Advertisment

ராங்கால்- தங்கமணிக்கு தூண்டில் போடும் அமைச்சர்! -அதிர்ச்சியில் எடப்பாடி! கவர்னருடன் விருந்து சாப்பிட்ட அமைச்சர்கள்!

rr

"ஹலோ தலைவரே, இடைத் தேர்தல் தொகுதியான ஈரோடு கிழக்கு தகிக்க ஆரம்பிச்சிடுச்சி.''”

Advertisment

"ஆமாம்பா, குறுகிய கால இடைவெளியில் ரொம்பவும் அவசர அவசரமா பிப்ரவரி 27-ல் இடைத் தேர்தல் நடக்கும்னு தேர்தல் ஆணை யம் அறிவிச்சதால், அத்தனை அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக இருக்குதே!''”

rr

"உண்மைதாங்க தலைவரே, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனும் எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெராவின் திடீர் மரணத்தால் இடைத்தேர்தலைச் சந்திக்கும் ஈரோடு கிழக்கில் இந்தமுறை, தி.மு.க. புள்ளிகள் போட்டியிட ஆசைப்பட்டாங்க. அதேபோல் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க. தன் அதிரடிப் பிரச்சாரத்தையும் அங்கே ஆரம்பித்தது. அமைச்சர்கள் தொடங்கி லோக்கல் தி.மு.க. நிர்வாகிகள் வரை அங்கே பம்பரமாகச் சுழன்றுவந்தார்கள். கொங்கு மண்டலத்தைச் சூரிய மண்டலமாக மாற்றிக்காட்டுகிறேன் என்று, ஏற்கனவே சவால்விட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, வெற்றிக்கனியைப் பறிப்பதற்காக பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்துவந்தார். அவரது வேகம் மற்ற கட்சிகளை மிரள வைப்பதாக இருந்தது.''”

"ஆமாம்பா, கடைசியில் காங்கிரஸிடமே ஈரோடு கிழக்கை தி.மு.க. ஒப்படைத்துவிட்டதே!''”

rr

"உண்மைதாங்க தலைவரே, இப்படி ஒட்டுமொத்த தி.மு.க.வும் இடைத்தேர்தல் களத்தில் இறங்க ஆசைப்பட்டாலும், காங்கிரஸின் விருப்பத்தை அறிந்ததால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிற்பதானால், தொகுதியைக் காங்கிரஸிடமே தருக

"ஹலோ தலைவரே, இடைத் தேர்தல் தொகுதியான ஈரோடு கிழக்கு தகிக்க ஆரம்பிச்சிடுச்சி.''”

Advertisment

"ஆமாம்பா, குறுகிய கால இடைவெளியில் ரொம்பவும் அவசர அவசரமா பிப்ரவரி 27-ல் இடைத் தேர்தல் நடக்கும்னு தேர்தல் ஆணை யம் அறிவிச்சதால், அத்தனை அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக இருக்குதே!''”

rr

"உண்மைதாங்க தலைவரே, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனும் எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெராவின் திடீர் மரணத்தால் இடைத்தேர்தலைச் சந்திக்கும் ஈரோடு கிழக்கில் இந்தமுறை, தி.மு.க. புள்ளிகள் போட்டியிட ஆசைப்பட்டாங்க. அதேபோல் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க. தன் அதிரடிப் பிரச்சாரத்தையும் அங்கே ஆரம்பித்தது. அமைச்சர்கள் தொடங்கி லோக்கல் தி.மு.க. நிர்வாகிகள் வரை அங்கே பம்பரமாகச் சுழன்றுவந்தார்கள். கொங்கு மண்டலத்தைச் சூரிய மண்டலமாக மாற்றிக்காட்டுகிறேன் என்று, ஏற்கனவே சவால்விட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, வெற்றிக்கனியைப் பறிப்பதற்காக பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்துவந்தார். அவரது வேகம் மற்ற கட்சிகளை மிரள வைப்பதாக இருந்தது.''”

