Advertisment

மினி தொடர் வார் ரூம்! அரசியல் வியூகம்... தந்திரம்... விளைவு -வசந்த் பாலகிருஷ்ணன் (5)

warroom4

(5) "ப்ராண்ட்' பேர சொன்னாலே கெத்தா இருக்கணும்!


கே.ஜி.எஃப். படத்தில் நாயகன் யஷ்,  'ராக்கி பாய்' என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார். பிற்காலத்தில் அனைவரும் மிரளும் ஆளுமையோடு, ஆணவத்தோடு, கம்பீரத்தோடு, வன்முறையோடு வலம்வரும் அந்த பாத்திரம் சிறு வயதில் தன் தாயை இழந்து ஆதரவற்ற சிறுவனாய் பம்பாய் வீதிகளில் சுற்றிவரும். ரேமண்ட் -since 1925 (படத்தில் டேமன்ட் என்று குறிப்பிட்டிருப்பார்கள்) என்ற விளம்பரத்தை பார்த்துவிட்டு தனது நண்பனிடம், "அப்படின்னா என்ன?' என்று கேட்பான். பெரிய ப்ராண்டுக்கெல்லாம் அப்படித்தான் தொடங்குன வருசத்தோட போடுவாங்க. "ப்ராண்ட்'ன்னா, அந்தப் பேருலயே ஒரு கெத்து இருக்கும். அதைச் சொன்னாலே எல்லாருக்கும் தெரியும் என்பான் நண்பன். தான் ஒரு ப்ராண்ட் ஆகவேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்துவிடுவான் ராக்கி. அப்படி எதுவும் சிறு வயதில் முடிவுசெய்தாரா என்று தெரிய வில்லை. 

Advertisment

ஆனால், உண்மையில் ஒரு "ப்ராண்ட்' ஆனார் நம் பிரதமர் நரேந்திர மோடி. அந்த "ப்ராண்ட்'-இன் பெயர் "நமோ'. ஆங்கிலத்தில் "NaMo' என்று நரேந்திர மோடியின் சுருக்கமாக எழுதப்பட்ட இந்தப் பெயர் நிஜமாகவே ப்ராண்ட் ஆனது. "என்னயா... ரேமண்ட்னா துணி ப்ராண்ட், டைட்டன்னா வாட்ச் ப்ராண்ட், பெல்லா விட்டான்னா வாசனை திரவிய ப்ராண்ட், "நமோ'ன்னா என்ன ப்ராண்ட்?'' என்று கேட்கிறீர்களா? 

Advertisment

டி-ஷர்ட், பெண்கள் தற்காப்புக்காகப் பயன்படுத்தும் பெப்பர் ஸ்ப்ரே, பெண் ட்ரைவ், நோட்டுப் புத்தகம்

(5) "ப்ராண்ட்' பேர சொன்னாலே கெத்தா இருக்கணும்!


கே.ஜி.எஃப். படத்தில் நாயகன் யஷ்,  'ராக்கி பாய்' என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார். பிற்காலத்தில் அனைவரும் மிரளும் ஆளுமையோடு, ஆணவத்தோடு, கம்பீரத்தோடு, வன்முறையோடு வலம்வரும் அந்த பாத்திரம் சிறு வயதில் தன் தாயை இழந்து ஆதரவற்ற சிறுவனாய் பம்பாய் வீதிகளில் சுற்றிவரும். ரேமண்ட் -since 1925 (படத்தில் டேமன்ட் என்று குறிப்பிட்டிருப்பார்கள்) என்ற விளம்பரத்தை பார்த்துவிட்டு தனது நண்பனிடம், "அப்படின்னா என்ன?' என்று கேட்பான். பெரிய ப்ராண்டுக்கெல்லாம் அப்படித்தான் தொடங்குன வருசத்தோட போடுவாங்க. "ப்ராண்ட்'ன்னா, அந்தப் பேருலயே ஒரு கெத்து இருக்கும். அதைச் சொன்னாலே எல்லாருக்கும் தெரியும் என்பான் நண்பன். தான் ஒரு ப்ராண்ட் ஆகவேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்துவிடுவான் ராக்கி. அப்படி எதுவும் சிறு வயதில் முடிவுசெய்தாரா என்று தெரிய வில்லை. 

Advertisment

ஆனால், உண்மையில் ஒரு "ப்ராண்ட்' ஆனார் நம் பிரதமர் நரேந்திர மோடி. அந்த "ப்ராண்ட்'-இன் பெயர் "நமோ'. ஆங்கிலத்தில் "NaMo' என்று நரேந்திர மோடியின் சுருக்கமாக எழுதப்பட்ட இந்தப் பெயர் நிஜமாகவே ப்ராண்ட் ஆனது. "என்னயா... ரேமண்ட்னா துணி ப்ராண்ட், டைட்டன்னா வாட்ச் ப்ராண்ட், பெல்லா விட்டான்னா வாசனை திரவிய ப்ராண்ட், "நமோ'ன்னா என்ன ப்ராண்ட்?'' என்று கேட்கிறீர்களா? 

Advertisment

டி-ஷர்ட், பெண்கள் தற்காப்புக்காகப் பயன்படுத்தும் பெப்பர் ஸ்ப்ரே, பெண் ட்ரைவ், நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பல பொருட் கள் "நமோ' ப்ராண்டில் தயாராகின.                     

மார்க்கெட்டிங் பற்றி பேசினோம். அந்த மார்க்கெட்டிங் யுக்திகளை சிறப்பாக வடிவமைத்து முழுதாக இறங்கியடித்தது நமோ டீம். 2012-ல் டெல்லியில் நடந்த ஒரு கொடூரத்தை நம்மில் பலர் கண்டிப்பாக மறந்திருப்போம். நிர்பயா வழக்கு என்றால் நினைவுக்கு வரும். தனது நண்பருடன் இரவில் பேருந்தில் பயணித்த 22 வயது இளம் பெண்ணை ஒரு குழுவே சேர்ந்து, தாக்கி, கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது. நாடே அந்த நேரத்தில் கொதித்தெழுந்தது. போராட்டங்கள் நடந்தன. இந்த சம்பவம் காங் கிரசுக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது. அப்போது டெல்லியிலும் காங்கிரஸ் ஆட்சி, மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி. எதிர்க்கட்சிகள் முழுமையாகக் கையில் எடுத்து செயல்பட்டன. 

நமோ என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஆபத்து நேரத்தில் பெண்கள் உதவி கோரலாம் என்று விளம் பரம் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்துக்கே ஒரு உறுப்பினர் பெப்பர் ஸ்ப்ரேயுடன் சென்றார். 

இதன் தொடர்ச்சியாகத்தான் நமோ பெப்பர் ஸ்ப்ரே ஐடியாவை உருவாக்கியது நமோ மார்க்கெட்டிங் டீம். இந்தியாவில், காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் நமோ பெப்பர் ஸ்ப்ரே. இதுபோல பல பொருட்கள் உருவாக்கப்பட்டு அவற்றை விற்பனை செய்வதற்காகவே "நமோ ஸ்டோர்' (NaMo Store) என்ற பெயரில் ஆன்லைன் விற்பனை மையம் தொடங்கப்பட்டது. பின்னாளில் கடைகளும் திறக்கப்பட்டன. சூப்பர் மேன் டீ-ஷர்ட்டில் ஆங்கில   "S' எழுத்து இருக்கும். அது போலவே நரேந்திர மோடியை குறிக்கும் "N'  எழுத்துடன் டீ-ஷர்ட்கள் விற்கப்பட்டன. ஊழலை ஒழிக்கும், வம்சாவளி ஆட்சியை ஒழிக்கும், பெண்களை பாதுகாக்கும், இந்தியாவை மீட்கும் சூப்பர்மேனாக மோடி உருவகம் செய்யப்பட்டார். மோடி முகமூடிகள் விற்கப்பட்டன. அரசியல் தலைவர்களின் முகத்தைக் கொண்ட முகமூடிகள் புதிய ஐடியா அல்ல. ஆனால், அவை அதுவரை அட்டையில் அச்சிடப்பட்ட தலைவர் முகமாகத்தான் இருக்கும். ஆனால், மோடி முகமூடி கூடுதல் சிரத்தையோடு உருவாக்கப்பட்டது. அட் டையாக இல்லாமல், மோடியின் முகமாகவே நேர்த்தியோடு உருவாக்கப்பட்டு விற்கப்பட்டது.

சரி... இதெல்லாம் எங்கிருந்து இவர்களுக்குத் தோன்றியது? ரூம் போட்டு யோசித்தார்களா? இல்லை! நம் ஊரில் பெரும்பாலான விசயங்கள் மேற்கு நாடுகளில் இருந்துதான் இறக்குமதி ஆகும். ஆடை முதல் ஐடியா வரை. அப்படி வந்ததுதான் இந்த வியூகங்களும். பிரச்சாரத்தில் இந்த குஜராத் மாடல், அமெரிக்க மாடலைத்தான் பின்பற்றியது. அமெரிக்காவில் எப்போதுமே அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஹீரோக்களாகவே முன்னிலைப் படுத்தப்படுவார்கள். அவர் களுக்கு பிரச்சாரத்துக்கான கால அளவும் அதிகமாக இருக்கும். அதனால் பெரிய குழுக்கள் அமைக்கப்பட்டு படிப்படியாக பிரச்சார நட வடிக்கைகள் மேற்கொள்ளப் படும். மோடி காலகட்டத்து உதாரணம் ஒபாமா. மாற் றத்துக்கான நாயகனாக ஒபாமா முன்னிலைப்படுத்தப்பட்டார். "ஆம்... நம்மால் முடியும்' (Yes, We Can) மற்றும் "மாற்றம்' குறித்த முழக்கங்கள் ஒபாமா வின் முழக்கங்களாக உருவாக் கப்பட்டன. பின்னர், நம்ம ட்ரம்ப் இதையெல்லாம் மிஞ்சினார். அவர் எடுத்த முழக்கம் 'அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்' (Make America Great Again). அவரிடம் ஒன்று கேட்க வேண்டும். "2016ல் இந்த முழக்கத்தை சொல்லி 2017ல் அதிபரானீங்க. 2021 வரை நீங்கதான் ஆட்சி செஞ்சீங்க. 2021ல் மக்கள் உங்களை அனுப்பிட்டாங்க. திரும்ப 2021 தேர்தலிலும் "அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்'னு சொன்னீங்க, இப்போ 2025 தேர்தலுக்கும் அதையே சொல்றீங்க? நீங்க அதிபரானபோது மகத்துவம் ஆச்சா இல்லையா? நடுவில் ஆட்சி மாறியதில் மகத்துவம் போய்விட்டதா?''. 

எல்லா அரசியல் தலைவர்களின் முழக்கமும் இப்படித்தான். நமோ தொடங்கி நீட் ஒழிப்பு வரை முழக்கங்கள் சிறப்பாகவே இருக்கும். ஓபனிங் எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். ஃபினிஷிங்தான் பிரச்சினை. ட்ரம்ப்பும் இதுபோல ட்ரம்ப் ஸ்டோர்ஸும் வைத்திருக்கிறார். அந்தக் காலத்திலிருந்தே தலைவர்கள் உருவம் சார்ந்த பொருட்கள் விற்பது நடைமுறையில் இருந்தது. ஆனால், அதை தலைவரே நேரடியாக ஈடுபட்டு செயல்படச் செய்தது என்பது மோடி விசயத்தில்தான் நடந்தது.                                   

மோடி -பிரசாந்த் கிஷோர் அண்ட் கோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தீவிரமாகப் பயன்படுத்தி வெறித்தனமாக விளம்பரங்கள், பிரச்சாரங்கள் செய்தபோது, காங்கிரஸ் என்னதான் செய்தது என்ற கேள்வியுடன் கடந்த பகுதியை முடித்தோம். 

2014ஆம் ஆண்டு இந்தியா நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருந்தது. 2013 காலகட்டத்தில் இன்னொரு தேர்தல் வியூக வல்லுனர் ராகுலை சந்தித்து வாட்ஸ் அப் -சமூக ஊடகங்கள் பயன்படுத்தி மறைமுக பிரச்சாரம் செய்வது குறித்துக் கூறியபோது ராகுல்காந்தி "இது அமெரிக்கா இல்லை, நீங்கள் இந்தியாவை பற்றி புரிந்துகொள்ளவில்லை. இங்கு இன்னும் மின்சாரம் இல்லா, சாலை இல்லா கிராமங்கள் இருக்கின்றன. அதை சரி செய்ய வேண்டும். நீங்கள் சோசியல் மீடியா குறித்துப் பேசுறீங்க. அதெல்லாம் வேலைக்காகாது'' என்று சொன்னாராம். 

அவர் சொன்னது உண்மைதான். ஆனால் ஒரு பக்க இந்தியா அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தாலும், இன்னொரு பக்க இந்தியா வாட்ஸ்அப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. மோடியின் இந்த வீச்சைப் பார்த்து ஒரு நிமிஷம் ஜெர்க்கான காங்கிரஸ், பதில் கொடுக்கத் தொடங்கியது. ஆனால் தகவல்கள், ஆதாரங்கள் கொண்ட அவர்களின் பதிலில் மசாலா இல்லை. பார்த்தவுடன் பார்வர்டு செய்யத் தோன்றவில்லை. 

2ஏ, காமன்வெல்த் என ஊழல் குற்றச்சாட்டுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெரிதாக்கிப் பரப்பினார்கள். காங்கிரசும் பதிலுக்கு குஜராத் கலவரம் குறித்து சொன்னார்கள், மோடியின் இந்துத்துவா முகம் குறித்து சொன்னார்கள். உடனே மோடி தனது தாயாரை சந்திக்கும் படங்கள் வந்தன. மோடி தியானம் செய்யும் படங்கள் வந்தன. இப்படி காங்கிரஸ் அதிகமாக எதிர்வினைகளை ஆற்ற வேண்டி இருந்தது. 

மோடி -பா.ஜ.க. -பிரசாந்த் கிஷோர் வினைகளையாற்றினார்கள். 

அடுத்தடுத்த வினைகள் என்ன?  

(தொடரும்)

nkn140226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe