(6) நாடகக் கம்பெனியா இது?
இன்று "வைப் வித் MKS' என்ற பெயரில் மிக யூத்தான உடைகள் அணிந்து இளைஞர்களோடும், பாடலாசிரியர் மதன் கார்க்கியோடும், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனோடும் நமது முதல்வர் உரையாடும் வீடியோக்கள் லேட்டஸ்ட் யூ-ட்யூபர்களுடன் போட்டி போடும் அளவுக்கு உருவாக்கப்பட்டு இணையத்தில் வலம் வருகின்றன, வைரல் ஆகின்றன. முன்பெல்லாம் அரசு சார்ந்த, கட்சி சார்ந்த விளம்பரங்கள், பாடல்கள் என்றாலே தனியே தெரிந்துவிடும். அவற்றை அரதப்பழைய குழுக்கள் உருவாக்குவார்கள். ஆனால் இப்போது நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், விளம்பரங்களை பாருங்கள்... விஜய் டிவிக்குப் போட்டியான வண்ணங்களில் வடிவங்களில் நடக்கின்றன. ஒரு பக்கம் ஆளுங்கட்சி இப்படியென்றால், எதிர்க்கட்சியில் எடப்பாடி பழனிசாமியை கவனியுங்கள்... தஞ்சையில் விவசாயிகளை சந்திக்கும் வயல் வாக்கிங்கிற்கு செல்லும்போது திடீரென ஒரு விவசாயி வயலுக்குள்ளிருந்து கையில் பயிருடன், "அய்யா... குலசாமியே நீங்கதான் எங்களை காப்பாத்தணும்' என்று கத்தியபடியே ஓடி வருகிறார். அவரை நிறுத்தி என்ன ஏதென்று விசாரிக்கிறார். 'விவசாயி வாழணும்னா, விவசாயி ஆளணும்' என்று கூட்டத்தில் ஒருவர் கோஷமிடுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி முன்பே திட்டமிடப்பட்டு எழுதப்பட்டதா என்று தெரியவில்லை... ஆனால் இந்தக் காட்சியை ப
(6) நாடகக் கம்பெனியா இது?
இன்று "வைப் வித் MKS' என்ற பெயரில் மிக யூத்தான உடைகள் அணிந்து இளைஞர்களோடும், பாடலாசிரியர் மதன் கார்க்கியோடும், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனோடும் நமது முதல்வர் உரையாடும் வீடியோக்கள் லேட்டஸ்ட் யூ-ட்யூபர்களுடன் போட்டி போடும் அளவுக்கு உருவாக்கப்பட்டு இணையத்தில் வலம் வருகின்றன, வைரல் ஆகின்றன. முன்பெல்லாம் அரசு சார்ந்த, கட்சி சார்ந்த விளம்பரங்கள், பாடல்கள் என்றாலே தனியே தெரிந்துவிடும். அவற்றை அரதப்பழைய குழுக்கள் உருவாக்குவார்கள். ஆனால் இப்போது நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், விளம்பரங்களை பாருங்கள்... விஜய் டிவிக்குப் போட்டியான வண்ணங்களில் வடிவங்களில் நடக்கின்றன. ஒரு பக்கம் ஆளுங்கட்சி இப்படியென்றால், எதிர்க்கட்சியில் எடப்பாடி பழனிசாமியை கவனியுங்கள்... தஞ்சையில் விவசாயிகளை சந்திக்கும் வயல் வாக்கிங்கிற்கு செல்லும்போது திடீரென ஒரு விவசாயி வயலுக்குள்ளிருந்து கையில் பயிருடன், "அய்யா... குலசாமியே நீங்கதான் எங்களை காப்பாத்தணும்' என்று கத்தியபடியே ஓடி வருகிறார். அவரை நிறுத்தி என்ன ஏதென்று விசாரிக்கிறார். 'விவசாயி வாழணும்னா, விவசாயி ஆளணும்' என்று கூட்டத்தில் ஒருவர் கோஷமிடுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி முன்பே திட்டமிடப்பட்டு எழுதப்பட்டதா என்று தெரியவில்லை... ஆனால் இந்தக் காட்சியை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாகத் தெரிந் திருக்கும். இன்று தேர்தல் பிரச்சாரங்கள் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால்... விதை அவர் போட்டது. போடப்பட்டது 2014இல். ஏன் அந்தத் தேர்தலை பற்றி இவ்வளவு பேசுகிறோம் என்றால், அந்தத் தேர்தலுக்குப் பின் இந்தியாவின் தேர்தல் பிரச்சார அணுகுமுறையும், வியூகங்களும், யுக்திகளும், வடிவங்களும் பெரும் மாற்றத்தைக் கண்டன. கொஞ்சம் அங்கே சென்று வருவோம்.
பப்பு... பப்பு... பப்பு...
'அங்கிள்' என்ற வார்த்தை எப்படி ஒரு 30 வயது இளைஞனை பாதிக்குமோ அதை விட அதிகமாக 42 வயது ராகுல் காந்தியின் மனதை பாதித்தது. "பப்பு' என்ற வார்த்தை. இன்று ராகுல் காந்தி நிரந்தரமாக தாடி வைத்திருப்பதற்குக் காரணம் கூட அந்த 'பப்பு' வார்த்தையின் தாக்கம் என்கின்றனர். இன்று நாடாளுமன்றத்தில் கடைசி பெஞ்ச் மாணவன் போல கலாட்டாவாக செயல்பட்டு வருகிறார் ராகுல். அவரது பல பேச்சுகள் ரசிக்கப்படுகின்றன, பாராட்டப்படுகின்றன, அழுத்தமாக, தீர்க்கமாக அமைந்துள்ளன. ஆனால் ஆரம்பம் அப்படியல்ல. அந்த ஆரம்ப காலத்தில் புழக்கத்துக்குக் கொண்டு வரப்பட்ட வார்த்தைதான் பப்பு.
ராகுல்காந்தியை, செல்லமாக அல்ல, கிண்டலாக, கீழ்த்தரமாக விமர்சிக்க பா.ஜ.க. கையாண்ட வார்த்தை. அதற்கு முன்பே அவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் 2013ல் அமித்ஷா, ராகுலை "பப்பு' என குறிப்பிட்டு, "பிரதமர் பதவி பப்புவின் பிறப்புரிமை கிடையாது, அதற்கு மக்களின் ஆசீர்வாதம் வேண்டும். அந்த ஆசீர்வாதம் மோடிக்குத்தான் இருக்கிறது' என்று பேசிய பிறகு இன்னும் அதிகமாகப் பயன்பட்டது. பா.ஜ.க.வின், குறிப்பாக மோடியின் வார் ரூம் டீம் எந்த அளவுக்கு இறங்கினார்கள் தெரியுமா? கூகுளில் "பப்பு' என்று தேடினால் ராகுலின் புகைப்படம் வரும் அளவுக்கு வேலையை பார்த்தார்கள். இவ்வளவு நடந்தும் இளம் தலைவரான ராகுல் காந்தியே சமூக ஊடகங்கள், வாட்ஸ் அப், இணையதள அணி போன்ற வற்றை ஆரம்பத்தில் குறைத்து எடை போட்டுவிட்டார் என்றுதான் சொல்ல முடியும்.
பத்து வருட காங்கிரஸ் ஆட்சி மீதான அதிருப்திகள், ஊழல் குற்றச்சாட்டுகள், வம்சாவளி அரசியல் என்ற பிம்பம் எல்லாம் இருந்தாலும் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும், மோடியின் மிகப்பெரிய நாயக பிம்ப கட்டமைப்புக்கும் பின்னணியாக நாம் பேசிவரும் அனைத்து வார்ரூம் வியூகங்களும் இருந்தன என்பதை மறுக்கவே முடியாது. ராகுல் காந்தியை முழுக்க "பப்பு' என லேபிள் ஒட்ட முடியாது. 1998ல் தனது தாய் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற சில மாதங்களில் அவருக்கு உறுதுணையாக இருக்க தனது வெளிநாட்டுப் பணியை விட்டு இந்தியா வந்த ராகுல், 2004 மற்றும் 2009 தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்காகப் பணியாற்றினார். 2009ல் காங்கிரஸின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறினர். அப்படி வெற்றிகரமாக இருந்த ராகுலிடம் இருந்த முக்கிய குறை, திடீர் திடீரென அவர் காணாமல் போவதுதான். தீவிர அரசியலில் இருக்கும் போதே அவ்வப்போது நாட் ரீச்சபிள் ஆவார். காங்கிரஸ் மூத்த தலைவர்களே இது குறித்துப் புலம்பியுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/17/warroom-2026-02-17-12-44-33.jpg)
இன்னொரு பக்கம், அவரது அரசியல் ஸ்டைல் என்பது ஆக்கபூர்வமான, நீண்ட கால செயல்முறைத் திட்டங்கள் கொண்டதாக இருந்தது. அதிரடியான, உணர்ச்சிகரமான அரசியலுக்குள் அவர் வரவில்லை. 2014 தேர்தலில் பா.ஜ.க.வும் மோடி டீமும் காங்கிரஸின் ஊழல்கள், வம்சாவளி அரசியல், பொருளாதார மந்தநிலை, பொம்மை பிரதமர் என பல எதிர்மறை விசயங்களை கையில் எடுத்தன. கூடுதலாக, இந்தியாவின் இழந்த பெருமை, இந்துத்துவ உணர்வு ஆகிய உணர்ச்சிகரமான விசயங்களை வைத்து விளையாடின. இந்தப் பிரச்சாரத்துக்கு மொபைல் போன், இணையதளம் வரை முழு மூச்சில் பயன்படுத்தின. பொருட்களை விற்க பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான மார்க்கெட்டிங் யுக்திகளை அப்படியே அரசியலில் பயன்படுத்தினர். இவ்வளவு தீவிரத்தோடு இவர்கள் செயல்பட, ராகுலோ மென்மையான, பழைய அணுகுமுறைகளோடு வலம் வந்தார். தான் வென்ற அமேதி தொகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீட்டில் உண்டு, உறங்கினார். திடீரென டெல்லி மெட்ரோவில் மக்களோடு மக்களாகப் பயணித்தார். மும்பையில் ATM-ல் பணமெடுத்தார். லோக்கல் ரயிலில் பயணம் செய்தார். இதெல்லாம் போதுமென்று நினைத்தார். 2014 தேர்தலில் தன்னை பிரதமர் வேட்பாளராகவும் முன்னிறுத்திக் கொள்ள வில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் பா.ஜ.க. மோடி என்ற முகத்தோடு போட்டியிட, காங்கிரஸ் முகமில்லாமல் போட்டியிட்டதும் பா.ஜ.க.வின் பெரிய வெற்றிக்குக் காரணம்.
பா.ஜ.க., ராகுலை "பப்பு' என்று அழைத்ததற்கு ஒரு காரணம் அவரது அப்போதைய இளமை மாறா முகம். பிரதமர் மோடியின் முகம் குறித்து சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஹர்லீன் தியோல், மோடியிடமே ஒரு கேள்வியை கேட்டார். "சார்... உங்கள் முகம் இவ்வளவு பொலிவாக இருக்கிறதே... உங்கள் சரும பாதுகாப்பு முறை என்ன?' என்பதுதான் அந்தக் கேள்வி. முன்பெல்லாம் இப்படி ஒரு கேள்வி வந்திருந்தால், "என்னது பிரதமரை பார்த்து இப்படி ஒரு கேள்வியா' என்று கோபப் பட்டிருப்பார்கள் அல்லது "பிரதமரிடம் கேட்க வேறு அறிவார்ந்த கேள்வி இல்லையா' என்று விமர்சித்திருப்பார்கள்.
ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. பிரதமரே அந்தக் கேள்வி கேட்கப்பட்டவுடன் வெட்கத்தில் புன்னகைத்தார். புன்னகைத்துக்கொண்டே அவர் என்ன சொன்னார்?
(தொடரும்)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us