நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, சீனி, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை, மக்களுக்கு வழங்கியதுபோல் கணக்கு காட்டிவிட்டு வெளியில் கடத்துவதும், இம்முறைகேடு பறக்கும்படையினர் கவனத்துக்குச் சென்று, அவர்கள் அதிரடியாக ஆய்வுசெய்து அபராதம் விதிப்பதும், பல ஊர்களிலும் வாடிக்கையாக நடப்பதுதான்.

rat

ராஜபாளையம்-பச்சைமடம் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையிலும் (எண் ண 1066) இதுபோன்ற முறைகேடு பெரிய அளவில் நடந்திருக்கிறது. ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கும் அளவுக்கு மோசடி நடந்தும், ஆய்வு நடத்திய பறக்கும்படை தாசில்தார் ராஜ்குமார், வெறும் ரூ.7600 மட்டுமே அபராதம் விதித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆறு மாதங்களுக்கு முன் பிடிபட்ட கடத்தல் ரேசன் அரிசிமூட்டைகள் 220-ஐ கணக்கிலேயே காட்டவில்லை. ராஜபாளையம் நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் கொள்ளை கடந்த 5 ஆண்டு களாக பகிரங்கமாக நடந்து வருகிறது. நகர்ப்புறத்தில் பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் வினியோகம் நடந்ததே இல்லை.

ராஜபாளையத்தில் 140 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இந்த ஊரில் சங்கம் என்ற பெயரில், முனியாண்டி என்ற ரிட்டயர்ட் ஆசாமி, ஒவ்வொரு ரேஷன் கடையிலும் விற்பனை யாளர்களிடம் ரூ.8,000 வசூலித்து வருகிறார். ரேஷன்கடை விவகாரங்களில் கட்டப்பஞ்சா யத்து பண்ணுவதுதான் இவ ருடைய வேலையே. "துறை மேலதிகாரிகளுக்கு பங்கு பிரித்துக் கொடுப்போம்' என்று சொல்லியே இதைச் செய்து வருகிறார்.

Advertisment

பொதுமக்களுக்கு சில்லறையாக விற்கவேண்டிய அரிசியை, பாலீஷ் செய்யும் ஃபேக்டரிக்கு மூட்டைகளாக மொத்தமாக எடுத்துச்சென்று, அங்கிருந்து கேரளாவுக்கு கடத்திவிடுவார்கள். அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மாவை மதுரைக்கு அனுப்பிவிடு வார்கள். இதற்கென்றே, சத்திரப்பட்டியை அடுத் துள்ள எஸ்.ராமலிங்க புரத்தில் ஒரு ஃபேக்டரி இயங்குகிறது.

இத்தகவலை குடிமைப் பொருள் விநியோக வட்டாரத்திலிருந்து ‘நேர்மையாளர்’ ஒருவர், பதற்றத்துடன் பகிர்ந்துகொள்ள, கள மிறங்கினோம். பறக்கும் படை தாசில்தார் ராஜ் குமாரிடம் பேசினோம்.

rationshop

Advertisment

"இதை செய்தியா போடணுமா?''’என்று முதலில் தயங்கியவர், பிறகு பேசினார். "எங்க சென்னை ஆபீஸ்ல இருந்து தகவல் கிடைச்சு, அந்த ரேஷன் கடையில ஆய்வு பண்ணுனோம். மோசடி பில் போட்டிருந்தாங்க. 7,600 ரூபாய் ஃபைன் போட்டோம். ஆய்வுக்குப் போனது நான் மட்டு மில்ல... அந்த சொசைட்டி யோட எம்.டி., ராஜபாளை யம் கூட்டுறவுத்துறை சி.எஸ்.ஆர்., ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.ஓ., ராஜபாளையம் ஆர்.ஐ.-ன்னு அஞ்சு பேரும்தான். நாங்க ஒண்ணு சேர்ந்து எப்படி முறைகேடு கணக்கை குறைச்சு காமிக்க முடியும்? பொதுவா பிரைவேட் ஆட்களைத்தான் எடையாளரா வேலையில அமர்த்துறாங்க. சேல்ஸ்மேன் தான் எடையாளருக்கு சம்பளம் கொடுக்கிறாங்க. அந்த ரேஷன்கடைல எடையாள ருக்கும் சேல்ஸ்மேனுக்கும் பிரச்சினை. நான்கு நாளா பிரச்சினை ஓடிருக்கு. அந்த எடையாளர்தான், போலி பில் விவகாரத்தை சென்னை ஆபீஸுக்கும் டி.ஆர். ஆபீஸுக்கும் போன் பண்ணிச் சொல்லிட்டாரு. அப்புறம்தான் சேல்ஸ்மேன் எல்லாரும் ஒண்ணுசேர்ந்து இந்த மாதிரி ஆள, கூட வச்சிக்கக்கூடாதுன்னு முடிவெடுத்திருக்காங்க. இதுல பாதிக்கப்பட்ட யாரோதான் என்னைப் பத்தி தப்பா சொல்லிருக்காங்க. என் மீதான குற்றச்சாட்டை முழுமையா மறுக்கிறேன்''’என்றவரிடம், "ரேஷன்கடைகள் தோறும் ரூ.8,000 மாமூல் வாங்கி மேலதிகாரிகளுக்கு தருவது குறித்து கேட்டோம். “"இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பணம் கொடுக்கும் விற்பனையாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்''’என்று நழுவினார்.

கட்டப்பஞ்சாயத்து செய்து மாமூல் வசூலிப்பதாகச் சொல் லப்படும் ‘சங்கம்’ முனியாண்டியை தொடர்புகொண்டோம். "என்னைப் பிடிக்காதவங்க ஏதாவது சொல்லுவாங்க. அப்படி நடக்கிறவனா இருந்தா யூனியன்ல இருக்க விடுவாங்களா?''’என்று ஒரே போடாகப் போட்டார்.

ரேஷன்கடை விற் பனையாளர் ஒருவரை சந்தித் தோம். "ஒவ்வொரு ரேஷன் கடையிலும் எட்டாயிரம் மாமூல் வாங்குறத அதிகாரிங்க எப்படி ஒத்துக்குவாங்க? அந்த முனியாண்டிதான் ஒத்துக்குவாரா? ஊருக்குள்ள அஞ்சு வருஷமா மண்ணெண்ணெய் சப்ளை பண்ணவிடாம, கோடிக் கணக்குல சம்பாதிச்சது லோக்கல் அ.தி.மு.க. நிர்வாகிதான். ரேஷன்கடைல லிட்டர் விலை ரூ.14.50தான். கள்ள மார்க்கெட்ல 50 ரூபாய்க்கு விற்று, ஊரையே சூறையாடிட்டாரு. இதுக் கெல்லாம் தி.மு.க. அரசாங்கம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கணும்''’என்றார்.

நியாயவிலைக் கடைகளில் நியாயம் என்பதே இல்லையா?