புதன்கிழமையன்று, ""புதிதாக பதவியேற்ற எஸ்.பி. உங்களை பார்க்க விரும்புகின்றார். ஆதலால் தூத்துக்குடி வரவேண்டும்'' என சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளாகப் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோருக்கு மெஜெஞ்சர் அனுப்பியுள்ளது எஸ்.பி. தனிப்பிரிவு. மாலை 4 மணிக்கே எஸ்.ஐ.ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் எஸ்.பி. கேம்ப் அலுவலகத்தில் ஆஜராகியிருந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மட்டும் வரவில்லை.

dd

இதே வேளையில், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் ""சொன்னபடி அவங்க வந்துட்டாங்களா...? இப்ப பேட்டி கொடுக்கலாமா...?'' எனக் கேட்டுக் கொண்டே ""பென்னிக்ஸ், ஜெயராஜ் உயிரிழந்த விவகாரம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட விசாரணையில் நான்கு போலீசார்மீது மட்டும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் போக போக இன்னும் நிறைய விஷயங்கள் தெரியவரலாம்'' என கூறியதுதான் தாமதம் கைதுப் படலங்கள் அரேங்கறின.

dd

Advertisment

தூத்துக்குடி சிபிசிஐடி குற்றப்பிரிவு எண் 01/2020 மற்றும் 02/2020ன்படி இரு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலையத்தில் போடப்பட்ட 176(1)(ஆ)(ண்) வழக்கு 342, 302, 201 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதே வேளையில், எஸ்பி அலுவலகத்தில் காத்திருந்த எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் தலைமைக்காவலர்கள் முருகன் முத்து ராஜ் ஆகியோர், ""இல்ல.. ஏதோ பிசிறு தட்டுது''ன்னு அங்கிருந்து எஸ்கேப்பாக, எஸ்.ஐ.ரகுகணேஷ் மட்டும் சிபிசிஐடி. போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் ரகு கணேஷை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ததை தொடர்ந்து, அவர் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, மாவட்ட சிறையான பேரூரணி சிறையில் அதிகாலையில் 2.15க்கு அடைக்கப்பட்டார்.

கதை சொன்ன எஸ்.ஐ.!

ds""என்ன மனுஷன் சார் அந்தாளு. இங்கிருந்து நிம்மதியாக சிறைக்கு செல்லவில்லை. போகும் போதிலிருந்து புலம்பல் தான்! ""ஏம்பா..? அடிச்சது உண்மைப்பா.! ஆனால் அத்தனைக்கும் காரணம் அந்தாளுதான்(.?!)'' எனக் கூறிவிட்டு எங்களிடம் கதை சொல்ல ஆரம்பிச்சார்.

Advertisment

""இரண்டு வேட்டை நாயைக் கொண்டு முயல் வேட்டையாடிட்டுவர்றான் முதலாளி. இரண்டு வேட்டை நாய்களும் போட்டிப் போட்டு முயலை துரத்திட்டுப் போகும்போது முயல் சட்டென வேட்டை நாய்களோட முதலாளிக்கிட்ட சிக்கிவிடும், அப்படித்தான் என்னுடைய நிலையும், அந்த எஸ்.ஐ.யோட நிலையும். நீங்களும் இந்த மாதிரி மாட்டிக்காதீங்க'' என எங்களுக்கு அட்வைஸ் கூறிவிட்டு சிறைக்குள் நுழைந்தார். எனக்கு தெரிந்து அழுது அரற்றி கண்ணீரோடு நுழைந்த போலீஸ்காரர் அவராகத்தான் இருக்கும்'' என்கிறார் எஸ்.ஐ.ரகுகணேஷை சிறையில் அடைக்க எஸ்கார்டாக சென்ற ஆயுதப்படைப் போலீசாரில் ஒருவர்.

கார் கொடுத்த அமைச்சர்?

எஸ்.ஐ.ரகுகணேஷ் கைது செய்யப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவிய வேளையில், கோவில்பட்டி புறநகரில் இருக்கும் பங்களா ஒன்றில் மிகப்பெரிய விஐபியின் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். ""நம்ம மணவாடா இருந்தாலும் இப்ப நான் என்ன செய்ய முடியும்..? பேசாமல் கார் ஏற்பாடு செய்து தருகின்றேன். அதை வைத்து கேரளா பக்கம் சென்று விடு'' எனக் கூறி சென்னை செங்குன்றம் பகுதி ரெஜிஸ்ட்ரேசன் எண் பச10ஆஐ 2304 வெள்ளை நிற மாருதியைக் கொடுக்க உத்தரவிட்டிருக்கின்றார் அந்த விஐபி.

தூத்துக்குடி மாவட்டத்தில்தான் நம்மைத் தேடுவார்கள். நெல்லை சென்று அங்கிருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளா சென்று விடலாம் என்ற எண்ணத்தில், வியாழக்கிழமையன்று காலை காரை தானே சொந்தமாக டிரைவிங் செய்து, கயத்தாறு சுங்கச்சாவடியில், தான் ஒரு இன்ஸ்பெக்டர் என அடையாள அட்டையைக் காட்டி அங்கிருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டிருக்கின்றார். எனினும் கங்கை கொண்டான் சோதனை சாவடியில் போலீசாரால் சிக்கி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதே வேளையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும், தலைமைக் காவலர் முருகனும் போலீசில் சிக்கினர்.

dsமாலை மணி 6:45க்கு மூவரும் தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி காவல் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு, நீதிபதி ஹேமா அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட, தொடர்ந்து மூவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் என உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து மூவரும் அழைத்து செல்லப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். ""இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு உதவிய அமைச்சர் யார் என பரவலாக பேசிய வேளையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன் வந்து தான் யாருக்கும் உதவவில்லை'' என மறுத் தது குறிப்பிடத்தக்கது.

கைவிரித்த சாதித்தலைவர்!

ss

""தலைமைக் காவலர் முத்துராஜையும் விரைந்து கைது செய்யுங்கள்'' என சி.பிசி.ஐ.டி போலீசாருக்கு தென்மண்டல ஐ.ஜி. முருகனிடமிருந்து அழுத் தம் வந்தது. முத்துராஜின் சொந்த ஊரான குளத்தூர், அருகிலுள்ள அரசன்குளம் காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது. முத்துராஜின் செல்போன் எந்த டவரை காண்பிக்கிறது என தனிப்பிரிவு போலீசார் கண்டறிந்து, அங்கு சென்ற போது முத்துராஜ் அங்கில்லை. முத்துராஜின் மனைவியையும், அவரது இரண்டு வயது குழந்தையையும் தன்வசப் படுத்தியது தனிப்படை. தப்பிய முத்துராஜ் நெல்லை பாளையங்கோட்டை யிலுள்ள சாதித்தலைவரிடம் தஞ்சமடைந்திருக்கின்றார், ஆனால், ""நீ நம்ம சாதியாக இருக்கலாம்? செத்தது வேற சமூகம். இந்த நேரத்துல நான் உன்னை காப்பாத்துனேன்னா சாதிப் பிரச்சனையா மாறிவிடும். பேசாமல் சரண்டராயிடு...'' என கைவிரிக்க வெள்ளிக் கிழமையன்று மாலை வேளையில் வேறு வழியில்லாமல், தன்னுடைய இருசக்கர வாகனத்தை வேறிடத்தில் போட்டுவிட்டு சரண்டராயிருக்கின்றார் முத்துராஜ்.

ஆனால் சிபிசிஐடியோ தாங்களே கைது செய்ததாக அறிவித்து சிறைக்கு அனுப்பியது.

""தென்மண்டல ஐ.ஜி. முருகன், தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் சிபிசிஐடி போலீசார் ஆகியோர் ஒன்றிணைந்ததாலே இத்தனை கைதுகளும் சாத்தியமானது'' என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

-நாகேந்திரன்

____________________________________

சிறையில் எஸ்.ஐ.களை அடித்த கைதிகள்! உயிருக்கு விலை வைப்பு!

-மதுரை சிறை மாற்ற பகீர் பின்னணி!

dகுற்றப் பதிவேட்டு எண் 01/2020 மற்றும் 02/2020ன் படி அத்து மீறி தாக்குதல், தடயங்களை அழித்தல் மற்றும் கொலை வழக்குகளான 342,302,201 பிரிவின்படி வழக்கினை பதிவு செய்துள்ளனர் தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடிப் போலீ சார். இதன்படி இவ்வழக்கின் குற்றவாளிகளாக சாத்தான்குள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோரை அறிவித்து அனைவரையும் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட சிறையான பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் திடீரென ""சிபிசிஐடிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் தூத்துக்குடி மாவட்ட சிறை பேரூரணியில் இருந்து வந்த ஐவரையும் பாதுகாப்பு கருதி 04.07.2020) மாலை சுமார் 05.15 மணிக்கு மதுரை மத்திய சிறைச்சாலைக்கு டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

""சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டு பேரூரணி மாவட்ட சிறையில் வைக்கப்பட்ட போலீசார் ஐவரால் பாதிக்கப்பட்டோர் கொஞ்ச நஞ்சமல்ல. இவர்களால் பாதிக்கப்பட்ட கைதிகள் பலர் பேரூரணி சிறையில் உள்ளனர். எஸ்.ஐ. ரகுகணேஷை பேரூரணி சிறைக்கு கொண்டு வந்ததுமே சிறைக்குள் புகைச்சல் ஆரம்பமானது. அன்றைய பின்னிரவில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சிறைக்குள் விசாரணைக்கைதிகளாக வந்த நிலையில், வெள்ளிக் கிழமை இரவில் அதே வழக்கில் கைதியாக அனுமதிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ். சனிக்கிழமையன்று ஒன்று திரண்ட சில கைதிகள் கைக்கு கிடைத்தவற்றைக் கொண்டு எஸ்.ஐ.ரகுகணே ஷை தாக்கத் தொடங்கினர். பிறகு எஸ்.ஐ.பாலகிருஷ்ணனை தேட சிறையே களேபரமானது. எஸ்.ஐ.கள் ரகுகணேஷையும் பாலகிருஷ்ணனையும் பழிவாங்குவதற்காக, பணம் சேர்த்து, உயிருக்கு விலையும் நிர்ணயித்துள்ளனர் சில சிறைவாசிகள் என எங்களுக்கு கிடைத்த ரிப்போர்ட்டால்தான். மதுரைக்கு மாற்றம்'' என்கிறார் உளவுத்துறை அதிகாரி ஒருவர்.

-நாகேந்திரன்

_________________________

லத்தியை கேட்டு போராடினார் மாஜிஸ்திரேட் -எஸ்.ஐ. பால்துரை

ddயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை துவக்கிய வேளையில், சிபிஐ விசாரணை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த நிலையில் சிபிசிஐடி முன்னதாகவே வழக்கு விசாரணையைத் தொடங்கி எப்ஐஆரைப் பதிவு செய்தது. பெயர் மிஸ்ஸிங் ஆன எஸ்.ஐ.பால்துரை, அப்ரூவர் ஆகியுள்ளார் என தகவல் வெளியான நிலையில் அவரைத் தொடர்பு கொண்டோம்.

""சொந்த ஊரு கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம். 1986ஆம் ஆண்டு மணிமுத்தாறு பட்டாலியனில் முதன் முதலாக போலீஸ் சர்வீசஸை துவங்கிய நான் ஏறக்குறைய 35 வருடங்கள் பணியாற்றி வருகின்றேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் அன்றுதான் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு மாற்றலாகி வந்தேன். அதற்கு முன்பு வரை தட்டார்மட காவல் நிலைய எஸ்.ஐயாக இருந்து பெரியதாழை செக்போஸ்டில் மூன்று மாதம் கொரோனா டூட்டி பார்த்தேன். காலையில் சாத்தான்குளம் ஸ்டேஷன் டூட்டிக்கு வந்து ஜாயின் பண்ணியவுடன் எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை.

சாயங்காலம் 4 மணிக்கு வாகன சோதனை செய்ய அனுப்பினாங்க. 8.30 மணி வரைக்கும் 20 கேசு போட்டிருப்பேன். 8.30 மணிக்கு ஸ்டேஷன் வந்துட்டு வீட்டுக்கு புறப்பட்டேன். மறு நாள் வழக்கம் போல் எனக்கு இந்த முறையும் டூட்டி வாகனப் பரிசோதனைதான். அதனால் இந்த சம்பவமே எனக்கு அப்புறம்தான் தெரிந்தது. நான் எப்படி அப்ரூவராக இருப்பேன்.? மாஜிஸ்திரேட் சின்னவராக இருந்தாலும், உயர் நீதிமன்றம் உத்தரவின் அனுமதிக்கப்பட்ட ஆள் தானே.? நான் மரியாதை கொடுத்தேன். லத்தியினை கேட்டுத்தான் நீண்ட நேரம் போராடினார் அவர்"" என்கிறார் பால்துரை

அப்படியொன்றும் கூறவில்லை - காவலர் மகராசன்

aகோவில்பட்டி ஜே எம் 1 மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணையின் போது, அவரைப் பார்த்து, "" உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா'' என மகராசன் எனும் காவலர் கூறியதாக, உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதத்தின் மூலம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், மகராசன் மற்றும் சம்பவத்தின் போது உடனிருந்த உயரதிகாரிகளான ஏடிஎஸ்பி குமாரும், டிஎஸ்பி பிரதாபனும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாகினர். இதில் மகராசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், மற்றைய இரு அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டனர். எனினும், உயரதிகாரிகள் இருவரும் அன்றைய தினமே மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் மகராசனுக்கு பணி வழங்கப்படவில்லை.

மகராசனைத் தொடர்பு கொண்டோம். ""இது நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்துக் கூறவிரும்பவில்லை. இருப்பினும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனை பார்த்து நான் அவ்வாறு கூறவில்லை. என்னுடைய கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன்'' என்றார்.

நக்கீரன் செய்தி எதிரொலி!

"போலீஸ் கையில் அதிகாரம்! தமிழக அரசாணையால் மோடி ஷாக்!’ என்கிற தலைப்பில் கடந்த இதழில் நாம் எழுதிய கட்டுரையில், காவல்துறையினருக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான ஆணையம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு எதிராக போலீஸ் கையில் அதிகாரத்தை கொடுக்கும் அரசாணையை ஜெயலலிதா பிறப்பித்திருக்கிறார் என்பதையும், அதையே தற்போதைய எடப்பாடி அரசும் நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதையும் விரிவாக சுட்டிக்காட்டியிருந்தோம். , நமது செய்தியின் எதிரொலியாக, நீதிபதிகள் தலைமையிலான ஆணையத்தை உருவாக்கவும், போலீஸ் கையில் அதிகாரத்தை கொடுத்துள்ள அரசாணையை ரத்து செய்யச் வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது கமலின் மக்கள் நீதி மையம்.

-இளையர்