"ஆமாம்பா, கடைசியில் காங்கிரஸிடமே ஈரோடு கிழக்கை தி.மு.க. ஒப்படைத்துவிட்டதே!''”

rr

"உண்மைதாங்க தலைவரே, இப்படி ஒட்டுமொத்த தி.மு.க.வும் இடைத்தேர்தல் களத்தில் இறங்க ஆசைப்பட்டாலும், காங்கிரஸின் விருப்பத்தை அறிந்ததால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிற்பதானால், தொகுதியைக் காங்கிரஸிடமே தருகிறோம் என்று ஸ்டாலின் சொல்லிவிட்டார். இது தி.மு.க.வின ருக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் தலைமை சொல்வதை தட்டாமல் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இளங்கோவனின் உடல்நலம் கருதி, அவர் குடும்பத்தினரும், நண்பர் களும் அவரை நிற்கவேண்டாம் என்று தடுக்க, தனக்கு பதில் தன் மகன் சஞ்சய் சம்பத் நிற்பாரென இளங்கோவன் கூறிய நிலையில், இறுதியில் இளங்கோவனே வேட் பாளராக இறங்கிவிட்டார். இது குறித்து தனி கட்டுரையே நம் இதழில் வந்துள்ளது. அதே நேரத் தில் தொடர்ந்து ஒரே குடும்பத்திற்கே சீட்டைக் கொடுப்பது சரியா? என்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் போர்க்கொடி தூக்கி, பரபரப்பை ஏற்படுத்திவரு கிறார்கள்.''”

"பா.ஜ.க. அண்ணாமலையும் களமிறங்கத் துடிக்கிறாரே?''”

"இடைத்தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே, அங்கே நின்று சட்டமன்றத்துக்குப் போய் விடவேண்டும் என்ற ஆசை பா.ஜ.க. அண்ணாமலைக்கு இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், எம்.எல்.ஏ. சரஸ்வதி உட்பட 14 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, தன்னிச்சையாகக் கள வேலையை ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில் பா.ஜ.க. போட்டியிடும் பட்சத்தில் அவர்களை நாங்கள் ஆதரிப்போம் என்று வலிய ஆதரவைத் தெரிவித்த ஓ.பி.எஸ்., அதற்குப் பிரதியுபகாரமாக, அ.தி.மு.க.வின் பவரைக் கைப்பற்ற பா.ஜ.க.வின் உதவியை ஏகத்துக்கும் எதிர்பார்க்கிறார். இதற்கு இடையே அ.தி.மு.க.வுக்கு அந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி, பா.ஜ.க.விடம் கேட்டு, அண்ணா மலையை எரிச்சலடைய வைத்திருக்கிறார். எனவே இடைத்தேர்தல் களம் திகுதிகுவென தகிக்கிறது.''”

"அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கண்டு, எடப்பாடி மிரள்கிறாரே?''”

"அதுக்குக் காரணம் இருக்குங்க தலைவரே. அமைச்சர் செந்தில்பாலாஜியின் சீக்ரெட் ஆபரேசன்’ ஒன்று வெளியாகி எடப்பாடி பழனிச்சாமியின் தூக்கத்தைக் கெடுத்துவருகிறது. அதாவது, எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த பலரும் பா.ஜ.க.விற்கு எதிராக இருக்கிறார்கள். சி.வி.சண்முகம், பகிரங்கமாகவே எடப்பாடியை எதிர்த்துவருகிறார். இந்தச் சூழலில் எடப்பாடி மீது, தங்கமணியும் ஆதங்கத்தில் இருப்பதை அறிந்த செந்தில்பாலாஜி, பொங்கல் பண்டிகைக்குக் கூட எடப்பாடிக்கு வாழ்த்து சொல்ல அவர் வீட்டுக்குச் செல்லவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு, அவரைத் தி.மு.க.வுக்கு இழுக்கத் தூண்டில் போட ஆரம்பித்துவிட்டாராம். ஏற்கனவே, கொங்கு பகுதியைச் சேர்ந்த அ,தி.மு.க. முக்கியப்புள்ளிகள் பலரையும் தி.மு.க. பக்கம் இழுத்து அவர் ஷாக் கொடுத்திருப்பதால், இதைக் கேள்விப் பட்டதில் இருந்து முகம்வெளிறிப் போய்விட்டார் எடப்பாடி. தங்கமணியை சமாதானப்படுத்த அவருக்கு எடப்பாடி போன்போட்டும், தங்கமணி எடுக்கவில்லையாம். இதனால் பகீரில் இருக்கிறது எடப்பாடி தரப்பு.''”

