கொலை மிரட்டல் விடுத்த கனிமவள இயக்குநர்! -குவாரி சங்கத்தினர் குற்றச்சாட்டு!

sadf

நாராயணப்பெருமாள் சாமின்னா டிபார்ட்மெண்ட்ல இருக்கவங்களுக்கு அப்படி ஒரு அலர்ஜி. தூணைத் துரும்பாக்கி பேனைப் பெருமாளாக்கிருவாரு... -விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் குறித்து ரொம்பவே ‘பில்ட்-அப்’ செய்து பேசுகின்றனர், அச்சங்கத்தின் உறுப்பினர்கள்.

நம்மைச் சந்தித்தபோது நாராயணப் பெருமாள்சாமியும் அவ்விதமே பேசினார்.

qq

"இந்த உடைகல், கிராவல் குவாரி நடைச்சீட்டுக்கு 300 ரூபாய் தந்தே ஆகணும்னு அடம் பிடிக்கிறாங்க. ஒரு சீட்டுக்கு 3 யூனிட்டுன்னு கணக்கு. எல்லா மாவட்டத்துலயும் இந்த நடைமுறை இருக்கு. நாங்க கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டோம். எப்படின்னா... யூனிட்டுக்கு 100 ரூபாய் கேட்கிறாங்க. ஒரு குவாரில 50 சீட்டு வரைக்கும் வாங்குறாங்க. அப்படி பார்த்தா.. ஒரு குவாரியே ரூ.15000 வரைக்கும் கொடுக்கணும். விருதுநகர் மாவட்டத்துல 112 குவாரிகள் இருக்கு. அப்படின்னா.. இங்கே விருதுநகர் மாவட் டத்துல மட்டும் ஒவ்வொரு நாளும் ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்தை லஞ்சமா கொடுக்க வேண்டியது இருக்கு. இதை வசூல் பண்ண, பழைய மணல் மன்னர்களின் ஆட்களைத்தான் போட்டிருக்காங்க. எந்த கவர்மெண்ட் வந்தாலும் இவங்க ராஜ்ஜியம் தான். ‘மேல ஆயிரம் கோடி.. அதுக்கு கீழே முன்னூறு கோடி அட்வான்ஸா கொடுத்த

நாராயணப்பெருமாள் சாமின்னா டிபார்ட்மெண்ட்ல இருக்கவங்களுக்கு அப்படி ஒரு அலர்ஜி. தூணைத் துரும்பாக்கி பேனைப் பெருமாளாக்கிருவாரு... -விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் குறித்து ரொம்பவே ‘பில்ட்-அப்’ செய்து பேசுகின்றனர், அச்சங்கத்தின் உறுப்பினர்கள்.

நம்மைச் சந்தித்தபோது நாராயணப் பெருமாள்சாமியும் அவ்விதமே பேசினார்.

qq

"இந்த உடைகல், கிராவல் குவாரி நடைச்சீட்டுக்கு 300 ரூபாய் தந்தே ஆகணும்னு அடம் பிடிக்கிறாங்க. ஒரு சீட்டுக்கு 3 யூனிட்டுன்னு கணக்கு. எல்லா மாவட்டத்துலயும் இந்த நடைமுறை இருக்கு. நாங்க கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டோம். எப்படின்னா... யூனிட்டுக்கு 100 ரூபாய் கேட்கிறாங்க. ஒரு குவாரில 50 சீட்டு வரைக்கும் வாங்குறாங்க. அப்படி பார்த்தா.. ஒரு குவாரியே ரூ.15000 வரைக்கும் கொடுக்கணும். விருதுநகர் மாவட்டத்துல 112 குவாரிகள் இருக்கு. அப்படின்னா.. இங்கே விருதுநகர் மாவட் டத்துல மட்டும் ஒவ்வொரு நாளும் ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்தை லஞ்சமா கொடுக்க வேண்டியது இருக்கு. இதை வசூல் பண்ண, பழைய மணல் மன்னர்களின் ஆட்களைத்தான் போட்டிருக்காங்க. எந்த கவர்மெண்ட் வந்தாலும் இவங்க ராஜ்ஜியம் தான். ‘மேல ஆயிரம் கோடி.. அதுக்கு கீழே முன்னூறு கோடி அட்வான்ஸா கொடுத்திருக் கோம். உங்ககிட்ட வசூல் பண்ணியே ஆகணும்னு முரண்டு பிடிக்கிறாங்க. இல்லைன்னா.. கனிமவளத்துறைல இருந்து அனுப்புகைச் சீட்டு தரமாட்டாங்களாம். முதலமைச்சர் வரைக்கும் புகார் அனுப்பிருக்கோம். இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை.

