Advertisment

கூவாகத்தில் அமைச்சர் உதயநிதி! திருநங்கைகள் நெகிழ்ச்சி!

ff

காபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய அழகான இளைஞனை களப்பலி கொடுத்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பௌர்ணமி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 18ஆம் தேதி "சாகை வார்த்தல்' நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழா, 18 நாட்கள் நடைபெற்றது. திருநங்கைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் விதமாக தமிழக அரசுடன் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மிஸ் கூவாகம் அழகிப் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தினார் கள். இம்முறை தமிழ்நாடு அமைச்சர்களே, அதுவும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே கலந்துகொண்டது தான் ஹைலைட்! உடன், அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், மதிவேந் தன், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதய சூரியன், புகழேந்தி, லட்சுமணன், சிவகுமார் மற்றும் மாவட்ட ஆட்சி

காபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய அழகான இளைஞனை களப்பலி கொடுத்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பௌர்ணமி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 18ஆம் தேதி "சாகை வார்த்தல்' நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழா, 18 நாட்கள் நடைபெற்றது. திருநங்கைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் விதமாக தமிழக அரசுடன் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மிஸ் கூவாகம் அழகிப் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தினார் கள். இம்முறை தமிழ்நாடு அமைச்சர்களே, அதுவும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே கலந்துகொண்டது தான் ஹைலைட்! உடன், அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், மதிவேந் தன், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதய சூரியன், புகழேந்தி, லட்சுமணன், சிவகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

tt

இவ்விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஆண்டுதோறும் திருநங்கைகளின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருநங்கைகளுக்கான நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்துகொள்வதில்லை. ஆனால் இன்று நாங்கள் வந்துள்ளோம். திருநங்கைகளின் கோரிக்கை களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது தி.மு.க. தான். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் திருநங்கைகள் என்ற பெயர் வைத்து, சமுதாயத்தில் மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். திருநங்கைகள் நல வாரியம் அமைத்தது தி.மு.க. ஆட்சியில் தான். கடந்த ஆட்சி அதை முடக்கிவிட்டது. மீண்டும் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் அதனைப் புதுப்பித்து செயல்பட வைத்துள் ளார். எனது சட்டமன்றத் தொகுதியில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் அமைத்து, அதன்மூலம் பலர் பலனடைந்துள்ள னர். சட்டமன்றத்தில் நான் முதன்முதலில் பேசும்போது, திருநங்கைகள், மாற்றுத்திறனாளி களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து தான் பேசினேன். அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் குறைகளை 24 மணி நேரமும் தெரிவிக்க எனது அலுவலகம் காத்திருக்கிறது. வரும் காலங்களில் தேர்தல்களில் திருநங்கைகள் நிற்பதற்கு தி.மு.க. வாய்ப்பு கொடுக்கும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக வும் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்படுவார் கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை'' என்று பேசியதைக் கேட்டு திருநங்கைகள் நெகிழ்ச்சி யடைந்தனர்..

Advertisment

tt

இந்த விழாவில் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயி ரக்கணக்கான திருநங்கைகள், தாலி, வளையல், குங்குமம் உள்ளிட்ட அலங்கார ஆபரணப் பொருட்களை வாங்கி அணிந்து கொண்டு. மணப்பெண் கோலத்தில் கோயிலுக்குள் சென்று பூசாரிகள் கையால் தாலி கட்டிக் கொண்டு அரவானை கணவனாக ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோயில் வளாகத்தில் கும்மியடித்தும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இரவு முழுவதும் திருநங்கைகள், ஒருவரை ஒருவர் நலம் விசாரிப்பது, அவரவர் வாழ்க்கை நிலை, வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பிரச்சனை களை பேசிக்கொண்டு, மிகவும் சந்தோசமாக கோயில் வளாகப் பகுதியில் சுற்றிச்சுற்றி வந்த னர். மறுநாள் காலையில் அரவான் திருத் தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் அர வானை களப்பலி கொடுத்த பிறகு திருநங்கை கள் வெள்ளைச் சேலை உடுத்தி கணவரை இழந்த பெண்கள் தாலி அறுத்து ஒப்பாரி வைத்து சடங்கு செய்வதுபோல் செய்துவிட்டு, அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற னர். சந்தோஷத்தில் ஆரம்பிக் கும் இந்த திருவிழா, திருநங்கை கள் மத்தியில் சோகத்தில் முடி வடைவது வழக்கம். வரும் ஆண் டில் இந்த கூவாகம் கூத்தாண்ட வர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்

18 நாள் பாரத கதை படித்து அரவானை பலியிடும் திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகிறார்கள். இந்த சுத்துப்பட்டுப் பகுதியில் உள்ள அனைத்துக் கிராம மக்களும் அரவானிடம் வேண்டுதல் செய்கிறார்கள். வேண்டுதல் நிறை வேற்றும் பொருட்டு குழந்தை களும், பெரியவர்களும் தாலி கட்டிக்கொள்கிறார்கள். மறுநாள் அந்த தாலியை அறுத்து, அங்கே உள்ள குளத்தில் திருப்பி செலுத்துகிறார்கள். அரவான் இறந்த துக்கத்தை உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திருக்கோவி லூர், திருநாவலூர் ஆகிய சுற்று கிராமங்களில் தங்கள் வீடுகளில் நிகழ்ந்த துக்கமாக எண்ணி திருவிழா முடிந்து மூன்று நாட்களுக்கு இப் பகுதி கிராம மக்கள் எந்தவிதமான ஒரு நல்ல காரியங்களும் செய்வது இல்லை. இப்படி மக்களின் திருவிழாவாக சித்திரை பௌர்ணமி விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

nkn100523
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe