Advertisment

1000 கோடி பட்ஜெட் பா.ஜ.க.வை உடைத்து தனிக்கட்சி துவங்கும் அமைச்சர்! - பரபரக்கும் பாண்டி அரசியல்!

pondy

 

ந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளையும் தங்களின் தோழமைக் கட்சிகளையும் உடைப்பதும் பிளவுபடுத்துவதும் பா.ஜ.க.வுக்கு கைவந்த கலை. அப்படிப்பட்ட அசுர கொள்கை கொண்ட பா.ஜ.க.வையே உடைக்கும் முயற்சியில் ரகசிய திட்டம் தீட்டிவருகிறார் பா.ஜ.க. அமைச்சரான புதுச்சேரி ஜான்குமார். 

Advertisment

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 10, பா.ஜ.க. 6, தி.மு.க. 6, காங்கிரஸ் 2 மற்றும் சுயேட்சைகள் 6 பேர் வெற்றிபெற்றனர். சுயேட்சைகளில் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக் ஆகிய மூவரும் பா.ஜ.க.வை ஆதரித்தனர்; ஆதரித்தும் வருகின்றனர். 

முதல்வர் ரெங்கசாமி அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர்கள் வழங்கப்பட்டன. தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஜான்குமார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதகளம் செய்தனர். அப்படியிருந்தும் இவரை பா.ஜ.க. கண்டுகொள்ளவில்லை. அதேசமயம், அமைதியாக இருக்கும்படியும், காலம் வரும்போது அமைச்சர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவீர்கள் என்றும் பா.ஜ.க. தலைமையால் எச்சரிக்கை செய்யப்பட்டார். இந்த நிலையில்தான், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வை உடைத்து தனிக்கட்சி துவங்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டார் ஜான்குமார். இதனையறிந்த பா.ஜ.க. மேலிடம் கடந்த ஜூலையில் ஜான்குமாரை அமைச்சராக்கியது. 

pondy1

Advertisment

அதன்படி சாய்சரவணன் குமாருக்கு பதிலாக அமைச்சர் பதவிக்கு ஜான்குமாரும், புதிய நியமன எம்.எல்.ஏ.க்களாக செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகரன் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பட்டியலை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் இதற்கு அனும

 

ந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளையும் தங்களின் தோழமைக் கட்சிகளையும் உடைப்பதும் பிளவுபடுத்துவதும் பா.ஜ.க.வுக்கு கைவந்த கலை. அப்படிப்பட்ட அசுர கொள்கை கொண்ட பா.ஜ.க.வையே உடைக்கும் முயற்சியில் ரகசிய திட்டம் தீட்டிவருகிறார் பா.ஜ.க. அமைச்சரான புதுச்சேரி ஜான்குமார். 

Advertisment

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 10, பா.ஜ.க. 6, தி.மு.க. 6, காங்கிரஸ் 2 மற்றும் சுயேட்சைகள் 6 பேர் வெற்றிபெற்றனர். சுயேட்சைகளில் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக் ஆகிய மூவரும் பா.ஜ.க.வை ஆதரித்தனர்; ஆதரித்தும் வருகின்றனர். 

முதல்வர் ரெங்கசாமி அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர்கள் வழங்கப்பட்டன. தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஜான்குமார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதகளம் செய்தனர். அப்படியிருந்தும் இவரை பா.ஜ.க. கண்டுகொள்ளவில்லை. அதேசமயம், அமைதியாக இருக்கும்படியும், காலம் வரும்போது அமைச்சர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவீர்கள் என்றும் பா.ஜ.க. தலைமையால் எச்சரிக்கை செய்யப்பட்டார். இந்த நிலையில்தான், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வை உடைத்து தனிக்கட்சி துவங்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டார் ஜான்குமார். இதனையறிந்த பா.ஜ.க. மேலிடம் கடந்த ஜூலையில் ஜான்குமாரை அமைச்சராக்கியது. 

pondy1

Advertisment

அதன்படி சாய்சரவணன் குமாருக்கு பதிலாக அமைச்சர் பதவிக்கு ஜான்குமாரும், புதிய நியமன எம்.எல்.ஏ.க்களாக செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகரன் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பட்டியலை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் இதற்கு அனுமதி கொடுப்பதில் காலதாமதம் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதனால் ஜான்குமாரும் அவரது ஆதரவாளர்களும் டென்சனானர்கள். நீண்ட இழுபறிக்குப்பிறகு ஜூலை 11-ல் இதற்கான ஒப்புதல் கிடைத்தது. ஜான்குமார் அமைச்சராக்கப்பட்டார். 

அமைச்சராகி 2 மாதங்களாகியும் ஜான்குமா ருக்கு இன்னும் இலாகா ஒதுக்கப்படவில்லை. பா.ஜ.க.வின் தேசிய தலைமையும், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனும் போட்டுள்ள தடையால் தான் தனக்கு இலாகா ஒதுக்காமல் காலதாமதம் செய்துவருகிறார் ரெங்கசாமி என்கிற கொந்தளிப்பி லிருக்கிறார் ஜான்குமார். இப்படிப்பட்ட சூழலில்தான், ஒத்திவைக்கப்பட்ட தனது ரகசிய திட்டத்தை மீண்டும் செயலாக்கம் செய்வதற்கான அனைத்து அரசியலையும் செய்யத் தொடங்கி யுள்ளார் ஜான்குமார் 

இதுகுறித்து பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், தி.மு.க. மற்றும் டெல்லி தொடர்புகளிடம் விசாரித்த போது, "தேசிய அளவில் பா.ஜ.க. கட்சியில் மோடி -அமித்ஷாவை ஆதரிக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஸை ஆதரிக்கும் பா.ஜ.க. என இரண்டு கோஷ்டி கள் இருக்கின்றன. அந்த கோஷ்டி அரசியலின் நீட்சி புதுச்சேரி வரையிலும் வளர்ந்து நிற்கிறது. அதாவது, புதுச்சேரி பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சுரானா, மோடி -அமித்ஷாவின்  ஆதரவாளர். புதுச்சேரி யின் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நேரடி விசுவாசி. 

pondy2

இதனாலேயே கைலாஷ்நாதனுக்கும் சுரானாவுக்கும் இடையே ஈகோ யுத்தம் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. அந்த யுத்தம், ஜான் குமாரை அமைச்சராக்குவதிலும் நீடித்தது. அவரை அமைச்சராக்குவதுதான் சரியான அரசியல் நடவடிக்கை; இல்லையெனில் சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பா.ஜ.க.வை காப்பாற்ற முடியாது என சுரானா ரிப்போர்ட் கொடுத்தார். 

இதனை உணர்ந்த மோடியும் அமித்ஷாவும், சாய் சரவணன்குமாரை ராஜினாமா செய்ய வைத்து ஜான்குமாரை அமைச்சராக்கும் முயற்சி யை எடுத்த நிலையில், ஜான்குமாரை ஏற்க மறுத்தார் கைலாஷ்நாதன். இதனாலேயே ஜான் குமாரை அமைச்சராக தேர்வு செய்து டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுத்தப்பட்டது. 

அதேசமயம், புதுச்சேரி பா.ஜ.க.வை சரியாக கையாள சுரானாவுக்குத் தெரியவில்லை; அதனால்தான் ஜான்குமார் போன்று நிறைய பிரச்சினைகள் உருவாகிறது  என்று சுரானாவுக்கு எதிராக அமித்ஷாவிடம் புகார் வாசித்தார் துணைநிலை ஆளுநர். 

இதனை எதிர்க்கும்விதமாக, கிரண்பேடி மாதிரி புதுச்சேரி மாநில அரசில் கைலாஷ்நாதன் ஆதிக்கம் செலுத்த மறுக்கிறார். அதிகாரம் நிறைய இருந்தும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக எந்த நடவடிக் கையும் எடுப்பதில்லை. முதல்வர் ரெங்கசாமியோடு கைகோர்த்துக்கொண்டார். இப்படிப்பட்ட ஒருவரை வைத்துக்கொண்டு எப்படி புதுச்சேரியில் பா.ஜ.க.வை வளர்க்க முடியும்? ஆட்சியைப் பிடிக்க முடியும்? என்று அமித்ஷாவிடம், கைலாஷ்நாத னுக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்தினார் சுரானா. இதுகுறித்து கேள்விகேட்ட  டெல்லி யிடம், கிரண்பேடி துணைநிலை ஆளுநராக இருந்தபோது புதுச்சேரியில் இருந்தது காங்கிரஸ் கவர்மெண்ட். ஆனால், இப்போது இருப்பது பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி கவர்மெண்ட். அப்படியிருக்கையில் எடுத்தேன் கவிழ்த்தேன் மாதிரி எப்படி நடந்துகொள்ள முடியும்? என பதிலளித்திருக்கிறார் கைலாஷ்நாதன். இப்படி துணைநிலை ஆளுநருக்கும், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளருக்குமிடையே நடந்து வரும் ஈகோ யுத்தம், பா.ஜ.க.வை உடைத்து ஜான்குமார் தனிக்கட்சி துவக்கும் திட்டத்திற்கு அடித்தளம் போட்டிருக்கிறது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள். 

மேலும் நாம் விசாரித்தபோது, "நான்கு வருடம் போராடி அமைச்சராகியிருக்கிறோம். ஆனால், நமக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை என்கிற கோபமும் ஆதங்கமும் ஜான்குமாருக்கு இருக்கிறது.  இலாகா ஒதுக்கும் பொறுப்பு முதல்வர் ரெங்கசாமியிடம் இருப்பதால் அவரை பா.ஜ.க. வலியுறுத்தாமல் இருக்கிறது என்கிற தகவலறிந்து, பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் சுரானாவிடம் இது குறித்து ஜான்குமார் கேள்வி எழுப்பி யிருக்கிறார்.

அதற்கு, இலாகா ஒதுக்கச் சொல்லி ரெங்கசாமியிடம் சொல்லிவிட்டோம்; ஆனா, துணைநிலை ஆளுநர்தான், ரெங்கசாமியிடம் சொல்லி முட்டுக்கட்டை போட்டுள்ளார். கொஞ்சம் பொறுங்கள், எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று ஜான்குமாரை சமாதானப் படுத்தியிருக்கிறார் சுரானா. ஆனால், இதில் ஜான்குமாருக்கு நம்பிக்கை இல்லை. தேர்த             லுக்கு இன்னும் 6, 7 மாதங்கள்தான் இருக்கிறது. இலாகா இல்லா மந்திரியாக இப்படியே நாட்களை நகர்த்தி நம்மை ஏமாற்ற பா.ஜ.க. திட்டமிடுவதாக நினைக்கும் ஜான்குமார், அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முந்தைய நிலையை தொடர விரும்பி காய்களை நகர்த்தி வருகிறார். 

அதாவது பா.ஜ.க.வை உடைத்து தனிக்கட்சி ஆரம்பித்து 6 இடங்களை வெல்வதுதான் அவரது திட்டம். இதற்காக அவர் கையிலெடுத்திருப்பது லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். அண்மையில் கொல்கத்தா சென்று லாட்டரி மார்ட்டினை சந்தித்திருக்கிறார் ஜான்குமார். அப்போது, தேர்தலுக்கு நிதி உதவி செய்யுங்கள்; ஜோஸ் சார்லஸை முதல்வராக்கிக் காட்டுகிறேன்; ஆட்சி அதிகாரம் நம் கைகளுக்கு வந்துவிட்டால் அடுத்த சில நாட்களிலேயே புதுச்சேரியில் லாட்டரிக்கு அனுமதி கொடுத்துவிடலாம் எனச்சொல்லி மார்ட்டினை சம்மதிக்க வைத்திருக்கிறார். அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலுக்காக போடப்பட்டுள்ள பட்ஜெட் 1000 கோடி ரூபாய். 

தற்போது பா.ஜ.க.வில் ஜான்குமார், இவரது மகன் ரிச்சர்ட் உட்பட 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க.வின் மற்ற 3 எம்.எல்.ஏ.க்களில் கல்யாணசுந்தரம், ஜான்குமாரின் ஆதரவாளராக இருக்கிறார். தவிர, பா.ஜ.க.வின் ஆதரவாளர்களாக இருக்கும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களையும் வளைத்துவைத்துள்ளார் ஜான்குமார். 

இந்த நிலையில், மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லசை முன்னிறுத்தி தனிக்கட்சி துவக்கவிருக்கும் ஜான்குமார், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், அதன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் தனிக்கட்சியில் இணைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும், கடந்த முறை சீட் கிடைக்காத அதேசமயம் மக்கள் செல்வாக்குமிக்க பா.ஜ.க.வின் சீனியர் நிர்வாகிகளையும், தேர்தலில் போட்டியிட்டால் ஜெயித்துவிடுவார் என்கிற நிலையிலும்  தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததால் தாங்கள் போட்டியிட தொகுதியில்லாமல் அதிருப்தியடைந்துள்ள பா.ஜ.க.வினரையும் சார்லஸ் தலைமையில் உருவாகும் தனிக்கட்சிக்குள் கொண்டுவரவும் திட்டமிட்டு, காய்களை நகர்த்தி வருகிறார் ஜான்குமார். 

இதன்மூலம், வருகிற தேர்தலில் 10 தொகுதிகளை வென்று தம் கைகளில் 10 எம். எல்.ஏ.க்கள் இருந்தால் போதும் நாம்தான் சி.எம். என்கிற கனவில் இருக்கிறார். இதற்காக, சார்லஸை சி.எம். ஆக்குவதாகச் சொல்லி தேர்தல் செலவுக்கு பணத்தை கறப்பது; தேர்தல் முடிவுகளில் தாம் எதிர்பார்த்த மாதிரி 10 எம்.எல்.ஏ.க்கள் அல்லது குறைந்தபட்சம் 6 எம்.எல்.ஏ. க்கள் வெற்றி பெற்றால் நாமே         சி.எம். ஆவது என இரட்டைத் திட்டங்களை போட்டு அரசியல் செய்துகொண்டிருக்கிறார் ஜான்குமார். 

எந்த பா.ஜ.க. நம்மை அமைச்சராக்காமல் இழுத்தடித்து கடைசி நேரத்தில் அமைச் சராக்கியும், இலாகா தராமல் தடை போட்டு வைத்துள்ளதோ, அந்த பா.ஜ.க.வை உடைத்து அதற்குப் பாடம் புகட்டி சி.எம். ஆவதுதான் ஜான்குமாரின் அசாத்திய திட்டமாக இருக்கிறது''” என்று சீக்ரெட்டை விவரிக்கிறார்கள் பா.ஜ.க. மற்றும் என்.ஆர். காங்கிரஸ் சீனியர்கள். 

இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான சாமிநாதன் புதுச்சேரி அரசில் ஊழல் மலிந்துவிட்டதாகக் கூறி, பா.ஜ.க.விலிருந்து விலகியிருக்கிறார். 

 

nkn100925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe