Advertisment

மிட்நைட் மசாலா! - இருளில் உலவும் ஆண் நிர்மலாதேவிகள்!

midnightmasala

பேரிருள் கவ்விய நேரத்தில் வேலூர் மாநகரத்தின் மையத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க அரண்மனையை நோக்கி டூவீலரில் இளைஞர்கள் பறந்தபோது… "எஸ்.டி.டி.ன்னா வரலாறு தானே'…என்ற நடுடுடுக்க்கத்தோடு பின்தொடர்ந்தோம்.

Advertisment

midnightmasalaகாவலர் பயிற்சிப்பள்ளி விழாவுக்காக அருகில் மைதானம் தயாராகிக்கொண்டிருக்கிறது. நமது டூவீலரை நிறுத்திவிட்டு இளசுகள் எங்கே சென்றார்கள் என்று பூதக்கண்ணாடி வைத்து தேடாத குறையாய் தேடிக் கொண்டிருக்க... திடீரென்று, 50 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் உருவம் நம்மைப் பார்த்து பல்லிளிக்கிறது. இதயத்துடிப்பு எகிறி… அடிவயிற்றில் ஆஃப்பாயில் போட்டது போன்ற ஃபீலிங். இருந் தாலும் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவரை உற்று நோக்கியபோது, ""கீரை வேணுமா தம்பி?''’என்று மீண்டும் அவரது முகத்தில் ஹி... ஹி... சுற்றும்முற்றும் பார்த்தோம். "இரவு நேரத்துல கீரை சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க. அதுவும், இது காய்கறி மார்க்கெட

பேரிருள் கவ்விய நேரத்தில் வேலூர் மாநகரத்தின் மையத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க அரண்மனையை நோக்கி டூவீலரில் இளைஞர்கள் பறந்தபோது… "எஸ்.டி.டி.ன்னா வரலாறு தானே'…என்ற நடுடுடுக்க்கத்தோடு பின்தொடர்ந்தோம்.

Advertisment

midnightmasalaகாவலர் பயிற்சிப்பள்ளி விழாவுக்காக அருகில் மைதானம் தயாராகிக்கொண்டிருக்கிறது. நமது டூவீலரை நிறுத்திவிட்டு இளசுகள் எங்கே சென்றார்கள் என்று பூதக்கண்ணாடி வைத்து தேடாத குறையாய் தேடிக் கொண்டிருக்க... திடீரென்று, 50 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் உருவம் நம்மைப் பார்த்து பல்லிளிக்கிறது. இதயத்துடிப்பு எகிறி… அடிவயிற்றில் ஆஃப்பாயில் போட்டது போன்ற ஃபீலிங். இருந் தாலும் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவரை உற்று நோக்கியபோது, ""கீரை வேணுமா தம்பி?''’என்று மீண்டும் அவரது முகத்தில் ஹி... ஹி... சுற்றும்முற்றும் பார்த்தோம். "இரவு நேரத்துல கீரை சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க. அதுவும், இது காய்கறி மார்க்கெட்டும் இல்ல. யாருமே இல்லாத இடத்துல யாருக்கு டீ ஆத்துறங்குற மாதிரி இந்நேரத்துல எதுக்கு இங்க வந்து கீரை விற்குறாரு இந்தாளு. "ஆவியா? அப்பாவியா? கால் இருக்கா? இல்லையா?' என்று பீதியுடன் கீழே குனிந்து நைஸாக பார்த் துக்கொண்டிருக்க...… ""50 ரூபாய்தாம்பா… வாங்கிக்கோ...… என்னமோ பேயறைஞ்ச மாதிரி நிற்குற?''’என்றார் பேய்போல் சிரித்தபடி.

மார்க்கெட்டுல வாங்கினாலே ஒரு கட்டு கீரை 20 ரூபாய்தான் இருக்கும். இந்நேரத்துல, 50 ரூபாய்க்கு கீரையா?’என்று நாம் யோசிக்க...…""என்னப்பா யோசிக்கிற? இது, ஸ்பெஷல் கீரை''’என்று அவர் நம் கையில் திணித்தது கீரையே அல்ல. “""யோவ்… என்னய்யா இது? கீரைன்னு சொல்லிட்டு எதையோ கொடுக்கிற?''’என்று நாம் கேட்க,… மீண்டும் சிரித்தவர், “""என்ன… இதுகூட தெரியாம இந்நேரத்துல இங்க வந்திருக்க? கீரைங்கிறது கோர்டு வேர்டுப்பா… கஞ்சா பொட்டலம்னு சொன்னாத்தான் உனக்கு புரியும்போல''’’என்று நம்மை ஆங்கிரி மேனாய் மாற்றினார். இப்போதுதான், புரிந் தது இளசுகளின் கூட்டம் ஏன் இந்த இடத் தை நோக்கி இரவு நேரங்களில் வருகிறது என்பது. கையில காசு இல்ல என்று கஞ்சா பார்ட்டியிடம் சமாளித்தபடி… அரண்மனை யைச் சுற்றி கொஞ்சதூரம் சென்றபோது… மேகமூட்டம் போல… புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இளம் ஜோடிகள் மெய் மறந்திருக்க...… இதற்குமேல் நாம் எல்லை மீறக்கூடாது என்று யூ டர்ன் அடித்தோம்.

காட்பாடி -சித்தூர் கேட் பகுதியை கடக்க முயன்றபோது இடித்துத் தள்ளுவது போல் வந்த பல்சர் பைக்குகள் நம்மை ஓவர்டேக் பண்ணிக்கொண்டு பறந்தன. கைகளில் பீர் பாட்டில்களுடன் எங்கு செல்கிறார்கள் என்று நாம் ஃபாலோ-அப் செய்தபோது… பிரபல பல்கலைக்கழக வளாகத்தின் பின்புறம் செல்கிறார்கள். விளையாட்டு மைதானம் இளம் ஜோடிகளின் வேறுவிதமான விளையாட்டு மைதானமாக காட்சியளிக்கிறது. விடுதிகளில் தங்கிய மாணவர்கள் இத்தனை மணிக்குள் வந்துவிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதே காரணம் என்பது புரிந்தது.

Advertisment

அங்கிருந்து, திரும்பி காட்பாடி ரயில்வே ஜங்ஷனுக்கு வந்தபோது நள்ளிரவு நேரத்திலும் நண்பகல்போல பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது அது. வடஇந்தியா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு இரவில் தான் அதிக வண்டிகள் செல்வதால் பயணி கள் கூட்டம் முட்டி மோதுகிறது. லிப்ட், எக்ஸலேட்டர்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் எதுவும் இயங்காததால் வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் படியேற முடி யாமல் சிரமப்பட்டார்கள். மாதம் ஒருமுறை அதிகாரிகள் ஆய்வுநடத்தும் இந்த ரயில் நிலையத் தில் உட்காரும் இருக்கைகள்... சத்தியமூர்த்தி பவன் களேபரங்களில் உடைந்து கிடப்பது போல் உடைந்து கிடக்கின்றன. பயணிகள் தங்கும் இடங்களில் மட்டுமல்லாமல், காலி யாக உள்ள இடங்களிலும் படுத்துக்கிடக் கிறார்கள்; அதில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தவர்கள். நான்காம் ப்ளாட்ஃபாரத் தில் வாட்டர் பாட்டிலோடு சென்ற நடுத்தர வயதுக்காரரைப் பின்தொடர்ந்த ஒல்லிப்பெண்... ""500 ரூபா கொடு சார்''’என்று உரிமையுடன் கேட்க, ""300 ரூபா தர்றேன்''’என்கிறார் அவர். வேறென்ன… வயிற்றுப் பிழைப்புக்கான பேரம்தானே? என்ற மைண்ட் வாய்ஸுடன் பின்தொடராமல் பின்வாங்கினோம். அப்படியே, ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்த நமக்கு பேரதிர்ச்சி.

நம்மை பின்தொடர்ந்த ஒருவர், ""என்ன சார் காலேஜ் பொண்ணுங்க இருக்காங்க…வேணுமா? இந்த ஏரியாவைச் சுற்றியிருக்குற எந்தக் காலேஜ்னா லும் ரெடியா இருக்கு''’என்றவன், நம் கண்களுக்கு ஆண் நிர்மலாதேவியாய் காட்சியளித்தான். “"பெற் றோர்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி… பிள்ளைங்கள படிக்க அனுப்புனா...…இந்தமாதிரி புரோக்கர்கள்கிட்ட மாட்டிக்கிறாங்களே'’என்ற வேதனையுடன் நமது விசாரணையை அந்த மிட்நைட்டில் தொடங்கிய போதுதான் வேலூரின் வேறொரு உண்மையும் நமக்கு தெரிய ஆரம்பித்தது.

(பயணிப்போம்)

ரவுண்ட்-அப்: -ராஜா

தொகுப்பு: -மனோ

Midnight masala nkn03.7.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe