(2) மக்களை மயக்கும் மாய பிம்பம்?
2021ஆம் ஆண்டு, சென்னை அருகே, சொல்லப்போனால் சென்னைக்குள்ளேயே இருக்கும் மாவட்டத்தில் தி.மு.க. செயல்வீரர் களுக்கான பயிற்சிக் கூட்டம். பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத வெறி, வேட்கையுடன் கழகத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்தே தீருவோம் என்று தேர்தல் பிரச்சாரத்துக்குத் தயாராகயிருந்தனர் தொண்டர்கள். பயிற்சிக்கு வந்தவர்களுக்கு சின்ன ஆச்சரியம்... அதிர்ச்சி என்றே சொல்லலாம். வழக்கமான பயிற்சிபோலல் லாமல் கஊஉ டிஸ்பிளே எல்லாம் வைத்துக் கொண்டு, அதன் முன்னால் கார்ப்பரேட் அலு வலக உடை மொழி, உடல் மொழி அணிந்த 25-26 வயதுள்ள இளைஞர் நின்றுகொண்டு, "குட்மார் னிங் ஆல்...' என்று சொல்லும் தோரணையில், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நாம் மக்களிடம் கொண்டு சொல்லவேண்டிய முக்கிய விசயங்கள் என்ன? அதை எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து செமினார் எடுக்கத் தொடங்கி னார். இதை பார்த்துக்கொண்டேயிருந்தார் நாற்பது வருட அரசியல் அனுபவம் உள்ள அந்தப் பகுதி முக்கிய புள்ளி. கொஞ்ச நேரத்தில் அங்கு "புதுப்பேட்டை' சீன் நடந்தது.
"ஒரு நைட் தாண்டிட்டா அன்பு ஏரியா உன்னுதுடா' என்று கொக்கி குமாரான தனுஷிடம் சவால்விட்டு, தாண்டிய பின் ஏரியாவை ஒப்ப டைப்பார் அழகம்பெருமாள். பொறுப்பேற்ற தனுஷ் ஏரியா புள்ளிகளுடன் மீட்டிங் நடத்துவார். அப் போது ஒரு பழைய கை எழுந்து "மேல என்னா நடக்குதுன்னே தெரியல... முந்தாநேத்து வந்த இவரு சொல்லுவாராம், நாங்க கேக்க ணுமாம்' என்று பிரச்சினை செய்வார். அப்படி அந்த அனு பவம் வாய்ந்த அரசியல் புள்ளி எழுந்து, அந்த கார்ப்பரேட் இளைஞரிடம் "தம்பி... நாங்க எல்லாம் இதுல ஊறுனவங்க... தலைமை சொல்லுதேன்னு இங்க வந்தோம், எங்களுக்குத் தெரியும்' என்று எகிறினார். அடுத்த நாள் அதேபுள்ளி முழு ஒத்துழைப்பு தந்தார். வேறு வழியில்லாமல் வெளியூர் ஆட் டக்காரர்களை பொறுத்துக் கொண்டார். நடுவில் வந்தது முக்கிய இடத்திலிருந்து ஒரு போன்கால். "கோடி, கோடியா செலவுபண்ணி அந்த டீமை கூட்டி வந்துருக்கோம், ஒத்துழைச்சு ஜெயிக்கிற வழிய பாருங்க' என்பதைத்தான் அரசியல் மொழியில் சொல்லி யிருப்பார்கள். இது தி.மு.க.வுக் காக ஐ-பாக் பணியாற்றிய போது மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்தப் புது யுக வியூக வகுப்பாளர்கள், கட்சி களின் பாரம்பரிய களப்பணி யாளர்களுடன் பணிபுரியும் போது ஏற்படும் பிரச்சனைதான். உண்மையை சொல்லப் போனால் 2021 தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. வெல்வதற்கான வாய்ப்புகள்தான் இயல் பாகவே இருந்தன. பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சி, அதிலும் கடைசி சில ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, பா.ஜ.க. கூட்டணி என பல காரணங்கள் இருந்தன. ஆனாலும் தி.மு.க. ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நூறு சதவிகிதம் சரியாக உறுதிப்படுத்த வேண்டும் என்றுதான் இந்த "பிரசாந்த் கிஷோர் முடிவு'.
சரி... இவர்களுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? இந்தக் கேள்வி மீண்டும் நம்மை ஜி-யிடம்தான் கூட்டிச் செல்லும். ஏனெனில் 2014 இந்திய நாடாளு மன்றத் தேர்தல் என்பது இந்திய தேர்தல் வரலாற் றில் ஒரு திருப்புமுனை. அதுவரை இல்லாத அள வில் சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, ஒரு தனி மனிதரை கட்சியின், இந்தியாவின் முழு முகமாகக் கட்டமைத்ததும் அந்தத் தேர்தல்தான். பின்னாளில் மம்தா, மு.க.ஸ்டாலின் என பலரும் பயன்படுத்திய "நம்பிக்கை தரும் தலைவர்' என்ற பிம்ப கட்டமைப் புக்கு வழிகாட்டி அந்தத் தேர்தல்தான். "மோடி' என்ற அந்த பிம்பக் கட்டமைப்பை பா.ஜ.க.தான் முழுமையாகச் செய்ததா என்றால் "இல்லை' என்பதே பதில். பல மூத்த தலைவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் மோடியோ "நீங்க பேசிக்கிட்டே இருங்க... நான் வேலைய பாக்குறேன்' என்று குஜராத்திலேயே தனக்கான டீமை உருவாக்கி வேலைகளை தொடங்கிவிட்டார். அந்த டீம்தான் கடந்த பகுதியில் நாம் கூறிய பிரசாந்த் கிஷோர் அன் கோ., குஜராத் மாடல் என்ற மாய பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால், கொஞ்சம் உண்மை கலந்திருந்தால்தான் மக்கள் நம்புவார்கள் என்பதற்கேற்ப உண்மையோடு கலந்து உருவாக்கி னார்கள். குஜராத் மாடலை பிறகு ஆராய்வோம். மோடி என்ற ஹீரோ பிம்பத்தை கவனிப்போம். ஒரு உதாரணம்... 2004-2014 காங்கிரஸ் ஆட்சியில் பெரும் தலைவராகவோ, மக்கள் ஆதரவுபெற்றவ ராகவோ இல்லாத ஆனால் அறிவாளியான, நிர்வாகியான மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். ஜெயலலிதா - ஓ.பி.எஸ்., சோனியா - மன்மோகன் என நியாயமில்லாத ஒப்பீடெல்லாம் அப்போது நடந்தது. மன்மோகன் சிங்கை பொம்மை பிரதமர் என்று தீவிரமாக விமர்சித்து அந்தக் கருத்தை பரப்பியது பா.ஜ.க. பொம்மை பிரதமருக்கு எதிராக, பதிலாக யார்? என்ற கேள்வி வரும்போது ஒரு "ஏழைத்தாயின் மகன், 56 இன்ச் மனிதர், குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர்' என ஒருவர் பலம் வாய்ந்த ஒருவர் தேவை என்ற எண்ணத்தை நாடு முழுக்க உருவாக்கி னார்கள். காங்கிரஸின் குறைகள் அதற்கு வலுவூட்டின.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/warroom1-2026-02-02-16-15-56.jpg)
பத்தாண்டுகள் காங்கிரஸ் ஆட்சியி-ருந்தபோது, இப்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போல அப்போது சிலர் இருந்தனர். அவர்களில் ஒருவர் மணிசங்கர் ஐயர். "மோடி நாடாளுமன்றத்தில் தேநீர் விற்க வரலாம், நானே இடம் பார்த்துத் தருகிறேன், பிரதமராக முடியாது' என்று கமெண்ட் அடித்தார். நம்ம மேல யாராவது கல் எறிஞ்சா அந்தக் கல்லை வச்சு வீடு கட்டணும் என்ற சுயமுன்னேற்றத் தத்துவத்துக்கு ஏற்ப அந்த கமெண்ட்டை வைத்தே "சாய் பே சர்ச்சா' என டீ சந்திப்பில் மோடியுடன் மக்கள் அரசியல் பேசும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவை நாடு முழுவதும் டீக்கடைகளில் ஒளிபரப்பப்பட்டன. அது புது ஐடியா இல்லை, ஆனால் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டது. "ஒரு டீ விற்றவன் இந்த நாட்டின் பிரதமராகக் கூடாதா?' என்று 'போயஸ் கார்டனில் நானெல்லாம் வீடு வாங்கக் கூடாதா?' என்று பொங்கிய தனுஷுக்கு முன்னோடியாகக் கேட்டார் மோடி. சென்டிமெண்ட் சிறப்பாக வேலை செய்தது. உண்மையில் யார் வேண்டுமானா லும் இந்த நாட்டின் முதல்வராகலாம், பிரதமராக லாம். அதற்கான தகுதி பிறப்போ, தொழிலோ அல்ல. ஆனால் ட்ரம்ப் வரும்போது குடிசைப் பகுதிகளை சுவர் வைத்து மறைத்தது போல, பழைய கறைகளை மறைத்து புதிய பிம்பத்தை உருவாக்குவது சரியல்ல. சரி, தவறுகளை தாண்டி வார் ரூம்களில் உருவான தந்திரங்களைத் தான் நாம் பேசுகிறோம்.
2011 சமயத்தில் மோடியின் வார் ரூமில் ஒருவரும் குஜராத் விளம்பரத் துறையில் முக்கியமானவருமான மனிஷ் பர்டியா இன்னொரு ஐடியா கொடுத்தார். கேட்ட தும் குதூகலமான மோடி, 'ரெண்டே நாள்ல ரெடியாகணும்' என்றார். அது மோடியின் யூ-டியூப் சேனல். ஜியோ வருகைக்குப் பிறகுதான் நாடு முழுவதும் மிகப் பரவலாக தொலைபேசி இணைய பயன்பாடு பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் அதற்கெல்லாம் முன்பே நரேந்திர மோடி யின் அதிகாரபூர்வமான சேனல் உருவாக்கப்பட் டது. யூ-டியூப் சேனல்களின் தாக்கம் நமக்குத் தெரிந்ததுதான். சில ஆண்டுகள் முன்பு நாடே "திருடர்' என்றும் "தனது ஊழியர்களை ஏமாற்றி விட்டு ஓடியவர்' எனவும் பழித்த, தேடப்படும் குற்ற வாளியான தொழிலதிபர் விஜய் மல்லையா, சமீபத் தில் ராஜ் ஷமானி என்ற யூ-டியூப் பிரபலத்துக்கு "பாட்காஸ்ட்' எனப்படும் 4 மணி நேர நீண்ட நேர் காணல் கொடுத்தார். அந்தப் பேட்டியை பார்த்து முடிக்கும்போது 'பாவம் மனுசன் ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கார் போல' என்ற எண்ணம் தோன் றும். கீழே கமெண்ட்கள் அதை பிரதிபலிக்கின்றன. ஏன்... மதுரை வரிச்சியூர் செல்வத்தின் பேட்டிகளை ஒரு யூ-டியூப் சேனல் தொடர்ந்து வெளியிட்டது. கீழே கமெண்ட்டில், "ச்சே... நல்லவர்தான் போல' என்றெல்லாம் கூட
கமெண்டுகள் காணக் கிடைக் கும். இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன. ஒருவரை நாம் செய்திகள் மூலமாகத் தெரிந்து வைத்திருக்கும் பரிமாணத்தை உடைக்கும் வகையில் அவரது சொந்த வாழ்க்கை அல்லது வேறு ஆர்வங்கள், செயல்பாடுகள் குறித்து அறியும்போது இயல்பாக ஒரு நெகிழ்வு ஏற்படுகிறது. நேரடி விளம்பரத்தை விட இது போன்ற மறைமுக புரமோஷன்களுக்கு இப்போது மதிப்பு. ஐ.பி.எஸ். வேலையை விட்டுவிட்டு ஆடு வளர்த்தல், விவசா யம் குறித்து பேட்டியளித்ததும் இதற்காகத்தான். இன்னும் பலர் விவசாய நிலங்களை காட்டுவதும் இதற்காகத்தான். பிரதமரின் யூ-டியூப் சேனலில் அம்பானி ஆரம்பித்த பல்லுயிர் பாதுகாப்பு மையத்தில் காண்டாமிருகத்துக்கு உணவூட்டும் வீடியோவெல்லாம் இருக்கும். அதை 509 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.
இவர்கள் மத்தியில் அதிகமாக புழங்கும் இன்னொரு வார்த்தை நேரேட்டிவ். நேர்மையாக சொல்லப்போனால் செய்தி ஊடகங்களில் அது ஒரு கெட்ட வார்த்தையாக இருக்க வேண்டும். ஆனால்...
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/warroom-2026-02-02-16-15-39.jpg)