அ.தி.மு.க. கோட்டையாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை, நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளட்சித் தேர்தலிலும், முழுக்க தி.மு.க. கோட்டையாக்கி அதிரடி காட்டி இருக்கிறார், அமைச்சர் சக்கரபாணி.
இதனால் அவரை ஹீரோவாகவே பார்க்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றிபெற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சக்கரபாணி, கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டத்தின் கிழக்கு மாவட்ட செயலாளராக மாஜி மந்திரி நத்தம் விசுவநாதனும், மேற்கு மாவட்டச் செயலாளராக மாஜி மந்திரி திண்டுக்கல் சீனிவாசனும் இருந்து வருகின்றனர்.
மாவட்டமே தங்கள் இருவரின் கட்டுப்பாட்டில்தான் என்று சொல்லிக் கொண்டிருந்த அவர்களை, உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இருக்கும் இடம் தெரியாமல் ஓடவிட்டிருக்கிறார் அமைச்சர் என்கிறார்கள் மாவட்ட மக்கள்.
இதுகுறித்து நடுநிலையாளர்கள் சிலரிடம் நாம் கேட்டபோது, "ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள நகராட்சி, பேரூராட்சி களை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற வரிந்துகட்டிய அமைச்சர் சக்கரபாணி, தீவிரமாகப் பிரச்சாரம் செய்ததோடு, முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களையும், சலுகைகளையும் வாக்காளர்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார். அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத மாஜிக்களான நத்தம் விஸ்வநாதனும், திண்டுக்கல் சீனிவாசனும் முடங்கிவிட்டார்கள். அதனால்தான் இந்தப் பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியைத் தி.மு.க. பெற்றிருக்கிறது'' என்கி றார்கள் புன்னகையோடு.
இது தொடர்பாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.வினரிடம் நாம் கேட்ட போது....’ ’"ஒட்டன்சத்திரம் நகராட்சி யில் உள்ள 18 வார்டுகளை யும் தனிப் பெரும்பான் மையுடன் கைப்பற்றி, நகர்மன்றத் தலைவராக திருமலைசாமியையும், நகர்மன்றத் துணைத் தலைவராக வெள்ளை சாமியையும் அமரவைத் திருக்கிறார் அமைச்சர். அவரது கடும் உழைப்பால் ஒட்டன்சத்திரம் நகரில் ஒரு வார்டைக் கூட கைப்பற்ற முடியாமல் டெபாசிட் டையும் இழந்திருக்கிறது அ.தி.மு.க.. அதேபோல் கீரனூர் பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகளையும் தி.மு.க. கைப்பற்றியது. அதன் தலைவராக கருப்புசாமியை அமைச்சர் அமரவைத்து 100 சதவீத வெற்றியைக் கொடுத் திருக்கிறார்.
இதேபோல் வேட சந்தூருக்கு மேகலா, அய்யலூருக்கு கருப்பணன், வடமதுரைக்கு நிரூபா ராணி, பாளையத்துக்கு பழனிச்சாமி, எரியோடுக்கு முத்துலட்சுமி ஆகிய பேரூராட்சித் தலைவர்கள் அமைச்சரால் வெற்றி மகுடம் சூட்டியிருக் கிறார்கள். இங்கெல்லாம் படுதோல்வி அடைந்திருக்கும் அ.தி.மு.க, ஒரு சில வார்டுகளை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. அதேபோல் மாஜி நத்தம் விசுவநாதனின் தொகுதியான நத்தத்திலேயே இருக்கும் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 14-வார்டுகளை தி.மு.க.. கூட்டணி கைப்பற்றிவிட்டது. இங்கே தி.மு.க.வைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்சா பேரூராட்சித் தலைவராக அமரவைக்கப்பட்டிருக்கிறார். இப்படி இரண்டு மாஜிக்கள் உருவாக்கி வைத்திருந்த அ.தி.மு.க. கோட்டையை, தவிடுபொடியாக்கி அவற்றைத் தி.மு.க. கோட்டையாக மாற்றி யிருக்கிறார் எங்கள் அமைச்சர்''’ என்று பட்டியலிட்டவர்கள்...
"அதேபோல் நகர்மன்றத் தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர்கள் வெற்றி பெற்று பதவியேற்ற உடனேயே, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, மக்களிடம் நல்ல பெயர் வாங்கும் அளவுக்கு உங்கள் பணி சிறக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார் அமைச்சர்'' என்கிறார்கள் பூரிப்போடு.
திண்டுக்கல் மாவட்ட உடன்பிறப்பு கள், அமைச்சர் சக்கரபாணியை ஹீரோ வாகப் பார்க்கிறார்கள்.