தூத்துக்குடி கிட்டங்கியிலிருந்து தாது மணல் கடத்தல் என்ற செய்தி குறித்து வி.வி. டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் விளக்கமளித்துள்ளது.
"டைட்டானியம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருளான இல்மனைட்டை உள்நாட்டிலுள்ள சுரங்க குத்தகைதாரர்களிடமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கொள்முதல் செய்து டைட்டானியம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாங்கள் சேமிப்புக் கிடங்கு உரிமம் பெறவில்லை எனக் கூறி சிப்காட் காவல்நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதிக்கப்பட் டது. மேலும் இறக்குமதியில் தலையிட அதிகாரம் கிடை யாது என்று மாவட்ட ஆட்சியர் வழக்கில் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி துறைமுகத்தில் கனிமங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி கிட்டங்கியிலிருந்து தாது மணல் கடத்தல் என்பது முற்றிலும் தவறானது. ஏனெனில் எங்கள் நிறுவனம் மேற்படி கிட்டங்கியை இந்திய அரசின் ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி ஒரு கூடுதல் வணிகம் செய்யும் இடமாக பதிவுசெய்துள்ளது. எங்கள் கம்பெனியின் பதிவு செய்யப்பட்ட கிட்டங்கி அரசால் எந்த சீலும் வைக்கப்படாத கிட்டங்கியாகும்.
இந்த பதிவு செய்யப்பட்ட கிட்டங்கியில் நாங்கள் வெளி நாட்டிலிருந்து இந்திய அரசிற்கு உரிய வரி செலுத்தி இறக்குமதி செய்து தாது மணலை இருப்பு வைத்திருந்தோம். அந்த தாதுமணலை எங்கள் கம்பெனி தொழிற்சாலைக்குத் தேவை யானபோது இவே பில் மூலம் லாரிகளில் கொண்டுசெல்வது வழக்கமானதுதான். மாறாக, சீல் வைக்கப்பட்ட கிட்டங்கியி லிருந்து தாது மணல் கடத்தல் 6 பேர் கைது என்று வெளியான செய்தியே தவறானதாகும்.
இல்மனைட் இறக்குமதி சார்ந்து நாங்கள் தாக்கல் செய்திருந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் இந்திய கனிம சட்டம் இந்தியாவில் மைனிங் செய்யப்பட்ட கனிமங்களுக்குப் பொருந்தும். வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்யப்படும் கனிமங்களுக்குப் பொருந்தாது என 27-2-2020 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கனிமங்களை துறைமுகத்தி லிருந்து கொண்டுசெல்லவோ, கிட்டங்கியில் சேமித்து வைக்கவோ, வேறு இடத்திற்கு போக்குவரத்து செய்யவோ இடையூறு செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் எந்த ஒரு உண்மை நிலவரத்தையும் அறியாமல், எங்கள் கம்பெனி கிட்டங்கியிலிருந்து சட்டப்படி உரிய ஆவணங்களுடன் எடுத்துச்சென்ற தாதுமணல் (இல்மனைட்) லாரிகளை சட்டவிரோதமாக பிடித்து அதனை ஓட்டிச் சென்ற டிரைவர்களையும் கைதுசெய்து வைத்திருப்பது மற்றும் கிட்டங்கியை சீல் செய்தது, தவறான தகவல் கொடுத்து எங்கள் கம்பெனி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது போன்றவை முற்றிலும் சட்டவிரோதச் செயலாகும்'' என விளக்கமளித்துள்ளனர்.
-நமது நிருபர்