Advertisment

மினி தொடர் வார் ரூம்! அரசியல் வியூகம்... தந்திரம்... விளைவு -வசந்த் பாலகிருஷ்ணன் (11)

warroom

(11) ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள்.

1994ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஒரு நாள்... பீகார் தலைநகர் பாட்னாவில் அரசியல் பரபரப்பு. லாலு பிரசாத் யாதவ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் எல்லோரும் டென்சனில் இருந்தனர். ஒரு செய்திக்காக லாலு இறுக்கமாகக் காத்திருந்தார். இன்னொரு புறம் நிதிஷ்குமாரின் குவார்ட்டர்ஸ் இல்லம். நிதிஷை பலர் வந்து சந்தித்தவண்ணம் இருந்தனர். "என்ன சொல்லப் போகிறாய்?' என்று காத்திருந்தனர். லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் தொடர்ந்து யாதவ் இன மக்களுக்கே அதிக முக்கி யத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்கின்றன என்றும் "குர்மி' உள்ளிட்ட வேறு சில சமுதாய மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஒரு பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதனையொட்டி பீகாரின் அரசியல் முக்கியத்துவம் பெற்ற "காந்தி மைதான்' திடலில் குர்மி சமூக மக்கள் பெரும் கூட்டம் ஒன்றை நடத்தினர். ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் வந்து சேர்ந்திருந்தது. பீகார் மட்டுமில்லாமல் டெல்லியும் அந்தக் கூட்டத்தை கவனித்தது. முதல்வர் லாலு வீட்டில் இருந்த உளவுத்துறை அதிகாரியின் வாக்கி டாக்கி ஒலித்தது. காத்திருந்த செய்தி வந்தது. கூட்டத்துக்கு நிதிஷ் குமார் வந்துவிட்டார் என்பதுதான் அந்த செய்தி. அதுவரை அரசியலில் ஒன்றாகப் பயணித்த இரு தலைவர்கள் பிரிந்த தருணம் அது. லாலுவின் ஆட்சிக்கு எதிராகத் திரண்ட கூட்டத்தில் நிதிஷ் பங்கேற்றார். தான் சார்ந்த குர்மி சமூக மக்களை நிதிஷ்தான் கூட்டினார் என்பது லாலு இப்போது வரை நிதிஷ் மீது வைக்கும் சாதி அரசியல் குற்றச்சாட்டு.

Advertisment

1994இல் நடந்த அந்தப் பிரிவுக்குப் பிறகு லாலுவும், நிதிஷும் பீகார் அரசியலில் எதிரும் புதிரும் ஆனார்கள். லாலு மீண்டும் முதல்வரானார். பின்னர் ஊழல் வழக்கில் சிறை சென்றார். அவரது மனைவி ராப்ரி தேவி முதல்வரானார். பின்னர்

(11) ஒரு மந்தையில் இருந்த இரு ஆடுகள்.

1994ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஒரு நாள்... பீகார் தலைநகர் பாட்னாவில் அரசியல் பரபரப்பு. லாலு பிரசாத் யாதவ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் எல்லோரும் டென்சனில் இருந்தனர். ஒரு செய்திக்காக லாலு இறுக்கமாகக் காத்திருந்தார். இன்னொரு புறம் நிதிஷ்குமாரின் குவார்ட்டர்ஸ் இல்லம். நிதிஷை பலர் வந்து சந்தித்தவண்ணம் இருந்தனர். "என்ன சொல்லப் போகிறாய்?' என்று காத்திருந்தனர். லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் தொடர்ந்து யாதவ் இன மக்களுக்கே அதிக முக்கி யத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்கின்றன என்றும் "குர்மி' உள்ளிட்ட வேறு சில சமுதாய மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஒரு பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதனையொட்டி பீகாரின் அரசியல் முக்கியத்துவம் பெற்ற "காந்தி மைதான்' திடலில் குர்மி சமூக மக்கள் பெரும் கூட்டம் ஒன்றை நடத்தினர். ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் வந்து சேர்ந்திருந்தது. பீகார் மட்டுமில்லாமல் டெல்லியும் அந்தக் கூட்டத்தை கவனித்தது. முதல்வர் லாலு வீட்டில் இருந்த உளவுத்துறை அதிகாரியின் வாக்கி டாக்கி ஒலித்தது. காத்திருந்த செய்தி வந்தது. கூட்டத்துக்கு நிதிஷ் குமார் வந்துவிட்டார் என்பதுதான் அந்த செய்தி. அதுவரை அரசியலில் ஒன்றாகப் பயணித்த இரு தலைவர்கள் பிரிந்த தருணம் அது. லாலுவின் ஆட்சிக்கு எதிராகத் திரண்ட கூட்டத்தில் நிதிஷ் பங்கேற்றார். தான் சார்ந்த குர்மி சமூக மக்களை நிதிஷ்தான் கூட்டினார் என்பது லாலு இப்போது வரை நிதிஷ் மீது வைக்கும் சாதி அரசியல் குற்றச்சாட்டு.

Advertisment

1994இல் நடந்த அந்தப் பிரிவுக்குப் பிறகு லாலுவும், நிதிஷும் பீகார் அரசியலில் எதிரும் புதிரும் ஆனார்கள். லாலு மீண்டும் முதல்வரானார். பின்னர் ஊழல் வழக்கில் சிறை சென்றார். அவரது மனைவி ராப்ரி தேவி முதல்வரானார். பின்னர் லாலு மத்திய ரயில்வே அமைச்சரானார். சிறப்பாக வும் கூட செயல்பட்டார். இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் அடுத்தடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். பிற்காலத்தில் பீகாரின் முதல்வருமானார். இவையெல்லாம் நடக்கும்போதே ஜனதா கட்சி பிரிவு, புதுக்கட்சிகள், கட்சி இணைப்பு எனவும் காட்சிகள் அரங்கேறின. எல்லாம் கடந்த ஐக்கிய ஜனதா தளம் நிதிஷின் கட்சியாகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் லாலுவின் கட்சியாகவும் இருக்கின் றன. இந்த இடத்தில் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். அது தமிழ்நாட்டுக்கும் வட மாநிலங் களுக்கும் உள்ள அரசியல் வித்தியாசம். தமிழ்நாட் டில் மிக முக்கிய கட்சிகளான தி.மு.க. -அ.தி.மு.க. இரண்டிலுமே முக்கிய தலைவர்கள், தமிழ்நாட்டு அரசியல் - டெல்லி அரசியல் என தெளிவாகப் பிரித்து செயல்படுவார்கள். தமிழ்நாட்டில் சட்ட மன்ற உறுப்பினர், அமைச்சராக இருந்தவர்கள் பெரும்பாலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். அதற்கென தனி செட் வைத்திருப்பார்கள். தி.மு.க.வில் அண்ணாதான் நாடாளுமன்ற உறுப்பினராகி பின்னர் தமிழ்நாட்டு முதல்வர் ஆனார். அதன்பின் வைகோ, முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி என டெல்லி அரசியலுக்கென சில முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க.விலும் அதுபோல சிலர் இருக்கிறார்கள். மாநில அரசியலில் முக்கியத்துவம் இழந்த சிலர் தேசிய கட்சிகளில் சேர்ந்து டெல்லி அரசியலுக்கு சென்ற பல உதாரணங்கள் இருக்கின்றன. அது தனி. தமிழ்நாட்டில் இப்படி இருக்க, பிற மாநிலங்களில் முதல்வராக இருக்கும் அளவு பெரிய தலைவர்கள்கூட மாநில தேர்தல்களில் தோற்ற நேரங்களிலும் அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டோ, போட்டியிடாமலோ நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், ஒன்றிய அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். பல உதாரணங்கள் இருக்கின்றன. பீகாரிலும் லாலு, நிதிஷ் இருவருமே அப்படித்தான்.

Advertisment

1994 பிரிவுக்குப் பின் எதிரெதிர் துருவமாக இருந்த லாலு -நிதிஷ் இருவரும் இருபது ஆண்டு கள் கழித்து 2014இல் கைகோர்க்க முடிவெடுத் தனர். அது எளிதாக நடந்துவிடவில்லை. பல ஆண்டுகளாக பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ், மோடி பிரதமர் வேட்பாளரானது உறுதியானதும் 2013இல் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி னார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பீகாரிலும் பா.ஜ.க. பெரிய வெற்றியை பெற்றது. மோடி அலை அடித்த விளைவு. வெளியூர்க்காரரின் இந்த ஆட்டம் உள்ளூர் ஆட்டக்காரர்கள் இருவரை யுமே அதிர்ச்சியடைய வைத்தது. இப்படியே தொடரவிட்டால் 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. கை ஓங்கும் என்ற பயம் வந்தது. இரண்டு பெரிய முடிவுகளை எடுத்தார் நிதிஷ். மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கருதப்பட்ட பிரசாந்த் கிஷோரை கொண்டுவந்தார். பிரசாந்த் கிஷோர் பீகார்க்காரர் என்பது கூடுதல் வசதியாயிற்று. இன்னொரு மிகப் பெரிய முடிவுதான் லாலுவுடன் இணைந்தது. 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே 2014இல் பத்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. அப்போதே இருவரும் இணைந்தனர். பலரது முயற்சி இதில் இருந்தது. சமாஜ்வாதி கட்சியின் பெரும் தலைவரான முலாயம் சிங் யாதவும் ஒரு முக்கிய காரணம். அவரது வீட்டில் நடந்த சந்திப்புக்குப் பிறகுதான் இந்த அறிவிப்பு வந்தது. இவர்கள் அனைவருமே மோடியை அத்தகைய பெரும் எதிரியாக, போட்டியாளராகக் கருதினர். இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்க, அதே கூட்டணியோடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடிவானது. ஆனால் இப்போ துள்ள பெரும் கேள்வி... வெற்றி பெற்றால் யார் முதல்வர்? லாலு முதல்வராக முடியாது. அவரது மனைவி, மகன்கள் இருந்தனர். ஆனால் நிதிஷ், ஏற்கனவே பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தன்னை வளர்ச்சிக்கான தலைவர் என்று விளம் பரங்கள் செய்யத் தொடங்கிவிட்டார். 2014இல் தேசிய அளவில் மோடி செய்ததை பீகாரில் நிதிஷ் செய்துகொண்டு இருந்தார். அப்படியிருக்கும் போது முதல்வர் பதவியை எப்படி விட்டுக்கொடுப் பது? அது முடியாத காரியம் என மறுத்தார். 

லாலு கட்சியிலிருந்து முதல்வர் வருவார் என்று அறிவித்தால் "மீண்டும் காட்டாட்சி வரும்' என்று பயந்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று வாதம் வைத்தார் நிதிஷ். லாலுவோ "இப் போது முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண் டாம், தேர்தலில் வென்றதும் பார்த்துக்கொள்ள லாம்' என்று கூறினார். முகமில்லாத கூட்டணியை மக்கள் எப்படி நம்புவார்கள் என்று கேட்டார் நிதிஷ். ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க என்று காத்திருந்தது கூட்டணியின் இன்னொரு அங்கமான காங்கிரஸ். வேறு வழியில்லாமல் லாலு ஒத்துக்கொள்ள, தேர்தலை எதிர்கொண்டு பெரும் வெற்றி பெற்றது மகா கூட்டணி. வெற்றிக் களிப்போடு பெரும் வேகத்தில் கட்டற்று ஓடிக் கொண்டிருந்த பா.ஜ.க. எனும் தேருக்கு சரியான கட்டை போட்டது போல இருந்தது இந்த வெற்றி. சரி... இந்தக் கூட்டணியில் பிரசாந்த் கிஷோரின் வேலை என்ன? நிதிஷுக்கு இந்தக் கூட்டணி ஐடியாவே ஆரம்பத்திலிருந்தே மிகவும் குழப்பமாக இருந்தது.  காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் போது மென்று நினைத்தார். ஆனால், பிரசாந்த் கிஷோர் கொடுத்த ரிப்போர்ட் அவரை யோசிக்க வைத்தது. பா.ஜ.க.-மோடி அலை பீகார் சட்டமன்ற தேர்தலையும் அடித்துச் செல்லாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு பெரிய மாற்றம் நிகழ வேண்டும், எதிரில் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது தெரியவந் தது. சரி... அதற்காக அத்தனை நாள் அடித்துக் கொண்டிருந்த இருவர் திடீரென சேர்ந்து நின்றால் மக்கள் எப்படி நம்புவார்கள்? பதவிக்காக இப்படி அசிங்கமா சேர்ந்துட்டாங்க என்று நினைக்க மாட்டார்களா? அங்குதான் பிரசாந்துக்கு நிறைய வேலையிருந்தது. 

இந்த மகா கூட்டணி தொடர்ந்த இரண்டு வருடங்களும் பீகார் மக்களுக்கும் செய்தியாளர் களுக்கும் நல்ல பொழுதுபோக்குதான். கூட்டணி உறுதியானது பற்றிய தகவல்கள் வர செய்தி யாளர்கள் லாலுவை சூழ்ந்தனர். "மதவாதம் என்ற கொடிய நாகத்தை கொல்ல, நான் எந்த விஷத்தையும் குடிக்கத் தயார்'' என்றார் லாலு. "என்னது... நான் விஷமா? என்னையா சொல்றார் இந்த ஆளு...' என்று கொந்தளித்து சில நாட்கள் எதையும் உறுதிப்படுத்தாமல் கதவை அடைத்துக் கொண்டார் நிதிஷ். மற்ற தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து சமாதானம் செய்தனர். இப்படி அடித்துக்கொண்டால் மக்கள் எப்படி நம்புவார்கள் என்று களமிறங்கிய பிரசாந்த் அன் கோ., பீகாரி ஸ்ள் பகாரி என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி பரபரப்பாகப் பரப்பியது. "உங்களை ஆளப் போவது பீகார் மண்ணின் மைந்தர்களா அல்லது வெளியூர்க்காரர்களா?' என்ற உணர்ச்சிமிகு கேள்வியை எல்லா வழியிலும் மக்களை நோக்கிக் கேட்டுக்கொண்டே இருந்தனர். நிதிஷை வளர்ச்சியின், பக்குவத்தின், நிலையான ஆட்சியின் அடையாளமாக முன்வைத்த னர். இப்படியாக பீகார் வெற்றி நிகழ்ந்து முதல்வரானார் நிதிஷ். துணை முதல்வரானார் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ். ஆனாலும் லாலு வாய் சும்மா இருக்கவில்லை. "நிதிஷ் கட்சியை விட எங்கள் கட்சி அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டிருக்கும்போதும், கொடுத்த வாக்குக்காக அவரை முதல்வராக்கி யிருக்கிறோம். அவர் என் காலில் விழுந்ததால்தான் இதற்கு ஒத்துக்கொண்டேன்' என்றார் லாலு. கடும் கோபமடைந்தார் நிதிஷ். இப்படி பல பிரச்னைகள். வியூக வகுப்பாளர்களின் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்து இந்தக் கூட்டணி உருவானது. 

அதுபோல ஒருவர் கொடுத்த ரிப்போர்ட் டால்தான் தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி விசயத்தில் இழுத்தடித்துக்கொண்டே யிருந்தது. த.வெ.க. பெயரை பயன்படுத்தி தி.மு.க.விடம் பேரம் பேசி தாமதம் ஆக்கிக் கொண்டேயிருந்ததற்குக் காரணம் ஒரு டீம் கொடுத்த ரிப்போர்ட். இந்த ரிப்போர்ட்டை நம்பலாமா கூடாதா?

(தொடரும்)  

nkn070326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe