உயிர் பயத்தில் அமைச்சர்-எம்.எல்.ஏ.! அ.தி.மு.க.வை உடைக்கும் சாதி பாலிடிக்ஸ்!

dd

""கொலை நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. அப்படி எதுவும் ஆயிடக்கூடாதுன்னு, கூலிப்படைய யாரு மேல யாரு ஏவப் போறாங்கன்னு, அந்த மாவட்டம் முழுக்க உளவுத்துறை வாட்ச் பண்ணிட்டிருக்கு'' என்று பீதி கிளப்பினார் ஆளும்கட்சி சீனியர் ஒருவர்.

அமைச்சர் மற்றும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், தென் மாவட்ட சாதி அரசியல் குறித்து, பெயர் குறிப்பிடாமல் நழுவி, நழுவியே அவர் பேசியதை நீக்கு போக்காக விவரித்திருக்கிறோம்.

dd

அ.தி.மு.க.வை ரெண்டா உடைக்கிற அளவுக்கு, பவர் பாலிடிக்ஸ் நடந்துக்கிட்டிருக்கு. தென்மாவட்டங்களை தன்னோட கண்ட்ரோல்ல வச்சிக்கணும்னு, நம்பர் டூவா இருக்கிற முக்கிய தலைவருக்கும், தாடிக்காரருக்கும் போட்டா போட்டி. இதுல, அந்த தலைவருக்கு, அவரோட மாவட்டத்துல மட்டுமே செல்வாக்கு. பெரிசா ஜாதி பேக்ரவுண்ட அவரால உருவாக்க முடியல. ஆனாலும்... அவரோட விசுவாசிகள், ""தென்மாவட்டம்

""கொலை நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. அப்படி எதுவும் ஆயிடக்கூடாதுன்னு, கூலிப்படைய யாரு மேல யாரு ஏவப் போறாங்கன்னு, அந்த மாவட்டம் முழுக்க உளவுத்துறை வாட்ச் பண்ணிட்டிருக்கு'' என்று பீதி கிளப்பினார் ஆளும்கட்சி சீனியர் ஒருவர்.

அமைச்சர் மற்றும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், தென் மாவட்ட சாதி அரசியல் குறித்து, பெயர் குறிப்பிடாமல் நழுவி, நழுவியே அவர் பேசியதை நீக்கு போக்காக விவரித்திருக்கிறோம்.

dd

அ.தி.மு.க.வை ரெண்டா உடைக்கிற அளவுக்கு, பவர் பாலிடிக்ஸ் நடந்துக்கிட்டிருக்கு. தென்மாவட்டங்களை தன்னோட கண்ட்ரோல்ல வச்சிக்கணும்னு, நம்பர் டூவா இருக்கிற முக்கிய தலைவருக்கும், தாடிக்காரருக்கும் போட்டா போட்டி. இதுல, அந்த தலைவருக்கு, அவரோட மாவட்டத்துல மட்டுமே செல்வாக்கு. பெரிசா ஜாதி பேக்ரவுண்ட அவரால உருவாக்க முடியல. ஆனாலும்... அவரோட விசுவாசிகள், ""தென்மாவட்டம் என்னங்க... தமிழ்நாடே தலைவரு பக்கம்தான். அடுத்த சி.எம்.மே எங்க தலைவருதான்''னு வாட்ஸப்ல யும், பேஸ்புக்லயும், மாறி மாறி பதிவு போட்டு வர்றாங்க.

"ஜாதி ரீதியா நம்மாளுங்கள ஒண்ணு சேர்க்க முடியலைன்னா.. தலைவரு ஒதுங்கிப் போக வேண்டியதுதானே? நான் பார்த்துக்க மாட்டேனா?' என்று, சவுத்ல இருக்கிற, தன்னோட சாதிக்கார ஒன்றிய செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களை, அங்கங்கே தயார் பண்ணுற வேலைய, தாடிக்காரர் முடுக்கி விடறாரு. இதுல, ஏதோ ஒரு ரூட்டுல, ஒன்றிய செய லாளர்களுக்கு, பத்து, பதினஞ்சுன்னு லட்சங்கள் வாரியிறைக்கப்படுது.

இப்ப நம்பர் ஒன் பொறுப்புல இருக்கிறவரு, நம்ம சாதிக்காரரா இல்லைங்கிற கோபமும், அவரோட சாதிக்கு மட்டும்தான் முக்கியமாங்கிற கேள்வியும் இருப்பதால தென்மாவட்டங்களை சரியா வச்சிக்கணும்னு இப்பவே சாதி பாலிடிக்ஸ் வேலைய ஆரம்பிச்சிட்டாங்க.

அப்படின்னா.. தென்மாவட்டங்கள்ல கட்சி பொறுப்புல.. அமைச்சர் பொறுப்புல ஸ்டெடியா இருக்கிற, மத்த ஜாதிக்காரங்க சும்மாவா இருப்பாங்க? இவங்ககிட்ட தலையக் கொடுத்துட்டு தப்பிக்க முடியாதுன்னு, சைலண்ட் ஆயிட்டாங்க. ஒரே ஒருத்தர தவிர.

எப்பவும் முறுக்கிக்கிட்டு இருக்கிற அந்த வேற சாதிக்கார தென்மாவட்ட அமைச்சர்கிட்ட, இவங்க ஜம்பம் பலிக்கல. அந்த அமைச்சருக்கோ வாய் ரொம்ப நீளம். எதிர்க்கட்சி பற்றி தாறுமாறா அவர் பேசுறதெல்லாம் பிரேக் நியூஸ்தான். அவரு என்ன பேசினாலும் பப்ளிசிடி மாவட்டப் பதவிக்கு சோதனை வந்து இப்பத்தான், தற்காலிகமா மீண்டு வந்திருக்காரு. அதனால, நம்பர் ஒன் தலைவரே கதின்னு, அவருக்கு ரொம்ப விசுவாசம் காட்ட ஆரம்பிச்சிட்டாரு.

இதனால், கொதித்துப்போன நம்பர் 2 தலைவரோட விசுவாசிகள், ""ஜாதகமே சொல்லிருச்சு... அடுத்த நம்பர் ஒன் எங்க தலைவருதான்னு. அவரை மட்டம் தட்டியா பேட்டி கொடுக்கிற? ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு புகார் அனுப்புறோம்''னு வலைத்தளங்கள்ல கடுமையா எச்சரிக்கை பண்ணுனாங்க. அவரோட இடத்துல தங்களோட சாதிக்காரரை உட்கார வைக்க தீவிரமா இருக்காங்க.

கொரோனா குறித்து பேசுறதுக்காக இப்ப நடந்த அமைச்சரவைக் கூட்டத்துல, பட்டியலின சாதிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர்றதுக்கான ஆலோசனை நடந்ததாவும், அப்ப, அந்த ‘வாய்நீள’ அமைச்சர், "அதெல்லாம் சரியா வராது'ன்னு எதிர்ப்பு காட்டினார் என்றும், யூடியூப்ல பரப்பி விட்டாங்க. ஆனா... விவகாரம் பல்ப் வாங்கிருச்சு.

நம்பர் 1 மனசுல இடம் பிடித்துவிட்ட அந்த அமைச்சருக்கு எதிரா, நம்பர் 2 தரப்பால பெரிசா எதுவும் பண்ண முடியலைன் னதும், தாடிக்காரர் அடுத்த அஸ்திரத்தை எடுத்துவிட்டாரு. அமைச்சரோட மாவட்டத்துல இருந்து நிர்வாகிகள் சிலர் புகாரோடு கிளம்பிப்போயி, அந்த முக்கிய அமைச்சர், இந்த முக்கிய அமைச்சர்ன்னு ஒருத்தர்விடாம பார்த்து, நம்பர் ஒன்னையும், டூ-வையும் கூட பார்த்து, ‘மாவட்ட பொறுப்பு இவரு கிட்ட இருந்தா சரியா வராது’ன்னு புலம்பிட்டு வந்திருக்காங்க.

விவகாரம் இதோடு நின்றுவிடாதாம். தூத்துக்குடி மாவட்ட கூலிப்படையினர், அந்த அமைச்சரோட மாவட்டத்த சுற்றி சுற்றி வர்றாங்களாம். எம்.எல்.ஏ. ஒருத்தர் ‘அந்த அமைச்சரால என்னுடைய உயிருக்கு ஆபத்து. அவரு என்னைக் கொன்னுருவேன்னு சொன்னதுக்கு நெறய சாட்சி எங்கிட்ட இருக்கு..’ என்று பீதி கிளப்புறாரு. பதிலுக்கு அமைச்சரும் "அந்த எம்.எல்.ஏ.வால என் உயிருக்கும் ஆபத்து இருக்கு...'’என்று கொளுத்திப் போடறாரு. ""ஏதோ ஒண்ணு நடக்கப் போவுது. கூலிப்படையை ரெடி பண்ணுன பின்னணியில் மணல் மாபியாக்கள் இருக்காங்க''ன்னு எங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க. இப்படி சாதி சாதின்னு ஒருதரப்பு மட்டும் பிரிஞ்சு நின்னா.. கட்சியில் உள்ள மற்ற சாதியினரால கட்சி உடையத்தானே செய்யும்?'' என்று கவலையோடு முடித்தார் எம்.ஜி.ஆர்-ஜெ ஆகியோரின் கட்சி நிர்வாகத்தை அறிந்த அந்த சீனியர்.

-ராம்கி

nkn290720
இதையும் படியுங்கள்
Subscribe