ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் பிரமாண்ட வெற்றியைப் பெற் றுள்ளார். இத்தேர்தலில், தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பொறுப்பாளரான, மண்ணின் மைந்தரும் வீட்டு வசதித்துறை அமைச்சரு மான சு.முத்துசாமி, தனது அரசியல் அனுபவத்தின்மூலம், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினரை சிறப்பாக ஒருங் கிணைத்து களப்பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார். அமைச்சர்கள் குழு ஒவ்வொன்றுக்கும் வாக் குச்சாவடிகள் பிரித்துக்கொடுக் கப்பட்டு பணிகள் ஒப்படைக்கப் பட்டன.
இடைத்தேர்தல் முடி வடைந்துள்ள நிலையில், அமைச்சர்கள் குழுவினர் பெற்ற வாக்குகளின் சதவீத விவரம் தெரியவந்துள்ளது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கர பாணி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் தலைமை யிலான குழுவினர், கருங்கல் பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியைச்சேர்ந்த 23 வாக்குச் சாவடிகளில் வாக்கு சேகரித்தனர். தீவிரப் பிரச்சாரத்தின் காரண மாக, பதிவான 16,143 ஓட்டுக் களில், 11,101 ஓட்டுகள் கை சின்னத்திற்கும், 3,318 ஓட்டுக்கள் இரட்டை இலைக்கும் கிடைத் தது. 68.86 சதவீத வாக்குகளைப் பெற்று, இக்குழு முதலிடம் பிடித்து முதல்வரிடம் பாராட் டைப் பெற்றது.
அடுத்ததாக அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் ஆகியோரின் குழு, சூரியம் பானை, வீரப்பன்சத்திரம் பகுதி யிலுள்ள 33 வாக்குச்சாவடிகளில் 68.65 சதவீதம் வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத் தைப் பிடித்துள்ளனர். அமைச்சர் கள் சாமிநாதன். காந்தி, மனோ தங்கராஜ் ஆகியோர், கருங்கல் பாளையத்திலுள்ள 23 வாக்குச் சாவடிகளில், 66.43 சதவீதம் வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மா.சுப்ரமணியன், சி.வி.கணேசன் ஆகியோரின் குழு, அ.தி.மு.க. வாக்குவங்கி அதிகமுள்ள வீரப்பன்சத்திரம் பகுதியிலுள்ள 35 வாக்குச்சாவடிகளில், 66.21% வாக்குகளுடன் நான் காவது இடத்தையும் பிடித்தனர். அமைச்சர்கள் அன்பரசன், மூர்த்தி, அனிதா ராதாகிருஷ் ணன், ராமச்சந்திரன் ஆகியோ ரின் குழு, கோட்டை பகுதியிலுள்ள 33 வாக்குச்சாவடிகளில் 61.35 சதவீத வாக்குகளுடன் ஐந்தாவது இடத்தைப் பெற்றனர்.
அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான் ஆகியோரின் குழு, சூரம்பட்டி, பெரிய சேமூர் பகுதிகளிலுள்ள 39 வாக்குச் சாவடிகளில் 60.69 சதவீத வாக்குகளுடன் ஆறாவது இடத்தைப் பெற்றனர். அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன் ஆகியோரின் குழு, கருங்கல் பாளையத்திலுள்ள 21 வாக்குச் சாவடிகளில், 58.75 சதவீத வாக்கு களுடன் ஏழாவது இடத்தையும், அமைச்சர்கள் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ஆர்., ரகுபதி, கீதாஜீவன், சிவசங்கர், மெய்யநாதன் ஆகி யோரின் குழு, பெரியார் நகரி லுள்ள 33 வாக்குச்சாவடிகளில், 57.37 சதவீத வாக்குகளைப் பெற்று எட்டாவது இடத்தையும் பிடித்தனர்.