(7) ஒரு நாயகன் உதயமாகிறான்...
சுற்றி ஒரு பெண்கள் கிரிக்கெட் அணியே குதூகலத்தோடு சிரித்துக்கொண்டு இருக்க, நடுவே நம் பிரதமர் ஒரு கையை நெற்றியில் வைத்துக் கொண்டு வெட்கத்தால் புன்னகைத்துக்கொண்டு இருந்தார். "என்னை பார்த்து எப்படி அப்படி கேக்கலாம்?'' என்று கோபப்படவில்லை. மோடி எப்போதுமே பாராட்டுக்களை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு மகிழ்பவர். உலகக்கோப்பையை வென்று வந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சந்தித்து, வாழ்த்தி அவர்களுடன் உரை யாடினார் மோடி. அப்போது சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கானோரால் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீராங்கனையான ஹர்லீன் தியோல் கேட்ட கேள்விதான், "உங்கள் சருமப் பாதுகாப்பு முறை என்ன சார்? உங்கள் முகம் ஜொலிக்கிறது'' என்பது. ஒரு நிமிடம் மகிழ்ச்சி நிறைந்த வெட்கப் புன்னகையோடு தலையை குனிந்துகொண்ட மோடிக்குத் துணையாய் வந்தது இன்னொரு வீராங்கனை. சினே ராணா, "மக்களின் அன்பா சார்?'' என்று எடுத்துக்கொடுக்க, "ஆம்... நம் மக்கள் 140 கோடி பேரின் அன்புக்கு ஒரு சக்தி இருக்கிறது, அதுதான் என் முகத்தை ஜொலிக்கவைக்கிறது" என்றார் மோடி.
அந்த வீடியோ எதிர்பார்த்தது போலவே வைரலானது. கோடிக்கணக்கானோரை சென்ற டைந்தது. 'எவ்வளவு இயல்பாக இருக்கிறார் மோடிஜி, அவரை யாரும் எளிதில் அணுகலாம்' என்ற ரீதியில் ஆயிரக்கணக்கான கமெண்டுகள். முன்பெல்லாம் ஒரு சாதனை நிகழ்ந்தால் அதை பாராட்ட, அங்கீகரிக்க, அந்த நபரை மக்களுக்குக் கொண்டு சேர்க்க இது போன்ற உரையாடல்கள், பாராட்டு விழாக்கள் நடைபெறும். புகைப்படங் கள், வீடியோக்கள் ஊடகங்களுக்கு பகிரப்படும். ஆனால் இப்போதோ ஊடகங்களுக்கு அனுப்பு வதற்காகவே, சமூக ஊடகங்களில் வைரல் ஆவதற்காகவே யோசித்துப் புதுப்புது
(7) ஒரு நாயகன் உதயமாகிறான்...
சுற்றி ஒரு பெண்கள் கிரிக்கெட் அணியே குதூகலத்தோடு சிரித்துக்கொண்டு இருக்க, நடுவே நம் பிரதமர் ஒரு கையை நெற்றியில் வைத்துக் கொண்டு வெட்கத்தால் புன்னகைத்துக்கொண்டு இருந்தார். "என்னை பார்த்து எப்படி அப்படி கேக்கலாம்?'' என்று கோபப்படவில்லை. மோடி எப்போதுமே பாராட்டுக்களை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு மகிழ்பவர். உலகக்கோப்பையை வென்று வந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சந்தித்து, வாழ்த்தி அவர்களுடன் உரை யாடினார் மோடி. அப்போது சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கானோரால் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீராங்கனையான ஹர்லீன் தியோல் கேட்ட கேள்விதான், "உங்கள் சருமப் பாதுகாப்பு முறை என்ன சார்? உங்கள் முகம் ஜொலிக்கிறது'' என்பது. ஒரு நிமிடம் மகிழ்ச்சி நிறைந்த வெட்கப் புன்னகையோடு தலையை குனிந்துகொண்ட மோடிக்குத் துணையாய் வந்தது இன்னொரு வீராங்கனை. சினே ராணா, "மக்களின் அன்பா சார்?'' என்று எடுத்துக்கொடுக்க, "ஆம்... நம் மக்கள் 140 கோடி பேரின் அன்புக்கு ஒரு சக்தி இருக்கிறது, அதுதான் என் முகத்தை ஜொலிக்கவைக்கிறது" என்றார் மோடி.
அந்த வீடியோ எதிர்பார்த்தது போலவே வைரலானது. கோடிக்கணக்கானோரை சென்ற டைந்தது. 'எவ்வளவு இயல்பாக இருக்கிறார் மோடிஜி, அவரை யாரும் எளிதில் அணுகலாம்' என்ற ரீதியில் ஆயிரக்கணக்கான கமெண்டுகள். முன்பெல்லாம் ஒரு சாதனை நிகழ்ந்தால் அதை பாராட்ட, அங்கீகரிக்க, அந்த நபரை மக்களுக்குக் கொண்டு சேர்க்க இது போன்ற உரையாடல்கள், பாராட்டு விழாக்கள் நடைபெறும். புகைப்படங் கள், வீடியோக்கள் ஊடகங்களுக்கு பகிரப்படும். ஆனால் இப்போதோ ஊடகங்களுக்கு அனுப்பு வதற்காகவே, சமூக ஊடகங்களில் வைரல் ஆவதற்காகவே யோசித்துப் புதுப்புது விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவை நன்கு ஆராய்ந்து எழுதப்படும், நடத்தப்படும் நிகழ்ச்சிகளாக இருக்கின்றன.
மோடி தனது முகம், தோற்றம், உடை என கவனம் செலுத்தியதை நாம் அறிவோம். அதிலும் 2014 தேர்தலில் பிரசாந்த் கிஷோர் டீமும் பலமாக இருக்க, எல்லா வகையிலும் மாற்றம் கண்டு இறங்கி விளையாடினார், வெற்றியும் கண்டார். தமிழ்நாட் டில் அப்படி தேர்தல் வியூக வகுப்பாளர்களை வரவழைத்து செட்டப்பை மாற்றி கெட்டப்பை மாற்றி களத்தில் இறங்கி கலக்கியவர் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். பிரசாந்த் கிஷோர் தமிழ்நாட்டிற்கு வரும் முன்பே அவருடன் பணியாற்றிய சுனில் கனுகொல்லு தமிழ்நாட்டில் கால் பதித்துவிட்டார். 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தி.மு.க.விற்கு முக்கியமான தேர்தலாக இருந்தது. 2006-11 தி.மு.க. ஆட்சியின் பாதியில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், கட்சி -ஆட்சி இரண்டையும் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். 2015ஆம் ஆண்டே தி.மு.க.விற்காக தேர்தல் திட்ட வியூகங்கள் வகுக்க சுனில் அழைக்கப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது தொடங்கியது ஆட்டம். "நமக்கு நாமே' என்ற முழக்கத்துடன் "முடியட்டும் விடியட்டும்' என்று விடியல் மீட்புப் பயணம் புறப்பட்டார் ஸ்டாலின். இந்தப் பயண வடிவமே தமிழ்நாட்டிற்குப் புதிதாக இருந்தது.
ஸ்டாலினின் உடையில் தொடங்கி... பேச வேண்டிய விசயங்கள், சந்திக்க வேண்டிய மக்கள், விமர்சிக்க வேண்டிய அரசியல் எதிரிகள் என இந்தப் பிரச்சாரப் பயணத்தை பார்த்துப் பார்த்து வடிவமைத்தார் சுனில். முதலில் ஸ்டாலினின் தோற் றம்! அதுவரை பொதுவெளியில் பெரும்பாலும் வேட்டி சட்டை அணிந்து காணப்படும் ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தில் விதவிதமான வண்ணங்களில் பேன்ட் சட்டை அணிந்திருந்தார், டக்-இன் செய்திருந்தார், ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுக்கொண்டார். மக்களுடன் பழகுகையில் சட்டைக் கையை மடித்து விட்டுக்கொண்டார். அவரது உடை ஃபிட்டாக, இளமையான வண்ணங்களில் அமைந்திருந்தது. தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களில் இருந்து, சென்னை வியாபாரிகள் வரை பல தரப்பு மக்களை சந்தித்தார். இந்த சந்திப்பு வடிவமைக்கப்பட்ட விதம் இரண்டு விசயங்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவதாக இருந்தது. ஒன்று... "நமக்குத் துணை நாமே... இந்த அரசை நம்பிப் பயனில்லை' என்ற அப்போதைய அ.தி.மு.க. அரசின் மீதான அவநம்பிக்கை, அதற்கு சரியான மாற்று இவர்தான் என்ற நம்பிக்கை. இன்னொரு செய்தி ஜெயலலிதா போன்ற மக்கள் அணுக முடியாத, ஏன் அமைச்சர்களும் அதிகாரிகளுமே நினைத்த நேரத்தில் சந்திக்க முடியாத முதல்வருக்கு மாற்று, மக்களை நெருங்கிவந்து மக்களோடு மக்களாக நிற்கும் ஒருவர்தான் என்பது. 2015 சென்னை பெரு வெள்ளம் மிகச் சரியான உதாரணம். அந்த அவசர நேரத்தில் கூட உடனே அணுக முடியாதவராகத்தான் ஜெயலலிதா இருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/warroom1-2026-02-19-17-42-51.jpg)
நமக்கு நாமே மூலம் கட்சிக்காரர் களுக்குக் கூடுதல் செய்தியாக அமைந்தது "தி.மு.க.வின் எதிர்காலம் அல்ல, நிகழ்காலமே ஸ்டாலின்தான்' என்பது. அப்போதே ஸ்டாலினுக்கு 62 வயதாகியிருந்தது. ஆனால் அப்போது வரை அவர் தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படவில்லை. ஆனாலும் அவர்தான் தி.மு.க.வின் அடுத்த முகம் என்பது உறுதியானது. 2015 தொடங்கி 2016 தொடக்கம் வரை பல கட்டங்களாக நடந்த விடியல் மீட்புப் பயணம் பொது மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது, அதே நேரம் "இதெல்லாம் புதுசா இருக்கே... எல்லாம் செட்டப்பா இருக்கே' என்ற வியப்பையும் பெற்றது. எதிர்க்கட்சிகளுக்குமே "இது புதுசா இருக்கே...' என்ற எண்ணம்தான். ஆனால், ஆட்சியிலிருந்த ஜெயலலிதா இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. தனக்கு தான்தான் ஆலோசகர், தான் அமைக்கும் வியூகம் அ.தி. மு.க.வுக்குப் போதும் என்று இருந்தார். ஒரு பக்கம் ஸ்டாலின் ரோட்டில் இறங்கி மக்களோடு மக்களாக நிற்க, இன்னொரு பக்கம் ஜெயலலிதாவோ வேட்பாளர்களைக் கூட தன்னோடு மேடையில் அமர விடாமல், தான் மட்டும் அமர்ந்து பிரச்சாரம் செய்யும் புது மாடலை இறக்கினார். அதுவும் ஒவ்வொரு ஊராக ஸ்டாலின் செல்ல, இவரோ பல தொகுதி மக்களை ஒன்றாக ஒரு இடத்தில் கூட்டி அங்கே ஹெலிகாப்டரில் வந்திறங்கி பிரச்சாரம் செய்தார். வெயிலில் தலையில் துண்டைப் போட்டுகொண்டு மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க, வந்திறங்கும் ஜெயலலிதா, 2-3 மாவட்டங்களுக்கு சேர்த்துப் பேசிவிட்டு, இறுதியாக வேட்பாளர்களை ஒன்றாக மேடையேற்றி அறிமுகம் செய்வார். லைட்டா, த.வெ.க. தலைவர் டச் தெரிகிறது இல்லையா? இந்த பிரச்சார முறை அரசியலில் ஆணவத்தின் அடையாளமாகத்தான் பார்க்கப்பட்டது. மக்கள் மயங்கி விழுந்ததை எதிர்க்கட்சி மீடியாக்கள் செய்தியாக்கின. பல தலைவர்கள் விமர்சித்தனர். எதைப்பற்றியும் கவலை கொள்ளவில்லை ஜெயலலிதா. 'செய்வீர்களா... செய்வீர்களா?' என்று மக்களைப் பார்த்து முழங்கினார்.
அப்போதைய ஒருங்கிணைந்த பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், ஆட்சியிலிருந்த ஜெய லலிதாவை விட எதிரில் இருந்த ஸ்டாலினைத்தான் அதிகமாக விமர்சித்தார். "இதெல்லாம் ஷூட்டிங்... டெய்லி காலைல டைரக்டர் வந்து ஸ்டாலினிடம் பேசுவார். "இன்னைக்கு டீக்கடைக்கு போறோம்ங்க, டீ குடிக்கிறீங்க, கவலைப்படாதீங்க, எல்லோரும் குடிக்கிற டம்ளர் இல்லை, சுத்தமா இருக்கும். அடுத்த வயலுக்குப் போறோம், இறங்குறோம், அங்க ஒரு சீன் இருக்குங்க...' என்று மும்பையி லிருந்து வந்த டைரக்டர் சொல்லச் சொல்ல நடிக்கிறார் ஸ்டாலின்' என்று கூறினார் அன்புமணி. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. முந்தைய 2011 தேர்தலில் திமுக 23 தொகுதிகளில் மட்டுமே வென்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பையும் தே.மு.தி.க.விடம் இழந்தது. இந்த நிலையைப் பார்த்த அன்புமணி இதை தி.மு.க.வின் வீழ்ச்சி என்று நினைத்து, தான் அந்த இடத்துக்கு முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தார். ஸ்டாலினுக்குப் போட்டியாக இறங்கினார். நமக்கு நாமே, விடியல் மீட்புப் பயணத்தை ஷூட்டிங் என்று கிண்டல் செய்த அன்புமணி, விரைவில் தானும் ஒரு ஷூட்டிங்குக்கு... இல்லை இல்லை, பயணத்துக்குத் தயாராகினார்.
சேலம் அருகே ஒரு கிராமத்தில் பா.ம.க. தொண்டர் வீட்டுக்குச் செல்கிறார் அன்புமணி ராமதாஸ். சாதாரண தொண்டர் வீட்டில், கட்சியின் மிக முக்கியமானவரான, மருத்துவர் அய்யாவின் மகனான சின்னய்யா சாப்பிடுகிறார் என்பதுதான் அன்றைய திட்டம். காரிலிருந்து இறங்கும்போது ஒரு வயதான தொண்டர் 'சின்ன அய்யா வாழ்க! வருங்கால முதல்வர் வாழ்க!' என்று கொந்தளிப் போடும் குதூகலத்தோடும் கத்தினார். காரிலிருந்து இறங்கிய அன்புமணி அந்தத் தொண்டரின் தோள் மீது கை போட்டு, "நிறுத்துங்க... நிறுத்துங்க... இனிமே இப்படியெல்லாம் கத்தக்கூடாது, கோஷம் போடக்கூடாது... நாம மாறிட்டோம்'' என்று சொன்னார். கேமராக்களில் சரியாக விழவில்லை என்று நினைத்தாரோ என்னவோ மீண்டும் தெளிவாக ஒரு முறை சொன்னார்...
"நாம மாறிட்டோம்.'' அது என்ன மாற்றம்? அதுதான் "மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி!'
அதற்கு யார் டைரக்டர்? என்ன சீன்கள்? பார்ப்போம்...
(தொடரும்)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us