எனக்கு எதிராக செயல்படுகிறார் அமைச்சர்! -தி.மு.க. மேயரின் பகிரங்கப் புகார்

dd

மைச்சருக்கும் மேயருக்கும் இடையி லான உரசலால், நாகர்கோயில் மாநகராட்சி மூச்சுத் திணறுகிறது. அமைச்சருக்கு ஆதரவான கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராகக் கொடி பிடித்து வருகிறார்கள்.

கடந்த 29 ஆம் தேதி மாநகராட்சி கவுன்சில் கூட்டம் தொடங்கியபோது, தி.மு.க.வைச் சேர்ந்த 19 ஆம் வார்டு பெண் கவுன்சிலர் மோனிகா விமல், மேயர் மகேஷ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டு, அவருக்கு எதிரே தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக மேலும் சில தி.மு.க. கவுன்சிலர்கள் களமிறங்கி கோஷங்களை எழுப்பி, நிலைமையை தீவிரமாக்கினர்.

dmk mayor

என்ன பிரச்சினை என்று நாம் தி.மு.க. கவுன்சிலர் மோனிகா விமலிடமே கேட்ட போது...”"எங்கள் வார்டில் உள்ள ஆசாரிப்பள்ளம் அய்யாவழி கோவில் அருகே சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள், குடிநீருக்காக வெகு தூரம் சென்று வருகிறார் கள். நான் ஓட்டு கேட்கச் சென்றபோது, "அங்கு ஆழ்துளைக் கிணறு போட்டு தண்ணீர் தருவேன்' என்று உறுதியளித்தேன்.

அந்த வகையில், கடந்த ஒன்றரை வருடத்தில் அவர்களின் பிரச்சினைக்காக மேயரிடம் 5 முறை மனு கொடுத்தேன். கவுன்சில் கூட்டத்திலும் கேட்ட

மைச்சருக்கும் மேயருக்கும் இடையி லான உரசலால், நாகர்கோயில் மாநகராட்சி மூச்சுத் திணறுகிறது. அமைச்சருக்கு ஆதரவான கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராகக் கொடி பிடித்து வருகிறார்கள்.

கடந்த 29 ஆம் தேதி மாநகராட்சி கவுன்சில் கூட்டம் தொடங்கியபோது, தி.மு.க.வைச் சேர்ந்த 19 ஆம் வார்டு பெண் கவுன்சிலர் மோனிகா விமல், மேயர் மகேஷ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டு, அவருக்கு எதிரே தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக மேலும் சில தி.மு.க. கவுன்சிலர்கள் களமிறங்கி கோஷங்களை எழுப்பி, நிலைமையை தீவிரமாக்கினர்.

dmk mayor

என்ன பிரச்சினை என்று நாம் தி.மு.க. கவுன்சிலர் மோனிகா விமலிடமே கேட்ட போது...”"எங்கள் வார்டில் உள்ள ஆசாரிப்பள்ளம் அய்யாவழி கோவில் அருகே சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள், குடிநீருக்காக வெகு தூரம் சென்று வருகிறார் கள். நான் ஓட்டு கேட்கச் சென்றபோது, "அங்கு ஆழ்துளைக் கிணறு போட்டு தண்ணீர் தருவேன்' என்று உறுதியளித்தேன்.

அந்த வகையில், கடந்த ஒன்றரை வருடத்தில் அவர்களின் பிரச்சினைக்காக மேயரிடம் 5 முறை மனு கொடுத்தேன். கவுன்சில் கூட்டத்திலும் கேட்டுள்ளேன். இதற்கு செவிசாய்க்காமல் இருந்த மேயர், இரண்டு மாதத்துக்கு முன் எனக்கே தெர்யாமல் திடீ ரென்று எனது வார்டுக்குட்பட்ட ஆசாரிப்பள்ளத் தில் ஆழ்துளைக் கிணறு போட்டிருக்கிறார். அதிலிருந்து தண்ணீரை எனது வார்டு மக்களுக்குக் கொடுக்காமல், அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள 1, 2 மற்றும் 3ஆம் வார்டுக்கு தண்ணீர் கொடுக் கப்படுகிறது. இதனால் நான் என் வார்டுக்குள்ளேயே போக முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. மேயர் மகேஷுக்கு மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் மீது கசப்பு. அதனால் அமைச்சரிடம் நான் பேசியதால், என் னைப் பழி வாங்குகிறார்'' என்றார் காட்டமாய்.

மேயருக்கு எதிராக வரிந்துகட்டும் இன்னும் சில தி.மு.க. கவுன்சிலர்களிடம் நாம் விசாரித்த போது...

"தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டு களுக்கு ஒதுக்குகிற நிதியைவிட, அதிக நிதியை பா.ஜ.க. வார்டுக்குதான் மேயர் ஒதுக்குகிறார். இதைப் பயன்படுத்தி அவர்கள் அங்கு தங்கள் கட்சியை வளர்த்து வருகிறார்கள். குறிப்பாக, பா.ஜ.க. கவுன்சிலரின் 20 ஆம் வார்டில் சாலை போடுவதற்கு ஒரே திட்டத்தில் 1 கோடியே 10 லட்சம் ருபாயை மேயர் ஒதுக்கியிருக்கிறார். இப்படி தி.மு.க. கவுன் சிலர்களின் வார்டுகளுக்கு அவர் நிதி ஒதுக்கியது இல்லை'' என்றார்கள் எரிச்சலாக.

dmk mayor

அங்குள்ள தி.மு.க. சீனியர்களோ, “"அமைச்சருக்கும் மேயருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. இரண்டு மாசத்துக்கு முன்பு, கனிமொழி எம்.பி.யே இங்கே வந்து, இரண்டு பேரையும் சமாதானப் படுத்தினார். இருந்தும் பிரச்சினை முழுதாகத் தீரவில்லை. நாகர்கோயில் மேற்கு மா.செ.வாக இருக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ், அரசு நிகழ்ச்சிக்கும் முக்கிய கட்சி நிகழ்ச்சிக்கும் கிழக்கு மாவட்டத்துக்கு வரும் போது, தன் வேலையைப் பார்த்துவிட்டுச் செல்வதை விட்டுவிட்டு, கிழக்கு மாவட்ட உட்கட்சி விவகாரங்களில் தலையிடுகிறார். போதாக் குறைக்கு மாநகராட்சி விசயங் களிலும் மூக்கை நுழைக்கிறார். அதேபோல் அவருடைய மகனான ரிமோனின் தலையீடும் கிழக்கு மாவட்டத்தில் அதிகமாகிவிட்டதால், பிரச்சினை தீவிரமாகிவிட்டது''”என்கிறார்கள்.

இது குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் தரப்பிடம் நாம் கேட்டபோது "மந்திரி கிழக்கு மாவட்டத்துக்குப் போகும்போது கட்சிக்காரர்கள் அவரை சந்தித்து குறைகளைக் கூறுகிறார்கள். அதை நிவர்த்தி செய்வது தவறா? தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஒருவரின் டீக்கடை இருக்கும் இடம், ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி, மேயர் நெருக்கடி கொடுத்துவந்தார். இது குறித்து அந்த முன்னாள் கவுன்சிலர், மந்திரியிடம் புகார் கொடுத்தார். அதற்கு மந்திரி என்ற அடிப்படையில், அவர் நடவடிக்கை எடுத்தார். இது தவறா?''’என்கிறது.

இதுபற்றியெல்லாம் மேயர் மகேஷிடமே நாம் கேட்டபோது...”"மாநகராட்சியின் 52 வார்டு களையும் எனது இரு கண்களைப் போல்தான் எந்த பாரபட்சமும் இல்லாமல் பார்க்கிறேன். எங்க வார்டுக்கு நிதி தரலைன்னு சொல்லுகிற தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகளை ஆய்வு செய்தால், அது பொய் என்பது தெரியவரும். நான் பணிகளுக்காக நிதி ஒதுக்குகிறேன். அந்த பணிகளைச் செய்ய, அதிகாரிகளை பாலே-அப் செய்வதும், வேலையை மும்முரப்படுத்த வேண்டியதும் கவுன் சிலர்களின் கடமை. இதில் என் மீது பொய்க்குற்றம் சாட்டுகிற குறிப் பிட்ட அந்த கவுன்சிலர்கள், மாநகராட்சிப் பக்கம் வருவதே இல்லை. இதை அந்த வார்டு மக்கள் புரிந்துகொள்ள வேண் டும். 19 ஆம் வார்டு தி.மு.க. கவுன்சிலரிடம் சொல்லிவிட்டுத்தான், அங்கு ஆழ்துளைக் கிணறு போடப்பட்டது. அது போடும்போது அந்த வார்டுக்கு தண் ணீர் கொடுத்தது போக, மீதியைத்தான் குறிப் பிட்ட அந்த வார்டுக்கு கொண்டு செல்லப்படும் என்று கவுன்சிலரிடம் கூறியிருந்தேன். ஆனால் அந்த கவுன்சிலர் இதுவரையிலும் எந்தப் பகுதிக்கு தண்ணீர் தேவை என்று சொல்லவும் இல்லை, கேட்கவும் இல்லை''’என்றவர்...

"சமீபகாலமாக அமைச்சர் மனோதங்கராஜ் எனக்கு எதிராகவே செயல்படுகிறார். அவர் மாவட்ட அமைச்சராக இருக்கலாம். ஆனால் நான் பொறுப்பு வகிக்கிற கி. மாவட்ட உட்கட்சி விவகாரத்திற்குள் தலையிட அவசியமில்லை. நான் சென்னைக்கு அமைச்சரிடம் சொல்லிவிட்டுத்தான் போனேன். நான் ஊரில் இல்லை என்று தெரிந்தும் அடுத்தநாளே எனது மாவட்டத்துக்கு உட்பட்ட கொட்டாரத்தில் கால்நடை மருத்துவமனையையும், கப்பியறையில் புதிய சாலைகளையும் அவர் திறந்து வைத்திருக்கிறார். அதேபோல் நான் மேயராக இருக்கிற மாநகராட்சியில் எனக்குத் தெரியாம லேயே அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு களைப் போடுகிறார். இதெல்லாம் எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதால் இதுபற்றி தலைமையிடமும் தெரிவித்துவிட்டேன்''”என்றார் எரிச்சலாக.

நாடாளுமன்றத் தேர்த லுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நேரத்தில், நாகர் கோயிலில் அமைச்சரும் மேயரும் உரசிக்கொண்டிருப்பது, அங்கே தி.மு.க.வின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி யிருக்கிறது.

nkn111023
இதையும் படியுங்கள்
Subscribe