Advertisment

rr

"ஒன்றிய அமைச்சர் முருகன் கடலூரில் கலாட்டாவில் ஈடுபட்டார்னு பா.ஜ.க. தரப்பில் இருந்தே செய்தி வருதே?''”

"கடலூரில் கடந்த 20ஆம் தேதி நடந்த பா.ஜ.க. செயற்குழுவில் கலந்துகொள்ளச் சென்ற ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு, செயற் குழு நடந்த மண்டபத்தின் மாடியிலேயே, அண்ணாமலைக்குப் போடப்பட்டது போல், ஒரு அறை போடப்பட்டிருந்ததாம். ஆனால் அங்கே தங்காமல் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிக்கொள்கிறேன் என்று அவர் சொன்னதால், அங்கே அவரை அழைத்துச் சென்றிருக் கிறார்கள். விருந்தினர் மாளிகைக் குச் சென்ற முருகன், மாநில அமைச்சர்கள் தங்குகிற அறை களில் இருக்கும் வசதி, ஒன்றிய அமைச்சரான எனக்கு ஒதுக்கிய அறையில் இல்லையே.. என்று குரல் உயர்த்தி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய அவருக்கு, பா.ஜ.க. நிர்வாகிகள் அங்குள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் அறை போட்டு தங்க வைத்திருக்கிறார்கள். இந்தத் தகவல்தான் அமைச்சர் முருகன் கலாட்டாவில் ஈடுபட்டதாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.''”

"சமீபகாலமா கவர்னர் ஆர்.என். ரவிக்கு அதிகமாகத் ’தமிழ்ப் பற்று’ வந்திருக்குதே?''”

"தி.மு.க. அரசுக்கு இணையாக போட்டி அரசாங்கம் நடத்தத் துடிக்கும் கவர்னர் ரவி, தமிழக மக்களை அதிகம் கவர நினைக்கிறார். அந்தப் பேராசையில் தமிழில் தங்கு தடையில்லாமல் பேசுவதற்கான பயிற்சியை எடுத்துவருகிறார். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான இந்திய ஆட்சிப் பணிக்கான ஐ.ஏ.எஸ். பயிற்சியில் இருக்கும் அதிகாரிகள் 44 பேர்களுடன் அண்மையில் கவர்னர் ரவி ராஜ்பவனில் உரையாடிய போது கூட, எந்த மாநிலத்தில் பணியில் சேர்ந்தாலும் அந்த மாநிலத்தின் மொழியை கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் மக்களை நெருங்க முடியும். இதை நானும் பின்பற்று கிறேன். இங்கே ஆளுநராக பணி யாற்றுவது எனக்கு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கிறது. தமிழ் இலக்கியம் மிகவும் பழமையானது என்பதை இங்கே அறிந்துகொண் டேன். நீங்கள் மதுரை, தஞ்சை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்கால கோவில்களைப் போய்ப் பார்த்தால், அவற்றின் முன் கிரேக்க கட்டடக்கலைகள் கூடத் தோற்றுப்போகும் என்றெல்லாம் அறிவுரை வழங்கினாராம்.''”

"நானும் ராஜ்பவன் தொடர்பான ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். 22-ந் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கவர்னர் ரவியுடன் அமைச்சர் கள் பொன்முடியும் பெரியகருப்பனும் கலந்துகொண்டனர். அண்மையில் பொன்முடியின் சகோதரர் மறைந்த போது, உரசல் மறந்து கவர்னர் ரவி, பொன்முடியைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினாராம். அதனால், நெகிழ்ந்துபோன பொன்முடி, இந்த நிகழ்ச்சியில் கவர்னரைச் சந்தித்த போது அவருக்கு நன்றி தெரிவித் தாராம். கவர்னருடன் பொன்முடி, பெரியகருப்பன் ஆகியோர் ஒரே டேபிளில் அமர்ந்து விருந்துண்ட காட்சியை, அங்கிருந்தவர்கள் வியப் பாகப் பார்த்திருக்கிறார்கள்.''”

nkn250123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe