ஆட்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று புகார் கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 27-ஆம் தேதி கிராமத்திலிருக்கிற அவரது விவசாய நிலத்தில் தனது நண்பர்களுடன் இருந்தபோது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பிரவீன்குமாரை விரட்டி கொடூர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.
பிரவீன்குமாருடன் இருந்த நண்பர்கள், உறவினர்களுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்த நிலையில், பிரவீன் குமாரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டுவந்தனர். வரும் வழியிலேயே பிரவீன்குமார் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பிரவீன்குமார் உடல் பிரேத பரிசோதனைக் காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.
அங்கு குவிந்த உறவினர்கள், பிரவீன் குமார் இறப்பிற்கு மெத்தனமாகச் செயல்பட்ட காவல்துறையினரே காரணம் எனவும், பிரவீன்குமாரோடு கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தச் சொல்லி பலமுறை புகார் கொடுத்தோம். கொலை மிரட்டல் வருகிறது என்றும் புகார் கொடுதோம். போலீஸார் மெத்தனமாக இருந்ததால்தான் தற்போது ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை மூன்று தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையிலிறங்கி பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில், சாமியார்பட்டியைச் சேர்ந்த விக்கி, சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், திருப்பத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த குரு ஆகிய மூவரையும் கைது செய்தனர்
படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் தாய்மாமன் இளையராஜா நம்மிடம், “"தங்க மான பையனப்பா பிரவீன். சிவகங்கை சிட்டிக் குள்ள கஞ்சா சரளமா விக்கிறாய்ங்களே.. நம்ம பிள்ளைகள் கெட்டுப்போயிருவாங்க மாமா. கஞ்சா எங்க கிராமத்திற்குள்ளும் வந்ததுகண்டு மிகுந்த வேதனையடைந்தான். இதுவரை போலீஸில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுத்துள்ளோம். எல்லோரும் காவாலிப் பசங்களா இருக்காங்கடா. கவனமா இருடான்னு சொன்னேன். சொல்லி ஒரு வாரத்துக்குள்ள கொன்னுட்டாங்க''’என்று கலங்கியபடி சொன்னார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டரிடம் பேசிய போது, "சம்பந்தபட்ட மூன்று பேரை பிடித்துள்ளோம். மேலும் இதில் வேறு யாரும் ஈடுபட்டார்களா என்று விசாரணை நடந்துவருகிறது''’என்று முடித்துக்கொண்டார்.
காவல்துறையின் மெத்தனத்தால் ஒரு சமூக ஆர்வலர் கொலைசெய்யப்பட்டிருப்பது துயரம்!