டந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் கட்சிக்காரர்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர் களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித் திருந்தார்.

அதைக்கண்டு தமிழகம் முழுவதும் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் முதல்வர் உத்தரவின் மூலம் விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்று அந்தந்த மா.செ.க்கள் மற்றும் அமைச்சர்களிடம் குறைகளையும், கோரிக்கையையும் மனுவாகக் கொடுத்துவருகிறார்கள்.

mm

Advertisment

இந்த வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியையும் கட்சியினர் மொய்த்துவருகின்றனர்.

மாவட்ட அளவில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை அந்தந்தத் துறை அதிகாரி களிடம் பேசி உடனடியாகத் தீர்த்துவைக்கும் ஐ.பி., பிற துறை அமைச்சர்கள் மூலம் தீர்வு காணவேண்டிய மனுக்களை எல்லாம் அந்தந்தத் துறை அமைச்சர்களுக்கு அனுப்பிவருகிறார். ஆனால் அந்த அமைச்சர்கள் பலரும் ஐ.பி. பரிந்துரைத்த கட்சிக்காரர்களின் கோரிக்கை மனுக்களை, நிவர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லையாம்.

இது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஐ.பி.யின் ஆதரவாளர்கள், "கலைஞர் காலத்தில் இரண்டு முறை முப்பெரும் துறை அமைச்சராக இருந்தவர் ஐ.பி. அப்போது கட்சிக்காரர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றினார். அதனால்தான் திண்டுக்கல் மாவட்டம் தி.மு.க. கோட்டையாக உருவானது. அதன்பின் பத்து வருடங்களாக ஆட்சி இல்லை. அப்படிஇருந்தும் தன்னால் முடிந்த உதவி களைக் கட்சிக் காரர்களுக்கும், பொதுமக்களுக் கும் செய்து வந்தார் ஐ.பி.

கடந்த தேர்தலின் போதுகூட, தன்னை எதிர்த் துப் போட்டி யிட்ட எந்த ஒரு வேட்பாளருக் கும் டெபாசிட் கிடைக்காத அளவுக்கு ஒரு லட்சத்து 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆறாவது முறையாக அவர் வெற்றி பெற்றார். அப்படி இருந்தும் ஐ.பி.க்கு முக்கியத் துறையைக் கொடுக்காமல் கூட்டுறவு துறையைக் கொடுத்து அவர் மனதை நோகடித்தார்கள். இருந்தும் கூட்டுறவுத்துறையிலும் தன் முத்திரையைப் பதித்து மக்களிடம் சபாஷ் வாங்கி இருக்கிறார். இப்படிப்பட்ட அவரின் சிபாரிசுகளை சக அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை. டிரான்ஸ்பர் விவகாரங்கள் பெண்டிங்கில் கிடக்கிறது. போக்குவரத்துத் துறை, நகர்ப்புற உள்ளாட்சி துறை உள்பட சில அமைச்சர்களுக்கு, கட்சியினரின் மனுக்களை அனுப்பியும் அவர்கள் அழிச்சாட்டியமாக இருக்கிறார்கள். அதனால்தான் ஐ.பி. பவர்ஃபுல் துறையை எதிர்பார்க்கிறார்.

முன்பு தென்மாவட்டமே ஐ.பி.யின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. தலைவர் ஸ்டாலின், கொங்கு மண்டலத்துக்கும், வட மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல் தென் மாவட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, எங்கள் அமைச்சரை வீரியத்தோடு களத்தில் இறக்கவேண்டும்.” என்கிறார்கள் அழுத்தமாக.

அறிவாலயம் என்ன நினைக்கிறதோ?