(9) ஜெ.விடம் இருந்து வந்த போன்!  

றுபது வயது தனபாக்கியம் அம்மாவின் செல்போன் அடித்தது. "அட யார்ரா இந்நேரத்துல' என்ற சலிப்போடு போனை எடுத்தவர், கேட்ட குரலில் சிலிர்த்துப் போனார். "வணக்கம்... உங்கள் அன்புச் சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்...' என்று தமிழ்நாடே அறிந்த அந்த குரல் பேச, "யம்மா... வணக்கம்மா... வணக்கம்மா... இந்தா என் மகன்ட்ட தரேன்மா...'' என்று போனை எடுத்துக்கொண்டு மகனிடம் ஓடமுடியாமல் ஓடினார். "யப்பா... இந்தா ஜெயலலிதாம்மா பேசுதுடா, என்னான்னு கேளு'' என்று போனை கொடுக்க, அதிர்ச்சியுடன் வாங்கிய நாற்பது வயது மகன், "ஹலோ... ஹலோ'' என்றார். "உங்கள் வாக்கை எனக்கு அளித்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கொடுங்கள்... உங்கள் அம்மா நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று முடித்தார் ஜெயலலிதா. 

Advertisment

தனபாக்கியம் அம்மாவிற்கு ஒரே மகிழ்ச்சி, ஒன்றும் புரியவில்லை. விசயத்தை சொல்ல பக்கத்து வீட்டுக்குப் போனார். "அட அம்மா... அது ரெக்கார்டு குரல்மா... ஓட்டு கேக்குறாங்க'' என்றார் மகன். "ரெக்கார்டோ என்னவோ... வேற யாராவது தலைவரு நமக்கு போன் பண்ணாங்களா? இந்தம்மா பண்ணுச் சுல்ல...'' என்று பெருமைப்பட்டுக் கொண்டார். 

Advertisment

தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக் கானவர்களின் செல்லுக்கு ஜெய லலிதா போன் செய்து பேசினார். அதாவது, பதிவு செய்யப்பட்ட அவர் குரல், அவரே பேசுவது போல மக்களை உணரவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது தேர்தல் கால வியூகம் என்றாலும் தேர்தலுக்கு பல மாதங் கள் முன்பே 2015ல் சென் னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஜெய லலிதாவிடமிருந்து ஆறு தல் போன்கால் சென்றது. செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்த விவகா ரத்தில் அ.தி.மு.க. அரசின் அலட் சியமும், ஜெயலலிதா வின் அணுக முடியாத தன்மையும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகின. அதை சரிக்கட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கும் முன்பே 2015 தொடக்கத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை சென்றுவர, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இடைத்தேர்தலின் போதும் ஸ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு ஜெ.வின் போன் போனது. மக்களுக்கு ஒரு பர்சனல் டச் கிடைத்தது. இந்த முறையில் பேசியது  ஜெயலலிதாதான், ஆனால் ஐடியா ஆஸ்பயர் சுவாமிநாதனுடையதாகத்தான் இருக்க வேண்டும். ஏன் உறுதியாகச் சொல்லவில்லை என்றால்... சுவாமிநாதனே அப்போது உள்ள வழக்கப்படி 'அம்மாவின் ஆலோசனைப்படி, அறிவுரைப்படி, உத்தரவுப்படி இதை நிறைவேற்றினோம்' என்றுதான் கூறினார். அப்போது எல்லாமே ரகசியமாகத்தான் நடக்கும், எல்லாமே அம்மாவின் உத்தரவுப்படிதான் நடக்கும். வேறு யாரும் தான்தான் இதை செய்தேன், திட்டமிட்டேன் என்று கூறிக்கொள்ளவே முடியாது. கூறிக்கொண்டால் என்னவாகும் என்பதற்கு ஜெயக்குமார் உள்பட பல உதாரணங்கள் இருக்கின்றன. சட்டமன்றத்தில் இரண்டு நிமிடம் பேசும் எம்.எல்.ஏ. அதில் ஒரு நிமிடம் ஜெயலலிதா குறித்த 'ராஜாதி ராஜ...' சொல்லித்தான் ஆரம்பிப்பார். அதிலும் சில நேரம் 'ராஜ குலோத்துங்குவை விட்டுவிட்டானடா' என்று பிரச்சனைகள் வரும். இது அப்போதைய கதை. சமீபமாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கும் இந்தப் பழக்கம் வந்தது சோகம்தான். 

சரி, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி குறித்துதானே பார்த்துக்கொண்டிருந்தோம்? என்னவானது மாற்றம்? அன்புமணிக்கு ஏன் இந்த ஏமாற்றம்? வடமாவட்டங்களில் கூட, அதிலும் அன்புமணி கூட வெல்ல முடியாதது ஏன்? அ.தி.மு.க. மீண்டும் வென்றதற்கு பல காரணங்கள். எதிர்க்கட்சிகள் பிரிந்து இருந்தன. தி.மு.க. -காங்கிரஸ், மக்கள்நலக் கூட்டணி, பா.ம.க.  

Advertisment

என...  "அம்மா... அம்மா' என திட்டங்களுக்கு எல்லாம் பெயர் வைத்து ஜெயலலிதா எனும் பிம்பத்தை வலுவேற்றி வைத்ததும் உண்மைதான். எல்லாம் தாண்டி அ.தி.மு.க. அள்ளித் தெளித்த பணம். என்னதான் "திருமங்கலம் பார்முலா' என்று அழகிரியையும், தி.மு.க.வையும் குறித்து சொல்லப்பட்டாலும் 2016 தேர்தலில், அது முழு வீச்சில் அ.தி.மு.க.வால் பயன்படுத்தப்பட்டது. எல்லா குறைகளையும் தாண்டி அ.தி.மு.க. வென்றது. சரி, பா.ம.க.வின் தோல்விக்குக் காரணம்? "மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி' பிரச்சார திட்டம் மிகச்சிறப்பானதாக இருந்தாலும் அது பொருந்தாத பிரச்சாரமாக இருந்தது. அன்புமணி ராமதாஸ் அதற்குமுன்பே மத்திய அமைச்சராக இருந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரியில் வென்றார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், முதல்வர் வேட்பாளர் என்று வரும்போது தமிழ்நாட்டு மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியே தமிழ்நாடு முழுக்க பரவலாக, வலுவாக இல்லாதபோது அன்புமணி என்ற தலைவர் பிம்பம் எப்படி ஏற்றுக்கொள்ளப் படும்? முதல்வர் பதவி என்னும் அந்தநேரத்தில் நடைமுறை சாத்தியம் இல்லாத இலக்கை நோக்கிப் பயணம் செய்ததால், அவர்களின் அப்போதைய நிதர்சன பலம், பலவீனங்களில் கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டனர். வியூகமும், விளம்பரமும் மட்டும் போதாது, அதை ஏந்தி நிற்கும் தலைவ ருக்கும் அவர் விரும்பும் பதவிக்குத் தேவையான மக்கள் ஆதரவும் ஆளுமையும், அதற்கு முந்தைய சாதனைகளும் தேவை என்பது நிரூபணமானது. 

தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் கடும்முயற்சியும் வெல்லவில்லை. "நமக்கு நாமே' பயணத்தில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டார். ஆனால் அது போதவில்லை. 

இந்தப் பிரச்சாரத்தின்போது அன்புமணியின் "மாற்றம்.. முன்னேற்றம்' போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒரே சமயத்தில் ஒரே வடிவமைப்பில் ஒட்டப்பட்டு மிகுந்த கவனத்தை ஈர்த்தன அல்லவா? அதற்குப் பல வித ரியாக்ஷன்கள் இருந்தன. அதில் உச்சகட்ட ரியாக்ஷன் என்பது அ.தி.மு.க., கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் ஒட்டிய "மாற்றம் முன்னேற்றம் அம்மா' போஸ்டர்தான். "தீய சக்திகள் கையிலிருந்து ஆட்சி மாற்றம்... வளர்ச்சிப் பாதையில் தமிழகம் முன்னேற்றம்... என்றும் மக்கள் பணியில் அம்மா' என்று கிட்டத்தட்ட அன்பு மணிக்கு வடிவமைக்கப்பட்ட பாணியிலேயே இருந்தது. இந்த வகை போஸ்டர் யுத்தமே அமெரிக்க இறக்குமதிதான். அமெரிக்காவில் பெப்சி -கோகோ  கோலா போன்று ஒரு துறையில் போட்டி போடும் நிறுவனங்கள் அவ்வப்போது ஒருவரை ஒருவர் டேமேஜ் செய்து, ஒருவரது விளம்பரத்துக்கு இன்னொருவர் பதில் சொல்லி விளம்பரம் வெளியிடுவர். அது பரவலாக கவனம் ஈர்த்து வெற்றிபெறும். அப்படித்தான் அ.தி.மு.க. தரப்பு போஸ்டர் ஒட்டியது. உண்மையில் இந்த ரியாக்சனே பா.ம.க.வுக்கு ஒரு வகை வெற்றிதான். ஆனால் பா.ம.க., அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்தது. சொந்தமாக சிந்திக்காமல் காப்பியடித்து போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று பா.ம.க. பிரமுகர்கள் பேசினார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் அன்புமணிக்காக உருவான இந்த டிசைனுக்கு மூலம் ஒபாமா. விதை... அவர் போட்டது. 

2008 அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவை விளம்பரப்படுத்த, மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கையை உருவாக்கி, உறுதியாக்க மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரங்கள் நடந்தன. யெஸ்... வி கேன் (yes... we can - ஆம், நம்மால் முடியும்) என்பது அவரது புகழ்பெற்ற வாசகமாக இருந்தது. 

மாற்றம் குறித்த இன்னொரு வாசகத்தையும் ஒபாமா அடிக்கடி பயன்படுத்தினார். அவருக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ஹோப்  (hope- நம்பிக்கை) என்ற சொல்லுக்கு மேல் ஒபாமா விடியலை நோக்கிப் பார்ப்பது போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டன. "ஞ' என்ற எழுத்துடன் லோகோவும் (இலச்சினை) உருவாக்கப்பட்டது. அந்த எழுத்து ஒபாமாவையும் பின்னே இருந்த வடிவம் விடியலையும் குறித்தன. 

அன்புமணிக்கும் இப்படி அர்த்தம் நிறைந்ததாகத்தான் போஸ்டர் உருவாக்கினார் ஜான் ஆரோக்கியசாமி. அந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கு சுனில், அன்புமணிக்கு ஜான் என்பது போல, ஜெயலலிதாவுக்கென சொல்ல முடியாது, எனினும் அ.தி.மு.க.வுக்கு வேலை பார்த்தவர் ஆஸ்பயர் சுவாமிநாதன். தலைவருக்கான இமேஜ் உருவாக்கம், விளம்பர வியூகம் என்பதைவிட அ.தி.மு.க கட்சிக்கான சமூக ஊடக வியூகம், மக்களை சென்றடையும் மார்க்கெட்டிங் யுக்திகளை அமைத்து செயல்படுத்தினார் சுவாமிநாதன். 2014லேயே இவரது ஆஸ்பயர் நிறுவன டீமை வைத்து அன்றைய தேர்தலுக்குத் தேவையான புதிய யுக்திகள், சமூக ஊடகத்தின் தாக்கம் குறித்தெல்லாம் ஒரு விரிவான ரிப்போர்ட்டை ஜெ.வுக்கு வழங்கி, அவரால் அ.தி.மு.க. ஐ.டி. விங் உருவாக்கப்பட்டு, செயலாளர் ஆக்கப்பட்டார் சுவாமிநாதன். இதுவே மற்றவர் களுக்கும் அ.தி.மு.க.வுக்கும் அப்போது இருந்த வித்தியாசம். சுனிலோ, ஜானோ அவர்கள் பணியாற்றிய கட்சிகளில் இணையவில்லை. அதுதான் அவர்களிடம் பிரச்சனையும் கூட...   

(தொடரும்)