Advertisment

பால் திருட்டு... 10 லட்சம் கோடி சொத்து... -எடப்பாடி மீது ஓ.செ. தாக்கு!

ss

ஓ.பி.எஸ்., சசிகலா ஆகி யோரை விரட்டிவிட்டு, அ.தி. மு.க.வை கபளீகரம் செய்துகொண் டாலும், சொந்த மண்ணில் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறிவருவது தான் இலைக்கட்சி கூடாரத்தில் பரபரப்பு பேச்சாகி இருக்கிறது.

Advertisment

சேலம் மேற்கு ஒன்றிய அ.தி. மு.க. செயலாளர், ஏ.வீ.ராஜு. 90-களில், ஒருங்கிணைந்த சேலம் ஒன்றியத்தில் கட்சியை வளர்த்தவர்களில் முக்கியமானவர். ஜெயல-தா பிறந்தநாளையொட்டி, இலவச திருமணங்களை நடத்தி, அ.தி.மு.க.வில் புது ட்ரெண்டிங்கை உரு வாக்கியவரான இவர், திடீரென்று எடப்பாடி பழனிசாமி, சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்க டாசலத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

ee

"கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, சத்துணவுத்துறையில் இருவருக்கும், பெரியார் பல்கலையில் ஒருவருக்கும் வேலை கேட்டு 40 லட்சம் ரூபாய் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலத்திடம் கொடுத்திருந்தேன். நாங்கள் இருவரும் அப்போது கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்த வகையில் 20 ல

ஓ.பி.எஸ்., சசிகலா ஆகி யோரை விரட்டிவிட்டு, அ.தி. மு.க.வை கபளீகரம் செய்துகொண் டாலும், சொந்த மண்ணில் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறிவருவது தான் இலைக்கட்சி கூடாரத்தில் பரபரப்பு பேச்சாகி இருக்கிறது.

Advertisment

சேலம் மேற்கு ஒன்றிய அ.தி. மு.க. செயலாளர், ஏ.வீ.ராஜு. 90-களில், ஒருங்கிணைந்த சேலம் ஒன்றியத்தில் கட்சியை வளர்த்தவர்களில் முக்கியமானவர். ஜெயல-தா பிறந்தநாளையொட்டி, இலவச திருமணங்களை நடத்தி, அ.தி.மு.க.வில் புது ட்ரெண்டிங்கை உரு வாக்கியவரான இவர், திடீரென்று எடப்பாடி பழனிசாமி, சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்க டாசலத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

ee

"கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, சத்துணவுத்துறையில் இருவருக்கும், பெரியார் பல்கலையில் ஒருவருக்கும் வேலை கேட்டு 40 லட்சம் ரூபாய் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலத்திடம் கொடுத்திருந்தேன். நாங்கள் இருவரும் அப்போது கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்த வகையில் 20 லட்சம் ரூபாய் அவர் கமிஷன் தரவேண்டும். மொத்தம் வெங்கடா சலம் எனக்கு 60 லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டியுள்ளது.

Advertisment

பலமுறை அவரிடம் பணம் கேட்டும் திருப்பிக்கொடுக்கவில்லை. நான் பரிந்துரைத்த நபர்களுக்கு வேலையும் வாங்கித்தரவில்லை. இதுகுறித்து, கட்சியின் பொதுச்செயலாள ரான எடப்பாடி பழனிசாமியிடம் பலமுறை புகாரளித்தும் கண்டுகொள்ளவே இல்லை.

பின்னர், இதுபற்றி சேலம் புறநகர் மா.செ. இளங்கோவனின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். வெங்கடாசலத்திடம் பேசிய அவர், 50 லட்சம் ரூபாயை கொடுத்து விடுமாறு பைசல் செய்தார். இதன்பிறகும் வெங்கடாசலம் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவந்தார்.

ee

வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பு வெறும் 300 சதுர அடி வீட்டில்தான் வசித்துவந்தார். பரோட்டா மாஸ்டராக இருந்த அவர் இன்றைக்கு 1000 கோடி ரூபாய்க்கு அதிபதி.

உறவினர்கள், பினாமி பெயர்களில் பல நூறு ஏக்கர் நிலங்கள், வீட்டு மனைகள், அடுக்குமாடி வீடுகளை சேலம், நாமக்கல், கரூர், சென்னையில் வாங்கிப் போட்டுள்ளார். 7 பேருந்துகள், 6 பெட்ரோல் பங்குகள் என 1,000 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.

இவரும், எடப்பாடி பழனிசாமியின் பினாமியாக இருக்கலாம் என்பதால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை. 1991- 1996களில் சேலம் ஆவின் நிறுவனத்தில் எடப்பாடி பழனிசாமி, நிர்வாகக்குழுத் தலைவராக இருந்தார். அப்போது, அந்தமானுக்கு கப்ப-ல் பால், பால் பவுடர் கொண்டு சென்றபோது, அது கெட்டுப்போய்விட்டது என்று கூறி பல லட்சம் -ட்டர் பால் பவுடரை கட-ல் கொட்டி விட்டதாக முறைகேடு நடந்தது. அந்த முறை கேட்டில் அப்போதைய பால்வளத்துறை அமைச்சர், எடப்பாடி பழனிசாமி இருவருக் கும் தொடர்பு உண்டு.

ஆவினில் நெய், பால் பவுடர் திருடி விற்று முறைகேடு செய்திருக்கிறார் எடப்பாடி. நான் அப்போது நிர்வாகக்குழு இயக்குநராக இருந்தேன். இந்த உண்மைகள் தெரிந்ததால் நிர்வாகக்குழுவின் தீர்மானப் புத்தகத்தில் நான் கையெழுத்துப்போட மறுத்துவிட்டேன். எடப்பாடியிடம் 10 லட்சம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்த-ல் 4 ஆயிரம் கோடி ரூபாய் இறக்கவும் தயாராக இருக்கிறார்.

தவறு செய்யும் மாவட்டச் செயலாளர் மீது புகாரளித்தால் அதுகுறித்து விசாரிக்காமல் எடப்பாடியார் என்னை கட்சியி-ருந்து நீக்குகிறார். கட்சியி-ருந்து நீக்க அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. நான் அவர் மீது வழக்கு தொடர்வேன்'' என சரவெடியாய் வெடித்தார் ஏ.வீ.ராஜு.

ஏற்கனவே ஏ.வீ.ராஜு, சேலம் மேற்கு ஒ.செ. பதவியை ராஜினாமா செய்து கட்சித் தலைமையிடம் சில மாதங்கள் முன்பே கடிதம் கொடுத்திருந்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத எடப்பாடி, மா.செ., விவகாரத்தில் தன் தலையையும் உருட்டியதால், பிப். 17ஆம் தேதி அவரை கட்சியி-ருந்து அடியோடு கட்டம் கட்டியிருக்கிறார்.

இதுகுறித்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலத்திடம் விளக்கம் கேட்டோம்.

"சார்... என் பேர்ல கோடி கோடியாகச் சொத்து இருக்குதுனு நிரூபிச்சாங்கனா அதை அவங்களே எடுத்துட்டுப் போகட்டும். என் மடியில கனமில்லை. உடனிருப்பவர்கள் யாரும் என்னிடம் பேசக்கூடாதுன்னு ஏ.வீ.ராஜுதான் கட்டுப் படுத்துறாரு. நான் அண்ணன் எடப்பாடியார் கா-ல் விழுறேனு ஏ.வீ.ராஜு கிண்டல் செய்கிறார். நான் மதிக்கக்கூடிய நபர் யாராக இருந்தாலும் அவர்கள் கா-ல் விழுவேன்... அது என் இஷ்டம். ஏ.வீ.ராஜுவுக்கும் எனக்கும் எந்த கொடுக்கல்வாங்கலும் இல்லை'' என தடாலடியாகச் சொன்னார்.

எடப்பாடியாரின் நிழலான சேலம் புறநகர் மா.செ. இளங்கோவனிடம் கேட்டபோது, "வெங்கடாசலத்திற்கும், ஏ.வீ.ராஜுவுக்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருக்கிறது. இதிலெல்லாம் கட்சித் தலைமை தலையிடமுடி யாது. அவர்களே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதேநேரம், ஏ.வீ.ராஜு, கட்சித் தலைமையை விமர்சித்திருக்கக்கூடாது'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

கட்சியின் உள் விவகாரங்களை நுணுக்கமாக அறிந்தவரான ஏ.வீ.ராஜு மேலும் புயலைக் கிளப்புவார் என்கிறார்கள் கழக ர.ர.க்கள்.

ஏ.வி.ராஜு தனது பேட்டியில், வெங்கடாச லத்தோடு பிரபல நடிகையையும், நடிகர் கருணாசையும் இணைத்துப் பேசியிருந்த வீடியோ வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரபல நடிகை குறித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டபோதும், அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிரடியாக பிரபல நடிகை அறிவித்துள்ளதால் திரைத்துறையே பரபரப்பாகியுள்ளது.

nkn240224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe