தி.மு.க.வும் அ.தி.மு.கவும் கூட்டணி வைத்தால்?
"தேர்தல் வியூக வகுப்பாளரா... என்னை அப்படி சொல்லாதீர்கள்...'' என்று பிரசாந்த் கிஷோர் முதல்முறை ஒரு பத்திரிகையாளரிடம் சொன்னபோது அந்தப் பத்திரிகையாளர் மட்டுமல்ல, எல்லோருக்குமே எழுந்த கேள்வி, "வேற என்னன்னு சொல்றது?'' என்பதுதான். "நான் என் தாய் நாடான இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள வந்தவன்'' என்றே, தன்னைக் குறித்து பிரசாந்த் கிஷோர் சொல்லிக்கொள்வார். அதனால்தான் 2013-இல் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவதற்காக தான் தொடங்கிய நிறுவனத்துக்கு "பொறுப்பான ஆட்சிக்கான குடிமகன்கள்' என்று பொருள் படும் பெயரை வைத்தாராம் பிரசாந்த். கடந்த பகுதியில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக, தமிழ்நாட்டை மீட்க வந்த பாகுபலியாக ஏத்தி வைத்து அழகு பார்த்த ஜான் ஆரோக்கியசாமி குறித்தும் அவரது வியூகங்கள் குறித்தும் பார்த்தோம் அல்லவா? அந்தத் தேர்தல் முடிந்ததும் அவர் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார். அடுத்த கட்சி, அடுத்த தலைவர், அடுத்த ப்ராஜக்ட், அடுத்த பேமண்ட்... என்று பிசினஸ்மேன் மனநிலையில் நகர்ந்து விடுவார்கள் இந்த வியூக வகுப்பாளர்கள்.
இவர்கள் பெரும்பாலும் கொள்கை அடிப்படையிலோ, சிறந்த ஆட்சியை தந்தவர்கள், தரக்கூடியவர்கள் என்ற அடிப்படையி லோ கட்சிகளை, தலைவர்களை தேர்ந்தெடுத்துப் பணிபுரிவதில்லை. கொள்கையின் அடிப்படையில் எந்தக் கட்சியையும் மறுப்பதுமில்லை. இவர்கள் கருத்தில் கொள்ளும் காரணி, விற்கத்தக்க பொருளா என்பதுதான். தாங்கள் உடன் பணியாற்றவிருக்கும் தலைவர், மக்கள் மத்தியில் புகழ் பெற்றவரா, கட்சிக்குக் கட்டமைப்பு இருக்கிறதா, நல்ல பட்ஜெட் சொன்னால் செலவு செய்வார்களா என்பதுதான்.
தி.மு.க.வும் அ.தி.மு.கவும் கூட்டணி வைத்தால்?
"தேர்தல் வியூக வகுப்பாளரா... என்னை அப்படி சொல்லாதீர்கள்...'' என்று பிரசாந்த் கிஷோர் முதல்முறை ஒரு பத்திரிகையாளரிடம் சொன்னபோது அந்தப் பத்திரிகையாளர் மட்டுமல்ல, எல்லோருக்குமே எழுந்த கேள்வி, "வேற என்னன்னு சொல்றது?'' என்பதுதான். "நான் என் தாய் நாடான இந்தியாவின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள வந்தவன்'' என்றே, தன்னைக் குறித்து பிரசாந்த் கிஷோர் சொல்லிக்கொள்வார். அதனால்தான் 2013-இல் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவதற்காக தான் தொடங்கிய நிறுவனத்துக்கு "பொறுப்பான ஆட்சிக்கான குடிமகன்கள்' என்று பொருள் படும் பெயரை வைத்தாராம் பிரசாந்த். கடந்த பகுதியில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக, தமிழ்நாட்டை மீட்க வந்த பாகுபலியாக ஏத்தி வைத்து அழகு பார்த்த ஜான் ஆரோக்கியசாமி குறித்தும் அவரது வியூகங்கள் குறித்தும் பார்த்தோம் அல்லவா? அந்தத் தேர்தல் முடிந்ததும் அவர் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார். அடுத்த கட்சி, அடுத்த தலைவர், அடுத்த ப்ராஜக்ட், அடுத்த பேமண்ட்... என்று பிசினஸ்மேன் மனநிலையில் நகர்ந்து விடுவார்கள் இந்த வியூக வகுப்பாளர்கள்.
இவர்கள் பெரும்பாலும் கொள்கை அடிப்படையிலோ, சிறந்த ஆட்சியை தந்தவர்கள், தரக்கூடியவர்கள் என்ற அடிப்படையி லோ கட்சிகளை, தலைவர்களை தேர்ந்தெடுத்துப் பணிபுரிவதில்லை. கொள்கையின் அடிப்படையில் எந்தக் கட்சியையும் மறுப்பதுமில்லை. இவர்கள் கருத்தில் கொள்ளும் காரணி, விற்கத்தக்க பொருளா என்பதுதான். தாங்கள் உடன் பணியாற்றவிருக்கும் தலைவர், மக்கள் மத்தியில் புகழ் பெற்றவரா, கட்சிக்குக் கட்டமைப்பு இருக்கிறதா, நல்ல பட்ஜெட் சொன்னால் செலவு செய்வார்களா என்பதுதான். வெகு சில வியூக வகுப்பாளர்களே இதற்கு விதி விலக்கு. இதிலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தத் தேர்தல் வியூகச் சந்தையில் போட்டி அதிக மாகிவிட்டது. ஒரு முறை பணியாற்றி வித்தைகளை கற்றுக்கொண்ட சில கட்சிகள் தாங்களே இதற்கான டீமை அமைத்துக்கொண்டன. அதனால் தேர்ந் தெடுக்கும் நிலையில் எல்லாம் நிறுவனங்கள் இல்லை. எந்தக் கட்சி கிடைக்கிறதோ அதற்காகக் களத்தில் இறங்கவேண்டியதுதான். அப்படித்தான் இருக்கிறது நிலைமை. தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு சிறிய வாய்ப்பையும் தந்துவிடக்கூடாது என்று நினைக்கும் தி.மு.க., எப்படி திட்டங்களில் தீயாய் வேலை செய்கிறதோ அப்படியேதான் தேர்தல் வியூக வகுப்பாளர்களை பயன்படுத்துவதிலும். நாம் ஏற்கனவே சொன்னது போல சபரீசனே நடத்தும் PEN நிறுவனம், பிரசாந்த் கிஷோர் தொடங்கியபோது உடனிருந்த ரிஷி ராஜ் சிங் தற்போது தலைமை ஏற்றிருக்கும் I-PAC, சுனில், ராபின் ஷர்மாவின் ஷோ டைம், கோ-செப்ச்சுவல் (coceptual) என கிட்டத்தட்ட அனைத்து முக்கிய தேர்தல் வியூக அமைப்பு நிறு வனங்களையும் புக் செய்து வைத்துவிட்டது தி.மு.க. விட்டால் எதிர்க் கட்சிகளுக்கு ஏதோ ஒரு வகையில் பலம் சேர்த்துவிடுவார்கள் என்ற காரணம்தான்.
பிரசாந்த் கிஷோர் ஆரம்பத்தில் கொஞ்சம் வேற மாதிரிதான் இருந்தார். இந்தியா வில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து தான் தயார் செய்த ஆய்வு அறிக்கையை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், சில மாநிலங்களின் முதல்வர்களுக்கும் அனுப்பி இருந்தார் அல்லவா? அதைப் பார்த்துதான் மோடியின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதன் பிறகு 2012 குஜராத் தேர்தல், 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். 2014இல் வெற்றிபெற்று பிரதமராக மோடி பதவியேற்ற சில நாட்களில் அவரை சந்தித்த பிரசாந்த் கிஷோர், தான் ஏற்கனவே அவரிடம் கூறியிருந்த ஐடியாவை மீண்டும் வலியுறுத்துகிறார். அந்த ஐடியா... அரசுக்கு ஆலோசனை சொல்லவும், ஆய்வுகள் செய்து தகவல்களை படித்து அவற்றை மக்களுக்குத் தேவையான வகையில் பயன்படுத்தி சிறப்பான ஆட்சி தர உதவும் ஒரு குழுவை உருவாக்கி செயல் படுவது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன பங்களிப்பு இருக்குமோ அது போல வெளியிலிருந்து பணியாற்றும் இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் பங்களிப்பு உண்டு. அப்படி ஒரு அமைப் பை உடனடியாகத் தொடங்கி அரசுக்கு இணையாக உறு துணையாக செயல்பட வேண்டும் என்பது பிரசாந்த் கிஷோரின் ஆர்வம். புது பிரதமர் நரேந்திர மோடியும் "கொஞ்சம் காத்திரு' என்று சொல்கிறார். ஆனால் மாதங்களா கின. இது ஏற்கனவே மோடியிடம் மணிக் கணக்கில் விவாதிக்கப் பட்ட, மோடியால் விரும்பப்பட்ட ஒரு திட்டம்தான் என்றா லும் அதை உடனடி யாக நிறைவேற்ற மோடியாலேயே முடிய வில்லை. மோடியின் சகாக்கள் பலரும் இப் படி ஒரு ஏற்பாட்டுக்கு ஒத்துழைக்கவில்லை. கடுமையான எதிர்ப்பு. "தேர்தல்ல ஜெயிக்க உதவி செய்தார், ஓ.கே. அதற்காக தேர்தல் முடிந்தும் கூடவே வச்சுக்கணுமா?' என்ற கேள்வி பா.ஜ.க.வுக்குள் ஒலித்தது. மோடி நாட் களை தள்ளிக் கொண்டே போக, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பிரசாந்த் கிஷோர் "நாம் திட்டமிட்டது ஒன்று, ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கிறது என நினைத்து, அதனால் தனது சொந்த மாநிலமான பீகாரை நோக்கிக் கிளம்பினார்.
மோடிக்கும் பிரசாந்த் கிஷோருக்குமான உறவைப் பார்த்தவர்கள், அவர்கள் இவ்வளவு சீக்கிரம் பிரிவார்கள் என்று நினைக்கவில்லை. காரியம் முடிந்ததும் பிரசாந்த் கிஷோரை கழட்டிவிட்டது பா.ஜ.க. மோடி விரும்பினாலும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் பிரசாந்த் கிஷோர் டீமுக்கு தேர்தலை தாண்டிய முக்கியத்துவத் தை தர விரும்பவில்லை. அரசியல்வாதி களின் இன்னொரு முகத்தைப் பார்த்துக் கொண்டார் பிரசாந்த் கிஷோர். தனது முகத்தைக் காட்ட முடிவு செய்தார். 2015-இல் பீகார் சென்ற பிரசாந்த் கிஷோர், பீகார் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருந்ததால் ஐக்கிய ஜனதா தளகட்சியின் தலைவர் நிதிஷ்குமாரை தனது திட்ட வடிவத்துடன் அணுகினார். நிதிஷ்குமார் முன்பு பா.ஜ.க. கூட்டணியில் இருந்தவர். 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்த லுக்கு மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் கோபம் கொண்டு வெளியே வந்தவர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை வெற்றிகரமாக வேலை செய்தது. பீகாரையும் விட்டுவைக்கவில்லை. பீகா ரின் 40 தொகுதிகளில் 31 தொகுதிகளை பா.ஜ.க. வின் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றிருந்தது. லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் நான்கு தொகுதிகள், காங்கிரஸ் இரண்டு, ஆட்சியிலிருந்த ஐக்கிய ஜனதா தளம் 2 மட்டுமே என இருந்தது நாடாளுமன்றத் தேர்தல் முடிவு. இதற்குப் பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார். 2014-ல் இந்த மோசமான நிலையிலிருந்த நிதிஷை 2015-ல் மீண்டும் முதல்வராக்க வேண்டுமென்ற கடினமான இலக்கை எடுத்துக்கொண்டார் பிரசாந்த் கிஷோர். அப்படி ஆக்குவதன் மூலம் பா.ஜ.க.வை பழிவாங் கும் வாய்ப்பும் அமையும். ஆனால், அப்போது மோடி இருந்த வேகத்துக்கும் உற்சாகத்துக்கும் அது மிகக் கடினம் என்று தோன்றியது. உண்மையில் தெற்கைத் தவிர்த்து மொத்த இந்தியாவும் மோடி அலையில் கொஞ்சம் மிரண்டிருந்தது.
எப்படி அலையை எதிர்த்துத் தாண்டி வருவது? ஒரு மிகப்பெரிய அரசியல் அதிசயம் நடந்தது. பீகாரில் எதிரெதிர் கட்சிகளாக இருந்த லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்தன. உடன் காங்கிரஸும் சேர்ந்த மகாத் பந்தன் கூட்டணி அமைந்தது. அந்த இரண்டு கட்சிகளும் பா.ம.க. -விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற எதிரெதிர் கட்சிகள் அல்ல. தி.மு.க. -அ.தி.மு.க. போன்ற எதிரெதிர் கட்சிகள். "அதான் அ.தி.மு.க.வினர் பாதி பேர் இப்போது தி.மு.க.வுக்கு வந்துவிட்டார்களே' என்கிறீர்களா? ஆனால் அ.தி.மு.க. இப்போதைக்கு தி.மு.க.வுக்கு வராது இல் லையா? லாலு பல ஆண்டுகள் முதல்வராக இருந்தவர். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் அவரது மனைவி ராப்ரிதேவி முதல்வராக்கப்பட்டார். அதெல்லாம் அந்தக்கால கூத்து. லாலுவின் ஆட்சி காட்டாட்சி என்று அழைக்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு உறுதியான வாக்கு வங்கி இருந்தது. பின்னர் நிதிஷ்குமார் முதல்வரானார்.
அப்போது நிதிஷுக்கு ஒரு நல்ல இமேஜ் இருந்தது. அவருக்கான வாக்கு வங்கியும் வளர்ந்தது. இப்படி எதிரெதிர் கட்சிகள் பா.ஜ.க.வை வீழ்த்த இணைந்தன. சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் ஆகிய பீகார் தாண்டிய யாதவ்களின் முயற்சி இதில் முக்கிய பங்காற்றியது. இது தனது கேம் என பிரசாந்த் கிஷோர் பிற்காலத்தில் கூறிக் கொண்டார். எப்படியோ... நிகழாத ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதற்கான வெற்றியும் கிடைத்தது. மீண்டும் நிதிஷ் முதல்வரானார். பா.ஜ.க.வின் வேகம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், "மாப்பிள்ளை இவர்தான்... இவர் போட்டிருக்கும் சட்டை என்னோடது' என்ற ரீதியில் ஒருவர் அடிக்கடி பேச, அந்த அதிசய கூட்டணிக்குள் வேட்டு வெடித்தது.
(தொடரும்)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us