மதுரைல புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் சட்டநாதன் சங்கர் இருக்காரு. தூத்துக்குடில தாது மணல் திருட்டுக்கு துணை போறதுக்காக, அடிஷனலா தூத்துக் குடியவும் சேர்த்து பார்க்கிறாரு. தாது மணல்ல நெறய சம்பாதிக்கிறதுக்காக.. கலெக்ஷன் பார்க்கிற தரப்பே, இவரை அங்கே போட்டாத்தான் சரியா இருக்கும்னு, தூத்துக்குடி மாவட்டத்தயும் சேர்த்து வாங்கித் தந்திருக்காங்க. யார் யாரை எந்தெந்த மாவட்டத்துக்கு டைரக்டரா போடணும்னு, கலெக்ஷன் பார்ட்டி சொல்லுற அதிகாரியைத்தான் மேலதிகாரிகள் போடறாங்க, அதனாலதான் சட்டநாதன் சங்கர் தூத்துக்குடி இன்சார்ஜாவும் இருக்காரு.

இவரு போயி தூத்துக்குடி குவாரிக் காரங்ககிட்ட நடைச்சீட்டுக்கு பணம் கேட்டப்ப, அங்கே இருக்கவங்க, விருதுநகர் மாவட்டத்துல பணம் தரலைல்ல, நாங்களும் தரமாட்டோம்னு சொல்ல... அதுக்கு இவரு, "நாராயண பெருமாள் சாமிக்கு ‘பாம்’ ரெடி பண்ணிட்டு இருக் காங்க... சீக்கிரமே அது நடந்திரும். அந்தமாதிரி உங்களுக்கும் ஆகணுமா? ஒழுங்கா பணம் கொடுக்கிற வழியப் பாருங்க'ன்னு சொல்லிருக்காரு. உடனே தூத்துக்குடி குவாரிக்காரங்க என்கிட்ட, ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்ல.. நான் சட்டநாதன் சங்கருக்கு போன் போட்டேன். என்பேரைச் சொல்லி அறிமுகப்படுத்தியதும் கட் பண்ணிட்டாரு. அப்புறம் தூத்துக்குடி குவாரிக் காரங்களுக்கு போன் போட்டு, "நான் சொன்னத எதுக்கு நாராயணப்பெருமாள் சாமிகிட்ட சொன்னீங்க'ன்னு சத்தம் போட்டிருக்காரு. அப்புறம்தான், இதை சும்மா விடக்கூடாதுன்னு, என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா, விருதுநகர் எஸ்.பி.கிட்ட சங்கம் மூலமா புகார் கொடுத் திருக்கோம்.

qq

திருப்பூர்லயும், இப்ப மதுரைலயும் பொறுப்புல இருந்துக்கிட்டே, சட்டநாதன் சங்கர் 100 கோடி ரூபாய்க்கு மேல சொத்து சேர்த்துட்டதா, அவரோட டிபார்ட்மெண்ட்லயே சொல்லுறாங்க. கொலைக்குற்றம் செய்து கோர்ட்டால தண்டிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை அனுபவித்த கடும்குற்றவாளிகளோட அவருக்கு தொடர் பிருக்கு. குவாரிகள்ல மாத மாமூல் வாங்குற மாபியாக்கள்கிட்ட இவருக்கு செல்வாக்கு இருக்கு. பொது ஊழியரா இருந்துக்கிட்டு, சட்டவிரோத கைக்கூலி பெறும் இவரை மாதிரி அதிகாரிகள் குற்றம் செய்யும்போது, அக்குற்றம் குறித்து தகவல் அளிக்கும் கடமையை, குற்ற விசாரணைமுறை சட்ட பிரிவு 39-ன்படி, பொது மக்களே செய்யலாம். அதைத்தான், எங்க சங்கம் சார்பில் நான் பண்ணிக்கிட்டிருக் கேன்''’ என்றார் விரைப்புடன்.

மதுரை -புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் சட்டநாதன் சங்கரை தொடர்புகொண்டோம். "ஆழ்ந்த இறை நம் பிக்கையோடு பேசுறேன். நான் நியாயமா மனசாட்சிப்படி நடக்கிற அதிகாரி. அவரு சொல்லுற குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நான் வேலை பார்க்கிறது மதுரை, தூத்துக்குடி மாவட்டத்துல. விருதுநகருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாராயணப்பெருமாள்சாமி பேக்ரவுண்ட் என்னன்னு தெரியுமா? நான் உங்களுக்கு ஒரு வீடியோ லிங்க் அனுப்புறேன். அதைப் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வாங்க. அந்த வீடியோவுல யார் யாருக்கு அவரு எவ்வளவு லஞ்சம் கொடுத்தாரு? என்னென்ன பண்ணி யிருக்காரு? எந்தெந்த அதிகாரிங்க அவருக்கு ஒத்துழைச்சாங்க? அவரு இருக்கிற சங்கத்தோட கண்ட்ரோல்ல யார் யாரு இருக்காங்க? இதையெல்லாம் அவரு ஒப்புதல் வாக்குமூலமாவே கொடுத்திருக்காரு''’என்றார்.

அந்த வீடியோவில், தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இருந்தும் வந்து விருதுநகர் மாநாட்டில் கலந்துகொண்ட குவாரி சங்கத் தலைவர்கள் முன்னிலையில் நாராயணப்பெருமாள் சாமி மைக் பிடிக்கிறார்...

"கலெக்டரை நான் எதுக்கு பார்க்கணும்? அவர்ட்ட நான் போன்லதான் பேசுவேன். போன கலெக்டர் கண்ணன்லாம், நாராயணப்பெருமாள் என்கிட்ட போன்லதான் பேசுறாரு. என்னைய வந்து பார்க்கிறதுல்லன்னு வருத்தப்பட்டாரு. டிடி மைன்ஸ் என்கிட்ட சொல்லுறாரு. அண்ணாச்சி உங்கள பார்க்கணும்னு கலெக்டர் ஆசைப்படறாருன்னு. ஆறுமுகநயினாரும் போன் பண்ணுனாரு, கலெக்டர பாருங்கன்னு. அப்புறம் நானும் டிடி மைன்ஸும் போனோம். அப்ப கலெக்டர் கண்ணன் என்கிட்ட, ‘உங்க பேரைச் சொல்லி ஒரு பதினெட்டு ஃபைல் துட்டு கொடுக்காம வாங்கிட்டு போயிட்டாங்க. என் பொழப்பே போயிருச்சுன்னாரு. அப்ப நான், எங்க சங்கத்துல ஒரு மார்ஜின் வச்சிருக்கோம். ஒரு ஃபைலுக்கு ரெண்டு லட்ச ரூபாய்னு வச்சிருக்கோம். அந்த ரெண்டு லட்ச ரூபாய இதுவரைக்கும் கொடுக்காத ஆளு யாரும் இல்ல. கொடுத்துட்டாங்களேன்னு சொன்னேன். டிடி மைன்ஸும் ஆமாம் சார்ன்னாரு. அதுபோகட்டும். இந்த ஏழாண்டு காலத்துல சங்கத்த எதிர்த்து வேலை பார்த்த எந்த ஒரு அதிகாரியும் இல்ல''’என்கிற ரீதியில் அருமை -பெருமைகளைப் பட்டியலிட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் ஒரு பிடி பிடித்திருக் கிறார்.

கிரானைட்டோ, தாது மணலோ, உடைகல்லோ, கனிம மணலோ... குவாரிகள் எதுவானாலும், அதிகாரிகளின் துணையுடன் சட்டமீறலான காரியங்களில் ஈடுபடுவதோடு, நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

nkn301021
இதையும் படியுங்கள்
Subscribe