நீதிமன்றங்கள் அடிமேல் அடி வைத்துதான் உள்ளாட்சித் தேர்தல் என்கிற அம்மி ஓரளவுக்கு நகர்ந் திருக்கிறது. இருந் தாலும், ஆதாயம் கண்ட அதிகாரிகள் சிலர் உள்ளூராட் சித் தேர்தல்களுக்கு அரசியல்வாதிகளுடன் சேர்ந்து முட்டுக் கட்டை போட அலைகிறார்கள்.

தமிழ்நாட்டில் 12,524 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. தேர்தல் நடக்காததால் பஞ்சாயத்து தலைவர்களுக்குப் பதில், அரசுத் aaaதிட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் அதிகாரி கள் புகுந்துவிளையாடுகிறார்கள். இதற்கு ஒரு உதாரணம் திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்திலுள்ள மல்லியம்பத்து ஊராட்சி.

""எங்க ஊராட்சியில் குமார் என்பவர் தொடர்ந்து 20 வருடமா கிளார்க்கா இருப்பதால் குறுநிலமன்னர் போன்று செயல்படுகிறார். இவர் வீடுகளுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி, இது எதுக்குமே பி.டி.ஓ. கையெழுத்து இல்லாமல் போலியாக பில் கொடுக்கிறார். மக்களிடம் வசூல் செய்யும் பணத்தை ஊராட்சி வங்கியில் செலுத்துவ தில்லை. இந்த ஊராட்சியிலுள்ள வீடுகளுக்கு எங்கள் ஏரியா பி.டி.ஓ. மோகன் போன்றே குமாரும் கையெழுத்து போட்டு வரைபட அனுமதி கொடுக்கிறார். பலருக்கு போலி ரசீது கொடுக் கிறார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும்.இல்லை.

இந்த மூன்று வருடத்தில் இவர் பண்ணிய ஊழலுக்கு அளவே இல்லை. நூறுநாள் வேலை திட்டத்தில் 50 பயனாளிகள் பெயரில் போலி அட்டை வைத்துக் கொண்டு இவரே அவர்களுக்கு வருகை பதிவு செய்து கொண்டு பணத் தைக் கையாடல் செய்கிறார். ஊருக்குத் தொகுப்பு வீடு, பசுமை வீடு ஒதுக்க 10,000 வாங்கிக்கொண்டு, பிறகு வங்கிக் கணக்கில் வரும் பணத்தையும் இவரே கையெழுத்து போட்டு எடுத்துக்கொள் கிறார். யார் கேட்டாலும் "அமைச்சர் வளர்மதியும், கலெக்டரும் என் பாக்கெட்டில்.…யாரும் என்னை எதுவும் செய்துட முடியாதுங்கிறார்'’என குமுறினார் கலெக்டர் வரை புகார் கொடுத்த வீரமணி.

Advertisment

நாம் கிளார்க் குமார் குறித்த புகார்மீது நட வடிக்கை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள பி.டி.ஓ. சீனிவாசனிடம் பேசினோம். ""கிளார்க் குமார் மீது தொடர்ச்சியாகப் புகார் வந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க அதி காரிகளை நியமித்திருக் கிறோம். சில நாட்களுக்கு முன் வேறு ஒரு காரணத்திற் காக குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்''’ என்றார்.

குமாரின் சஸ்பெண்டு குறித்து நாம் கலெக்டர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது.. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் டாய் லெட் கட்டாமலே பணத்தை எடுத்துவிட்டதற்காக சஸ் பெண்ட் என தெரியவந்தது. ஆனால் அமைச்சரின் தயவால் சஸ்பெண்டை ரத்து செய்து விடலாமென்னும் தைரியத் தில், ஊருக்குள் கிளார்க் என்று இப்போதும் சொல்லிக் கொண்டு வசூல் வேட்டை செய்துகொண்டிருக்கிறார்.

ஊராட்சி ஊராட்சியாக குமார்களைத் தேடி சஸ் பெண்ட் செய்வதைவிட, உள்ளூராட்சித் தேர்தலை முடிந்தவரை சீக்கிரமாக நடத்திவிட்டால் நல்லது.

Advertisment

-ஜெ.டி.ஆர்.