Advertisment

வாக்கு எண்ணும் மையத்தில் நள்ளிரவு பவர்கட்! -அலறும் வேட்பாளர்கள்

cc

தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட 5 சட்டமன்றங்களின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தென்காசி அருகேயுள்ள வாக்கு எண்ணிக்கை மையமான கொடிக்குறிச்சியின் யு.எஸ்.பி. பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள், தொடர்புள்ள வேட்பாளர்களின் முன்னிலையில்தான் சீல் வைக்கப்பட்டுள்ளன.

Advertisment

cc

இந்த 5 ஸ்ட்ராங் ரூம்களில் அமைக்கப்பட்ட 8 சி.சி.டி.வி. கேமராக்களின் இணைப்பு, தனியாக கண்ட்ரோல் ரூமிலுள்ள டி.வி.க்களில் இணைக்கப்பட்டு கண்காணிக்கப் படுகின்றன. அந

தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட 5 சட்டமன்றங்களின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தென்காசி அருகேயுள்ள வாக்கு எண்ணிக்கை மையமான கொடிக்குறிச்சியின் யு.எஸ்.பி. பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள், தொடர்புள்ள வேட்பாளர்களின் முன்னிலையில்தான் சீல் வைக்கப்பட்டுள்ளன.

Advertisment

cc

இந்த 5 ஸ்ட்ராங் ரூம்களில் அமைக்கப்பட்ட 8 சி.சி.டி.வி. கேமராக்களின் இணைப்பு, தனியாக கண்ட்ரோல் ரூமிலுள்ள டி.வி.க்களில் இணைக்கப்பட்டு கண்காணிக்கப் படுகின்றன. அந்த அறையில் ஒவ்வொரு தொகுதிக்கான சி.சி.டி.வி. காட்சிகள், கண் காணிப்பு அறையில் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு டி.வி.யிலும் ஒளிபரப்பாகிறது. இந்த கண்ட்ரோல் ரூமில் அதிகாரிகள், காவலர்கள், அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் அமர்ந்து இரவு பகலாகக் கண்காணித்து வருகின்றனர்.

Advertisment

ஏப்ரல் 12-ஆம் தேதி நள்ளிரவு கண்காணிப்பு அறையிலுள்ள டி.வி. திரையில், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் ஒன்றில் மின்தடை ஏற்பட்டது. இந்தத் தடை பல நிமிடங்கள் நீடிக்க, பதறிப்போன வேட்பாளர்களின் முகவர்கள், தி.மு.க.வின் தென்மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

சிவபத்மநாபன், ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார், காங்கிரஸ் வேட் பாளர் பழனி நாடார், தி.மு.க. வேட்பாளர் ராஜா மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் சென்று மாவட்ட கலெக்டரான சமீரனிடம் நடந்தவற்றைப் புகாராகக் கொடுத்திருக் கின்றனர். நம்மிடம் பேசிய மா.செ. சிவ பத்மநாபன், “""வாக்குப்பெட்டி மையமான ஸ்ட்ராங் ரூமில் மின்தடை. ஆனால், அவற்றின் கண்காணிப்பு அறைகளில் மின்தடை இல்லை. அதுவும் நள்ளிரவில். இது எப்படி சாத்தியம்? இந்த சந்தேகத்தை கலெக்டர் தெளிவுபடுத்தியே ஆகவேண்டும். ஸ்ட்ராங் ரூமில் இன்வெர்ட்டர் லைன் கொடுத்து கண்ட்ரோல் ரூமில் இணைத்து விட்டால் மின்தடை பிரச்சினை இருக்காது என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அவரின் நடவடிக்கையைப் பொறுத்தே எங்களின் அடுத்தகட்ட செயல்பாடிருக்கும்''’என தீர்க்கமாகச் சொல்கிறார்.

c

கலெக்டர் சமீரனோ, ""வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் கேமராக்களை ஆய்வுசெய்ததில் ஆலங்குளம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை அறையில் மட்டும் சில நிமிடங்கள் கேமரா இயங்கவில்லை. இதனை ஓரிரு நாட்களில் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் தெளிவுபடுத்துவேன்''’எனச் சொல்கிறார்.

c

தென்காசி மாவட்டத்தில் இப்படியெனில், திருநெல்வேலி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மணிக்கணக்கில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை தி.மு.க.வின் நெல்லை மாநகர மா.செ.வும் பாளை வேட்பாளருமான அப்துல்வகாப், கலெக்டர் விஷ்ணுவிடம் புகாராகத் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ண யிக்கிற ஜனநாயக எஜமானர்களாகிய மக்களின் மதிப்புமிக்க தீர்ப்புகள், சந்தேகத்திற்கு அப்பாற் பட்டதாக இருக்கவேண்டும்.

nkn170421
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe