"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் நேரத்தில் டெல்லியில் ஏதேதோ உருட்டிக்கொண்டிருக்கிறாங்களே.''”
"ஆமாம்பா, தமிழக கவர்னர் டெல்லிக்கு அவசர கதியில் அழைக்கப்பட்டிருந்தாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிட கடந்த 18ஆம் தேதி சென்னை வந்த ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச் சர் ராஜ்நாத்சிங், கலைஞரை மனம் திறந்து பாராட்டினார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்துவிட்டு மறுநாள் டெல்லி செல்ல அவர் திட்டமிட்டிருந்தாராம். ஆனால், கடைசி நேரத்தில் டெல்லியில் இருந்து வந்த அழைப்பால், அன்று இரவே அவர் அரக்கப் பரக்க டெல்லிக்குப் புறப்பட்டுவிட்டார். அதேபோல் கவர்னர் ரவியும் டெல்லியின் திடீர் அழைப்பின் பேரில் மறுநாள் பிளைட்டில் பறந்தார். இரண்டு நாள் அங்கிருந்த அவர், 19 ஆம் தேதிதான் மீண்டும் சென்னைக்குத் திரும்பி யிருக்கிறார். இந்த 2 நாள் பயணத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள், உள்துறை அதிகாரிகள் ஆகியோருடன் கவர்ன ருக்கு சந்திப்பு நிகழ்ந்துள் ளது. அந்த சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் தங்கும் நாட்களில் தமிழக அரசின் நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை முழுமையாக கண்காணிக்கும் படி, சில டாகுமெண்ட்டுகளையும் கொடுத்து அது குறித்து முழுமையாக ரிப்போர்ட் தரும்படி, அவர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறாராம்.''”
"அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கலாம் என்கிற பேச்சு மீண்டும் விறுவிறுப்பு அடைந்திருக்கிறதே?''”
"விரைவில் செந்தில் பாலாஜிக்கான தீர்ப்பு நல்லபடியாக வரலாம் என்று தி.மு.க. தலைமை நம்புகிறதாம். அது வந்தவுடனோ அல்லது முதல் வர் அமெரிக்கா சென்று வந்த பிறகோ, அமைச்ச ரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள் அறிவா லயத் தரப்பில். இந்த மாற்றத்தின் போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட லாம் என்றும் அவரை அச்சு வாரியத் தலைவராக அமர்த்த ஒரு திட்டம் இருக்கிறது என்றும் அறிவா லயத் தரப்பில் பேச்சு இருக்கிறது. அவருக்கு பதில் இஸ்லாமிய பிரதிநிதித்துவத் துக்காக அப்துல் வகாப்பா? ஆவடி நாசரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறதாம். இதில் ஆவடி நாசருக்கே பெரும் பாலும் நிலைமை சாதகமாக இருக்கிறதாம். மேலும் நீக்கப் பட்டிய லில் மூன்று அமைச்சர்கள் இடம் பெறலாம் என்கிறார்கள். அதேபோல் அமைச்சரவையில் தலைமைக்கழகப் பேச்சாளரான கோவி.செழியன் இடம்பெறலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. அதேபோல் பனைமரத்துப்பட்டி ராஜேந்திர னுக்கும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். இ
"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் நேரத்தில் டெல்லியில் ஏதேதோ உருட்டிக்கொண்டிருக்கிறாங்களே.''”
"ஆமாம்பா, தமிழக கவர்னர் டெல்லிக்கு அவசர கதியில் அழைக்கப்பட்டிருந்தாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிட கடந்த 18ஆம் தேதி சென்னை வந்த ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச் சர் ராஜ்நாத்சிங், கலைஞரை மனம் திறந்து பாராட்டினார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்துவிட்டு மறுநாள் டெல்லி செல்ல அவர் திட்டமிட்டிருந்தாராம். ஆனால், கடைசி நேரத்தில் டெல்லியில் இருந்து வந்த அழைப்பால், அன்று இரவே அவர் அரக்கப் பரக்க டெல்லிக்குப் புறப்பட்டுவிட்டார். அதேபோல் கவர்னர் ரவியும் டெல்லியின் திடீர் அழைப்பின் பேரில் மறுநாள் பிளைட்டில் பறந்தார். இரண்டு நாள் அங்கிருந்த அவர், 19 ஆம் தேதிதான் மீண்டும் சென்னைக்குத் திரும்பி யிருக்கிறார். இந்த 2 நாள் பயணத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள், உள்துறை அதிகாரிகள் ஆகியோருடன் கவர்ன ருக்கு சந்திப்பு நிகழ்ந்துள் ளது. அந்த சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் தங்கும் நாட்களில் தமிழக அரசின் நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை முழுமையாக கண்காணிக்கும் படி, சில டாகுமெண்ட்டுகளையும் கொடுத்து அது குறித்து முழுமையாக ரிப்போர்ட் தரும்படி, அவர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறாராம்.''”
"அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கலாம் என்கிற பேச்சு மீண்டும் விறுவிறுப்பு அடைந்திருக்கிறதே?''”
"விரைவில் செந்தில் பாலாஜிக்கான தீர்ப்பு நல்லபடியாக வரலாம் என்று தி.மு.க. தலைமை நம்புகிறதாம். அது வந்தவுடனோ அல்லது முதல் வர் அமெரிக்கா சென்று வந்த பிறகோ, அமைச்ச ரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள் அறிவா லயத் தரப்பில். இந்த மாற்றத்தின் போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட லாம் என்றும் அவரை அச்சு வாரியத் தலைவராக அமர்த்த ஒரு திட்டம் இருக்கிறது என்றும் அறிவா லயத் தரப்பில் பேச்சு இருக்கிறது. அவருக்கு பதில் இஸ்லாமிய பிரதிநிதித்துவத் துக்காக அப்துல் வகாப்பா? ஆவடி நாசரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறதாம். இதில் ஆவடி நாசருக்கே பெரும் பாலும் நிலைமை சாதகமாக இருக்கிறதாம். மேலும் நீக்கப் பட்டிய லில் மூன்று அமைச்சர்கள் இடம் பெறலாம் என்கிறார்கள். அதேபோல் அமைச்சரவையில் தலைமைக்கழகப் பேச்சாளரான கோவி.செழியன் இடம்பெறலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. அதேபோல் பனைமரத்துப்பட்டி ராஜேந்திர னுக்கும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். இதுதவிர சில சீனியர் அமைச்சர் களின் இலாகாக்கள் மாறலாமாம். குறிப்பாக பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், சாமிநாதன் ஆகியோ ருக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறதாம். இதற்கிடையே திங்களன்று செய்தியாளர் சந்திப்பில், அமைச்ச ரவை மாற்றம்பற்றி செய்திகள் வருதே எனக்கேட்க, "எனக்கு வரலை' என்று ஒரே போடாகப் போட்டார் ஸ்டாலின் .''”
"கலைஞர் நினைவு நாணயங்களை அறிவாலயத்தில் விற்பனை செய்தார்களே?''”
"கலைஞர் நினைவு 100 ரூபாய் நாணயங்கள் இரண்டாயிரம் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கியிட மிருந்து முதல்கட்டமாக வாங்கிய அறிவாலயம், அதனை தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்கிறது. இதனை. அமைச்சர்கள் தொடங்கி, மா.செ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாங்கிவருகின்றனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இலவசமாக இந்த நாணயத்தை தி.மு.க. தலைமை வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், சாதாரண உடன்பிறப்புகள் அதனை 10 ஆயிரம் ரூபாய் கட்டி வாங்க முடியா மல் தவிக் கின்றனர். அவர்களும் நாணயங்களை வாங்கும் வகையில், அதன் விலையைக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்குரல் உடன்பிறப்பு கள் மத்தியில் இருந்து எழுந்துவருகிறது. குறைந்த பட்சம் அந்த நாணயத்தில் கலந்துள்ள வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட உலோகங்களின் அளவுக் கேற்ப விலையை நிர்ணயித்து வழங்கலாம் என்கிற யோசனையும் அவர்களே தெரிவிக்கிறார்கள். இதனை அறிவாலயம் ஆலோசிக்குமா?''”
"பா.ஜ.க. மாநில நிர்வாகி விடைபெறும் மூடில் இருக்கிறாரே?''”
"பா.ஜ.க. மாநில நிர்வாகி வரும் 28 ஆம் தேதி வெளிநாடு செல்கிறார். எனக்கு ஒத்துழைப்பு தந்ததற்கு எல்லோருக்கும் நன்றி என்று அவர் விடைபெற்று வருகிறார். அவர் இல்லாத காலங் களில் அவர் பொறுப்பை, கட்சியின் சீனியர்களில் ஒருவரான கேசவ விநாயகம் பார்த்துக்கொள்வார் என்று ஒரு தரப்பு சொல்கிறது. தொடங்கப்பட்ட கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்தோ, வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தோ அவர் எதையும் எவருக்கும் தெரிவிக்கவில்லை என்கிறார் கள். அதே நேரம் அவர் கலைஞர் நாணய வெளி யீட்டுக்கு வந்த ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் தோடு கலைஞர் நினைவிடம் சென்றதை, பா.ஜ.க.விலே ஒரு தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் அந்த மாநில நிர்வாகி இங்கே இல்லாத அடுத்த 6 மாதங்களில் தமிழகத்திற்கு ஒரு நிர்வாகியை நியமிக்கலாமா? என்பது குறித்து பா.ஜ.க.வின் தேசியத் தலைமை யோசித்துக்கொண்டிருக்கிறதாம்.''”
"ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் தொடர்பான விசாரணைக்குழு திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவியிடமும் விசாரணை நடத்தியிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, ஆம்ஸ்ட்ராங் படு கொலை விவகாரத்தில் முக்கிய பங்காற்றியவராகக் கருதப்படும் சம்பவம் செந்திலுடன், அதில் தோளோடு தோள் நின்றவர், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனாம். அவர் தலைமறைவாக இருந்துவந்த நிலையில் அவரிடம் தொலைபேசித் தொடர்பில் இருந்தார் என்ற காரணத்திற்காகவே இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவையும் கடந்த 7 ஆம் தேதி அழைத்து விசாரித்துவிட்டு அனுப்பியிருக்கிறார்கள். இந்த மர்டர் விவகாரத்தில் கைதான மற்றொரு வழக்கறிஞரை காரில் ஏற்றி அனுப்பிவிட்டு, மொட்டை கிருஷ்ணன், மதுரையில் இருந்து டெல்லி போய், அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக துபாய் சென்று தலைமறைவாய் ஆகி விட்டாராம். அவர் இப்படி தப்பித்து ஓடிக் கொண்டு இருந்தபோது, அவருடன் மோனிஷா தொலைபேசித் தொடர்பில் இருந்ததாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்ததாம். இது குறித்து நெல்சன் வட்டாரமோ, மோனிஷாவின் தம்பியும் ஒரு வழக்கறிஞர். அவர் இந்த மொட்டை கிருஷ்ணனின் நண்பர். அந்த வகையில் குடும்ப நட்பாகப் பழகி வந்திருக்கிறார்கள். ஆனால் சிலரோ, இந்த விவகாரத்தில் ஒரு பிரபல வழக்கறிஞரின் மனைவிதான் மொட்டை கிருஷ்ணனுக்கு அதிக நெருக்கமானவர் என்றபடி, அவர்கள் இருக்கும் புகைப்படத்தைக் காட்டுகிறார்களாம். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலை வர் ஒரு மாதமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். இவர்மீதும் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளதாம்.''”
"முதல்வர் தொகுதியில் இருந்தே காவல் துறைக்குக் கண்டனங்கள் கிளம்புதே?''”
"ஆமாங்க தலைவரே, கொஞ்சம் விபரமாவே சொல்றேன். இந்து முன் னணி நிறுவன ரான இராம. கோபாலனின் செல்லப்பிள் ளையாக இருந்தவர் ஆர்.எஸ்.எஸ். இயக்க செயற்பாட்டாளர் ரவி. இவரை அறியாத, தெரியாத ஆர்.எஸ். எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் யாரும் இருக்க முடி யாது. இந்த ரவி, முதல் வரின் தொகுதியான கொளத்தூரில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் நிலத்தின் அளவு 2,400 சதுர அடி. இதில் ஆஸ்பெட்டாஸ் தகர சீட், குடிசைகள் உட்பட இவர் வீட்டின் பகுதிகள் இருக்கிறது. இந்த நிலம் தொடர்பாக பிரச்சினை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்தது. அந்த வழக்கில் ரவியின் வழக்கறிஞராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன் ஆஜராகி வந்தார். கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அந்த 2,400 சதுர அடியில் 400 சதுர அடிமட்டும் வேறொருவருக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்தது. மிச்சம் 2000 சதுர அடி நிலமும் ரவிக்கு சொந்தமானது என்று இதன் மூலம் அழுத்தம் திருத்தமாக தனது தீர்ப்பில் கூறியது.''
"அப்புறம் என்னப்பா?''”
"இந்த நிலையில், ரவியின் ஒட்டுமொத்த நிலத்தையும் கைப்பற்ற நினைத்தது ஒரு தரப்பு. அந்தத் தரப்புக்குத் தலைமை தாங்கியவர் கே-9 காவல்துறை இன்ஸ்பெக்டர் கிருபாநிதி. அவர், செம்பியம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் பலரையும் அழைத்துக்கொண்டு ரவி வசிக்கும் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்தார், ரவியின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை தலைமுடியைப் பிடித்து வெளியே இழுத்து வந்து தள்ளியிருக்கிறது போலீஸ் டீம். கடுமையாக தாக்குதலையும் நடத்தியிருக் கிறார்கள். அதோடு விடாமல், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சூறையாடியிருக்கிறார்கள். காவல்துறை நடத்திய இந்த அதிரடித் தாக்குத லால் ஒட்டுமொத்த சென்னையும் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வருவாய்த் துறை அதிகாரிகளுடன் வந்து சம்பந்தப்பட்ட 400 சதுரஅடி மனையை மட்டும் எடுத்துக்கொள்ள உதவியிருக்க வேண்டிய காவல்துறை, அதை விட்டுவிட்டு, 2,400 சதுர அடி மனையையும் அபகரிக்கும் நோக்கத்தில் வெறித் தாண்டவம் ஆடியிருக்கிறது. அதிலும் முதல்வரின் தொகுதியிலேயே இப்படி. இந்த விவகாரம் பூதாகரமாகி வர... கண்டனங்களும் கிளம்புகின்றன.''”
’"ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் சலசலப்பு கேட்குதே?''”
“"உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட் டில் இருக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம். தனியார் கல்லூரிகளுக்கென இருக்கும் அங்கீகரிக்கப்படாத சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் இந்த பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்களாக இருந்து வருகிறார் கள். அவர்களில் ஒருவர் கடலூர் நாராயணன். இவர், இந்த சிண்டிகேட் உறுப்பினர் பதவியை வைத் துக்கொண்டு பல்கலைக்கழகத்தில் ஏகத்துக்கும் அதிகாரம் செலுத்தி வருகிறாராம். சிண்டிகேட் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போதுதான் உறுப்பினர்களுக்கு வேலை. ஆனால், நாராயணன் போன்றவர்கள் பல்கலைக்கழக ஊழியர்கள் போல தினமும் பல்கலைக்கழகத்துக்கு வருவதன் நோக்கம் என்ன? என்கிறார்கள் பலரும். இதனால் பல்கலைக் கழகத்தில் ஊழல்கள் பெருகி நிற்கிறது. இதனை உயர்கல்வித் துறையின் செயலாளர் பிரதீப்யாதவ் ஐ.ஏ.எஸ்.சின் கவனத்துக்கு பல்கலைக்கழக பணியாளர்கள் கொண்டு சென்றுள்ளனர். இந்தப் புகார்களை விசாரித்த பிரதீப் யாதவ், பல்கலைக் கழகத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் ஆத்திர மடைந்த நாராயணன், என்னை எதிர்க்கும் பிரதீப் யாதவை நான் மாற்றிக்காட்டுகிறேன் என்று சூளுரைத்து வருகிறாராம்.''”
"கேரள மறுமலர்ச்சி இயக்கத்தின் முக்கிய ஆளுமையா பார்க்கப்படுகிற நாராயண குருவின் 170-வது பிறந்தநாள் விழா கேரளத்துல சீரும் சிறப்புமா கொண்டாடப்பட்டிருக்கே..''”
"ஆமாங்க தலைவரே.. தமிழகத்துக்கு எப்படி பெரியாரோ, அதுபோல கேரளத்துல சாதிய வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயம் அமையப் பாடுபட்ட தலைவர் ஸ்ரீநாராயண குரு. பிற்பட்ட சமுதாயமான ஈழவ சமுதாயத்தில் தோன் றிய நாராயண குரு, சுதந்திரத்துக்கு முந்தைய கேரளத்துல நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடினார். அதேசமயம், பெரியாருக்கு மாறாக ஆன்மிகப் பாதையில் இருந்துகொண்டே தீண்டாமை உள்ளிட்ட சமத்துவக் கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட்டார். அவரது அருவிப்புரம் சிவன் கோவிலில், அனைத்து சமூகத்தினரும் வணங்கும் இடம் என அறிவிப்பு செய்ததை உயர்சாதியினர் எதிர்த்தனர். அது நம்பூதிரி களுக்கு அடுத்த கட்டத்திலிருந்த நாயர்கள்கூட கோவில் கட்டத் தயங்கிய காலகட்டம். ஆன்மிக குருவாக வும், இலக்கிய வாதியாகவும், சமூக சீர்திருத்த செயல்பாட்டாள ராகவும் புகழ்பெற்ற நாராயண குருவின் 170-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்குபெற்ற முதல்வர் பினராயி விஜயன், "கேரள சமுதா யத்தில், மறுமலர்ச்சி ஒளி வீசிய நாராயண குருவின் போராட்ட வரலாறு என்றென்றும் வழிகாட்டியாகச் செயல்படும்'’என்று நம்பிக்கை தெரிவித்தார்.''’
"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன். முக்குலத்தோர் வாக்குகளைக் கவர ஓ.பி.எஸ்., சசிகலா போன்றோரை அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அக்கட்சியின் சீனியர்களில் சிலர் எடப்பாடியை வலியுறுத்திவரும் நிலையில், அதைத் தொடர்ந்து மறுதலித்து வரும் அவர், "மற்ற சமூகத்தினரின் ஆதரவையும் பெற நாம் முயலவேண்டும். குறிப்பாக, பிள்ளைமார், முத்தரையர், யாதவர் போன்றவர்களின் வாக்கு களை நம் பக்கம் திரட்டும் வகையில், அவர்களின் பிரதிநிதிகளை நம் பக்கம் கொண்டுவாருங்கள். அவர்களுக்கு முக்கிய பதவிகளைக் கொடுப் போம். அதேபோல் வ.உ.சி. பிறந்தநாள் வரப் போகிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிய அளவில் கொண்டாடுங்கள். இதையெல் லாம் விட்டுவிட்டு ஒன்றையே பிடித்துக்கொண்டு நிற்காதீர்கள் என்று அவர்களிடம் மாற்றுத் திட்டத்தை வலியுறுத்துகிறாராம் எடப்பாடி.''”