Advertisment

சர்ச்சையில்  அமைச்சரின் பி.ஏ.!

ministerpa

மிழகத்தில் ஒவ்வொரு துறை   யும் சிறப்பாகச் செயல்பட்டு மக்க ளுக்கான திட்டங் களை சரிவர கொண்டுசேர்க்க அத்துறையின் அமைச்சர்கள் அவர் களுக்கான உதவியாளர்களை அவர்களே தேர்வுசெய்துகொள்ளலாம் என அரசு பரிந்துரைக்கிறது. அந்தவகையில் அமைச்சர்கள் பொதுத்துறைக்கு ஒரு குறிப்பிட்ட அரசு அதிகாரிகளே வேண்டும் என விண்ணப்பித்து, அந்த விண்ணப்பத்தை உளவுத்துறை விசாரித்து, அவர்களை நியமிக்க தடையில்லை என அரசு தலைமைச் செயலாளர் பரிந்துரை செய்தபிறகே அவர்களை நியமிக்கமுடியும். 

Advertisment

அப்படி பால்வளத்துறை அமைச்சர் நாசருக்குப் பிறகு அமைச்சராக நியமித்த மனோ தங்கராஜிடம், தி.மு.க. மா.செ. வான சிற்றரசு, செந்தில் வேலை உதவியாள ராக வைத் துக்கொள் ளுங்கள் என சிபாரிசு செய்யவே, அதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி தனக்கு உதவியாளராக செந்தில்வேல் வேண்டும் என விண்ணப்பித்தார். அடுத்த சில நாட்களில் உளவுத்துறை விசாரித்து, அவர்மீது புகார்களும் குற்றச்சாட்டுகள

மிழகத்தில் ஒவ்வொரு துறை   யும் சிறப்பாகச் செயல்பட்டு மக்க ளுக்கான திட்டங் களை சரிவர கொண்டுசேர்க்க அத்துறையின் அமைச்சர்கள் அவர் களுக்கான உதவியாளர்களை அவர்களே தேர்வுசெய்துகொள்ளலாம் என அரசு பரிந்துரைக்கிறது. அந்தவகையில் அமைச்சர்கள் பொதுத்துறைக்கு ஒரு குறிப்பிட்ட அரசு அதிகாரிகளே வேண்டும் என விண்ணப்பித்து, அந்த விண்ணப்பத்தை உளவுத்துறை விசாரித்து, அவர்களை நியமிக்க தடையில்லை என அரசு தலைமைச் செயலாளர் பரிந்துரை செய்தபிறகே அவர்களை நியமிக்கமுடியும். 

Advertisment

அப்படி பால்வளத்துறை அமைச்சர் நாசருக்குப் பிறகு அமைச்சராக நியமித்த மனோ தங்கராஜிடம், தி.மு.க. மா.செ. வான சிற்றரசு, செந்தில் வேலை உதவியாள ராக வைத் துக்கொள் ளுங்கள் என சிபாரிசு செய்யவே, அதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி தனக்கு உதவியாளராக செந்தில்வேல் வேண்டும் என விண்ணப்பித்தார். அடுத்த சில நாட்களில் உளவுத்துறை விசாரித்து, அவர்மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் உள்ளதாக தெரிவிக்கவே, அவரது நியமனம் கிடப்பிலுள்ளது. 

Advertisment

அதற்குப் பதிலாக அரசே அமைச்சரின் உதவியாளராக விமலா, அசோக் ஆகியோரை நியமித்துள்ளது. அதன்படி செயல்பட்டுவந்த அவர்களை பணியே செய்யவிடாமல் முட்டுக்கட்டை போட்டு, அவர்களின்மீது அமைச்சர்களிடம் இல்லாததையும் பொல்லா ததையும் சொல்லி அவர்களை டம்மியாக வைத்துவிட்டு, அந்த இடத்தில் தானே பணிபுரியத் திட்டமிட்டு செந்தில்வேல் காரியத்தை சாதித்துக்கொண்டார். அமைச்சரும் செந்தில்வேலை முழுமனதாக நம்புவதால், அனைத்துப் பணிகளையும் அவரிடமே ஒப்படைத்துவருகிறாராம். 

அமைச்சர் பால்வளத்துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்து மக்களுக்கும், இத்துறையைச் சார்ந்துள்ள அதிகாரி களுக்கும் நன்மைபயக்கும் வகையில் டெண்டர், பணியிடமாற்றம், பணி உயர்வு என அனைத்தையும் எதையும் எதிர்பாராமல் நேர்மையான முறையில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார். மாறாக செந்தில்வேலோ, அமைச்சர் பெயரைச் சொல்லி தனக்கு நன்மைபயக்கும்படி காரியங்களை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறார். 

 பால்வளத்துறையில் நடைபெறுகின்ற அனைத்து டெண்டர்களிலும் அதற்கான கமிஷனை ஒட்டுமொத்தமாக வசூல்செய்து அபேஸ் செய்துள்ளார். இது போக பணி உயர்வு, பணியிடமாற்றம், ஈரோட்டில் வைத்து அரசு செயல்படுத்தி வரும் ஆவின் மாட்டுத்தீவன கொள்முதலில் யூனிட்டுக்கு இவ்வளவு கமிஷன் என வளம்கொழிக்க வலம்வருகிறார். 

மேலும் தற்போது தீபாவளிக்கு வழங்கப்படும் இனிப்பு டெண்டர் அனைத்தையும் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் யார் டெண்டர் எடுத்தார்களோ அவர்களுக்கே கொடுத்துள்ளார். செந்தில்வேல் அமைச்சரிடம் ஒட்டிக்கொண்ட நாள்முதல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியின் உதவியாளராக இருந்த வைத்தியநாதனுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டு காரியம் சாதித்துவருகிறார். இந்த வைத்திய நாதன் கடந்த ஆட்சியில் பாலில் தண்ணீர் கலந்த மோசடி விவகாரத்தில் சிக்கிய நபர். இருவரும் அமைச்சருக்கே தெரியாமல் பல கோடிகளில் புரண்டுவருகிறார்களாம். 

அரசுதான் அமைச்சருக்கு உதவியாளராக நியமிக்கவில்லையே, அப்புறம் எப்படி இந்த செந்தில்வேல் இங்கே பணிபுரிகிறார்  என்ற கேள்வி எழலாம். அவர் மயிலாப் பூரிலுள்ள மின்சாரத்துறையில் ஏ.டி.யாக பணிபுரிந்துவருகிறார். ஆனால் அங்கு பணிபுரிவதேயில்லை. அமைச்சருடன் இருக்   கும் இவர் எப்படி அங்கு பணிபுரிய                  முடியும்? ஈ.பி.யிலும் முக்கியமாக பணம் வரும் பணியாக இருந்தால் மட்டுமே முடித்துக் கொடுப்பாராம். சென்னை முழுவதும் கட்டப்படும் கட்டடங்களுக்கு ஹெவி மின்னிணைப்பு பெற்றுத் தருவாராம். முக்கிய மாக காசா கிராண்ட் நிறுவனத்திலுள்ள அருண் என்பவரும் இவரும் நண்பர்கள். இதனால் இந்நிறுவனம் கட்டுமானம் செய்யும் கட்டடங்களுக்கான ஹெவி மின்னிணைப்பு களை அருணுக்காக சகாயமாக செய்து கொடுப்பாராம் செந்தில். அதேபோல ராயப்பேட்டையில் எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் உரிமையாளரின் மருமகளின் வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு ஹெவி மின்னிணைப்புக்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், இணைப்பு காலதாமதமாகிக்கொண்டே வந்தது. வைட்டமின் ப கிடைத்தபிறகே அனுமதி கொடுத்துள்ளாராம். இந்த விவகாரம் அத்துறை அமைச்சர் வரை சென்றுள்ளதாம். 

மேலும், மின்சாரத்துறையிலும் தினமும் கையொப்பம் போடாமல், அமைச்சரிடம் உதவியாளராக பணிபுரிய அனுமதியில்லாமல் பணிபுரிந்துவரும் செந்தில்வேலுக்கு தற்போது ஆட்சி முடியும் சூழ்நிலையில் ஒரு புதிய சிக்கல் உண்டாகியுள்ளது. ஆட்சி முடிந்துவிட்டால் இவர் ஈ.பி.யில் பணிபுரி    யாமல் இருந்துவருவதால் அவருக்கு நிச்சயம் மெமோ கொடுத்துவிடுவார்கள். ஆகையால் எப்படியாவது அமைச்சர் பி.ஏ. என்பதை உறுதிசெய்திட முனைப்புக் காட்டிவருகிறார். இந்தச் சூழ்நிலையில் ஈ.பி. அலுவல கத்திற்கு இவரின் செயல்பாடுகள் பற்றிய முழுத் தகவலும் சென்றுள்ளதாம். இதை அமைச்சரை வைத்து காய்நகர்த்திக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளாராம் செந்தில். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள் அத்துறையைச் சேர்ந்தவர்கள். 

-சே

nkn221025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe